Saturday, March 31, 2007

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை: சிறிலங்கா அரசு- கடற்படை மறுப்பு

[சனிக்கிழமை, 31 மார்ச் 2007] கடந்த வியாழக்கிழமை நான்கு தமிழக மீனவர்கள் கடலில் சுடப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று சிறிலங்கா அரசாங்கமும் கடற்படையினரும் மறுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 23 ஆம் நாள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டனர் என்றும் தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர் என்றும் ஏனையவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை செய்திகள் வெளிவந்தன. அந்தச் செய்தியை சிறிலங்கா அரசாங்கமும் கடற்படையும் தற்போது மறுத்துள்ளது. சிறிலங்கா கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்தது. இந்திய கடல்பகுதிக்குள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை 'மரியா' என்ற பெயருடைய வேறு படகே நடத்திய என இந்திய தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருக்கக்கூடும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள இருதரப்பு உறவை முறியடிப்பதற்காக இதுபோன்ற தாக்குதல்களை விடுதலைப் புலிகள் முன்னரும் நடத்தியுள்ளர் என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் அறிக்கை மேலும் குறிப்பிட்டது. எதிர்காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவதைத் தடுக்க, இருதரப்பு கடற்படையின் ஒத்துழைத்த செயற்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் கடப்பாடு கொண்டுள்ளது எனவும் அந்த அறிக்கை கூறியது. சிறிலங்கா கடற்படை இந்திய கடற்படை மற்றும் கரையோர கண்காணிப்புப் படையுடன் நீண்டகால உறவை கொண்டுள்ளது. அந்த உறவு இனியும் தொடரும். சிறிலங்கா கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் மாட்டிக்கொள்ளும் போது எல்லாம் சிறிலங்கா கடற்படை உதவிக்கரம் நீட்டுவதாகவும் அது தெரிவித்தது.

போரியலின் ஒரு புதிய பரிமாணம் - இடப்பெயர்வு

[சனிக்கிழமை, 31 மார்ச் 2007] ஈழத் தமிழர்களின் தனியரசுக்கான போராட்டம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை இன்று அடைந்துள்ளது. விடுதலைப் போராட்டமானது தனது இறுதி இலக்கினை நோக்கிய பயணப் படிமானத்தில் மிகத்திடமாகவும் உறுதியாகவும் நிலைபெற்றுவிட்டது. இந்த இறுக்கமான நிலையினை தளர்வுறுச் செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதில் எதிரியானவனும், கொள்கைப் பற்றுறுதி அற்ற முன்னாள் போராளிக்குழுக்களும், எண்பது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமது குழுவினது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டதன் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் போராளிக்குழுக்களின் ஒரு சில புலி எதிர்ப்பு உறுப்பினர்களும் தத்தமது நாடுகளில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை வெளிப்படையான உண்மை. இந்த நிலையில், ஸ்ரீலங்கா அரசானது பாரிய மனிதவுரிமை மற்றும் மனித அவலங்களை தனது கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வாழும் எமது சகோதரர்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் மேற்கொண்டுவருகின்றது. ஜே.ஆர் ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டீ.பி. விஜேதுங்க, சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோரினால் நடத்தப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கைகள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் இன்று துட்டகைமுனுவின் வாரிசு எனக் கூறிக்கொள்ளும் மஹிந்த ராஜபக்ஸ சகோரார்களால் நன்கு திட்டமிட்ட முறையிலும் கொடூரமான செயற்பாடுகள் மூலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் முக்கியமாக நாம் இன்று கவனிக்க வேண்டியது என்னவெனில், இன்றைய சிங்கள அரசாங்கத்தின் படையினராலும், புதிதாக அரசியல் பாதைக்கு திரும்புவதற்கு, ஒற்றையாட்சி முறையே சிறந்ததது என தனது வெற்று அரசியல் ஞானத்தை வெளிக்காட்டி வரும் துணைப்படையினராலும் மேற்கொள்ளும் கடத்தல், காணாமல் போதல், உத்தியோகப்பற்றற்ற கைது மற்றும் தடுப்புக் காவல் என்பன தமிழர்கள் மீது மேற்கொள்ளும் ஒரு விதமான மனஅழுத்த போரியல் முறை என்பதை நாம் இங்கு கவனத்தில் எடுத்தல் வேண்டும். தமிழர்களை தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து இடம்பெயரச் செய்தல், தொடர் இடப்பெயர்வுகளை ஏற்படுத்தி அகதிகளாக்குதல், திறந்த வெளித்தடுப்பு முகாம்களில் அகதிகளாக வாழச்செய்தல், தமிழர்கள் மீது விமானக்குண்டுகளை, பீரங்கிக்குண்டுகளை வீசி உயிர் பற்றிய மரணபயத்தை ஏற்படுத்ததல், பொருளாதார தடைகளை விதித்து அன்றாட வாழ்க்கைச் சுமைகளைச் சுமத்துதல் இவைகள் யாவும் மொத்தத்தில், ராஜபக்ஷவினாலும் அவரது சகோதரர்களின் வழிநடத்தலில் - தமிழர்களுக்கு கொடுக்கும் மிக ஆழமான அழுத்தங்களாகும். இந்தவகையான ஆழமான அழுத்தங்களை, தமிழர்கள் மீது பிரயோகிப்பதன் மூலம், தமிழர்கள் இதுவரை காணாத அல்லது நன்கு அனுபவப்படாத ஒரு போரியல் உத்தியென ஸ்ரீலங்கா அரசு நினைப்பது மட்டுமல்லாமல் செயற்படுத்தியும் வருகின்றது. இருப்பினும், இந்தவகையான புதிய போரியல் யுக்தியை எதிர்கொள்வதற்கு களத்தில் உள்ள மக்களை விடுதலைப்புலிகள் ஓரளவுக்கேனும் தயார்படுத்தி வருகின்றமை கண்கூடு. ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டினை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்காப் படைகள் தமது முழுப்பலத்தினையும் ஒன்று குவித்து படை நடவடிக்கையை மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் குடாநாட்டு மக்களை தமது சொந்த வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னி பெருநிலப்பரப்பிற்கு செல்லுமாறு விடுதலைப்புலிகள் அறைகூவல் விடுத்தனர். இந்த இடப்பெயர்வு மக்களுக்கு பல சொல்லெணாத் துயரங்களை ஏற்படுத்தியிருந்தமை நாம் யாவரும் அறிந்த ஒன்று. எனினும், காலப்போக்கில் விடுதலைப்புலிகளின் அறைகூவலால் பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்வியலை புதிய வடிவத்தில் செப்பனிட்டு சிறப்பாக உயர்த்தியிருந்ததோடு, புலிகளைப் பாராட்டியதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த வகையில், இன்று கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்துவரும் இடப்பெயர்வும், யாழ்ப்பாண இடப்பெயர்வு போன்றதொரு சூழலை எமக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது. கிழக்கு இடப்பெயர்வு இடப்பெயர்வு மனித அவலத்தின் முக்கிய சாட்சியாகவும், போரின் குறியீடாகவும் அமைந்துவிடுகின்றது. இந்த வகையில் ஈழப்போரின் நான்காம் கட்டம் வாகரையிலிருந்து ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என்றே கருத இடமுண்டு. வாகரைப் பகுதி மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது, அவர்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடியும், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் செல்வதையும் ஸ்ரீலங்காப் படைகள் தடுத்திருந்தனர். மாறாக, விடுதலைப்புலிகள் மக்களை தமது கேடயமாக பாவிக்கின்றனர் என்ற பிரச்சாரத்தை தமது ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரப்படுத்தியுமிருந்தனர். இந்தப் பிரச்சாரங்களை மேற்குலகமும், ஒரு சில அரச-சார்பற்ற சர்வதேசத் தொண்டர் நிறுவனங்களும் நம்பியும் இருந்தன. யுத்தம் ஒன்று இடம்பெறும்போது அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களை பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்லுமாறு பணிக்கவேண்டியதும், அல்லது அவர்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க வேண்டியதும் ஒரு அரசாங்கத்தின் கடமை என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகரையில் இடம்பெற்ற ஸ்ரீலங்காப்படைகளின் ஆக்கிரமிப்பு அல்லது நில அபகரிப்பு நடவடிக்கையின்போது அவ்வாறானதோர் அறிவித்தலை அரசாங்கம் மக்களுக்குத் தெரிவித்திருக்கவில்லை. படை நடவடிக்கை உக்கிரமடைந்தபோது, மக்கள் பாரிய சிரமங்களின் மத்தியில் காட்டு வழியினூடாக மட்டக்களப்பு நகருக்குள் வந்தனர். இந்த நிலையில்தான,; விடுதலைப்புலிகள் வாகரையில் இருந்து பின்வாங்கும் முடிவினை மேற்கொண்டனர். விடுதலைப்புலிகள் முற்றாக பின்வாங்கிய பின்னர் உள்நுழைந்த படையினர் மக்களற்ற நகரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை நாம் எல்லோரும் அறிந்த விடயம். வாகரை மக்களை ஒரு மாதத்திற்குள் மீளக் குடியேற்றம் செய்வோம் என சூளுரைத்த ஸ்ரீலங்கா அரசு, இன்றுவரை மக்களை குடியேற்றவில்லை என்பது அப்பட்டமான உண்மை.மாறாக, சிங்களப் படைகள் வாகரையில்; பரந்துபட்ட அளவில் தற்போது நிலைகொண்டுள்ளனர். ஸ்ரீலங்காப் படைகளின் பிரச்சார வார்த்தைகளில் கூறுவோமேயானால், வாகரை மக்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றி விட்டோம், புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதேயாகும். இந்தப் பிரச்சார உத்தி தென்பகுதி சிங்கள மக்களையும் இனவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்கு பெரிதும் உதவியிருக்கின்றது. வாகரையில் செயற்படுத்திய அதே தந்திரோபாயத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி செயற்படுத்துவதற்கு அரசு தீர்மானித்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி பாரிய பல்குழல் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டது. மக்களை தொடர்ந்தம் ஒருவகையான மன அழுத்தத்திற்குள் கொண்டுசெல்வதற்கு ஸ்ரீலங்கா அரசின் படை வல்லுநர்கள் முடிவுசெய்தனர். இந்தவேளையில், விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நகர்வானது ஸ்ரீலங்கா அரசினை மிகவும் ஒரு இக்கட்டான ஒரு நிலைக்குள் தற்போது தள்ளியிருக்கின்றது. ஸ்ரீலங்காப் படைகள் பாரிய மனிதப் படுகொலையை ஆரம்பிப்பதற்கு முன்னராக, மக்களை இடம்பெயர வைத்தனர் புலிகள். அன்று, யாழ்குடா மக்களை வன்னிப் பகுதிநோக்கி நகர வைத்த புலிகள் இன்று மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி நகர வைத்துள்ளனர். இந்த விடயம் எல்லோருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆனால், புலிகளின் இந்த நகர்வு அரசாங்கத்தினை இக்கட்டான ஒரு சூழ்நிலைக்குள் தள்ளியிருக்கினறது. மட்டக்களப்பு மக்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றப்போவதாக பிரச்சாரப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்காப் படைகளின் போர் முனைப்பு தற்போது தொடர்வதா? அல்லது கைவிடப்பட வேண்டுமா? என்ற தொங்குநிலையை அடைந்துள்ளது. ஏனெனில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்த மக்கள் தற்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெருமளவில் சென்று குவிந்த வண்ணம் உள்ளனர். சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் அகதிளாக்கப்பட்டு நகருக்குள் உட்பிரவேசித்துள்ளனர். வடக்கு மாகாணத்தைப் போல் அல்லாது சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறைந்த பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குகின்றது. எனவே, அகதிகளாக இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. எந்த மக்களை விடுவிப்பதாக கூறிக்கொண்டு போரை ஆரம்பித்த ஸ்ரீலங்கா அரசு, அந்த மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்பட்டுள்ளமை உண்மை. இதைவிட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவறற்றின் பிரசன்னம் அதிகமாகவுள்ளமையினால் தனது படை நடைவடிக்கையை நியாயப்படுத்துவதில் அல்லது தொடங்குவதில் தடங்கல்களை ஸ்ரீலங்கா அரசு எதிர்நோக்குகின்றது. இந்த நிலையில்தான், தற்போது வடபோர்முனையின் ஏதாவது ஒரு பகுதியில் ஆரம்பிப்பதற்கான பரீட்சைகளில் ஸ்ரீலங்காப் படைகள் ஈடுபட்டுள்ளனர்.

'விடுதலைப் புலிகளுக்கு நாம் 70 மில்லியன் ரூபாய்கள் கொடுக்கவில்லை.

[சனிக்கிழமை, 31 மார்ச் 2007] "வடக்கு - கிழக்கு மாகாண மக்களை அரச தலைவர் தேர்தலில் வாக்களிக்க விடாது தடுப்பதற்காக சுதந்திரக்கட்சி கட்சி 70 மில்லியன் ரூபாய்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியது என்ற குற்றச்சாட்டை" சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினருக்கு கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் பிரியதர்சன யாப்பா தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளுக்கு நாம் எந்தவிதமான பணமும் வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அதன் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளின் பின்னர் அரசாங்கம் மீது பரந்தளவில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது. 'மௌபிம" மற்றும் 'சண்டே ஸ்ராண்டட்' பத்திரிகைகளின் வங்கிக் கணக்குகளை முடக்கியது சட்டப்படியானது. சட்டத்திற்கு முன் எல்லோரும் சமனே. நான் உட்பட அது எல்லோருக்கும் பொருந்தும்" என்றார் அவர். வடக்கு - கிழக்கு மாகாண மக்களை அரச தலைவர் தேர்தலில் வாக்களிக்க விடாது தடுப்பதற்காக சுதந்திரக்கட்சி கட்சி 70 மில்லியன் ரூபாய்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியது என்ற குற்றச்சாட்டை முதலில் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்திருந்தார். நன்றி:புதினம்

'வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்'

[சனிக்கிழமை, 31 மார்ச் 2007] "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வான்படை தனது முழு வளத்தையும் பயன்படுத்தும். முற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே முன்னாள் வான்படையின் வானோடி ஒருவர் வைத்திருந்த சிறிய ரக வானூர்தியை நாம் கைப்பற்றியுள்ளோம். அவர் ஒரு பயிற்சியாளராக இருந்தவர், இலகு ரக வானூர்தியை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து அனுமதியையும் பெற்றவர் ஆவார். எனவே அவர், அந்த வானூர்தியை நாட்டுக்குள் கொண்டுவந்தது சட்டரீதியானது. ஆனால் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு அதனை எமது பாதுகாப்பில் வைத்துள்ளோம். அந்த வானூர்தி எமது கையில் இருக்கும் வரை விடுதலைப் புலிகளால் அதனை கைப்பற்ற முடியாது" என்றார் அவர். நன்றி:புதினம்

'விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது': "தி எக்கொனமிஸ்ற்"

[சனிக்கிழமை, 31 மார்ச் 2007] "தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். எனவே எப்போதும் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமானது." ஆசியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொணமிஸ்ற்" சஞ்சிகை தனது ஆய்வுச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முக்கிய பகுதிகள் வருமாறு: "போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு. கடந்த மார்ச் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் சிறிலங்காவின் பிரதான வான்படைத் தளத்தை தாக்கியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டி 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கத்துடன் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான்படை வலு இடம்பெற்று வரும் போரில் பயங்கரமான புதியவகை உத்தி. 5 ஆண்டு கால போர்நிறுத்த உடன்பாடு பேச்சளவில் மட்டும் இருக்கும் போது போர் தீவிரமடைந்து வருகின்றது. தமது வான்படையின் இரு வானூர்திகள் கொழும்பு அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையாக உள்ள சிறிலங்காவின் வான்படைத் தளத்தின் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பி வந்துவிட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவருடன் வானோடிகள் நின்று எடுத்த படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தளத்தில் தரித்து நின்ற வான்படையினரின் வானூர்திகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக இரு தரப்பும் முரண்பாடான தகவல்களை தெரிவித்தனர். சிறிலங்காவின் தெற்குப்பகுதி பெருன்பான்மையாக சிங்கள மக்களைக் கொண்ட பகுதியாகும். அங்கு இடம்பெற்ற இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதுவாக நகரும் இலகுரக வானூர்தி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியின் மேலாக 400 கி.மீ (250 மைல்) தூரத்திற்கு யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு பயணித்து வந்தது பெரும் சவாலாகும். இந்த தாக்குதலில் பாதிப்படைந்த படையினர் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மேலும் மார்ச் 28 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். இது விடுதலைப் புலிகளுக்கு ஒரு பின்னடைவாகும். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு முன்னரும் விடுதலைப் புலிகளின் பகுதி கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின்படி 155,000 மக்கள் கடந்த 6 வாரங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் கிழக்கின் முழுப்பகுதியையும் விடுவித்து விடலாம் என அராங்கம் நம்புகின்றது. சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது மற்றுமொரு களமுனையையும் திறந்துள்ளது. அதன் பிரதான நோக்கம் மடு தேவாலயத்தை கைப்பற்றுவது தான். அதன் நோக்கம் கிறிஸ்தவர்களின் ஆதரவை பெறுவதாகும். தற்போதும் அரசாங்கத்தின் பேச்சாளர்கள் பேச்சுவார்த்தை மூலமான தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாக வாயை திறப்பதில்லை. ஆனால் எதிர்வரும் 3 வருடங்களில் போரில் வெற்றிபெற்று விடலாம் என அதிகாரிகள் பேசுகின்றனர். இந்த போரில் 70,000 மக்களின் உயிரிழந்துள்ளனர். இதில் 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்த மோதல்களில் உயிரிழந்த 4,000 மக்களும் அடங்குவர். எப்போதும் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. அவர்கள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் (இங்கு அவர்களிடம் சிறிய கடற்படையும் உண்டு), வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி தெற்கில் வந்து குண்டுகளை வீசிச் சென்ற விடுதலைப் புலிகளின் வான்படையின் வலிமை தென்பகுதிக்கு மற்றுமொரு வடிவில் போரை கொண்டு சென்றுள்ளது. இது கடும் போக்காளரான அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்குகான ஆதரவை மழுங்கடித்து விடும். கடந்த கால இராணுவ நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு மக்களை தள்ளியுள்ளது.

Friday, March 30, 2007

அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமாருக்கு "மாமனிதர்" விருது: தமிழீழ தேசியத் தலைவர் அறிவிப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்ரேலியக் கிளையின் பொறுப்பாளர் தில்லைநடராஜா ஜெயக்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு அவர் ஆற்றிய பணியை மதிப்பளித்து தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதர் எனும் அதியுயர்ந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
29/03/2007


கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலிலே மூழ்கிக்கிடக்கிறது.

திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் அழகு. அவர் உதிரும் மந்திரப் புன்னகை அந்த அழகிய ஆளுமையை அணிசெய்தது. இதுவே, அனைவரையும் அவரை நோக்கிக் காந்தமாகக் கவர்ந்திழுத்தது.

இவர் ஒரு சிறந்த தேசப்பற்றாளர். அவுஸ்திரேலிய மண்ணில் தளமிட்டு நின்றபோதும், தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணை அவர் ஆழமாக நேசித்தார். சிங்கள அதிகார வர்க்கம் தனது இராணுவ அடக்குமுறைப் பாதையைக் கைவிட்டு, தமிழ் மக்களுக்கு என்றுமே ஒரு நீதியான தீர்வை வழங்கப்போவதில்லை என்பதை அவர் ஆழமாக உணர்ந்தவர். விடுதலையின் பாதையில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என்பதை அனுபவ ரீதியாகப் பட்டறிந்தவர். இந்தச் சிந்தனைத் தெளிவும் பட்டறிவும் அவரிடம் விடுதலைத் தீயைப் பற்ற வைத்தது. அவரும் எமது விடுதலை இயக்கத்தோடு ஒன்று சேர்ந்து, போராட்ட வாழ்வில் முழுமையாக மூழ்கினார்.

கடல்கள் தாண்டி, கண்டனங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூர தேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் இவர் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். அவுஸ்திரேலிய நாட்டின் அரசியல் போக்கையும் சட்ட நடைமுறைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, தமிழீழ தேச விடுதலைக்கான போராட்டப் பணிகளைச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் முன்னெடுத்தார். அங்கு வாழும் எம்மக்கள் மத்தியில் தமிழ்ப்பற்றையும் இனப்பற்றையும் ஊட்டிவளர்த்து, போராட்ட விழிப்புணர்வைத் தூண்டி, எமது போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களை அணிதிரட்டினார். அவுஸ்திரேலிய மண்ணில் ''தமிழ்க்குரல்'' வானொலி தோற்றம் பெறுவதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பல்வேறு நாடுகளில் தனது கிளைகளைப் பரப்புவதற்கும் துணை நின்றவர். இவர் ஆரவாரமின்றி, அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி என்றும் போற்றுதற்குரியவை.

திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக ''மாமனிதர்'' என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். தேச விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. எமது நெஞ்சத்து நினைவலைகளில் அவர்கள் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 5 படையினர் பலி!

[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007]

வவுனியா மன்னார் பகுதியில் அமைந்துள்ள பறையனாளன்குளப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடியில் சிறீலங்கா படையினர் ஜவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் உழவு இயந்திரத்தில் பயணித்த படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குகு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சு: 9 பொதுமக்கள் பலி

[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007]

சிறிலங்காப் படையினரால் முறக்கொட்டாஞ்சேனை முகாமில் இருந்து 10 கிலோ மீற்றர் தென்மேற்காக உள்ள சித்தாண்டி 3 ஆம் வட்டாரம் மீது நடத்திய எறிகணை தாக்குதலில் 4 சிறார்கள் உட்பட 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2 வயது நிரம்பிய 2 பெண் குழந்தைகளும், 18 வயதிற்கு கீழ்ப்பட்ட 2 சிறார்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். இதில் மூன்று சிறார்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

சிறிலங்காவின் காவல்துறையினரோ அல்லது படையினரோ சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு இன்றுவரை செல்லவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகளால் கடந்த 21 ஆம் நாள் இராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தே இந்த எறிகணை வீச்சை படையினர் நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் சித்தாண்டிப் பகுதியில் இருந்து இராணுவ நிலைகளை நோக்கி மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தவில்லை என அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் வாழ்விடங்களை நோக்கி 6 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும் இதில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லம் தவமணி (வயது 30), அவரது 2 வயதுக் குழந்தை நல்லம் நிரோஜா, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறார்களான பேரின்பராஜா ரஞ்சிதா (வயது 2), பேரின்பராஜா சசிகுமார் (வயது 15), பேரின்பராஜா வசந்தகுமார் (வயது 18), அழகையா விஜயலக்ஸ்மி (வயது 42), நானமணி தம்பித்துரை (வயது 42), இளையதம்பி சின்னத்துரை (வயது 50) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

இதனிடையெ இராணுவமும் விடுதலைப் புலிகளும் நேற்று வியாழக்கிழமை இரவும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை: சு.ப.தமிழ்ச்செல்வன்

[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007]

எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப.தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்:

ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்கு, ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், "ஜனசக்தியிடம்" தெரிவித்தார்.

"புலிகளிடம் விமானப் படை இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்று இந்தியாவில் உள்ள சில ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இதே கவலை தங்களுக்கும் இருப்பதாக மத்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலரும் அரசியல் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்தார்கள்.

இது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பு என்ன கருதுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை 'ஜனசக்தி" தொடர்பு கொண்டது.

மின் அஞ்சல் ஊடாக சு.ப.தமிழ்ச்செல்வன், "ஜனசக்தி"க்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கேள்வி: விடுதலைப் புலிகள் சமீபத்தில் முதன்முறையாக விமானத்தாக்குதல் நடாத்தி இலங்கைப் படைகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் ஈழத்தமிழருக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன?

பதில்: சிறிலங்கா அரசும் சிங்களப் பேரினவாதமும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, இன அழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டமையால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் தீவிரமடைந்தது. இப்படிப் படிப்படியாக எமது ஆயுதப்போராட்டம் வளர்ச்சியடைந்து இன்று ஒரு நடைமுறை அரசை இயக்குகின்ற அளவுக்கு வலுப்பெற்றிருக்கின்றது. பெருமளவு நிலப் பிரதேசத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற அளவுக்கும் எமது மரபுவழிக் கட்டுமானங்களைக் கட்டியெழுப்பி எமது மக்களைப் பாதுகாப்பதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுப்பதற்கும் தக்கவாறான பாரியளவு வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.

இந்த வகையில் எமது படைக்கட்டுமானங்களினுடைய வளர்ச்சியும் அதன் தொடர்ச்சியுமே இன்று விமானப் படையின் தோற்றமாக மாறியிருக்கின்றது. எமது விமானப்படை இதுவரை பொறுமை காத்தது. இப்பொழுது சிறிலங்கா விமானப் படை எமது மண்மீது தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் அதன் மீது பதில் நடவடிக்கையொன்றை நடாத்தி அதனைச் செயலிழக்கச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. அதனால் தான் எமது விமானப்படையைப் பயன்படுத்தி இத்தாக்குதலை மேற்கொண்டிருந்தோம். எம்மைப் பொறுத்தவரையில் எமது சுதந்திரப் போராட்டத்தில் இதுவொரு மைல்கல்லாகவே இருக்குமென நான் கருதுகின்றேன். இது ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுடைய வலிமையை அதிகரித்திருக்கிறது. இது விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு உந்துசக்தியாக அமையுமென்றே எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: விமானப்படைத் தாக்குதலுக்கு இது சரியான தருணம் என நினைக்கின்றீர்களா?

பதில்: சிறிலங்கா விமானப்படையினர் அண்மைக்காலத்தில் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக குண்டுகளை வீசி பல நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டு, பொறுமை காத்து இருப்பதென்பது எமது மக்களை ஒரு மிகப்பெரும் பேரழிவுக்குள் இட்டுச்செல்லும் என்றே நான் நினைக்கின்றேன். இந்நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கும் எதிர்காலத்தில் இந்த இனவாத அரசின் விமானப் படையைச் செயலிழக்கச் செய்வதற்கும் நாம் எமது அனைத்து உத்திகளையும் கையாளுவோம். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும்மென்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: புலிகளின் படையிலிருப்பில் செக் விமானங்கள், ஐந்து விமானங்களுக்கு மேல் அவர்களிடம் விமானங்கள் இருக்க வாய்ப்பில்லை, இதனை ஒரு படையென்றெல்லாம் கூறமுடியாது என்பன போன்ற இலங்கை அரசின் கருத்துக்களுக்கு தங்கள் பதில் என்ன?

பதில்: விழுந்தாலும் தங்களுடைய மீசையில் மண்படவில்லை என்ற மாதிரியாகவே சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்கள் அமைகின்றன. நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைகளை வெளிப்படுத்தி வருவது சிறிலங்கா அரசின் வழமையாகும். எமது தாக்குதல்களும் அவற்றின் அழிவுகளுக்குப் பின்னாலுமே அவர்கள் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்கின்ற சூழல் உருவாகும்.இதற்கான பதில்களை எமது நடவடிக்கைகள் ஊடாக வெளிப்படுத்தவே நாம் விரும்புகின்றோம்.

கேள்வி: இலங்கைப் படையினர் இந்த விமானப்படைத் தாக்குதலால் கொந்தளித்திருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் மீது இது திருப்பிவிடப்படலாம். இந்நிலையில் சாதாரண சிங்கள மக்களைக் காப்பாற்ற இந்தத் தாக்குதல் உதவுமா?

பதில்: சிங்கள விமானப்படையினர் எமது மண்ணில் பொதுமக்களினுடைய இலக்குகளைத் தாக்கி அவர்களைக் கொல்வதையே வழமையாக்கிக் கொண்டுள்ளனர். தற்போது தமிழ் மக்களினுடைய விமானப் படை வளர்ச்சியடைந்து அவர்களுடைய பாதுகாப்பு மையத்திற்குள்ளேயே புகுந்து வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு திரும்பி வந்திருக்கிறது.

இந்நிகழ்வு சிங்கள தேசத்தவருக்கும் இனவாதத் தலைவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றேன். எமது இலக்கு சாதாரண பொதுமக்கள் அல்ல. சிறிலங்கா இரணுவத்தின் இயங்கு தளங்களும் பேரினவாத செயற்பாட்டு மையங்களுமே எமது இலக்குகளாக இருக்கும். சாதாரண சிங்கள மக்களை நாம் எப்போதுமே இலக்கு வைக்கப்போவதில்லை.

கேள்வி: 2005 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு வந்த இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அப்போதே தங்களிடம் விமானத்தளம் இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது அது மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது நீங்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றீர்களே?

பதில்: ஒருபோதும் நாம் எமது விமானப் படைத்தளம், விமானங்கள் உள்ளதென்பதை மறுக்கவில்லை. எப்பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம். 1998 ஆம் ஆண்டிலிருந்தே எமது விமானப் படையின் வளர்ச்சி ஆரம்பித்து விட்டது. இன்று ஒரு நல்ல நிலையில் அது இருக்கின்றது.

கேள்வி: தங்கள் விமானப்படையால் இந்தியப் பாதுகாப்பிற்கு ஆபத்து வரலாம். தென்னிந்தியாவிற்கு ஆபத்து வரலாம் என்றெல்லாம் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இக்கருத்துக்கள் மிகவும் தவறானவை. எமது படைக் கட்டுமானங்கள் எப்பொழுதும் எமது மக்களைப் பாதுகாப்பதற்கும் எமது தாயகப் பிரதேசத்தை விடுவிப்பதற்குமாகவே கட்டியெழுப்பப்பட்டவையாகும். ஆகவே எமது மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு எதிராகவே அவை செயற்படுமேயன்றி ஒருபோதும் அவை இந்தியாவுக்கோ ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்களினுடைய சுதந்திரம் என்பதும் அவர்களின் விடுதலை என்பதும் இந்திய தேசத்திற்கும் மிகுந்த நன்மையையும் நல்லுறவையுமே ஏற்படுத்தும். ஒருபோதும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எதிரான ஒரு போக்கை ஈழ விடுதலைப் போராட்டமோ தமிழீழ விடுதலைப் புலிகளோ கடைப்பிடிக்கமாட்டார்கள். தமிழர்களுடைய படைபலம் பெருகுவதையிட்டு எந்த அரசுமே கவலைகொள்ளத் தேவையில்லை. பதிலாக எமது படைபலம் பெருக்கி அதனூடாக சுதந்திரமடைந்தால் அதுவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பூரண அமைதியைக் கொண்டுவரும் என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: அதிகாரபூர்வ போர்நிறுத்தம் என்ற நிலையில் விமானப்படைத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கின்றதா? அல்லது சமரசப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு நெருக்கடி உத்தியென இதை எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: போர் நிறுத்தம் அமுலில் இருக்கின்ற போதே சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான விமானத் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்களினுடைய பெறுமதியான உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்ட போது நாம் பலமுறை இவற்றை நிறுத்தக் கோரினோம். ஆயினும் சிறிலங்கா அரசாங்கம் அதனை மதிக்காமல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு யுத்தத்தை தொடர்ந்து வரும் சூழலில் நாம் இனியும் பொறுத்துக் கொண்டிருக்கமுடியாத நிலையில் தான் இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். பேச்சுவார்த்தை என்பது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி ஆக்கிரமிப்புக்களை அகற்றி நேர்மையான வகையில் சிறிலங்கா அரசாங்கம் அணுகுகின்ற போதே சிந்திக்கக்கூடிய விடயமே தவிர இத்தகைய இராணுவ முனைப்பைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற சூழலில் அது சாத்தியமற்றதொன்றே.

கேள்வி: தோள்மீது வைத்துப்பயன்படுத்தக்கூடிய ஏவுகணையின் மூலம் கூட இலங்கை விமானங்களை வீழ்த்தமுடியும். சாதாரண தமிழ் மக்களை அதன்மூலம் காப்பாற்றமுடியும். ஆனால் மக்களைக் காப்பாற்றும் அந்த தடுப்பு நடவடிக்கையினை விடுத்து தற்போது தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளதற்கான நோக்கம் என்ன?

பதில்: சிறிலங்கா அரசாங்கத்தினுடைய விமானப் படை விளைவிக்கின்ற மனிதப் பேரவலங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அதனால் தான் அந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் படைத்தளக் கோட்டைக்குள் புகுந்து விமானப் படையின் தாளத்தில் வைத்தே அவற்றை அழித்திருப்பது எதிர்காலத்தில் அங்கிருந்து தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதென்பதைப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. இன்னும் பாரிய இழப்புக்களை சிங்கள தேசத்திற்கு ஏற்படுத்த முடியும் என்பதை இத்தாக்குதல்கள் உணர்த்தி நிற்கும் என்றே நான் நினைக்கின்றேன். ஏனைய எமது மக்களை பாதுகாக்கின்ற உத்திகள் தந்திரோபாயங்கள் தொடர்பாக நான் இப்பொழுது கருத்துக்கள் கூற விரும்பவில்லை. நடைமுறைக்கு வரும் போது நீங்கள் அறிவது பொருத்தமாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

கேள்வி: இலங்கையிலுள்ள ஈழத்தமிழர் வாழும் பகுதிகளின் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடிகளைக் குறைக்க செஞ்சிலுவைச் சங்கத்தின்மூலம் பொருட்கள் அனுப்ப இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விமானப்படைத் தாக்குதல் அதனைத் தடுத்து நிறுத்த வழி வகுக்காதா?

பதில்: எமது தாக்குதல்கள் என்பது சிறிலங்காப் படைகளுக்கு எதிரானதே. எந்தவிதமான சர்வதேச சமூகத்தையோ இந்தியாவையோ உதவியமைப்புக்களையோ குறிவைப்பதாக எமது தாக்குதல்கள் இருக்கப்போவதில்லை. எமது தாக்குதல்கள் எமது மக்களை பாரிய இன அழிப்புக்கு ஆளாக்குகின்ற சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரானதாகவே அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.தமிழ் மக்களுக்கு உதவவிரும்புபவர்கள், மனிதாபிமான உதவிகள் செய்ய முன்வருபவர்களுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி அதற்கான வழிவகைகளை செய்யத் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி என்ற கருத்தினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டீர்கள். பின்னர் அது கைவிடப்பட்டதாகத் தெரிகின்றது. எதிர்காலத்தில் மீண்டும் இந்த அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: ஈழத்தமிழ் மக்கள் அவர்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய முழுமையான ஒரு தீர்வையே விரும்புகிறார்கள். அது எந்த வகையில் அமையவேண்டும் என்பது பற்றி தீர்வை முன்வைக்கின்ற போதுதான் எம்மால் விமர்சனங்களை கூறக்கூடியதாக இருக்கும். எங்களைப் பொறுத்தவரையில் எமது மக்கள் தங்களினுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான தீர்வை எட்டுவதற்கே எப்பொழுதும் தங்களது கோரிக்கையை முன்வைத்து வந்திருக்கிறார்கள். அந்த அபிலாசைக்கேற்ற வகையிலேயே எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே எத்தகைய தீர்வை முன்வைக்கப் போகிறார்கள் என்பதை அறியாது நான் கருத்துக்கூறுவது பொருத்தமில்லை என்றே நினைக்கிறேன்.

கேள்வி: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றார்கள். ஆனால் புலிகள் தாக்கியதாக பழியை உங்கள்மீது போடுகின்றார்கள். இத்தாக்குதலைத் தடுக்க இந்திய, இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபடலாம் என்ற ஒரு திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்கின்றது. அது பயனளிக்குமா?

பதில்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களும் ஈழத்தமிழ் மக்களும் எப்பொழுதும் தொப்புள்கொடி உறவுகளாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.

இவ் உறவை சீர்கெடுக்கும் நோக்கோடு சிறிலங்காப் படைகள் தாங்களே தமிழக உறவுகளை சுட்டுக்கொன்றுவிட்டு அந்தப் பழியை எம்மீது சுமத்தி ஈழத்தமிழ் மக்களுடனான தமிழக மக்களின் உறவை இல்லாமல் செய்ய முனைகிறது.

இந்தச் சதிச்செயலை தமிழக உறவுகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். சிறிலங்காப் படைகளினுடைய இத்தகைய அட்டூழியங்களுக்கு இதுவரையும் ஈழத்தமிழ் மக்கள் முகங்கொடுத்துவந்தார்கள். தற்போது தமிழக மக்களை நோக்கியும் தமது துப்பாக்கிகளைத் திருப்பியிருக்கிறார்கள். இதனைத் தமிழகத் தலைவர்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இப்பிரச்சார உத்தியை எவருமே நம்பப்போவதில்லை. அத்துடன் இந்தியக் கடற்படையுடன் இணைந்து ஒரு கூட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடப்போவதாகக் கூறிக்கொண்டு எமக்கும் இந்திய படைக்கும் இடையில் மோதல் நிலையை உருவாக்கி இந்திய அரசோடு முரண்பாட்டை உருவாக்கிவிட்டு அதனால் நன்மையடைய சிறிலங்கா அரசாங்கம் ஒரு சதியைச் செய்கின்றது.

நிச்சயமாக இந்தச் சதிக்குள் இந்திய அரசு விழுந்துவிடாதென்றே நாம் நம்புகின்றோம். தமிழ் மக்களின் நலன் கருதி தமிழகத் தலைவர்களும் தமிழக மக்களும் கூட இதனை அனுமதிக்கமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

தாக்குதல் மூலம் என்னை வெளியேற்ற முடியாது: மகிந்த

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007

எனது அரசாங்கத்தை தாக்குதல் மூலம் வெளியேற்ற முடியாது, விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சாதகமாகப் பயன்படுத்தி பதவிக்கு வந்துவிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி எண்ணுமாயின் அது முற்றிலும் தவறானது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கட்டுநாயக்க மீதான வான் தாக்குதலைத் தொடர்ந்து, என்னைப் பதவி விலகும் படியான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. நாம் பெரும் போரை நடத்தி வருவதாக அவர்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். பிரபாகரன் பேசும் மொழியிலேயே அவர்களும் பேசுகின்றனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் அரசாங்கம் ஆட்டம் காணும் என யாராவது எண்ணுவார்களாக இருந்தால். அவர்கள் தாங்கள் வெட்டிய குழிக்குள் வீழ்பவர்கள் ஆவர். தமது சொந்த அரசியல் மூலம் பெரும் தவறை இழைத்தவர்கள் ஆவார்கள் என்றார் அவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ் மக்களை ஒடுக்க இலங்கை அரசு பாகிஸ்தானிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் ஆயுதங்கள் பெறுவதைத் தடுக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்படும் மாநிலத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கை மத்திய அரசில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழும் சிங்களமும் தேசிய மொழிகளாக ஏற்கப்படட வேண்டும். விடுதலைப் புலிகளின் போரிடும் திறனையும் உறுதியையும் பாராட்டுகின்ற அதே நேரத்தில் அந்த வழியால் மட்டும் தீர்வு காண முயற்சிப்பதைக் கைவிட்டு தமிழ் மக்கள் மற்ற போராட்டக் குழுக்களையும் ஒன்று திரட்டி சுமூக அரசியல் தீர்வு காண முன்வருமாறு விடுதலைப் புலிகளையும் வேண்டுகிறோம். இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு தன் செல்வாக்கை இலங்கையின் மீது பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய கூட்டணி அரசில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு செலுத்தும் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருப்பதும் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்கள், திராவிட அரசியல் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு அப்பால் இடதுசாரிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி:புதினம்

Thursday, March 29, 2007

புலிகளின் புது பலம்: ராமநாதபுரத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க அரசு திட்டம்

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]

விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் பலத்தைப் பெற்றிருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள், இலங்கை விமானப் படை தளத்தை விமானம் மூலம் அதிரடியாக தாக்கிய சம்பவம் இலங்கை அரசை பயமுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டதம், சுந்தரமுடையான் கிராமத்தில், சீனியப்பா தர்கா என்ற இடத்தில் 8 விமானங்களைக் கண்டறியும் நவீன ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் ஒரு கமாண்டர் தலைமயிலான 50 விமானப்படை வீரர்கள் கொண்ட குழுவும் இங்கு நிலை கொண்டுள்ளது. இந்தக் குழுவினர் புலிகளின் விமானம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்கும் வகையில் இந்தக் குழுவினர் செயல்படுவர்.

இதுதவிர சீனியப்பா தர்கா பகுதியில் நிரந்தர விமான தளம் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை பாகிஸ்தான் மற்றும் சீன விமானங்களைக் கண்டறிவதற்குத்தான் ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவையும் கூட வடக்கு மற்றும் கிழக்கில்தான் உள்ளன. முதல் முறையாக இத்தகைய நவீன ரேடார்கள் தென்னிந்தியாவில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னேற்பாடுகள் குறித்து இந்திய உளவுப் பிரிவு (ரா) அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு உடனடி ஆபத்து ஏதும் இல்லை என்ற போதிலும், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், விடுதலைப் புலிகளைப் பார்த்து, இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் நக்சலைட்டுளும் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே அவற்றைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழக கடலோரங்களில் தீவிர கண்காணிப்பு:

இதற்கிடையே, இலங்கையில் தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக கடலோரப் பகுதி முழுவதும் முழு அளவில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலோரக் காவல்படை ஐஜி ராஜேந்திர சிங் கூறுகையில், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் 2 கப்பல்கள், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளன.

அரிச்சமுனைக்கு கடலோரக் காவல் படையின் முகாம் மாற்றப்பட்டுள்ளது. அங்கு 12 கமாண்டர்கள் நிலை கொண்டுள்ளனர். இவர்களுக்கு அதிநவீன 5 ரோந்துப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன. 24 மணி நேரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர ராமேஸ்வரம், உச்சிப்புளி, முகுந்தராய சத்திரம் உள்ளிட்ட கடல்பகுதிகளில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண்டபம் பகுதியில் ஒரு ரேடார் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

தென் மண்டல காவல்துறை ஐஜி. சஞ்சீவ் குமார் கூறுகையில், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கடத்துவதைத் தடுக்கும் பொருட்டு, 37 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 21 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் 16 படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007] சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். மீன்பிடித் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதி சிறிலங்கா கடல் எல்லைக்கு உட்பட்டது என்றும், இருப்பினும் எச்சரிக்கை வழங்காது துப்பாக்கிச் சூட்டினை சிறிலங்காப் படையினர் நடத்தியது தவறு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த இருவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவரின் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கன்னியாகுமரிப் பகுதியில் பதற்றம் நிலவுவதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி:புதினம்

'கருணா குழுவின் அராஜகங்களை சிறிலங்கா அரசு விசாரிக்கவோ- நிறுத்தவோ முயற்சிக்கவில்லை': மனித உரிமைகள் காப்பகம் சாடல்

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]

"சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரின் சிறார் படைச் சேர்ப்பையும், கடத்தல்களையும் விசாரணைகள் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதும், அரசாங்கத் தரப்பு செயற்திறனுள்ள நடவடிக்கைகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என்பதுடன் கருணா குழுவினரின் கடத்தல்களும் தொடர்கின்றன."

மேற்கண்டவாறு இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கும் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சிறார்களை படையில் சேர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் காப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கருணா குழுவினரின் அரசியல் அலுவலகங்களுக்கு தாக்குதல் துப்பாக்கிகளுடன் 17 வயது நிரம்பிய சிறார்கள் காவல் கடமையில் இருந்ததை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த பெப்ரவரி மாதம் அவதானித்துள்ளது. சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் அந்த வழிகளால் நடந்தும் வாகனங்களிலும் செல்வதுண்டு. ஆனால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

கருணா குழுவின் தலைவரான கருணாவின் சொந்த ஊரான கிரானில் உள்ள கருணா குழுவினரின் காரியாலயத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்ததின் வாழைச்சேனை, முறக்கொட்டாஞ்சேனை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கும் துப்பாக்கிகளுடன் சிறார்கள் காவல் கடமையில் ஈடுபட்டு வருவதை எமது அமைப்பு அவதானித்துள்ளது. இந்த காரியாலயங்கள் சிறிலங்கா இராணுவ முகாம்கள் உள்ள வீதிகளில் எதிர்ப்புறமே உள்ளன.

தமது முகாமுக்கு எதிர்ப்புறம் உள்ள வீதியில் சிறார்கள் ஆயுதங்களுடன் நிற்பதனை அவதானித்த பின்னரும் படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த துஸ்ப்பிரயோகங்களை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரும் என்பதை நம்பவது கடினமாக உள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய தலைவர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காப் படையினரின் ஆதரவுடன் கருணா குழுவினர், சிறார்களை படையில் பயன்படுத்துவது முன்னரை விட தற்போது அதிகரித்துள்ளது.

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிகாரிகள் எல்லோரும் கருணா குழுவினரின் கடத்தல்கள் தொடர்பாகவும், அதில் படையினரின் தொடர்புகள் குறித்தும் விசாரணைகளை நடத்துவதாக மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். ஆனால் இன்று வரை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை.

யுனிசெஃப்பின் தகவல்களின் படி கருணா குழுவினரால் கடந்த மூன்று மாதங்களில் 45 சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் 10 ஜனவரியில் 24, பெப்ரவரியில் 11 சிறார்ககள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் முகாம்களில் இருந்து கடத்தப்பட்ட 03 சிறார்களும் அடங்குவார்கள்.

எனினும் உண்மையான எண்ணிக்கை இதனை விட அதிகமானது. ஏனெனில் பல பெற்றோர்கள் முறைப்பாடுகளை செய்வதற்கு அச்சமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் கருணா குழுவினரால் பலவந்தமாக கடத்தப்பட்ட 17 வயதிற்கும் மேற்பட்டவர்களின் விபரங்கள் சேர்க்கப்படவில்லை.

கருணா குழுவினர் ஒரு டசின் சிறார்களை கடந்த டிசம்பரில் விடுவித்தாக யுனிசெஃப் தெரிவித்திருந்தது. எனினும் அவர்களில் 03 சிறார்கள் மீண்டும் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் கருணா குழுவினரால் கடத்தப்பட்ட ஒரு சிறுவனினதும் இரு இளைஞர்களினதும் பெற்றோர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.

முதலாவது சம்பவத்தில் கடந்த ஜுலை மாதம் கருணா குழுவினர் ஒரு சிறுவனைக் கடத்தியுள்ளனர். பின்னர் அவரை வீட்டுக்கு சென்று வர அனுமதித்திருந்தனர். அதன் பின்னர் ஒரு வாரத்தில் மீண்டும் அந்த சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளனர். இரண்டாவது சந்தர்ப்பத்ததில் வெலிகந்தைக்கும் வாழைச்சேனைக்கும் இடையில் உள்ள ஏ-11 வீதியில் இரு இளைஞர்களை கருணா குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

காபொலவில் உள்ள கருணா குழுவினரின் முகாமில் உறவினர்கள் முறைப்பாடுகளைச் செய்த போது, முறைப்பாடுகளை செய்ய வேண்டாம் எனவும் அல்லது விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று விட்டார்கள் என முறைப்பாடுகளை செய்யுமாறும் கருணா குழுவினர் பெற்றோரைப் பணித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சிறார்களைக் கடத்தி வருகின்றனர், யுனிசெஃப்பின் தகவல்களின் படி ஜனவரியில் 19, பெப்ரவரியில் 09 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் இருந்தும் 04 பேரை விடுதலைப் புலிகள் கடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகள், சிறார்களை படையில் பயன்படுத்துவதை நாம் பல தடவைகள் கண்டித்துள்ளோம். எனவே அவர்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதனால் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இவ்வாறான சிறார் படைச் சேர்ப்பை மேற்கொண்டு வரும் போதும், அரசாங்க படையினர் கருணா குழுவினருடன் இணைந்து இந்தகைய கேவலமான தொழிலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது என அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கருணா குழுவினரின் சிறார் படைச்சேர்ப்பில் அரசாங்கப் படையினர் ஒத்துழைத்து வருவது தற்போது வெளிப்படை. அதற்கான வலுவான ஆதாரங்களும் உள்ளன. படையினர் பார்த்திருக்க ஆயுதங்கள் தாங்கிய கருணா குழுவினரின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு நகரில் நடமாடி வருகின்றனர்.

வாழைச்சேனையில் கருணா குழுவைச் சேர்ந்த ஜெயம் என்பவர் படையினரின் துருப்புக்காவி வாகனத்தை ஓட்டிச் சென்றதனை நாம் பெப்ரவரியில் அவதானித்துள்ளோம். மட்டக்களப்பில் காவல்துறையினருடன் இணைந்து கருணா குழுவினர் சுற்றுக்காவல் செல்வதனை மக்கள் அவதானித்துள்ளனர்.

பொலநறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்தை நகருக்கு வடமேற்காக 10 கி.மீ தொலைவில் 5 முகாம்களை கருணா குழுவினர் நிர்வகித்து வருகின்றனர். இது மட்டக்களப்பில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது.

வெலிகந்தையில் இராணுவத்தின் 23 ஆவது படையணியின் முகாம் உள்ளது. அந்தப்பகுதி அரசாங்கத்தின் உறுதியான கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. முத்துகல கிராமத்தில் உள்ள கருணா குழுவினரின் முகாம் சிறிலங்கா இராணுவ காவல் நிலைக்கு அண்மையில் உள்ளது.

கருணா குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகளின் கடத்தல்கள் தொடர்பாக சுயாதீன அமைப்புக்களும் தகவல்களை தருகின்றன. கடந்த நவம்பரில் சிறிலங்காவிற்கு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களும் ஆயுத மோதலுக்குமான சிறப்புப் பிரதிநிதியான அலன் றொக், கருணா குழுவினர், அரச படையினரின் ஆதரவுடன் சிறார்களைக் கடத்துவதாகவும், விடுதலைப் புலிகளும் சிறார்களைக் கடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

கருணா குழுவினரின் சிறார் கடத்தல் தொடர்பாக "இணைந்த குற்றம்: அரசுடன் இணைந்து கருணா குழுவினரின் சிறார் கடத்தல்" என்னும் தலைப்பில் 100 பக்க அறிக்கையை கடந்த ஜனவரி நாம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தோம்.

அதில் எவ்வாறு கருணா குழுவினர், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறார்களை கடத்தி படை நடவடிக்கைகளில் பயன்படுத்துகின்றது என வரைபடங்கள், புகைப்படங்கள், விசாரணைகள், தரவுகள் என்பனவற்றின் மூலம் விளக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு தமக்கு ஆதாரங்கள் தேவை என அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் முக்கியமான தரவுகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது என அடம்ஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள், எமது அறிக்கைகள் என்பவற்றை விட பல குடும்பங்கள் காவல்துறையில் சட்டப்படியான முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

கடந்த வருடம் கடத்தல்கள் காணாமல் போதல் தொடர்பாக ஆராய்வதற்கு மகிந்த ராஜபக்ச, தனிநபர் கொண்ட ஆணைக்குழுவை அமைத்திருந்தார். அந்த ஆணையாளர் கடந்த ஜனவரி மட்டக்களப்பிற்கு முதன்முறையாக வந்திருந்தார் ஆனால் இரு மாதங்களின் பின்னர் தனது திட்டமிட்ட பயணத்தை முன்னறிவித்தல்கள் இன்றி இரத்துச் செய்துவிட்டார்.

கடத்தப்பட்ட சிறார்களின் பெற்றோர்களுக்கு எழுந்தமானமாக தகவல்கள் கொடுக்கப்பட்டன. கூட்டம் நடைபெற்ற இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதி நிமிடத்தில் இடம் மாற்றப்பட்டது. சிலர் ஆணையாளரை சந்திக்கவே இல்லை. மேலும் ஆணையாளரின் அதிகாரிகள் தகவல்கள் கொடுக்கப்படுவதை தடுத்தும் உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இராணுவத்தினர் கருணா குழுவினால் கடத்தப்பட்ட சிறார்களின் பெற்றோரை விசாரணைகளுக்காக தமது முகாமுக்கு அழைத்திருந்தனர். அவர்களின் முறைப்பாடுகள் தொடர்பாக தகவல்களை கேட்டதுடன், அடையாளம் தெரியாத குழுவினரே சிறார்களை கடத்தியதாக கூறவேண்டும் எனவும் பெற்றோருக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

பெப்ரவரி 9 ஆம் நாள் எமது அமைப்புடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட கருணா, இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், தமது அமைப்பில் 18 வயதிற்கு குறைந்தவர்கள் இல்லை எனவும் கூறினார். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக தமது முகாம்களுக்கு திடீரென செல்வதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கருணா குழுவினரால் கடத்தப்பட்ட சிறார்கள் தொடர்பாக எமது அமைப்பு மார்ச் 19 ஆம் நாள் கருணா குழுவினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. ஆனால் இன்றுவரை (28.03.07) எமக்கு பதில் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் கேவலமான நடவடிக்கைகளுக்கு கருணா குழுவினர் உதவி வருகின்றனர். ஆனால் இந்த குழுவினர் சிறார்வர்களை கடத்தி தமது படைகளில் பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டிய தருணம் இதுவே என" அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் 23 டோராப் படகுகள் அணி கடற்புலிகளால் விரட்டியடிப்பு

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]

முல்லைத்தீவு கடற்பரப்பில் 23 டோராக்களைக் கொண்ட அணியை கடற்புலிகள் தாக்கி, கடற்படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தி விரட்டியடித்துள்ளனர். இதில் கடற்படையினரின் இரு டோரா பீரங்கிப் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவுக்கும் அளம்பிலுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் சிறிலங்காப் படையினரின் 23 டோராப் படகுகளைக் கொண்ட அணி கடற்பரப்பில் முன்னோக்கி வந்தன.

முன்னோக்கி வந்த டோராப் படகுகளின் அணிக்கு எதிராக கடற்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதல், இன்று அதிகாலை 1 மணிவரை நீடித்தது. கடற்புலிகளின் தீவிர முறியடிப்புத் தாக்குதலில் இரு டோரா பீரங்கிப் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதனையடுத்து சிறிலங்கா கடற்படையினரின் ஏனைய டோராப் படகுகள், சேதமடைந்த படகுகளை இழுத்துக்கொண்டு பின்வாங்கி ஓடின.

டோராப் படகுகளின் அணியினை திருகோணமலை வரைக்கும் கடற்புலிகள் விரட்டியத்துள்ளனர்.

இம் முறியடிப்பச் சமரில் கடற்புலிகளின் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

இதனிடையே அளம்பில் கரையோரப் பகுதிகள் மீது சிறிலங்கா கடற்படையினர் செறிவான பீரங்கித் தாக்குதலை நடத்தி வருவதனால் அப்பகுதி கரையோர மக்கள் அவலப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க சிறிலங்கா வான் படையினரின் வானூர்திகள் நேற்று இரவு 9 மணியளவில் வன்னிப் பகுதியில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

தொடர்ச்சியாக தமிழர் தாயகப் பகுதிகள் மீது சிறிலங்கா வான்படையினர் தொடர் குண்டுத் தாக்குதலை நடத்தி வருவதுடன் தொடர் எறிகணைத் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் காலமானார்.

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் தி.ஜெயக்குமார் இன்று வியாழக்கிழமை காலை தனது 54 ஆவது வயதில் காலமானார்.

20 வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலிய கிளையின் பொறுப்பாளராகவும், அவுஸ்திரேலியாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்களின் உருவாக்கத்திற்கும், ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்து பணியாற்றி வந்தார்.

இறுதி நிகழ்வுகள் தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

ஓவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் நாடாளுமன்றத்தை கூட்டமுடியாது: சிறிலங்கா அரசு

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலமை தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

நாட்டில் குண்டுகள் வெடிக்கும் ஒவ்வொரு சமயமும் நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியாது என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்கின்றது, இது முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டபடி நாடாளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு தேசிய அளவில் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் படியும், சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டாரவை இது தொடர்பாக கேட்கும் படியும் எழுதியிருந்தார். ஆனால் லொக்கு பண்டாரா தற்போது நாட்டில் இல்லை.
சபாநாயகருக்கு பதிலாக பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தை கூட்டலாம் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் நாயகம் பிரியானி விஜயசேகர தெரிவித்திருந்தார்.

ஆனால் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய தேவையில்லை என ஜே.வி.பியும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜே.வி.பியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்ததாவது:

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் லாபங்களை அடைய முற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் முகமாக இந்த கட்சியால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை யாரும் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை.

அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் எமக்குள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாது. நாடாளுமன்றம் ஏப்பிரல் 3 ஆம் நாள் கூட உள்ளதால் அதற்கு முன்னதான கூட்டம் தேவையில்லை என்று தெரிவித்தார்.

ஜனநாயக நாடுகளில் அவசரமான நிலைமைகளில் நாடாளுமன்றத்தை கூட்டி நிலைமைகளை ஆராய்வது வழக்கமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எந்தக் காரணங்களை கொண்டும் இந்தப் பிரச்சனையில் இருந்து விலகிச் செல்லுதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. வரலாற்றில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லா கட்சிகளும் கலந்து ஆலோசிப்பது வழமை. நாடாளுமன்றம் மக்களின் ஜனநாயக முறைமைகளுக்கு பொறுப்பானது.

எனவே நாட்டின் நலனுக்காக நாம் இந்த பிரச்சனையை விவாதிக்க வேண்டும். இந்த ஆபத்தான நிலைமைகளை சமாளிக்க முடியாததால் அரசு தனது தலையை மறைக்க முற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எமது ராடார்கள் தரமானவை: இந்தியா

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கட்டுநாயக்கவில் உள்ள ராடார் நிலையங்களின் செயற்திறன் தொடர்பாக கேள்வி எழுந்துள்ள நிலையில் தம்மால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட ராடார் தொகுதிகள் தரமானவை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

எமது ராடார் தொகுதிகள் மிகவும் தரம்வாய்ந்தவை, நன்றாக தொழிற்படக்கூடியவை, அது முறையாக உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முன்னாள் காலம் சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன், கதிர்காமர் விடுதலைப் புலிகளின் வான்படையினர் தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் கொண்டோலீசா றைசுடனான சந்திப்பின் போது எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

அதே மாதம் இந்தியாவிடம் இருந்து ரடார் கருவிகளை வாங்குவதற்கு சிறிலங்கா ஒப்புக்கொண்டிருந்தது. இந்தியா - 11 என்னும் தலைப்பில் வழங்கப்பட்ட இந்த ரடார்களை பாரத் எலெக்ரோனிக் லிமிற்றட் நிறுவனம் வடிவமைத்திருந்தது. கடந்த ஆண்டு அவை சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

Wednesday, March 28, 2007

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு

[புதன்கிழமை, 28 மார்ச் 2007] மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொடுவாமடுவுக்குள் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் இணைந்து கவச வாகனங்கள் சகிதம் ஊடுருவ எடுத்த முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். செங்கலடிப்பாலம் இராணுவ முகாமில் இருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இம் முன்னகர்வினை இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் மேற்கொண்டனர். முன்னகர்வை எதிர்த்து விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்திய போது, இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் ஆயுதங்களை கைவிட்டு பின்வாங்கி ஓடினர். ரி-56 ரக துப்பாக்கிகள் - 08 உட்பட பல ஆயுத தளபாடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் இரு உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த நிலையில் துணை இராணுவக் குழு உறுப்பினர்களான கருணா குழு உறுப்பினர் நால்வர், செங்கலடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் தச்சன், வர்மன், நேசன், தேவிகன் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னகர்வு முயற்சியில் ஏற்பட்ட தோல்வியினால் இராணுவத்தினருடன் இணைந்து வந்த கருணா குழுவினரின் மிகுதிப் பேர் இராணுவ முகாம்களின் எல்லையில் உள்ள தங்களது முகாம்களுக்குள் தப்பிச் சென்றனர். நன்றி:புதினம்

'வான் தாக்குதல் போராட்டத்திற்கு புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது': படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்

[புதன்கிழமை, 28 மார்ச் 2007]

"கடந்த வாரம் வரை இருதரப்பினருக்கும் இடையிலான போர் தரையிலும் கடலிலுமே கூர்மையடைந்திருந்தது. தற்போது இந்தப் போரில் புதிய சக்தி ஒன்று உட்புகுந்துள்ளது. இந்த சவாலுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு சிறிலங்கா அரச படையினர் தள்ளப்பட்டுள்ளனர்."

நேற்று செவ்வாய்க்கிழமை 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு பிரபல படைத்துறை ஆய்வாளரும், சண்டே ரைம்சின் பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

செவ்வியின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: விடுதலைப் புலிகள் தமது வான் படையின் பலத்தை தற்போது நிரூபித்திருக்கிறார்கள். அவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கட்டுநாயக்க வான்படைத் தளம் எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை சற்று விவரிப்பீர்களா?

பதில்: ஆம். சிறிலங்கா வான்படையின் பிரதான தளம் கட்டுநாயக்க ஆகும். தற்போது இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல், இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போருக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலால் சிறிலங்கா வான் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. தாக்குதலால் பாரிய இழப்புக்குளு் எதுவும் ஏற்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. ஆனால் சிறிலங்கா வான் படையின் இரண்டு உலங்குவானூர்திகள் தாக்குதலில் சேதமடைந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் சேத விவரம் என்ன என்பது பற்றி கூறுவீர்களா?

பதில்: ஆம். தாக்குதலால் ஏற்பட்ட இழப்புக்கள் மிகச் சொற்பம் என்பதனை என்னால் உறுதிசெய்ய முடியும். இலக்கு வைக்கப்பட்ட இடத்தில் அல்லாமல், அதாவது மிக் மற்றும் கிபிர் ரக தாக்குதல் வானூர்திகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தில் அல்லாமல், வானூர்திப் பொறியியல் தளம் மற்றும் அதற்கு அண்டிய பகுதியில் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலங்குவானூர்திகளின் கண்ணாடிகள் நொருங்கியுள்ளன. அவை சீர்செய்யக்கூடிய சிதைவுகள் என வான்படை அதிகாரி தெரிவித்தார்.

கேள்வி: 2001 இல் கட்டுநாயக்க வான்படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது, தாக்குதலை அடுத்து தாக்குதல் செய்திகளை சேகரிக்க அங்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இம்முறை அவ்வாறு எந்த ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரணைகனை மேற்கொள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரையே தாக்குதல் இடம்பெற்ற இடத்துக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.

பதில்: ஆம். அது உண்மை. தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முற்றாக முடியும் வரை அந்த பிரதேசத்தை அவ்வாறாக பேணுவதற்காகவே எவரையும் அங்கு அனுமதிக்கவில்லை என்று உத்தியோகபூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: அனுராதபுரம் மற்றும் வவுனியா காவல்துறையினர் வானில் அடையாளம் தெரியாத இரண்டு வானூர்திகளை கண்டதாகவும், படையினரின் ராடரில் இரண்டு வானூர்திகள் அவதானிக்கப்பட்டதாவும் இன்று செய்திகள் வெளிவந்துள்ளன. அவை உண்மையா?

பதில்: ஆம். கட்டுநாயக்க வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு இரண்டொரு மணி நேரத்துக்கு முன்னதாக இவ்வாறு இரண்டு வானூர்திகள் அவதானிக்கப்பட்டுள்ளன. வவுனியா, கணேசபுரம் பகுதியில் முதலில் இந்த வானூர்திகள் அவதானிக்கப்பட்டுள்ளன. சற்று நேரத்தின் பின்னர், இந்த இரண்டும் அடையாளம் தெரியாத வானூர்திகள் என உறுதிப்படுத்தப்பட்டன.

கேள்வி: அப்படியானால் அதற்கேற்றவாறு படையினர் ஏன் விழிப்பு நிலையை அடையவில்லை? உரிய கட்டளைகள் பிறப்பிக்கப்படவில்லையா அல்லது பின்பற்றப்படவில்லையா?

பதில்: அந்த அடையாளம் தெரியாத வானூர்திகள் கொழும்பு நோக்கித்தான் செல்கின்றன என்பதனை அவர்களால் உறுதி செய்துகொள்ள முடியாமல் போனமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன்.

ஏனெனில் வன்னி வான்பரப்பில் இவ்வாறான அடையாளம் தெரியாத வானூர்திகள் பறப்பில் ஈடுபட்டமை இது ஒன்றும் முதல் தடவை அல்ல. முன்னரும் பல தடவைகள் இவ்வாறான பறப்புக்கள் அவதானிக்கப்பட்டிருகின்றன. ஆனால், இம்முறை அவதானிக்கப்பட்ட இந்த வானூர்திகள் கொழும்பை இலக்கு வைத்துத்தான் செல்கின்றன என்பதனை படைத்தரப்பால் ஊகிக்கமுடியாமல் போய் இருக்கலாம்.

கேள்வி: ஆனால், அதிமுக்கியத்துவம் வாய்ந்த கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்குமே. அவை ஒன்றும் இந்த வானூர்திகளை கண்டவுடனோ அல்லது ஒலியை கேட்டவுடனோ செயற்படவில்லையா?

பதில்: இது தொடர்பாகத்தான் வான் படையினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏன் இந்த வானூர்திகள், ராடர் கருவியில் காண்பிக்கப்படவில்லை என்பது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிவடைந்த பின்னர்தான் விடயம் வெளிச்சத்துக்கு வரும். உண்மை நிலை தொடர்பாக இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை.

ஆனால் வானூர்தி நிலையத்தை அண்டிய பகுதி மக்கள் இந்த வானூர்திகளின் ஒலியை கேட்டுள்ளனர். அதேவேளை வானூர்தி நிலையத்திற்குள் குண்டுச் சத்தங்கள் மற்றும் வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட சத்தங்களையும் தம்மால் கேட்க முடிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

கேள்வி: விடுதலைப் புலிகள் முதன் முதலாக சிறிலங்காப் படையினருக்கு எதிராக தமது வான்படைப் பலத்தை பிரயோகித்துள்ளனர். இது எவ்வளவு தூரத்துக்கு ஈழப்போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்?

பதில்: இது விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக அதாவது கடந்த வாரம் வரை இரு தரப்பினருக்கும் இடையிலான போர் தரையிலும் கடலிலுமே கூர்மையடைந்திருந்தது. தற்போது இந்த போரில் புதிய சக்தி ஒன்று உட்புகுந்துள்ளது. இந்த சவாலுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு சிறிலங்கா அரச படையினர் தள்ளப்பட்டுள்ளனர். இது பிரச்சினைக்குள் இயல்பாகவே இன்னொரு பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேள்வி: விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் தமது வானூர்திகள் மற்றும் வான் படையினர் குறித்த படங்களை வெளியிட்டுள்ளன. இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகள் எவ்வகையான தாக்குதல் வானூர்திகளை பயன்படுத்தியிருப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: ஆம். சில காலங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் வானூர்திகளை வாங்கியிருந்தனர் என்பதனையும், பின்னர் அவை எவ்வகையானவை என்பதனையும் நாம் தெரிந்து கொண்டோம். அதன்படி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது செக் ரக இசற் - 143 ரக வானூர்தியே விடுதலைப் புலிகளால் வாங்கப்பட்டிருந்தது. இதே வானூர்தியே தாக்குதலுக்கு பயன்டுத்தப்பட்டது என நான் நம்புகிறேன்.

கேள்வி: வான் புலிகள் படையணி அமைக்கப்பட்டு விட்டது என்றும் விடுதலைப் புலிகள் வானூர்தி ஓடுபாதை அமைத்துள்ளனர் என்றும் எத்தனையோ தடவைகள் நீங்கள் உங்களது பத்தியில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி இருக்கையில் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளின் வான் பலத்தால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை பொருட்படுத்தாது ஏன் அசாத்திய தைரியத்துடன் இருந்தது?

பதில்: இந்த விடயம் கடந்த திங்கட்கிழமை தாக்குதலுடன் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய தருணத்துக்கு வந்துள்ளது. பல தடவைகள் சண்டே ரைம்சில் இது பற்றி முன்னரே நான் எழுதி வந்திருந்தேன்.

ஓன்று: இரணைமடுக்குளத்துக்கு அண்மையாக விடுதலைப் புலிகள் வானூர்தி ஓடுபாதை அமைக்கப்பட்டமை.

இரண்டு: விடுதலைப் புலிகள் வானூர்திகளை வாங்கியமை.

இவை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அல்லது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் என எதிர்பார்க்கப்பட்டதற்கு உரிய பாதுகாப்பு நடடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்த ஆபத்தை முன்னரேமே தடுத்திருக்கலாம்.

கேள்வி: இந்த தாக்குதல் சிறிலங்காவின் அரசியல், இராணுவ, பொருளாதார துறைகளில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்: நான் முதலில் கூறியதனைப் போல போர் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்தியுள்ளது. இராணுவத்தை பொறுத்தவரை இனிமேல் வான் வழியான அச்சுறுத்தல் எப்போதும் எங்கும் ஏற்படலாம். இராணுவ மற்றும் கடற்படைத் தளங்கள் பிரமுகர்களின் வதிவிடங்கள் என சகலதும் ஆபத்து வலயத்துக்குள் வந்துள்ளன. பொருளாதாரத்தை பொறுத்த வரை ஏற்பட்டுள்ள தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம், சீர்செய் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.

கேள்வி: நீங்கள் கொழும்பில் உயர்மட்டத்தினர் மற்றும் பலருடனும் தொடர்பு கொண்டிருப்பீர்கள். இந்த தாக்குதல் தொடர்பாக அவர்களிடம் இருந்து என்ன வகையான தாக்கத்தை நீங்கள் உணர்ந்தீர்கள்?

பதில்: எல்லோரிடமும் ஆச்சரியம் மேலோங்கியுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. எவருமே இந்த தாக்குதலை எதிர்பார்த்திருந்ததாக தெரியவில்லை.

கேள்வி: இந்த தாக்குதல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் பலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இந்த தாக்குதல் மட்டும் அவரது நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. தொடரப்போகும் போரின் அடிப்படையிலேயே அது தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் பலமிழந்து விட்டார்கள் என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகின்ற வேளை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல் மேற்படி கேள்வியை எழுப்பியுள்ளது.

கேள்வி: விடுதலைப் புலிகள் கிழக்கில் இருந்து விரட்டப்பட்டு விட்டனர் என்றும் அவர்களது இதய பூமியான வன்னியில் தற்போது தாக்குதல் நடக்கின்றது என்றும் தென்னிலங்கை மக்களுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்து வருகின்ற வேளையில், விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள இந்த அதிரடித்தாக்குதல், இன்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி இராணுவ முகாம் மீதான தற்கொலைக்குண்டு தாக்குதல் உட்பட மகிந்தவின் அரசியல் பலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இனிமேலும் அவரது அறிக்கைகளை தென்னிலங்கை சமூகம் ஏற்றுக்கொள்ள முன்வருமா?

பதில்: அவ்வாறான தாக்கம் எதுவும் ஏற்பட்டுள்ளதாக உடனடியாக, உறுதியாக, முடிவாக என்னால் எதுவும் கூறமுடியாது. ஆனால் இது ஒரு முக்கியமான கேள்வி. ஏனெனில் விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்று அரசாங்கம் ஒரு புறத்தில் மக்கள் மத்தியில் கூறிவருகின்ற வேளை, விடுதலைப் புலிகளோ அடுத்தடுத்து அதிரடித் தாக்குதல்களை நடத்தி, அண்மையில் தொப்பிக்கல காட்டுபகுதியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து கட்டுநாயக்க தாக்குதல், அதனை மக்களுக்கு அறிவிக்கையில் அரசாங்கத்தின் கருத்து குறித்து மக்கள் மத்தியில் முரண்பாடு தோன்றுகிறது. இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரின் உண்மையான நிலை தொடர்பாக மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

கேள்வி: விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே அல்லது ஏறத்தாழ செத்துவிட்டது என்று கூறலாம். இந்த நிலையில் பரவலைடந்து வரும் வன்முறைகளுக்கு தற்போதைய நிலை போர் ஆரம்பப் புள்ளியாக அமையுமா அல்லது அது ஏற்கனவே ஆரம்பித்து விட்டதா?

பதில்: கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளை, கடந்த திங்கட்கிழமை சம்பவம் உட்பட நோக்கினால் புரிந்துணர்வு ஒப்பந்தமானது எழுத்தில் மட்டுமே உள்ளதனை புலப்படுத்துகின்றது.

புதினம்.கொம்.

வட்டியும் முதலுமாக சேர்த்து தாக்குதல் நடத்திய வான் புலிகள்: மாலைமலர் நாளேடு புகழாரம்

[புதன்கிழமை, 28 மார்ச் 2007]

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய போதும் பொறுமை காத்து வட்டியும் முதலுமாக வான் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

மாலைமலர் நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தி விவரம்:

அன்று சைக்கிள் குண்டு- இன்று விமான குண்டு: விடுதலைப் புலிகளை கண்டு கதி கலங்கும் சிங்களப் படைகள்

இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஆதிக்கத்தையும் அறிவாற்றலையும் விரும்பாத சிங்களவர்கள், அவர்களை 1970-களில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அரசியல் அடிப்படை உரிமைகளை பறித்து நாலாந்தர குடிமக்கள் போல தமிழர்களை ஒதுக்கினார்கள்.

சொந்த மண்ணில் எந்த சுகத்தையும் அனுபவிக்க இயலாத நிலை உருவானதால் ஈழத் தமிழர்கள் கொதித்து எழுந்தனர். மகாத்மா காந்தி போல சிலர் அறவழிப் போராட்டத்தை கைக்கொண்டனர். சிலர் சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி ஆயுதப் போராட்டத்துக்கு மாறினார்கள்.

தொடக்க காலத்தில் நிறைய ஆயுதக் குழுக்கள் தோன்றின. ஆனால் தெளிவான நோக்கம் இல்லாததால் அவை வந்த வேகத்தில் மறைந்தன.

1983 ஆம் ஆண்டு "தமிழர்களின் தாகம் தனித் தமிழ் ஈழம்'' என்ற லட்சிய வாசகத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரபாகரன் தோற்றுவித்தார். அப்போது பிரபாகரனுடன் 40 இளைஞர்கள் மட்டுமே இருந்தனர்.

இந்த 40 பேருடன் போராட்டத்தை தொடங்குவது என்றும், அதே சமயத்தில் புலிகள் இயக்கத்துக்கு நிறைய பேரை சேர்த்து ஒருங்கிணைப்பது என்றும் பிரபாகரன் முடிவு செய்தார். இதற்காக பிரபாகரன் பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஆள், அம்பு, ஆயுதம் எதுவும் இல்லாத நிலையில் பிரபாகரனே போர்க்களத்தில் முதல் வீரனாக குதித்தார்.

அப்போது பிரபாகரனிடம் இருந்த வாகனம் சைக்கிள். அதில் சென்று சிங்கள வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்தார். அதன் அடிப்படையில் 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் மீது குண்டு வீசி பிரபாகரன் தாக்குதல் நடத்தினார். அதன் பிறகு புலிகள் சைக்கிளில் வந்து குண்டுவீசி தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கியால் சுடுவதும் தொடர்ந் தது. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் பற்றி ஈழத் தமிழர்களிடம் பரவியது. தமிழ் இளைஞர்கள் கூட்டம், கூட்டமாக புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர்.

இதே காலக்கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரிப்பதும் அதிகரித்தது. 1990 வரை விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் தளவாடங்கள் சேகரிக்க தமிழகம் தளமாக இருந்தது. அதன் பிறகு வெளிநாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் கப்பல், கப்பலாக ஆயுதங்களை இறக்குமதி செய்து தங்களை மிக, மிக வலிமை ஆக்கிக் கொண்டனர்.

இதற்கிடையே இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஒரு சுயராஜ்ஜியத்தை பிரபாகரன் உருவாக்கினார். வரி வசூல், காவல்துறை, கோர்ட்டு என்று தனி அரசே நடக்கத் தொடங்கியது. இதற்கென தனி குழு இயங்கியது.

அதே சமயத்தில் சிங்களவர்களை எதிர்த்து போராட புலிகள் இயக்கத்தில் அனைத்துத்துறையிலும் பிரபாகரன் நவீனத்தை புகுத்தினார். உளவுப் பிரிவு தொடங்கப்பட்டது. அந்த பிரிவு கொடுத்த ஒற்றர் தகவல்களால் புலிகளுக்கு வெற்றி மீது வெற்றி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தில் தரைப்படை, கடற்படை உருவாக்கப்பட்டது. தரைப்படையினர் வைத்திருக்கும் பீரங்கிகள் அதி நவீனமானவை. அது போல கடல் புலிகள் அமைப்பு புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பு போல பிரபாகரனால் மாற்றப்பட்டது.

கடல் புலிகளிடம் மின்னல் வேக படகுகள், தற்கொலை படகுகள், சரக்கு படகுகள், ஆயுதம் கடத்தும் படகுகள் என்று பல வகை படகுகள் உள்ளன. சமீபத்தில் 2 பெரிய போர் கப்பல்களை புலிகள் வாங்கியது தெரியவந்துள்ளது. இவை தவிர விடுதலைப் புலிகளிடம் நீர்மூழ்கி கப்பல் கூட இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் சொல்கிறது.

இத்தகைய வலுவான கடல் புலிகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலைப் படை உள்ளது. இவர்கள் "கரும்புலிகள்'' என்றழைக்கப்படுகிறார்கள். சுதந்திர தமிழ் ஈழத்துக்காக இவர்கள் தங்கள் உயிரை துச்சம் என நினைத்து மனித வெடிகுண்டாக மாறி தங்களையே மாய்த்துக் கொள்கிறார்கள். உலகில் சொந்த நாடு பெறுவதற்காக தற்கொலை படையில் அதிகம் பேரை வைத்திருப்பது விடுதலைப் புலிகள்தான்.

தற்கொலைப்படை வீரர்கள் மரணம் அடையும் போது, "அவர்கள் சாகவில்லை விதைக்கப்படுகிறார்கள்'' என்று சொல்வதுண்டு. சைக்கிளில் சென்று தற்கொலை தாக்குதல் நடத்த தொடங்கிய இவர்கள் பிறகு மோட்டார் சைக்கிள், 3 சக்கர சைக்கிள், ஜீப், கார், டிராக்டர், படகு என்று தங்கள் வளர்ச்சியை அதிகப்படுத்தி விட்டனர்.

1983 இல் சைக்கிள் தற்கொலை தாக்குதல் நடத்தும் யாழ்ப்பாணத்தில் யாரும் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று சிங்கள அரசு உத்தரவிட்டது. ஆனால் புலிகளிடம் மாற்றம் ஏற்பட தொடங்கியதும் அரசால் எதையும் கட்டுப்படுத்த இயலவில்லை.

புலிகளிடம் தரைப்படை, கடல் படை மட்டும்தானே உள்ளது. அவர்களை எளிதில் நசுக்கி விடலாம் என்று சிங்கள அரசு நினைத்தது. ஆனால் 1998 இல் விடுதலைப் புலிகள் தங்களுக்கு என தனி விமானப் படையை (வான் புலிகள்) உருவாக்கினார்கள். அந்த ஆண்டு மாவீரர் தினத்தன்று புலிகளின் கல்லறைகள் மீது வான்புலிகள் குட்டி விமானங்களில் வந்து மலர் தூவினார்கள்.

இந்த தகவல் மெல்ல கசிந்து விடுதலைப் புலிகளிடம் விமானம் இருக்கிறது என்று பரவ தொடங்கியது. ஆனால் அதை உறுதிப்படுத்த சிங்கள உளவுப் படையால் இயலவில்லை.

கடந்த 3 மாதமாக சிங்கள இராணுவம் தனது மிக், கிபிர் ரக விமானங்களால் தாக்குதல் நடத்திய போது விடுதலைப் புலிகள் அமைதியாக இருந்தனர். கடந்த திங்கட்கிழமை வட்டியும் முதலுமாக சேர்த்து "வான்புலிகள்'' பதிலடி கொடுத்தனர்.

கொழும்புக்குள் ஊடுருவி, குறி தவறாமல் மிக, மிக நேர்த்தியாக 4 குண்டுகளை வீசி சிங்கள வான் படை தளத்தை தகர்த்தனர். இது சிங்களவர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தது. இன்னமும் அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. விமான தாக்குதல் தொடரும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதால் சிங்களவர்கள் கதி கலங்கி போய் கிடக்கிறார்கள்.

வான்புலிகள் நிகழ்த்திய சாகசம் உலக நாடுகளின் ஒருமித்த பார்வையை விடுதலைப் புலிகள் மீது திருப்பி உள்ளது. "எப்படி இவர்களால் குட்டி இராணுவத்தை நள்ளிரவில் கையாள முடிந்தது'' என்று நிபுணர்களே ஆச்சரியப்படுகிறார்கள். வான் புலிகளின் தொழில் நுட்ப திறன் உலக தரத்துக்கு நிகராக இருக்கிறது.

25 ஆண்டுக்கு முன்பு சாதாரண ஓட்டை சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் இன்று வானத்தில் குட்டி விமானத்தில் பறந்து வந்து குண்டு போடுகிறார்களே என்று சிங்கள இராணுவம் தொடை நடுங்கிய படி உள்ளது. சுதந்திர ஈழத்தை அடைய வேண்டும் என்ற லட்சிய வேட்கையில் விடுதலைப் புலிகள் மிக, மிக உறுதியாக இருப்பதையே இது காட்டுகிறது.

விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்கள் வலிமையானவர்கள் என்று அமெரிக்காவே சான்றிதழ் அளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் எங்கும் ஊடுருவ கூடிய ஆற்றல் படைத்தவர்கள் என்பது அவர்களது ஒவ்வொரு செயலிலும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. வன்னி காட்டுப் பகுதியில் அவர்கள் 4 விமான ஓடுதளம் அமைத்து இருக்கிறார்களாம்.

வான் புலிகளிடம் 6 அல்லது 7 குட்டி விமானங்கள் இருக்கலாம் என்று உலக உளவுத்துறை நிறுவனங்கள் கணித்துள்ளன. விடுதலைப் புலிகள் பற்றி இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வரப்போகிறதோ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை முறியடிப்போம்: மகிந்த

[புதன்கிழமை, 28 மார்ச் 2007]

எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை சிறிலங்காப் படையினர் வெற்றிகரமாக முறியடிப்பார்கள் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஊடகத்துறையினரை தனது அலுவலகத்தில் சந்தித்த மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்ததாவது:

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள எத்தகைய குறைபாடுகள் காரணம் என படைத்தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். மக்கள் சந்தேகத்திற்கு இடமான விமானங்களைக் கண்டால் 116 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இத்தாக்குதல் தொடர்பாக சில இராஜதந்திர வட்டாரங்களை நம்ப வைப்பது அரசாங்கத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பல நாடுகள் எமக்கு தொழில்நுட்ப உதவிகளை அளிக்க முன்வந்துள்ளன.

சிறீபதி சூரியாராச்சியின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேட்கப்பட்டபோது மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது:

சிலர் தமது அரசியல் அதிகாரங்களை இழக்கும் போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது வழமையானது. நான் ஆரம்பித்தது தொடர்பாக என்னிடம் பல யோசனைகள் உள்ளன. ஆனால் இப்பிரச்சனையில் எனது பங்கு இல்லை.

தாக்குதலைத் தொடர்ந்து வானூர்தி நிலையத்தில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்கு தனிப்பட்ட விரோதங்கள் இல்லை. அவர்கள் தமது பெறுப்பற்ற அறிக்கைகளால் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க முற்பட்டது மட்டும் தான் எனது கவலை என்று அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வான்படை குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை

[புதன்கிழமை, 28 மார்ச் 2007] தமிழீழ விடுதலைப் புலிகாளல் நடத்தப்பட்ட வான் தாக்குதலை கண்டிப்பதுடன், விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது: இந்நடவடிக்கை அமைதிப் பேச்சுக்களை சீர்குலைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படைப் பலம் சிறிலங்காவிற்கு மட்டுமல்லாது தென் ஆசியா பிராந்தியத்திற்கு ஆபத்தானது. இலகு ரக வானூர்திகளை ரடார் திரைகளில் அவதானிப்பது கடினமானது. இதன் மூலம் தற்கொலைப்படைத் தாக்குதல்கள், குண்டுவீச்சுக்கள் என்பவற்றை மேற்கொள்ளலாம் என்பதனை அனைத்துலக சமூகம் உணரவேண்டும். அனைத்துலக பயங்கரவாதக்குழுக்கள் தமது உத்திகளை ஒருவருக்கு ஒருவர் பயன்படுத்துவதுண்டு. இது பயங்கரமானது என்பதை பிரித்தானியா அரசாங்கம், கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினம்.கொம்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய பதவி விலக வேண்டும்: ஐ.தே.க

[புதன்கிழமை, 28 மார்ச் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட வான்தாக்குதலானது அரசாங்கத்தின் தவறான தகவல்களையும், உண்மையான கள நிலைமையையும் எடுத்துக்கூறியுள்ளது. எனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் பாதுகாப்பிற்கு தான் முழுமையான பொறுப்பை ஏற்பதாக கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும் போரில் 95 விகிதங்களை வென்றாகி விட்டது எனவும் கூறியிருந்தார். எனவே அவருக்கு சுயமரியாதை ஏதும் இருப்பின் அவர் உடனடியாக பதவிவிலக வேண்டும். தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டிருந்தன. தாக்குதலின் பின்னரும் அது தளத்திற்கு திரும்பிச் செல்ல ஒரு மணிநேரம் எடுத்துள்ளது எனவே வானூர்தியை ரடாரில் அவதானிக்கவில்லை என முட்டாள்த்தனமான காரணங்களை கோத்தபாய ராஜபக்ச கூறமுடியாது. விடுதலைப் புலிகளின் வான்படை 1998 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றிருந்தது. அதனால் தான் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா நாடாளுமன்ற கட்டடத்திலும், அரச தலைவர் மாளிகையிலும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளை நிறுவியிருந்தார். எதிர்கால நிலைமைகளை கருத்தில் எடுக்காது அரசாங்கம், நாட்டை யாருமே விரும்பாத போருக்குள் தள்ளியள்ளது. எனவே மேலும் தாமதிக்காது அரசாங்கம், உடனடியாக பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார் அவர்.

Tuesday, March 27, 2007

(2 ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: 10 இராணுவத்தினரும் 16 ஈ.பி.டி.பியினரும் பலி

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொம்மாந்துறை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பெண் சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட 10 இராணுவத்தினரும், 16 ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுமாக 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் இராணுவத்தினரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தாது போன உழவு இயந்திரம் ஒன்றின் சாரதியை நோக்கி, இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் 2 இராணுவத்தினரும், துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியினர் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 2 இராணுவத்தினரும், 2 காவல்துறையினரும், 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்தது. இச்சம்பவத்தை அடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி சிறிலங்காப் படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியையும் மூடியுள்ளனர். கொம்மாந்துறை மட்டக்களப்பின் வடக்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சிறீலங்கா விமானப் படையினரின் 40% சுடுதிறன் அழிப்பு.

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007] கட்டுநாயக்க விமானத் தளம் மீதான வான்புலிகளின் விமானத் தாக்குதலில் சிறீலங்கா விமானப் படையினரின் 40 % விமான சுடுதிறன் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கட்டுநாயக்க விமானத் தாக்குதலில் இரு தாக்குதல் உலங்குவானூர்த்திகள் சேதமடைந்துள்ளதாகத் படைத்தரப்பினர் தெரிவித்த போதும் சிறீலங்கா விமானப் படையினருக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. விமானப் பொறியல் பகுதி தேசத்திற்கு உள்ளானதாதத் தெரிவித்த விமானப் படையினர் அங்கு நடந்த தேசத்தை முற்றாக இருட்டடிப்புச் செய்துள்ளது. தாக்குதலில் தொடர்பில் பொறியியல் பகுதியில் பணிபுரிந்த விமானப்படையின் பொறியிலாளரை மேற்கொள்காட்டி சில தகவல்களை சிங்கள நாளேடும் உறுதி செய்துள்ளது. சிறீலங்கா விமானப் படையினரின் பாகிஸ்தானிடம் கொள்வனவு செய்திருந்த இரு யுத்த உலங்கு வானூர்திகளும் முற்றாக சேதமடைந்து பாவிக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் வான்புலிகளின் விமானத் தாக்குதலில் வீசப்பட்ட குண்டுகள் கிபிர் மற்றும் மிக் விமானத் தரிப்பிடங்களில் வீழ்ந்து வெடித்துள்ளதால் பெரும் தீ பரவி விமானத் தரிப்பிடங்கள் எரிந்துள்ளன. இதில் சிறீலங்காப் படையினரின் யுத்த விமானங்கள் சில எரிந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் பொறியிலாளர் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமானத் தளத்தில் 6 மிகையொலி விமானங்கள் வழமையாகத் நிறுத்தப்பட்ட போதும் தாக்குலின் பின்னர் எந்த மிகையொலி விமானங்களும் மேலெழுந்து பறக்கவில்லை என்பது இங்கே பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: 2 இராணுவத்தினரும் 4 ஈ.பி.டி.பியினரும் பலி.

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொம்மாந்துறை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 சிறிலங்கா இராணுவத்தினரும், 4 ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் இராணுவத்தினரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தாது போன உழவு இயந்திரம் ஒன்றின் சாரதியை நோக்கி இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்த போது அது வெடித்துச் சிதறியது. இத்தாக்குதலில் மேலும் 2 இராணுவத்தினரும், 2 காவல்துறையினரும், 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் கடுமையான உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியையும் மூடியுள்ளனர். கொம்மாந்துறை மட்டக்களப்பின் வடக்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புதினம்.கொம்.

கட்டுநாயக்கா தாக்குதல் மூலம் சிறிலங்கா அரசு தனது போர்த்திட்டங்களை மாற்றவேண்டியுள்ளது : ஆய்வாளர்கள்..

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007]-பண்டார வன்னியன்.

விடுதலைப் புலிகளின் வான்படையினர் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தின் மீது நடத்திய தாக்குதல் சிறிலங்கா அரசின் போர்த்திட்டங்களை ஒட்டுமொத்தமாக மீள் பரிசீலனை செய்ய வேண்டியதானதொரு நிலையைத் தோற்றிவித்துள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

உலகில் விடுதலைக்காகப் போரிடும் ஒரு அமைப்பு நடத்திய வான்தாக்குதல் என்ற ரீதியில் சர்வதேச ரீதியில் இத்தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாக சர்வதேசத்தின் விசேடமாக தென்னாசிய நாடுகளின் கவனத்தை இத் தாக்குதல்கள் கவர்ந்துள்ளதாகவும் அவர்களை இது குறித்து அக்கரை கொள்ள வைத்துள்ளதாகவும் அவ் ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வடக்கிலும் கிழக்கிலும் போர் நடவடிக்கையில் குறிப்பாக வலிந்த தாக்குதலில் இராணுவம் முனைப்பு காட்டி வரும் வேளையில் கட்டுநாயக்கா விமான படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் வான்படை மேற்கொண்ட தாக்குதலானது சிறிலங்கா அரசின் போர்த்திட்டத்திற்கு மாற்றத்தையும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் புதிய ஏற்ப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியதான சுழ்நிலையும் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

அது மட்டுமன்றி விடுதலைப் புலிகள் விரைவில் தோற்க்கடிக்கப்படுவார்கள் என்றதும் அவர்களின் விநியோகத்திற்கு அன்மைக் காலத்தில் பாரிய சேதத்தை விளைவித்து விட்டதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அன்மையில் செய்து வந்த பிரசாரத்தை இத்தாக்குதல் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007]

போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கும், வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அரசாங்கம் தவறான அதிகாரப்பகிர்வு என்ற கொள்ளையை விடுத்து விடுதலைப் புலிகளை நசுக்க வேண்டிய தருணம் இதுவே என்று ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசாங்கம், ஒரு காலை அமைதி முயற்சிகளிலும் மறுகாலை விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவடிக்கையிலும் வைத்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளை ஓடுக்கும் முயற்சியில் திடமான நடவடிக்கை தேவை.

விடுதலைப் புலிகளின் நேற்றைய தாக்குதல் சரணடையப் போகின்றீர்களா அல்லது சண்டையிடப் போகின்றீர்களா என அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட செய்தியாகும். அரசாங்கம் அதில் சண்டையை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இனப்பிரச்சனைக்கு போர் தீர்வாகாது என்ற அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு தற்போது அரசாங்கம் பணியக்கூடாது. ஏனெனில் தற்போது சமர் உக்கிரமடைந்துள்ளது.

போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகனள கொள்வனவு செய்வதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலங்குவானூர்தி மற்றும் போக்குவரத்து வசதிகள் மூலம் அவர்கள் வானூர்தியின் உதிரிப்பாகங்களை வடபகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனை கருணாவும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியிருந்தார் என தெரிவித்தார்.

இதனிடையே போர் எதிர்ப்பு அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்லாவற்றையும் விடுதலைப் புலிகளின் நண்பர்களாகவே அரசாங்கம் கருத வேண்டும் என தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக படையினருக்கு முழு ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா வான்படையினருக்கு பாரிய இழப்பு?

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007] சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலின் போது சிறிலங்கா வான்படைக் கலங்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலின் போது இரண்டு தாக்குதல் உலங்கு வானூர்த்திகள் மாத்திரமே சேதமடைந்தன என சிறிலங்கா அரசாங்க தரப்புத் தெரிவித்தாலும், தளப்பகுதி தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததாகவும் அப்பிரதேசம் புகைமண்டலமாக காட்சியளித்ததாகவும் உடனடியாக வெளிவந்த செய்திகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் மேற்படி தளத்திலிருந்து தாக்குதலின் பின்னர் வீடுகளிற்குத் திரும்பிச் சென்ற வான்படையினர் குண்டுவெடிப்பின் போது விமானத் தரிப்புக் கொட்டகையில் ஏற்பட்ட தீயால் பெரும்பாலான ஜெற் குண்டுவீச்சு விமானங்கள் எரிந்து போனதை சிங்களப் பத்திரிகையாளர்களிற்கு உறுதிப்படுத்தியுள்ளனர். தங்களது வான்படைப் பலத்தில் 40 வீதம் இத் தீ விபத்தின் மூலம் குறைக்கப்பட்டுள்ளதாக மேற்படி வான்படையினர் தெரிவித்திருக்கின்றனர். கண்காணிப்புக் குழுவினர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வான்படைத் தளத்திற்கு செல்வதற்கு நேற்று இரு தடவைகள் முயன்ற போதும் வான்படை அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளனர். சம்பவ இழப்புக்களை படைத்தரப்பும் அரசாங்கமும் தம்மால் இயன்றளவு இருட்டடிப்புச் செய்து வருகின்ற போதும், இழப்புக்களை உறுதிப்படுத்துவது போல சிறிலங்கா அரச தலைவரும் அவசர அவசரமாகப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியுள்ளார். இத்தளத்தில் உள்ள வான் தரிப்பிடக் கொட்டகைக்குள்ளேயே கீபிர் வானூர்திகள் உள்ளிட்ட தாக்குதல் கலங்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேவேளை மேற்படி தளத்திலிருந்து ஜெற் வானூர்திகள் ஏதும் பறப்பில் ஈடுபடவில்லை என்றும் ஆர்ஜன்ரினாத் தயாரிப்பான புக்காரா வானூர்திகள் இரண்டும் ஒரு கடல் விமானமுமே பறப்பில் ஈடுபட்டதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதினம்.கொம்.

வான் புலிகளின் தாக்குதல்.. மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது!!! -பழ. நெடுமாறன்-

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007]

இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் முதல் தடவையாக வான் புலிப் படையைச் சேர்ந்த இரு விமானங்கள் பறந்துசென்று தலைநகரமான கொழும்புவில் உள்ள சிங்கள விமானப் படையைச் சேர்ந்த கட்டுநாயகா விமானத் தளத்தை தாக்கி கடும் சேதம் விளைவித்துவிட்டு பத்திரமாகத் திரும்பியுள்ளன என்ற செய்தி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகாலமாக போர் நிறுத்த உடன்பாட்டினை விடுதலைப் புலிகள் உண்மையாக கடைப்பிடித்தனர். ஆனால் சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கத் தவறியதோடு தமிழர்கள் வாழும் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தியும்இ பீரங்கித் தாக்குதல் நடத்தியும் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்து வந்தது. சிங்கள இராணுவத்தின் இந்த அட்டுழியத்தை சர்வதேச நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டியும் கூட எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில் வான் புலிகள் நடத்தியிருக்கக்கூடிய வெற்றிகரமானத் தாக்குதலை கண்டிக்கவோ குறைசொல்லவோ யாருக்கும் தகுதி இல்லை.

கடந்த பல மாதங்களாக தொடர்ந்து ஆத்திரமுட்டப்பட்டு வந்தபோதிலும் விடுதலைப் புலிகள் அமைதிக் காத்தனர். அதன் விளைவாக இழப்புகளுக்கும் ஆளானார்கள். விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுவிட்டதாகக் கருதி இந்தியாவில் உள்ள சில தலைவர்களும் பத்திரிகைகளும் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தையும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டனர். ஆனால் இப்போது வான்புலிகள் தாக்குதலுக்குப் பிறகு பொய்ப்பிரச்சாரம் செய்தவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் வலிமை ஒருபோதும் குறையவில்லை. முன்னிலும் அதிகமாயிருக்கிறது என்பதை இப்போதாவது உணர்ந்து சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்தியா சிங்கள அரசை கண்டிக்கவும் இனப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை மேள்கொள்ளுமாறும் வலியுறுத்தவும் முன்வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

Monday, March 26, 2007

கட்டுநாயக்க விமானத்தளம் மீது புலிகளின் வான்படையினர் தாக்குதல்: 3 படையினர் பலி! 17 பேர் காயம்

[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007]

கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது இன்று அதிகாலை 12.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான் படையினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள்கட்டுநாயக்க விமானத்தளத்தில் கிபிர் மற்றும் மிக் விமானத் தரிப்பிடங்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளங்கள் மீதும், இராணுவ இலக்குகள் மீதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீதும் இனிவரும் காலங்களில் தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் திங்கட்கிழமை 1.30 மணியளவில் விமானத் தளத்தினுள் வெடியோசைகளுடன் துப்பாக்கி மோதல்களும் இடம்பெற்றதாகவும் தற்பொழுது அங்கு முழுமையான அமைதி நிலவுவதாகவும் படையித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் தரித்து நிறுத்தப்பட்ட 2 உலங்கு வானூர்திகள் சேதமடைந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் தாக்குதலின் போது 3 விமானப் படையினர் பலியானதோடு மேலும் 17பேர் காயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த படையினர் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவிற்கான ஹொங்கொங் வானூர்தி சேவை இடைநிறுத்தம்.

[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007] சிறிலங்காவிற்கான அனைத்து வானூர்தி சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஹொங்கொங்க் நாட்டின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான கதே பசுஃபிக் ஏயர்வேஸ் அறிவித்துள்ளது. அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சிறிலங்கா வான்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு தமிழீழ வான்படை தனது இரு வானூர்திகளை பாவித்து வெற்றிகரமான தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியிருந்தது. இச்சம்பவத்தினால் அருகில் இருக்கும் அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய வானூர்தி சேவையாக பிரபலமடைந்துள்ள கதே பசிஃபிக், அங்கு நடைபெற்ற தாக்குதல் குறித்து விரிவாக ஆராய்ந்து நிலைமைகளைக் கண்டறிந்த பின்னர், தனது சேவையைத் தொடர்வது தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாகவும், தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

கட்டுநாயக்காவில் இரு உலங்கு வானூர்திகள் தாக்கியழிப்பு.

[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007]

இன்று அதிகாலை வான்புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் இரு தாக்குதல் உலங்கு வானூர்திகள் அழிவுற்றதாக அமெரிக்கத் தொலைக்காட்சி சி.என்.என். தெரிவித்தது

இத் தாக்குதலானது விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்களின் தரிப்பிடத்திற்கும் உலங்கு வானூர்திகளின் தரிப்பிடத்திற்கும் இடையில் இடம் பெற்றதாகச் சி.என்.என். மேலும் தெரிவித்துள்ளது.