Wednesday, January 31, 2007

இந்தியாவின் தெல்கா டொட்கொம் இணையச் செய்தி நிறுவனத்துக்கு தமிழ்ச்செல்வன் சூளுரை.!!




இராணுவ ஆக்கிரமிப்பை மக்கள் பலத்துடன் தோற்கடித்து இறுதி இலக்கை எட்டுவோம்! இந்தியாவின் தெல்கா டொட்கொம் இணையச் செய்தி நிறுவனத்துக்கு தமிழ்ச்செல்வன் சூளுரை

[Wednesday January 31 2007 [sudaroli.com]


எங்களின் பெரிய சக்தி மக்கள்தான். முழு மக்களும் எங்கள் பின்னால் திரண்டு நிற்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பைத் தோற்கடிக்கும் திறனும், வலுவும் எம்மிடம் உண்டு. நாங்கள் எங்கள் இலக்கை விரைவில் அடைவோம். இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.


இந்தியாவின் தெல்கா டொட்கொம் இணையச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஒரு செவ்வியிலேயே தமிழ்ச்செல்வன் இப்படிக் கூறியிருக்கிறார்.

சமகால இராணுவ, அரசியல் சூழ்நிலை தொடர்பாக அச்செவ்வியில் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார்.
அந்தச் செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கேள்வி: இராணுவ ரீதியில் சாதகமான நிலையில் இலங்கை அரசும், பாதகமான தற்காப்பு நிலையில் விடுதலைப் புலிகளும் இருக்கிறார்கள். யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிவிடுவார்கள் என்று அவர்கள் அடிக்கடி மிரட்டல்களை விடுத்தாலும் அதிலிருந்து விலகப் பின்நிற்கிறார்கள் என்றெல்லாம் கருத்து நிலவுகின்றதே? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் பலவீனமுற்று விட்டார்கள் என்றும், 2000ஆம் ஆண்டில் இருந்த அதே படைச்சக்தியல்ல அவர்கள் என்றும் கூறுவது சரியாகுமா?

பதில் : எங்கள் இயக்கத்தைப் பொறுத்தவரை நாம் மிகப்பலமாக இருக்கிறோம். 2001இல் அந்தப் பலமான நிலையிலிருந்து கொண்டுதான் நாம் அமைதி முயற்சியில் ஈடுபட முன்வந்தோம் என்பதை எமது தேசியத்தலைவர் தமது மாவீரர் தின உரையில் குறிப்பிட்டுள்ளார். நாம் அப்போது வன்னி பெருநிலப்பரப்பை மீளக் கைப்பற்றியிருந்தோம்; ஆனையிறவுத் தளத்தைக் கைப்பற்றினோம். அந்தப் பலமான நிலையில் இருந்து கொண்டுதான் கடந்த ஆறு வருடங்களாக சமாதான முயற்சிகளில் ஈடுபட்டோம். இந்த ஆறு ஆண்டு காலத்தில் எங்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட பல சதிகளை நாம் முறியடித்துள்ளோம். கடந்த ஐந்து வருடங்களாக எந்த இழப்பையும் அவர்கள் சந்திக்காத காரணத்தால் அவர்கள் தங்களது இராணுவம் பலமாக இருக்கின்றது என நினைக்கக் கூடும். என்னைப் பொறுத்தவரை எங்களின் பெரிய சக்தி எமது மக்கள்தான். எமது போராட்டம் சுய பாதுகாப்புக்கான போராட்டம்தான். இராணுவ ஆக்கிரமப்பிலிருந்து விடுபட்டு அமைதியாக வாழ்வதற்காகவே நாங்கள் போராடுகின்றோம். எங்களின் முழு மக்களும் எமக்குப் பின்னால் திரண்டு நிற்கின்றார்கள். இதுதான் எங்களின் தார்மீகப்பலம். எந்த பெரிய வலுமிக்க படையும் எங்களைத் தோற்கடிக்க முடியாது. இலங்கை அரசின் நம்பிக்கை என்ற மாயை தகர்ந்து போவதற்கான சூழ்நிலை எழுந்து வருகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பை தோற்கடிக்கும் திறமையும் வலுவும் எம்மிடம் உண்டு. நாங்கள் எங்கள் இலக்கை விரைவில் அடைவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கேள்வி : இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த வருடம் அது நூறுகோடி டொலர்களைத் தாண்டவுள்ளது. மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இப்பிராந்தியத்தில் அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக அது மாறியுள்ளது.
அறிக்கைகளின் படி ஆயிரம் பொதுமக்களுக்கு இந்தியாவில் 1.3 என்ற வீதத்திலும், பாகிஸ்தானில் 4 என்ற வீதத்திலும், இலங்கையில் 8 என்ற வீதத்திலும் இராணுவத்தினர் உள்ளனர். அத்தோடு இலங்கை பாகிஸ்தானிடமிருந்து இராணுவ உதவிகளையும் பெறுகின்றது. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : இது நிச்சயமாக இலங்கையை பொருளாதார ரீதியில் பலவீனமான நிலைக்கே தள்ளியுள்ளது. தமிழர்களை அழிக்கும் நோக்கில் தனது அளவுக்கும் மிஞ்சி இராணுவத்தை இலங்கை பெருப்பிப்பது இலங்கையை அதல பாதாளத்துக்குள்தான் வீழ்த்தப்போகின்றது. இலங்கை பாகிஸ்தானிடமிருந்து பெருமளவிலான ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்கிறது. இதன்மூலம் இந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூழ்நிலையை அது உருவாக்குகின்றது. இலங்கை அரசின் இந்தப் போக்கை இந்தியா உட்பட இந்தப் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் அனுமதிக்கமாட்டா என்றே நான் நம்புகிறேன்.

கேள்வி :பாகிஸ்தானை புலிகள் அமைப்பு எவ்வாறு நோக்குகின்றது? கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்குள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஊடுருவியிருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் எமக்கு அளித்த செவ்வி ஒன்றில் கூறியுள்ளார். பதுங்குகுழி அழிப்புக் குண்டுகளைப் பயன்படுத்தி பிரபாகரனை இலக்குவைப்பதற்கு, பாகிஸ்தான் இலங்கைக்கு உதவலாம் என்றும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றனவே?

பதில்: இலங்கை பாகிஸ்தானிடமிருந்து பெருமளவு இராணுவ ஆயுத தளபாடங்களையும், உதவிகளையும் பெற்றுவருகின்றது என்பதை நாம் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளோம். இது பயங்கரமானது. ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு அதற்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நான் நம்பவில்லை. தமிழின அழிப்பில் இலங்கையரசு ஈடுபட்டுள்ளது என்று தெரிந்து கொண்டும் அதற்கு உதவும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதுவே பின்னர் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றே நான் நினைக்கின்றேன்.

கேள்வி : கிபிர் மற்றும் மிக்23 யுத்த விமானங்களைக் கொண்டுள்ள இலங்கை விமானப்படை அணியை முழுயுத்தம் ஒன்று வெடிக்கும்போது புலிகள் அமைப்பு எப்படி எதிர்கொள்ளப் போகின்றது? புலிகளுக்கு இலங்கை விமானப்படை பெரிய அச்சுறுத்தலாக அமையாதா?

பதில்: இந்த விமானப்படையின் யுத்த விமானங்கள் ஏதோ நேற்றுத்தான் இந்த யுத்தத்துக்குக் கொண்டு வரப்பட்டவையல்ல. எங்கள் போராட்டம் முழுவதும் இலங்கையின் விமானப்படை, கடற்படை, தரைப்படை ஆகியவற்றை நாம் எதிர்கொண்டே வந்துள்ளோம். 2000 ஆம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பை மீளக் கைப்பற்றியபோதும், ஆனையிறவை மீட்டபோதும் கூட இதே விமானப்படையை நாம் எதிர்கொண்டோம். இறுதியில், இந்த யுத்த விமானங்களை அவற்றின் விமான நிலையத்திலேயே நாம் அழித்தோம். அந்தச் சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். இந்தக் கூலிப்படைகளைத் தோற்கடிக்க எமது தலைமையிடம் பல தந்திரோபாயங்கள் உண்டு. அவர்களைத் தோற்கடிக்க எதிர்காலத்தில் அந்த யுத்திகளை நாம் பயன்படுத்துவோம். மக்களின் மனோபலம் மற்றும் தார்மீக வலுவை எந்த சக்தியாலும் அது எவ்வளவு வலுவாக இருந்தாலும் தோற்கடிக்கமுடியாது என்பதே எமது உறுதியான நம்பிக்கை. நாங்களே வெல்வோம்.

ஈழத்தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு இந்தியா தார்மீக ஆதரவு வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு கோரியிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

கேள்வி: வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டமை அரசமைப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது, செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. அது, இனப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இலங்கை அரசமைப்பின் கட்டமைப்புக்குள்தான் இருக்கவேண்டும் என்பதற்கான சமிக்ஞை அல்லவா? அத்தோடு அது ஓர் அடிப்படைச் சந்தேகத்தையும் எழுப்புகின்றது. அதாவது, இலங்கை அரசமைப்பை புலிகள் இயக்கம் மதிக்கின்றதா என்பதே அது.

பதில்: இலங்கை அரசமைப்பு தமிழ் மக்களின் பங்களிப்புடனும் அவர்களின் இணக்கத்துடனும் தயாரிக்கப்பட்டதல்ல. மாறாக, தமிழர்களை ஓரம்கட்டி அழிக்கும் நோக்கோடுதான் அது உருவாக்கப்பட்டது. ஆகவே, இந்த அரசமைப்பு தமிழர்களுக்கு எப்போதும் நீதி செய்யப்போவதில்லை. இலங்கை அரசமைப்புகளுக்கு எதிராக கடந்த ஐம்பது வருடங்களாகத் தமிழர்கள் போராடி வருகின்றார்கள்.
அமைதி முயற்சிகளில் ஏற்பட்ட சிறிய முன்நகர்வைக் கூடத் தடுத்தது இந்த அரசமைப்புத்தான். ஆழிப்பேரலையையடுத்து எமது மக்களுக்கான அவசர மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறிய கட்டமைப்பைக்கூட இந்த அரசமைப்பைக் காட்டித்தான் இலங்கை நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்தன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமேயில்லை. தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்த உடன்பாட்டையும் அல்லது தீர்மானத்தையும் இலங்கை அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இனச் சார்புடைய அரசைப் பிரதிபலிக்கும் நீதித்துறை என்பதால் அது எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவே முடிவுகளை எடுக்கும். இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதற்கான எந்த சாத்தியமும் எங்களுக்குத் தெரியவில்லை. இதைத்தான் எமது தலைவர் எங்கள் இலட்சியத்தை நோக்கி நடைபோட வேண்டிய தேவையை இது எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

கேள்வி: இலங்கையின் அண்மைக்கால இராணுவத் தாக்குதல் நடவடிக்கை குறித்து இணைத்தலைமைகளான ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியன எத்தகைய பிரதிபலிப்பைக் காட்டின?

பதில்: அவர்கள் தங்கள் கவலையை கண்டனங்கள் ஊடாக மட்டுமே வெளிப்படுத்தினர். இனப் பாகுபாட்டுப்போக்கில் உள்ள பௌத்த சிங்களத் தலைமையை இந்த வெறும் கண்டனங்கள் வழிக்குக் கொண்டுவரமாட்டா. இலங்கை அரசு இத்தகைய அறிக்கைகளை தூசென ஒதுக்கி விட்டுத் தமிழர்களுக்கு எதிரான தனது போரைத் தொடர்கின்றது. ஆகவே, நான் முன்னர் குறிப்பிட்டமைபோல சர்வதேச சமூகம் உறுதியான, திடமான செயற்பாட்டைக் காட்டவேண்டும்?

கேள்வி: சர்வதேச அரங்கில் இன்று உங்கள் கூட்டாளிகள் யார்? உங்கள் போராட்டத்துக்கு எந்த நாடு ஆதரவு காட்டுகின்றது?

பதில்: தற்சமயம் பூமிப்பந்து எங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் எமது போராட்டத்தில் எங்கள் பின்னால் நிற்கின்றார்கள். அவர்களின் ஆதரவு, பங்குபற்றுதல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியனவே எமது மிகப்பெரிய பலம். எனவே, நீதியை மதிக்கும் அனைத்து நாடுகளும் எதிர்காலத்தில் எங்களோடு நிற்கும் என நான் நம்புகிறேன். இந்த சார்புநிலைக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்திருக்கின்றன எனக் கருதுகிறேன்.

கேள்வி: யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பொருத்தமான தீர்வு ஒன்று குறித்து ஆலோசிக்கும்படி இந்திய மத்திய அரசை அண்மையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கோரியிருக்கின்றார். இது அவரது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகின்றது. இந்த மாற்றத்தை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: இலங்கை அரசினால் தற்போது கட்டவிழத்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலைப் போக்கை தமிழ்நாட்டில் வசிக்கும் முழுத் தமிழ் மக்கள் கூட்டமுமே ஒன்றாக எதிர்க்கின்றது. இனப்படுகொலை நிறுத்தப்படவேண்டும், தமிழ் ஈழத்தில் உள்ள தங்களது தமிழ்ச் சகோதரர்கள் பாதுகாக்கப்படவேண்டும், அவர்கள் தங்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கோரிக்கைகளோடு அவர்கள் இப்போது கிளர்ந்துள்ளனர்.
தமிழக முதல்வர் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதாலும், அவரது கட்சி மத்திய அரசை ஆதரிக்கும் கட்சி என்பதாலும் அவரது கருத்துகள், தமிழகத்தின் முழுத் தமிழர்களினதும் கருத்துகளை பிரதிபலிப்பனவையாகும். இலங்கை அரசின் குணாம்சத்தை இந்திய மத்திய அரசு இப்போது நன்கு புரிந்து கொண்டிருக்கும் என்பதால் அதுவும் இலங்கை அரசு குறித்து திடமான முடிவை எடுக்கும் என நான் நினைக்கிறேன்.

கேள்வி: இந்தியாவுக்கும், முழு அளவில் உலகுக்கும் நீங்கள் விடுக்கும் விண்ணப்பம் யாது?

பதில்: இந்தப் பிராந்திய சக்தி இந்தியா. குறிப்பாக பல லட்சம் எண்ணிக்கையில் நமது சகோதரர்கள் வாழும் நாடு அது. எனவே, தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு எங்களுக்கு இந்தியா தார்மீக ஆதரவைத் தரவேண்டும். இலங்கை அரசுக்கான சகல நிதி உதவிகளையும் இந்தியா நிறுத்திக்கொண்டு, இலங்கை அரசை சரியான வழிக்குக் கொண்டுவரும் விதத்தில் நடந்து கொள்ளவேண்டும். அத்தோடு, சர்வதேச சமூகத்தையும் அவ்வாறு நடந்துகெள்ளுமாறு அது கோரவேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு செயற்படுமாறு நான் சர்வதேச சமூகத்துக்கு விண்ணப்பம் செய்கிறேன்.

மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல்: 11 பேர் பலி

புதன்கிழமை, 31 சனவரி 2007

மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகத்திற்கு மிக அருகில் வெடிக்க வைக்கப்பட்ட கிளைமோர் கண்ணிவெடியில் சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறையினரின் வாகனம் சிக்கியதில் 7 காவல்துறையினரும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.


இத்தாக்குதலில் பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 இராணுவத்தினரும் 5 காவல்துறையினரும் 3 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து இன்று புதன்கிழமை காலை 11:20 மணியளவில் புறப்பட்ட இராணுவ வாகனத்தில் மொத்தம் 30 பேர் இருந்ததாகவும், கிளைமோர் குண்டில் வாகனம் அகப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த இராணுவத்தினர், பொலநறுவை மற்றும் கொழும்பு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பொதுமகன், மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதினம்.கொம்.

ஆறுகால்மடம் பகுதியில் இளைஞரின் சடலம்

புதன் 31-01-2007 யாழ். ஆறுகால்மடம் கோம்பயன்மணல் மயானத்துக்குச் சமீபமாக வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் காணாமற்போன சுதுமலை மேற்கு மானிப்பாயைச் சேர்ந்த குணரத்தினம் கஜேந்திரன் (அகவை30) என்பவரின் சடலம் அதுவென்று இனங்காணப்பட்டுள்ளது. யாழ். நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் கடந்த வியாழக்கிழமை கடமைக்குப் புறப்பட்டுச் சென்றார் என்றும் பின்னர் காணாமற்போயிருந்தார் என்றும் உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர். வடமராச்சியில் ஒருவர் கொலை வடமராச்சி கரவெட்டி இராஜ கிராமத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் வலது குறைந்த நபர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இராமையா தர்மசீலன் (அகவை32) என்பவரே கொல்லப்பட்டவராவார். கரவெட்டியில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தங்கியிருந்த சமயம் சுடப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

யாழ். கொக்குவிலில் கொள்ளை! நகை, பணம் காவல்துறையினரால் மீட்பு!

. யாழ். கொக்குவில் மேற்கில் வீடு ஒன்றில் கொள்ளையிடப்பட்ட ஆறு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பெருந்தொகைப்பணமும் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு கொள்ளையுடன் சம்பந்தப்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் மேற்கில் உள்ள வீடு ஒன்றில் இம்மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பாக கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த பொலிஸார் இருவரைக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து அவ் வீட்டில் கொள்ளையிடப்பட்டன எனக் கருதப்படும் ஆறுலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் மற்றும் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸார் கைதுசெய்த சந்தேக நபர்கள் இருவரும் யாழ். நீதிவான் இ. த.விக்னராஜா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்துக் கைதான இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து மேலும் விசாரணைகளை மேற்கொள்ளும்படி நீதிவான் உத்தரவிட்டார்.அத்தோடு அவர்கள் மேலும் கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தார் -சுடரொளி-

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் தொலைபேசி சேவைகள் செயலிழப்பு


நேற்று முன்தினம் இரவு முதல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கான தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளதாக கொழும்பிலுள்ள சிறீலங்கா ரெலிகொம் தலை மையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளமைக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என தெரிவித்த அதிகாரிகள் மேலதிகமாக எதனையும் கூறவில்லை. அதேவேளை மேற்படி இடங்களுக்கான தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளமை தொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதாக சிறீலங்கா ரெலிகொம்மின் வவுனியா அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்காணிப்புக் குழுவினர், கிளிநொச்சிக்கு இன்று திடீர் பயணம்

புதன்கிழமை, 31 சனவரி 2007

காலியில் இடம்பெற்ற சர்வதேச நிதிவழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பையடுத்து, சில முக்கிய தகவல்கள் மற்றும் செய்திகளோடு, சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சி பயணமாகியுள்ளனர்.


அவர்கள் கிளிநொச்சி செல்வதற்கான உலங்குவானூர்தி ஒழுங்குகளை, நேற்று இரவு வரை சிறீலங்கா அரசு வழங்கவில்லை. இருப்பினும் தாங்கள் தரை மார்க்கமாகவாவது கிளிநொச்சி செல்லவுள்ளதாக கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

வேறு வழியின்றி, விமானப் பயணத்தை வழங்க சிறீலங்கா அரசு பின்னிரவு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, இடைக்கால தலைவராகப் பணியாற்றிவரும் ஜோண் ஒஸ்க்கார் சோல்நெஸ் தலைமையில், இவர்களது பயணம் இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை எட்டவேண்டுமென்றும், சிறீலங்கா அரசு இராணுவத் தீர்வை இடைநிறுத்தவேண்டுமென்றும் நிதி வழங்கும் நாடுகள் பொதுவான வேண்டுகொளை விடுத்த போதிலும், சிறீலங்கா அரசின் இராணுவ நகர்வுகளுக்கு தொடர்ந்தும் தங்களது ஒத்துழைப்பு இருக்குமென அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

Tuesday, January 30, 2007

கொழும்பில் 27 பொதுமக்கள் கைது

. இன்று செவ்வாய் கிழமை கொழும்புக்கு வடக்கு பகுதி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கு மாகாணத்தில் கண்டியில் இருந்து கொழும்புக்கு செல்லும் வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மூன்று பெண்கள் உட்பட 27 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் இவர்களில் பெரும்பாண்மையானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் கம்பகா காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் போது 1500 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் எதிர்வரும் பெப்பிரவரி 4ம் திகதி இலங்கையின் 59வது சுதந்திர தினம் கொண்டாடப்படவிருப்பதாகவும் இதனால் கொழும்புநகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

காலி மாநாட்டில் 4.5 பில்லியன் டொலர் உதவிவழங்கப்படுமா என்பதில் முரண்பாடான தகவல்கள்

காலில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சிறீலங்காவிற்கு 2007-2009 ஆண்டுகால அபிவிருத்தி பணிகளுக்கு 4.5 பில்லின் அமெரிக்க டொலர் உதவி பெறப்படவுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ் உதவித்தொகையானது வீதி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகளின் உருவாக்கம், துறைமுக மேம்பாடு, அனல்மின் நிலையம் உருவாக்கம் ஆகிய பணிகளுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளின் பெறுபேறாக எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 9 பில்லியன் டொலர் பணம் உதவித்தொகையாக சிறீலங்கா அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் என அமைச்சர் சரத் அமுனுகம நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை ரொட்ரர் செய்தி நிறுவனத்துக்கு செவ்வியளித்த பெயர் குறிப்பிடவிரும்பாத வெளிநாட்டு அபிவிருத்திப் பங்காளி ஒருவர் இது உதவிவழங்கும் மாநாடு அல்ல எனவும் ஒருவரும் உதவியளிப்பதற்கான எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

சிறிலங்கா விமானப்படையினர் ஜெட் விமானங்கள் இன்று செவ்வாய்கிழமை முல்லைத்தீவில் குண்டுத்தாக்குதல்


சிறிலங்கா விமானப்படையினர் ஜெட் விமானங்கள் இன்று செவ்வாய்கிழமை முல்லைத்தீவு பகுதியில் 11.45 மணியளவில் குண்டுகள் வீசுயுள்ளன


தமிழீழ விடுதலைப்புலிகலின் முக்கிய இலக்குகள் மீது விமானதாக்குதல் நடத்தியதாக விமானப்படையினர் தகவல் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

மகிந்தவால் தனியான ஒரு தீர்வு திட்டம்


இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட முறையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்படவுள்ள தீர்வு யோசனைகள் நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் அவருடைய தனிப்பட்ட யோசனைகளாகவே அமையும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கும் மகிந்த ராஜபக்சவின் யோசனைகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் இந்திய மறை முக மத்தியஸ்தம்?!!!

செவ்வாய் 30-01-2007

இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் இந்திய மறை முக மத்தியஸ்த முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் இராஜதந்திர தரப்புகளில் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தியா சென்றுள்ளமை குறித்து பல்வேறு இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஸ்ரீலங்கா பிரதமர் ரட்ன ஸ்ரீ விக்கிரமநாயக்கா ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர்

இதேவேளை ஸ்ரீலங்காவின் சமாதான செயலக பணிப்பாளரும் வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவும் இந்தியா சென்றுள்ளார்

ஸ்ரீலங்காவின் புதிய வெளிநாட்டமைச்சர் ரோஹத போகொல்லாகமவும் இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை இனப்பிரச்சினையுடன் நெருக்கமான தொடர்புடையவர்களின் இந்திய விஜயமானது இந்தியாவின் புதிய அரசியல் நகர்வாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்ட மாதிரியுடன் பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாய்காகவும் பாலித கோகனவும் இந்தியா சென்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டாத தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த தீர்வு திட்டம் குறித்து இந்திய அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

யுத்தத்தின் மூலம் தீர்வை ஏற்படுத்த முடியாது - அமெரிக்கா.!!!

செவ்வாய் 30-01-2007

காலியில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்கா தூதுவர் ரொபேட் ஓ பிளேக் சமாதான பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதற்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் முன்வர வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.

மனிதநேய பணிகளில் ஈடுபடும் அரசசார்பற்ற நிறுவனங்களின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தென்னிலங்கை ஊடகங்கள் முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்றும் மோதல்கள் நிகழும் பகுதியில் அமெரிக்க அரசாங்க அமைப்பான யு.எஸ்.எயிட் நிறுவனமும் அதன் பங்காளிகளான சில அரசசார்பற்ற நிறுவனங்களும் சுதந்திரமாக செயலாற்றுவதற்கு இடையூறுகள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்காவல் நிலையத்தில் பாதுகாப்பு தேடி இளைஞன் சரண்

செவ்வாய் 30-01-2007 யாழ்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் சிறீலங்கா காவல்நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை அச்சத்தின் காரணமாக இளைஞர் ஒருவர் சரண்புகுந்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் இனம்தெரியாத ஆயுததாரிகள் இவரை அச்சுறுத்தியதாகவும் இதற்கு அஞ்சியே இவர் அங்கு சரண்புகுந்தள்ளார். இவரை யாழ்மாவட்ட நீதவான் விக்கினராஐh முன்னிலையில் கையளித்தபோது இவரை எதிர்வரும் 9ம் திகதி வரை யாழ் சிறைச்சாலையில் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இவ் அச்சுறுத்தலுக்கு உள்ளான இளைஞன் 22 அகவையுடைய ரமேஸ் பாபு எனவும் இவரது உயிருக்கு பலதடவை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது. ஏற்கனவே யாழ்சிறைச்சாலையில் 15 வயது சிறுமி உட்பட 42 பேர் யாழ் சிறைச்சாலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவால் சிறீலங்காவிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி.!!!

செவ்வாய் 30-01-2007

சிறீலங்காவின் தெற்குபிராந்திய தொடரூந்து இணைப்பை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவி அளிப்பதாக இன்று இந்தி அலுவலகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை கடந்த நான்கு வருடங்களில் 281 மில்லியன் அமெரிக்க டொலர்; கடனுதவியாக வழங்கியுள்ளதாகவும் இவை கோதுமை, பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தியதாகவும் இந்தியதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தியாவால் சிறீலங்காவிற்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மற்றும் எண்ணை அகழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் சிறீலங்காவின் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 29, 2007

யாழ்பாணத்தில் இன்று முதல் பெருமளவில் வகுப்பு புறக்கணிப்பு

திங்கள் 29-01-2007 வடமராச்சி தமிழ் மாணவர்களால் யாழ்குடாநாட்டு பாடசாலைகளால் சிறீலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட வேலாயுத மகாவித்தியாலயம், ஹட்லிக்கல்லூரி மாணவர்களை விடுவிக்க கோரி பெருமளவில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யும் வரை அவர்களது போராட்டம் இடம் பெறும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு 29-01-2007 திங்கள் முதல் யாழ் குடாநாட்டு பாடசாலைகள் அனைத்தையும் பகிஸ்கரிக்குமாறு வேண்டுகின்றோம் யாழ் குடாநாட்டில் மணவர்கள் மீதான அரச வன்முறைகள் எவையும் நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எவையும் காணப்படவில்லை. மாறாக குடாநாட்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் இராணுவ நெருக்கடிகள் மிக மோசமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடத்தப்பட்ட மாணவன் க.லதீஸ்வரன் உள்ளிட்ட வடமராட்சி மாணவர்களான ப.தனஞ்சயன், மு.பரமானந்தன் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தி இவ்வாண்டின் ஆரம்பம் முதல் மாணவர்களால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடமராட்சி மாணவர்களால் கடந்த ஜந்து தினங்களாக வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் படையினர் கடத்தப்பட்ட மாணவர்கள் எவரையும் விடுவிக்கவில்லை. பாடசாலை சூழல்கள் எங்கும் இராணுவம் குவிக்கப்பட்டு மாணவர்களின் கற்றலுக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. குடாநாட்டில் மாணவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக கடந்த மாணவர் போராட்டங்களின் போது உறுதியளித்த யாழ் ஆயர், அரச அதிபர், கல்வி அதிகாரிகள் மாணவர்கள் மீது அரச பயங்கரவாதம் தாண்டவமாடுகின்ற போது மௌனிகளாக இருப்பது எமக்கு ஆழ்ந்த கவலையினை ஏற்படுத்தி இருக்கின்றது. கடத்தப்பட்ட எமது மாணவர்களின் விடுதலை வேண்டியும் எம்மீதான இராணுவ வன்முறையினை இராணுவம் நிறுத்திக்கொள் வேண்டுமெனக் கோரியும் எதிர்வரும் 29-01-2007 திங்கள் முதல் குடாநாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு அரசுக்கு எமது எதிர்பினை வெளிப்படுத்துவோம் என தமிழ் மணவர்களின் ஒருமித்த சக்தி எனும் வகையில் வேண்டிநிற்கிறோம். -நன்றி-

யாழில் ஊரடங்கு வேளையில் நடமாடுவோரை கைதுசெய்யுமாறு.....


யாழ். குடாநாட்டில் இரவு வேளையில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் நடமாடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவேண்டும். இதற்கான பணிப்புரையை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா பலாலி படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் கொள்ளைகள், கொலைகள், கைதுகள், ஆட்கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும்
அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தமது அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குடாநாட்டில் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் பொருட்டு சகல கிராமசேவையாளர் பிரிவுகளிலும் விழிப்புக்குழுக்களை அமைக்கும் படி யாழ். அரச அதிபருக்கு பிரதம நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

விழிப்புக்குழுவுக்கு பொலிஸாரும் படையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குப் பணித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து யாழ். நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் யாழ். மாவட்டத்தில் பணிபுரியும் நீதிபதிகளும், அரச அதிபரும் கலந்துகொண்டனர்.
விழிப்புக் குழுக்களைக் கிராம சேவையாளர்கள் ஊடாக அமைப்பது குறித்து அங்கு விரிவாக ஆராயப்பட்டது.

சர்வதேச நாடுகளின் அசைவற்ற நிலையே, கொழும்பின் அராஜகப் போக்குக்கு உந்துசக்தியாக உள்ளது: சுப.தமிழ்ச்செல்வன்

[திங்கட்கிழமை, 29 சனவரி 2007]

எந்தவிதமான உணர்வையும் வெளிப்படையாகத் தெரிவிக்காத, வெறும் அசைவற்ற போக்குடன் சர்வதேச சமூகம் இருப்பது, சிறீலங்கா அரசு, தனது வன்முறை அரசியலையும் இராணுவத் தீர்வையும் தொடர்ந்து முன்னெடுக்க, உந்துசக்தியாக இருக்கிறது என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நெற் இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு சரியானது அல்ல என்பதை வெறுமனே கருத்தாக வெளிப்படுத்திவரும் சர்வதேச சமூகம், கொழும்பு அரசு அந்த இராணுவத் தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்து வெளியே வருவதற்கான எந்த அழுத்தத்தையும் கொடுக்காது அமைதி காக்கிறது. விடுதலைப் புலிகள் எவ்வளவு பொறுமையை வெளிப்படுத்திய போதிலும், சர்வதேசம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

எக்காரணம் கொண்டும், நாம் இராணுவ செயல்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டு, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம்.

பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கான முன்னெடுப்புக்களுக்கு, தகுந்த அமைதியான சூழ்நிலை அவசியம். அத்தகைய அமைதியான சூழலின் அவசியத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே தெளிவாக முன்வைத்துள்ளது.

இந்த சூழ்நிலைக்கான அடிப்படை விதிகள், பெப்ரவர் 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தெளிவாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட விடயங்களை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான ஓர் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, கடந்த சில வருடங்களாக விடுதலைப் புலிகளின் தலைமை பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வெளிப்படுத்தி வருகிறது.

கொழும்பு தலைமைப்பீடம், சமாதான முயற்சிகளில் போதிய அர்ப்பணிப்புடனும் கருத்துடனும் மீண்டும் தன்னை ஈடுபடுத்தும் என்ற நோக்கத்துடன் தான், இந்த சகிப்புத்தன்மையை தலைமைப் பீடம் வெளிப்படுத்தி வருகிறது.

விடுதலைப் புலிகள் விட்டுக் கொடுப்புடனும் திறந்த மனதுடனும் இருக்க வேண்டுமென்று சர்வதேச சமூகம் கோரியதை, நாம் தொடர்ந்து மதித்து நடக்கிறோம்.

இரு ஜெனீவா பேச்சுவார்த்தைகளிலும் இந்த விட்டுக்கொடுப்புத் தன்மையை நாம் சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துள்ளோம்.

ஜெனீவா 1 மற்றும் ஜெனீவா 2 பேச்சுவார்;த்தைகளுக்கு இடைப்பட்ட 8 மாத காலத்தில், சிறீலங்கா அரசு, திட்டமிட்ட இரகசிய பனிப்போரை, நிரந்தர வெளிவாரியான வலிந்த போராக மாற்றியதையே அனைவரும் பார்க்கக் கூடியதாக இருந்தது.

ஜெனீவா 1 பேச்சுவார்த்தையில், துணைப்படைகளின் ஆயதம் களையப்படுவதை, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 ற்கு அமைய, தாம் நிறைவேற்றுவதாக சிறீலங்கா அணி ஒத்துக்கொண்டது. இருப்பினும், மட்டக்களப்பு, கொழும்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற பல்வேறு பகுதிகளில் துணைப்படையின் அரசியல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, துணைப்படை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியான சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை சமாளிக்க சிறீலங்கா அரசு சதிமுயற்சிகளை முன்னெடுத்தது.

சிறீலங்கா அரசு, துணைப்படைகளை தனது இராணுவத்தின் இணைந்து செயல்பட அனுமதித்ததை, ஆதாரபூர்வமாக நாம் நிரூபித்தோம். விடுதலைப் புலிகள் மீது, துணைப்படையினர் தங்களது அரசியல் செயலகங்கள் என்று சொல்லப்படுகிற நிலைகளிலிருந்து தாக்குதல் தொடுத்ததை, அவர்களே ஒத்துக் கொண்டுமிருக்கிறார்கள்.

பொதுமக்கள் மீதான கொலைகள், படுகொலைகள், கட்டாய கடத்தல்கள் போன்றவற்றை, சிறீலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணைப் படைகளும், மிகப் பரவலாக இணைந்து முன்னெடுத்து வருகின்றன. மனித உரிமை அமைப்புக்கள் திட்டமிட்ட வகையில், தொடர்ச்சியாக மிரட்டப்பட்டும் தடுக்கப்பட்டும் எச்சரிக்கப்பட்டும், அவர்களது உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவதுடன் கடத்தப்பட்டும் வருகின்றனர்.

கிழக்கில், பிரதான பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களை இலக்குவைத்து, வான் தாக்குதல்களும் எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களும் நடக்கின்றன. இடம்பெயர்ந்து நீண்டதூரம் கால்நடையாகத் தப்பிச்செல்லும் பொதுமக்கள் மீதும் திட்டமிட்ட தாக்குதல் இடம்பெறுகிறது. எப்படியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து பொதுமக்களைக் கலைக்கும் நோக்குடன் இந்த பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.

யுத்தத்தின் போது கடைப்பிடிக்கப்படும் அடிப்படை விதிகளை மீறும் வகையில், வைத்தியசாலை மீதும் நோயாளிகள் மீதும் கூட இராணுவத் தாக்குதல்கள் தொடர்கின்றன.

சிறீலங்கா தலைமையிடம் ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், ஒரு கொள்கை மாற்றம் தேவை என்றும், வடக்கு கிழக்கு இணைப்பை மீண்டும் உருவாக்குமென நம்புவதாகவும் சர்வதேச சமூகம் கூறிக்கொண்டிருக்கிறது. இராணுவத் தீர்வு சரியானதல்ல என்றும் சர்வதேசம் கூறுகிறது. ஆனால், சிறீலங்கா அரசு, அதற்கு முற்றிலும் முரண்பட்ட வழியில், நேர் எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்கிறது.

அனைத்துக் கட்சி உறுப்பினர் சபை, விசாரணைக் கமிசன் போன்றவை உட்பட, மேற்பார்வைக் குழு போன்ற பல்வேறு குழுக்களையும் சிறீலங்கா அரசு நிறுவி, கொலைகளை விசாரணை செய்வதாக பாசாங்கு காட்டும் அரசு, மறுபக்கத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட்டு தெற்கு அரசியலில் சுய ஆதாயம் தேடி காய்களை நகர்த்தி வருகிறது.

இந்தியாவால் உருவாக்கப்பட்டு 18 வருடங்கள் நிலைத்திருந்த வடக்கு கிழக்கு இணைப்பு என்ற சர்வதேச ஒப்பந்தத்தைக்கூட, அரசியல் சாயம்பூசப்பட்ட உச்சநீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, மிகவும் புத்திசாலித்தனமாக நிராகரித்து கிழித்தெறிந்திருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச சமூகத்தின் ஆகக்குறைந்த கருசனை வார்த்தைகள், மிகச் சிறிதளவு ஆறுதலையே தமிழ் மக்களுக்குத் தருகிறது. துமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து வரும் நிலையில், கிழக்கிலங்கை தமிழ் மக்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனால், சர்வதேசத்தின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் மக்களின் சந்தேகம் அதிகரித்துச் செல்கிறது. இலங்கைப் பிரச்சனை தொடர்பில், இரு தரப்பின் மீதும் சர்வதேசம் கொண்டுள்ள அணுகுமுறை தொடர்பாக கடும் சந்தேகமும் தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.

தமிழ் மக்கள், தங்களது பிரதிநிதிகளாக நம்பி ஏற்றுக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், சர்வதேச சமூகம் நியாயத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்றுதான் தமிழ் மக்கள் கருதுகிறார்கள். நீண்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும், சுய நிர்ணய உரிமையுடன் கூடிய கௌரவமான வாழ்வியலையும் சர்வதேசம் நியாயமான முறையில் கண்டுகொள்ளவில்லை என்று உணர்கிறார்கள்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதினம்.கொம்.

அரசு – ஐ.தே.க. உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது

[திங்கட்கிழமை, 29 சனவரி 2007]

சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.க. தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க, உடன்படிக்கையின் நகலைக் கிளித்தெறிந்ததோடு, இனிமேல் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியான எந்தவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காது எனவும் அறிவித்திருக்கின்றார்.


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தததாவது:

''கட்சிக்கு எவ்விமான அறிவித்தல்களையும் வழங்காது, செயற்குழுவின் அனுமதியின்றி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளைப் பெற்றுள்ளோருக்கு எதிராக கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சியிலிருந்து வெளியேறுவது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. இது அந்தக் காலத்திலிருந்து இடம்பெற்றுவரும் ஒரு நிகழ்வாகும். எமது கட்சி ஆலமரத்தைப் போன்ற பலமானதாகும். அது ஒரு சிலரில் தங்கியிருக்கவில்லை. எனவே, ஒரு சில குழுவினரின் வெளியேற்றம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அரசாங்கத்துடன் எமது உறவு முறிவடைந்துள்ள போதிலும், தேசியப் பிரச்சினை தொடர்பாக எமது ஆதரவை வழங்குவோம். அதற்காகத்தான் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டோம். ஆனால், அரசுத் தலைவர் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவில்லை. எனவே நாம் தொடர்ந்தும் புரிந்துணர்வைக் கடைப்பிடிப்பதில் அர்த்தம் இருக்கப்போவதில்லை.'' இவ்வாறு ருக்மன் சேனாநாயக்க தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையில் கிளைமோர் தாக்குதல் - ஒரு இராணுவம் பலி, இருவர் காயம்


வல்வெட்டத்துறை மக்கள் வங்கிக்கு முன்பாக உடுப்பிட்டிக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையில் நேற்று மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒரு இராணுவம் கொல்லப்பட்டும், இருவர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இதுதொடர்பில் சிறீலங்கா இராணுவம் உத்தியோகபூர்வமான எந்தவித அறிவித்தலும் விடவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனபோதும் சிறீலஙடகா இராணுவத்தினர் அவ்இடத்தை அண்டியபகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Sunday, January 28, 2007

உலக ஒழுங்குக்கு அமைய புலிகளின் தலைவர் விரைவில் முடிவுகளை எடுப்பார்.!!

Sunday, 28 January 2007

மட்டு.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தெரிவிப்பு
போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், உலக ஒழுங்குக்கு அமைய பொறுமை காத்து வந்த எமது தலைவர் விரைவில் சில முடிவுகளை அறிவிப்பாரென விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறைப் பெறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார்.


கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்;

"மூதூர் கிழக்கு மற்றும் வாகரைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலம் போன்று மட்டக்களப்பிலும் பெரும் அவலத்தை உருவாக்க அரசு முயல்கிறது.

கடந்த சில தினங்களாகக் குடும்பிமலை (தொப்பிகல) பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தற்போது சில தினங்களாக இங்கு அடைமழை பெய்கிறது. இதற்கு மத்தியிலும் மக்கள் இடம்பெயர்ந்து பெரும் அவலங்களை சந்திக்கின்றனர்.

பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிலுமிருந்து இடம்பெயர்ந்த மக்களே தற்போதும் இடம்பெயர்கின்றனர். மூதூர் கிழக்கு மற்றும் வாகரையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறான தாக்குதல்களால் உயிரிழந்ததால் மக்கள் தங்கள் விருப்பப்படி இடம்பெயர்கிறார்கள்.

மூதூர்கிழக்கு, வாகரை போன்று அரசு மட்டக்களப்பையும் கருதுமானால் அது அவர்களுக்கு மிகப்பெரும் அழிவையே ஏற்படுத்தும்.

கடந்த 25 வருட கால விடுதலைப் போராட்டத்தில் எமது அமைப்பு ஐந்திற்கும் மேற்பட்ட ஜனாதிபதிகளை சந்தித்துள்ளது. தற்போது மகிந்த ராஜபக்ஷவும் தன் பங்கிற்கு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் தான் மிகப்பெரும் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் எமது தலைவர் உலக ஒழுங்குக்கு அமைய பொறுமை காத்து வருகின்றார்.

போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் எமது தலைவர் விரைவில் சில முடிவுகளை அறிவிப்பார்"என்றும் தெரிவித்தார்.

வவுனியாவில் இருபொதுமக்களின் சடலங்கள் மீட்பு

[Sunday January 28 2007 ] வவுனியா வேப்பங்குளம் பகுதியில், துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் இரண்டு பொதுமக்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.நேற்று சடலமாக மீட்கப்பட்ட இருவரும், சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனிடையே கடந்த கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள், அங்கிருந்து உடமைகளை அடித்து நொருக்கி துவம்சம் செய்ததோடு, வீட்டில் இருந்த தந்தையையும், மகனையும் கோரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் படுகொலை செய்யப்பட்டோர், ஐம்பது அகவையுடைய முருகையா, அவரது புதல்வரான இருபத்து மூன்று அகவையுடைய சசிதரன் ஆகியோர் என தெரிய வருகின்றது.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவது குறித்து கவலை கொள்ளவில்லை

[Sunday January 28 2007 ]

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவது குறித்து ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கவலை கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது


ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வதேச ரீதியிலும் உள் நாட்டிலும் மிக்பபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ரணில் விக்கிரமசிங்க கருதுகின்றார்

இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த் மகிந்த ராஜபக்சவின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையால் முறிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்கு மிகவும் அடிப்படையானது என சர்வதேசத்தால் கருதப்பட்ட ஒப்பந்தம் முறிவடையும் நிலையை மகிந்த ராஜபக்ச ஏற்படுத்தியுள்ளமை சர்வதேச ரீதியில் மிகப்பெரிய இராஜதந்திர நெருக்கடியை மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்படுத்தும் என சுட்டிக்காட்பட்டுள்ளது

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மத்தியில் அது அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் இதன் காரணமாக அரசாங்கத்தினை சுமூகமான நடத்திச் செல்ல முடியாத நிலை மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கருதுகின்றார்.

உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை நடத்துவது மகிந்த ராஜபக்சவிற்கு இயலாத காரியம் என்றும் தனது தவறுகளுக்காக அவர் வருந்தும் காலம் விரைவில் ஏற்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்

இதன் காரணமாகவே கட்சி தாவல் குறித்து அக்களை கொள்ளாமால் அவர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவினர். !!!


சிறிலங்காவின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகளில்இருந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவியுள்ளதாக கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க.விலிருந்து 18 பேரும் முஸ்லீம் கொங்கிரசிலிருந்து 6 பேருமே இவ்வாறு கட்சிதாவியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடக ஒருங்கிணைப்பாளராகிய லூசியன் இராஜகருணநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற சிறிலங்கா அமைச்சரவை விஸ்தரிப்பின் போது இந்தக்கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுட் பலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

கொழும்பின் இரண்டு பிரதானகட்சிகளிடையேயும் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தக் கட்சித்தாவல்மூலம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தமது கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் உள்வாங்குவாராக இருந்தால் தமக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்துபோகும் என ஐ.தே.கட்சியின் உயர்வட்டாரங்கள் பலதடவைகள் நேரிலும் கடிதமூலமும் அறிக்கைகள் மூலமும் எச்சரித்திருந்தபோதும் மகிந்தராஜபக்ச கட்சித்தாவிய ஐ.தே.க உறுப்பினர்களுக்கு அமைச்சர்களாகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குள்ளும் கட்சிதாவும் உறுப்பினர்களை உள்வாங்குவது தொடர்பாக அதிருப்தி நிலவுகின்றது. “பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவுதர முன்வருவது அமைச்சர் பதவிகளுக்கும், தமது புகழுக்கும், அரச உடமைகளை தாம் திருடிய குற்றத்தில் இருந்து தப்புவதற்குமே” என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

இணைத்தலைமை நாடுகள், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இருகட்சிகளுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் எக்காரணம்கொண்டும் முறிந்துபோகக் கூடாதென தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

24 கட்சிதாவிய உறுப்பினர்களுடன் சேர்த்து ஆளுங்கட்சிக்கு இப்போது 114 ஆசனங்கள் பாராளுமன்றத்தில் உள்ளன.

'ஐந்து மணிநேரத்திற்கு ஒருவர் கடத்தப்படுகின்றனர்': மங்கள சமரவீர.!!

[ஞாயிற்றுக்கிழமை, 28 சனவரி 2007]

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ச, அமைச்சர்களின் கடமைகளில் தலையிடுவதுடன் கொள்முதல்களுக்கும் திட்டங்களுக்குமான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகளிலும் மிக அதிகளவில் குறுக்கீடு செய்கிறார்" என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.


இது தொட்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு விரிவான கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்திருக்கின்றார்.

இது தொடர்பாக அமைச்சர் மங்க சமரவீர கடந்த 23 ஆம் நாள் அரச தலைவருக்கு எழுதிய தனது கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

''சில சமயங்களில் பசில் ராஜபக்ச அமைச்சர்களை வழிநடத்தவும் முற்படுகின்றார். அரசு பெரும் ஊழல்களுக்கும் செலவீனங்களுக்கும் முகம் கொடுத்துள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ள நிலையில் பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளனர். அவர்கள் அமைச்சர் பதவிகளுக்கும், தமது புகழுக்கும், அரச உடமைகளை தாம் திருடிய குற்றத்தில் இருந்து தப்புவதற்குமே அரசு பக்கம் வருகின்றனர்.

மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் என்பன நாட்டில் பொதுவானதாக மாறிவிட்டது. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் ஒருவர் சிறிலங்காவில் கடத்தப்படுவதாக உள்ளுர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

கடத்தல், கொலை என்பன ஒரு பொது நிகழ்வாகவே மாறிவிட்டது. யார் செய்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல ஆனால் அரசு தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்'' எனவும் அக்கடிதத்தில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் பின்னர் மங்களவின் இல்லத்திற்கு சென்ற அரசுத் தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் டலஸ் அழகப்பெருமா, அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் மங்களவை சமாதானப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மங்கள தனது கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டுக்களை பின்வாங்க மறுத்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சித்தாவலை தான் எதிர்ப்பதாகவும் மீண்டும் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கும் தனது முடிவில் மாற்றம் இருக்கப்போவதில்லை என மங்களவின் கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் தனது நெருங்கிய அதிகாரிகளிடம் அரச தலைவர் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ?

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைவதற்கு முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானதாக கருதப்படும் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் தொடர்பான கோரிக்கையை சிறீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கல்முனை பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த மாவட்டம் அமைக்கப்படவுள்ளது சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறும் போது முஸ்லீம் காங்கிரசும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று காலை இடம்பெற்ற சம்பவங்கள் அரசாங்க தரப்பால் மூடிமறைப்பு


கொழும்பு துறைமுகப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற சம்பவங்கள் சிறீலங்கா அரசாங்க தரப்பால் மூடிமறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சிறீலங்கா தலைநகரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொழும்பு துறைமுகத்தினுள் ஊடுருவிய மூன்று படகுகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட குறிப்பிட்ட சில கடற்கலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது

துறைமுகத்தினுள் இருந்த சிலரின் தகவல்களின் அடிப்படையினல் நான்கு பாரிய குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

எனினும் துறை முகத்தினுள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தால் கொழும்பு துறை முகத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு ஏற்படும் என்பதுடன் கொழும்பு துறை முகத்திற்கு செல்வதற்கான காப்புறுதி கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என்று சிறீலங்கா அரசாங்கம் அச்சமடைந்துள்ளது

இதன் காரணமாகவும் தமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளை சிங்கள மக்களும் எதிரணி அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சிப்தை தடுக்கும் நோக்கிலும் சிறீலங்கா அரசாங்கம் துறை முனத்தில் இடம்பெற்ற உண்மை சம்பவங்களை மூடிமறைக்க முற்படுவதாக கொழுமப்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

தமிழீழ இலக்கத்தகடு நடைமுறை அமுலுக்கு வருகிறது



தமிழீழ விடுதலைப்பலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களுக்கான தமிழீழ இலக்கத்தகடு வழங்கும் நடைமுறை அமுலுக்கு வரப்படவிருக்கிறது

தமிழீழ போக்குவரத்து கண்காணிப்பு பிரிவின் ஊர்திப் பகுதியினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேசங்கங்களில் தற்போது பாவனையில் உள்ள வாகனங்களுக்கு, தமிழீழத்தில் அச்சிடப்பட்ட இலக்கத்தகடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சகல விதமான இயந்திர ஊர்திகளும் தமிழீழ இலக்கத் தகடுகளையே பயன்படுத்தும் என்று தமிழீழ போக்குவரத்து பிரிவின் ஊர்திப் பகுதியினர் குறிப்பிட்டுள்ளனர்.

Saturday, January 27, 2007

அரசாங்கத்தில் இணையும் ஐதேக உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை



சிறீலங்கா அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 18 நாடாளுமன் உறுப்பினர்கள் நாளை சிறீலங்கா அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்

அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவிற்கு கொண்டு வரும் நிலையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உதவி வழங்கும் சமூக மாநாடு: தென்பகுதியில் கடும் பாதுகாப்பு

[சனிக்கிழமை, 27 சனவரி 2007] சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலியில் நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியின் பாதுகாப்பு மிகப் பெருமளவில் பலப்படுத்தப்படவுள்ளது. தென்பிராந்திரயத்தில் குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டைப் பகுதிகளில் முற்றுமுழுதாக அதிஉயர் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டு, முப்படையினரும் 24 மணி நேரமும் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். காலி நகரில் 29 ஆம் நாள் ஆரம்பமாகும் இந்த இருநாள் மாநாட்டுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார். இந்த மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிக்கான இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும் உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள். இதனையடுத்தே அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை முழு அளவிலான பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாகவே தென்பகுதி இந்தப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது. அம்பாந்தோட்டை மாவட்டத்துக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்தே மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு வீதித் தடைகள் போடப்பட்டு, மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும், தனிநபர்களும் கடுமையாகச் சோதனைக்குட்படுத்தப்படுவதாக அம்பாந்தோட்டை மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் அபாலி ஹேவகே தெரிவித்தார். வியாழக்கிழமை இரவு அம்பாந்தோட்டையிலிருந்து தங்காலை, திஸ்ஸமகரகம, அங்குனுகொலபலச மற்றும் கதிர்காமம் வரை பாதுகாப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 38 தமிழர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதேவேளையில், அம்பாந்தோட்டைக்குள் வெடிபொருட்களுடன் நுழைந்ததாகக் கூறப்படும் வாகனம் ஒன்று தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்குப் பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அம்பாந்தோட்டை மாவட்டமே அரச தலைவரின் சொந்த இடமாக இருப்பதாலும், காலியில் மாநாட்டுக்காக வரும் அவர், தனது சொந்தப் பகுதிக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாலுமே இவ்விதம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

திருக்கோவிலில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்: 8 பேர் பலி- 12 பேர் படுகாயம்.!!

[Saturday January 27 2007] அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கிளைமோர் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் அண்மையில் கைவிடப்பட்ட பகுதியில் நிலைகொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினருக்கு வழங்கல் பணியினை மேற்கொண்ட அதிரடிப்படையினரின் வாகனமே தாக்குதலில் சிக்கியதாகவும் தாக்குதலை விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணி நடத்தியதாகவும் திருக்கோவிலில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலை அடுத்து அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூட்டையும், எறிகணை வீச்சுக்களையும் சரமாரியாக நடத்தினர்.

'விடுதலைப் புலிகளை அழிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சி வெற்றி பெறுமா?': ரொய்ட்டர்ஸ்

[சனிக்கிழமை, 27 சனவரி 2007] திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றியுள்ள விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தளங்களை அப்புறப்படுத்த போவதாக கூறிய சிறிலங்கா அரசு, இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவதற்கு அது தீர்மானித்துள்ளது. ஆனால் யாருக்கும் வெற்றி இல்லை என்பது தான் தற்போதைய நிலை" என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்தி ஆய்வில்: கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய நகரான வாகரையை கைப்பற்றிய சிறிலங்கா அரசு, போரைத் தொடர்ந்து முன்னெடுத்து விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை முற்றாக அழித்துவிடுவதன் மூலம் 20 வருட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் நம்புகின்றது. சிறிலங்காவின் அரச தலைவரும் அவரின் படையினரும் விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிடுகின்றார்கள். அதன் மூலம் 1983 ஆம் ஆண்டிலிருந்து 67,000 பொதுமக்களும் கடந்த ஆண்டு 4,000 மக்களும் கொல்லப்பட்ட கொடூரமான போருக்குள் அரசு ஆழமாக இறங்கப் போகிறது என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். "இது ஒரு சக்கரம் அவர்கள் (அரசு) நினைக்கலாம் தாம் வெற்றியடைந்து விடலாம் என்று. அவர்கள் ஏதோ ஒன்றை முயற்சித்து பார்க்கப் போகின்றார்கள். ஆனால் நான் நினைக்கிறேன் போர் தொடரப் போகிறது என்றே, ஏனெனில் இரு தரப்புக்கும் அதனை நிறுத்தும் எண்ணம் கிடையாது. மறுபக்கம் பார்த்தால் அரசும் அதன் சிந்தனைகளும் மேலும் போரை நோக்கியே செல்கின்றன. அதற்கான காரணம் தாங்கள் வெற்றியடைந்து கொண்டு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவே தாங்கள் எங்கும் தாக்குதலை நடத்தலாம் என அரசு எண்ணுகின்றது. இதனை நிறுத்த விடுதலைப் புலிகள் ஏதாவது செய்தே ஆகவேண்டும்" என தனது பெயரை குறிப்பிட விரும்பாத வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணப் பகுதி காடுகளில் விடுதலைப் புலிகளை தேடி அழிப்பதிலும், புதிதாக கைப்பற்றப்பட்ட கிழக்கின் கரையோரப் பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்துவதிலும் அரச படையினர் காட்டிவரும் உற்சாகம் அவர்களின் ஆதிக்கம் தற்போது மேலோங்கி உள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் பிறிதொரு சமருக்காக விடுதலைப் புலிகள் தற்போது பின்வாங்கியுள்ளார்கள், அவர்களின் சமரிடும் பலம் தக்கவைக்கப்பட்டுள்ளது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "இராணுவம் விடுதலைப் புலிகளினது இராணுவத் தளங்களை தேடி அழிக்கப் போவதாகவும் அதில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகாளால் நிர்வகிக்கப்படும் வடபகுதியும் அடங்கும்" எனவும் அரச தலைவரின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜேன்ஸ் பாதுகாப்பு வார இதழின் ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவிக்கையில்: "இது ஒரு தெளிவான அறிவித்தல். அதாவது அரசு, விடுதலைப் புலிகள் மீதான போரை முழுமையாக மேற்கொள்ளப் போகின்றது. விடுதலைப் புலிகளால் அரச படைகள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் சாத்தியங்கள் உண்டு. எனவே எதிர்வரும் கிழமைகளில் அல்லது மாதங்களில் மிகப்பொரும் சமர்கள் ஆரம்பமாகலாம். விடுதலைப் புலிகள் பேச்சுக்கு சம்மதித்தால் அல்லது அவர்கள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலே அமைதிப் பேச்சுக்கள் சாத்தியமாகலாம். விடுதலைப் புலிகளின் பலமான கடற்புலிகளின் பலம் குறைந்து விடவில்லை அவர்கள் தற்போதும் தமது போரிடும் திறனை தக்கவைத்துள்ளனர். அதாவது அவர்கள் முழு அளவிலான மோதல்களுக்கு முகம் கொடுத்து தமது படைகளை இழக்காது பின்வாங்கியுள்ளனர். எனவே தற்போதும் பலமான எதிரியாகவே அவர்கள் விளங்குகின்றனர். கிழக்கு மாகாணத்தில் வாகரையை கைப்பற்றியது அரசபடைகள் போரில் மேலோங்கி உள்ளதையே காட்டுகின்றது. ஆனால் அதன் மூலம் புலிகளின் இராணுவ வலிமை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது அதன் அர்த்தமில்லை. கிழக்கு மாகாணத்தில் இருந்து முற்றாக விடுதலைப் புலிகளை வெளியேற்றுவது இராணுவத்தின் மிகப்பெரிய நடவடிக்கை. ஆனால் அப்படி ஒரு நிலைமை ஏற்படும் போது விடுதலைப் புலிகள் புதிய களமுனைகளை திறக்கமாட்டார்கள்" எனவும் அவர் தெரிவித்தார். போரை நிறுத்தும்படியும், படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் அனைத்துலக நாடுகளினாலும் அமைப்புக்களினாலும் விடுக்கப்படும் அறிவித்தல்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது. கடந்த காலங்களிலும் மற்றும் அண்மையிலும் இடம்பெற்று வரும் மோதல்களால் இடம்பொயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்குவதற்கு தரமான தங்கும் இடங்கள் கூட அற்ற நிலையில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே மோதல்கள் உக்கிரமடைந்தால் நிலைமை மேலும் மோசமாகலாம் என பொதுமக்களும், அவதானிகளும் கவலை தெரிவித்தள்ளனர். நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமர்சன் தகவல் தெரிவிக்கையில்: "கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதுலைப் புலிகளை வெளியேற்றும் நடவடிக்கையானது மோதல்கள் எல்லா இடங்களுக்கும் பரவுவதற்கே வழிவகுக்கும். இரு தரப்பினரும் கடுமையான அறிக்கைகளை வெளியிடுகின்றனர் இது போர்நிறுத்த உடன்பாட்டின் கொள்கைகளுக்கு உகந்ததல்ல" என்றார் அவர்.

கொழும்பு துறைமுக தாக்குதல் முறியடிப்பு: சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல்

[சனிக்கிழமை, 27 சனவரி 2007]

சிறிலங்கா தலைநகரில் உள்ள கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்றைத் தாம் இன்று காலையில் முறியடித்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன.


அதிவேகப் படகுகள் மூலம் வந்து துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும், இவ்வாறு விடுதலைப் புலிகள் வந்த படகுகளில் ஒன்று கடற்படையினரது தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாகவும் படைத் தரப்பினர் தெரிவித்தனர்.

மூன்று படகுகளிலேயே விடுதலைப் புலிகள் வந்ததாகவும், அவற்றில் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய இரண்டு படகுகள் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளைக் கடற்படையினர் முடுக்கிவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும் இது பற்றிய மேலதிகத் தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்புத் துறைமுகத்திலும், அதனையடுத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. முப்படையினரும் அப்பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாகவிருந்தது.

Friday, January 26, 2007

படுவான்கரை நோக்கி சிறீலங்கா படைகள் அகோர ஏறிகணைத் தாக்குதல்

படுவான்கரை நோக்கி சிறீலங்கா படைகள் அகோர ஏறிகணைத் தாக்குதல் மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான படுவான் கரை நோக்கி சிறீலங்கா படைகள் எறிகணை மற்றும் பல்குழல் வீச்சுக்களை நடத்தியுள்ளனர் குடும்பி மறை வவுணதீவு போன்ற பிரதேசங்களில் இருந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதேவேளை திகிலிவெட்டை பெண்டுகள் சேனை பிரதேசங்களை நோக்கியும் நேற்றைய தினம் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் காரணமாக மக்கள் குடியிருப்புகள் பல அழிவடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான சக்தி படையினரிடமுள்ளது.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான சக்தி படையினரிடமுள்ளது. கிழக்கில் இது நிரூபணம் இனவாதத்தை ஒழிப்பதற்கான வழி என்கிறார் ஜனாதிபதி [Friday January 26 2007 ] [virakesari.lk] பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான ஆற்றல், தேவைப்பாடு மற்றும் சக்தி என்பன எமது படையினரிடம் உள்ளன. கிழக்கில் அதனை படையினர் நிரூபித்துக் காட்டியுள்ளனர். நாட்டு மக்கள் முப்படையினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வதே இனவாதத்தை ஒழிப்பதற்கான வழியாகும். இல்லையேல் கொடிய இனவாதம் இலங்கையில் உன்னதமான பாரம்பரியத்தை சிதைத்து சின்னாபின்னாமாக்கிவிடும். இதனை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார் மொரகஹகந்த நீர்தேக்கத் திட்டத்தை நேற்று முற்பகல் ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்.பி. க்கள் உட்பட பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கோதுமையை அடியொற்றியதாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் போலவே, மத்திய கிழக்கு நாடுகள் கனிய எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருப்பதைப் போலவே நாம் நெல் மணியை அடிநாதமாகக் கொண்டு வாழ்ந்த நாடு என்பதை நான் விசேடமாகக் குறிப்பிட வேண்டியதில்லை. அதேபோல அந்த பாரம்பரியம் வினையாக அமைந்தது குறித்தும் தெரிவிக்க வேண்டியதில்லை. வயல் நிலங்களை நிரப்பி புகையிலை பயிரிட வேண்டுமென்று குளத்தினை மையமாகக் கொண்ட தேசத்தின் நீர் வளத்தை விற்று வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை ஈடுகட்ட வேண்டுமென்று கருதும், கலசார விழுமியத்தின் அடிநாதமான இடங்களை விற்று அவற்றின் மேல் ஹோட்டல்களை நிர்மாணிக்க வேண்டுமென்ற சிந்தனைப் போக்கின்பால் நாம் இயைபாக்கம் அடைந்து கொண்டிருந்தோம். ஏதேனும் ஒரு அரசியல் கட்சி அல்லது நபரை இலக்காகக் கொண்டு நான் அப்படிக் குறிப்பிடவில்லை. பச்சை நிறத்தில் போலவே, நீல நிறத்திலும் அப்படிக் கருதினார்கள். நண்பர்களே அது யாரேனும் ஒரு தலைவர் அல்லது கட்சியின் தவறு அல்ல. நாங்கள் ஒரு நாடு என்ற வகையில் ஒரு தேசத்தவர்கள் என்ற வகையில் இசைவற்ற சிந்தனையொன்றுக்கு மாறிக் கொண்டிருந்தோம். நான் அதனை வாடகைச் சிந்தனை என்பதாகவே குறிப்பிடுவேன். உண்மையில் அந்தச் சிந்தனையை வாடகைக்கு எடுக்கும்படி எமக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. என்ன நடந்தது? நாட்டு மக்கள் என்ற வகையில் திரும்பிப் பார்த்தால் எமக்கு நல்லது நடந்திருப்பதாக நாம் சற்றேனும் திருப்திப்பட்டுக் கொள்ள முடியுமா? அதன் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாங்கள் கடனற்று சார்பற்ற எமது நாட்டுக்குப் பொருத்தமானதும், எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கக் கூடியதுமான அபிவிருத்திக் கொள்øகையொன்றை நோக்கி நகருவதற்காக நாம் உங்கள் ஆணையைக் கோரி நின்றோம். நம்மை விற்காததும், நாட்டின் வளங்களை விற்காததுமான சிந்தனையொன்றை உங்களிடம் முன்வைத்தோம். அன்று கூறியதைப் போன்றே இன்றும் நான் உங்களிடம் பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன். மஹிந்த சிந்தனை என்பது வானத்திலிருந்து வந்த புரியாத ஆவணம் ஒன்றல்ல. அதேபோல மஹிந்த சிந்தனை என்பது வெறுமனே தேர்தல் கால வாக்குறுதிப் பத்திரமல்ல. நாட்டின் எதிர்காலப் பாதை தொடர்பான வழிகாட்டலே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டல்தான் கலாவௌ போன்று நான்கு மடங்கு பாரியளவான இந்தப் பாரிய நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு எமக்கு வழிகாட்டியது. எந்த வெளிநாட்டினதும் எந்த நிதி அமைப்பினதும் நிபந்தனைகளுக்கு அடிபணியாது, தொழில்நுட்ப அறிவை வாடகைக்குப் பெற்றுக் கொள்ளாமல், எமது பிள்ளைகள், எமது பாடசாலைகள், எமது பல்கலைக்கழகங்கள், எமது தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து பெற்றுக் கொண்ட புலமையைக் கொண்டு இதனை நிர்மாணிப்பதற்கு எம்மை நிர்பந்தித்தது அந்த வழிகாட்டல்தான். அமரர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில் முன்மொழியப்பட்டு டட்லி சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க காலங்களில் கலந்துரையாடப்பட்டு ஜே.ஆர். ஜயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் சாத்தியவள அறிக்கை தயாரிக்கப்பட்டதுமான இந்த மொரஹகந்த பாரிய நீர்த்தேக்கம் பற்றிய உத்தேசத் திட்டத்தை தொடங்குவதற்கு அமைச்சர் மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு வழிகாட்டியதும் இந்த துணிச்சல்மிகு சிந்தனைதான். சகோதரர்களே எமது நாட்டு நாணயத்தில் முப்பத்தி எட்டாயிரத்து ஐநூறு (38,500) மில்லியன் ரூபாவை செலவழித்து இலங்கையின் மூன்றாவது பாரிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுவதன் பின்னணியில் இருக்கும் உண்மைக்கதை இதுதான் சகோதரர்களே. பாரிய சிக்கல் இல்லை தேசியப் பாதுகாப்புக்கென பாரிய செலவுத் தொகையை ஒதுக்கும் நாடொன்றில் இவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை வெற்றிகரமாக பூரணப்படுத்த முடியுமா? என்று யாரேனும் வினவலாம். ஆம் அதில் ஒன்றும் பாரிய சிக்கல் இல்லை. ஆனாலும் எமது அரசாங்கம் சவால்களைச் சந்திப்பதில் விருப்புக் கொண்ட அரசாங்கமொன்றாகும். தோற்கடிக்க முடியாது என்று அறுதியிட்டு உறுதி கூறப்பட்ட பயங்கரவாதம் இன்று அச்சத்தினால் சுருண்டு கொண்டிருப்பது நாம் அந்தச் சவாலை துணிச்சலுடன் எதிர்கொண்டதனாலேயாகும். தோழர்களே, நாம் எமது பொறுப்புக்களை பிற்போடும் வகையிலான ஒரு அரசாங்கமல்ல, எதிர்காலத்தில் பிறக்கப்போகும் பிள்ளைகள் வரலாற்றினைத் திரும்பிப் பார்த்து எம்மை பழிக்கும் நிலைக்கு நாம் ஒரு போதும் இடம் வைக்கப் போவதில்லை. கடந்த காலத்தில் கைவிடப்பட்டவை நிகழ்காலத்திற்கு சுமை என்பதை நீங்கள் அறிவீர்கள் . நாம் நிகழ்காலத்தில் கைவிடப்படுகின்றவை எதிர்காலத்திற்குப் பாரமாக இருக்கும். அப்படியாக பிற்போட்டுக் கொண்டிருந்தால் அபிவிருத்தியடைந்த நாடுகள் என்ற பட்டியலுக்குள் நாம் நுழைவது எப்போது? நாம் நாளுக்கு நாள் பிற்போட்டுக் கொண்டு எதிர்காலத்தின் சுமையை அதிகரித்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறான சுமையை இலகுபடுத்திக் கொள்ளும் பொருட்டு இந்தளவிலான பாரிய சவாலொன்றை எதிர்கொள்கையில் நிதியமைச்சின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் எமக்கு அளிக்கும் உறுதுணை குறித்து நன்றியறிதலை வெளிப்படுத்திக் கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். பயங்கரவாதம் பிறப்பிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் பார்க்கப்போனால் நாம் இந்த மொரஹகந்தை நீர்த்தேக்கம் மூலமாக வடமத்திய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கையை வெற்றி கொள்ளப் போகின்றோம் நண்பர்களே. நாம் மொரஹகந்தை நீர்த்தேக்கத்திலிருந்து வடக்கிற்கும், கிழக்கிற்கும் வெளிவிடப்போகும் நீர்ப்பிரவாகமானது பயங்கரவாதம் மூலமாக அப்பிரதேசங்களில் பரப்பப்பட்டிருக்கும் இனவாத நெருப்பை அணைக்கப் போவதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். இந்தத் திட்டம் இப்போதைக்கு 20, 30 வருடங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டிருக்குமாக இருப்பின், இன்றைக்கு வழி மொழியப்படுவது போல கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும், மட்டக்களப்பிற்கும் அதிவேகப் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்குமாக இருந்தால், எல். ரீ. ரீ. ஈ. பயங்கரவாதம் பிறப்பிலேயே கிள்ளியெறியப்பட்டிருக்கும் என்பது நிச்சயம். அப்பாவித் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழிசெய்வதே இனவாதத்திற்கு எதிரான வலுவான ஆயுதம் என்பதாக நான் உறுதியாக நம்புகின்றேன். அவ்வாறில்லாதபோது கொடிய இனவாதம் இலங்கையின் உன்னதமான பாரம்பரியத்தை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி விடும். நாம் அந்த ஆபத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சாதித்துக் காட்டியுள்ளனர் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான ஆற்றல், தேவைப்பாடு மற்றும் தி என்பன எமது படையினரிடம் உள்ளது. அவர்கள் பால் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் கிழக்கில் அதனைச் சாதித்துக் காட்டியுள்ளார்கள். நம்பிக்கைக்கு அப்பால் அதில் இருக்கும் பிரதான இரகசியம் என்ன? நாம் இராணுவத்தினருக்கு அரசியல் இலக்குகளை நிர்ணயிப்பதில்லை. நாம் யுத்தத்தை விற்று வயிறு பிழைக்கவில்லை. பாதுகாப்பமைச்சிலிருந்து கமிஷன் அரக்கனை விரட்டியடித்துள்ளோம். அதற்கிடையே நாம் பகைமை பாராட்டும் அரசியல் கலõசாரத்திற்குப் பதிலாக ஒத்துழைப்பான அரசியல் கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த அரசாங்கம் மக்களின் அரசாங்கமாகும். நாட்டை நேசிக்கும் எவருக்கும் எமது அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கான வாசல் திறந்தேயிருக்கின்றது. ஒரேயொரு நிபந்தனைதான் உள்ளது. அதாவது மஹிந்த சிந்தனை நடவடிக்கையை மதிக்க வேண்டும். ஏனெனில் அது இந்நாட்டின் தேசிய அபிலாஷையைப் பிரதிபலிக்கின்றது. எவர் வேண்டுமானாலும் வந்து அதற்குப் பசளையிடலாம். ஆனால் அதனை யாரையும் மடக்குவதற்காகப் பயன்படுத்த முடியாது. கடைசியாக லக்கலைப் பிரதேச மக்களாகிய நீங்கள் உங்கள் பாரம்பரிய வாழ்விடங்கள், காணிகளை நாட்டின் எதிர்காலத்திற்காக தியாகம் செய்வது குறித்து உங்களுக்கு நான் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும். இந்த ஆறு உங்கள் முன்னோர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலங்களின் மேலாக தவழ்ந்து வரப் போகின்றது. இந்த ஆற்றில், இந்த அடர்ந்த வனத்தில் உங்களின் ஆற்றல், நேர்மை என்பன கலந்திருப்பதை நான் அறிவேன். எங்களது அமைச்சர் அவர்கள் அதற்கான நியாயத்தை மிகவும் உச்சபட்ச அளவில் திருப்பிச் செய்வார் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் உங்களை அரவணைத்துப் பாதுகாத்தோம். அதுபோன்றே மகாவலி திட்டத்தின் கடைசி நீர்த்தேக்கம். மொரஹகந்தை இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்து எனது உற்ற நண்பர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு இந்நாட்டில் வாழும் அனைவரினதும் நன்றியறிதல்கள் உரித்தாக வேண்டும். அவருடைய செயலாளர் உளிட்ட இவ்விடயத்தில் ஆர்வம் காட்டிய அனைவருக்கும் நிதியமைச்சின் அனைத்து அதிகாரிகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்

அமைச்சர் கெஹெலியவின் கருத்து பக்கச்சார்பானது என ....

அமைச்சர் கெஹெலியவின் கருத்து பக்கச்சார்பானது என குற்றச்சாட்டு பிரித்தானியா, கனடா, சுவிற்சர்லாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, யு.எஸ்.எ, ஐரோப்பிய ஒன்றிய தூதரக பிரதிநிதி [Friday January 26 2007 ] இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் வடக்கு கிழக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த கருத்துகள் பக்கச் சார்பானதென அந்நாடுகளின் தூதுவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள பிரித்தானியா, கனடா, சுவிற்சர்லாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய தூதரக பிரதிநிதி மற்றும் யு.எஸ்.எயிட் பிரதிநிதிகள் உட்பட உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மக்களின் நிலைமை தொடர்பாக ஆராயும் விஜயம் ஒன்றை 2006 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் முடிவில் இப்பிரதிநிதிகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். இந்த கூட்டறிக்கை ஊடகங்களின் பிரசுரத்திற்காக வெளியிடப்படவில்லை. அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஊடகங்களுக்கு குறிப்பிட்ட விடயம் பக்கச் சார்பாகவுள்ளது என்று மேற்படி தூதரகங்கள் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தவறான பக்கச்சார்பான விதத்தில் இவ்வறிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த அறிக்கையின் நடுநிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் தவறாக வழி நடத்தப்படலாம் என்பதை கருத்திற் கொண்டு இவ்வறிக்கையின் சாராம்சத்தை வெளியிட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தூதரகங்கள், மேலும் தெரிவித்துள்ளதாவது யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார், திருகோணமலை,அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்தானியா, கனடா, சுவிற்சர்லாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய தூதரக பிரதிநிதிகள் மற்றும் யு.எஸ்.எயிட் பிரதிநிதிகள் உட்பட உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தோம். இந்த விஜயத்தின் போது இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் மேற்படி மாவட்ட பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,இராணுவ அதிகாரிகள்,வர்த்தக சமூகத்தினர் சிவில் சமூகத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் எனப் பலரையும் சந்தித்தோம். இதன் முடிவில் மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான எமது சிபார்சுகளை இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தெரிவித்து அறிக்கையொன்றை அனுப்பியிருந்தோம்.

சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு இலங்கை அரசுக்குத் தெரிவிப்பு

ஆட்கள் காணாமற் போகின்ற சிக்கலுக்கு பயங்கரவாதத் தடுப்பு விதிகளே காரணம். சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு இலங்கை அரசுக்குத் தெரிவிப்பு [Friday January 26 2007 ] [uthayan.com] இலங்கையில் ஆட்கள் பலவந்தமாகக் காணாமல் போகச் சொய்யப்படுகின்ற சிக்க லுக்கு பயங்கரவாதத் தடுப்பு ஒழுங்கு விதிகள் என்ற பெயரில் இலங்கை அரசு கொண்டு வந்திருக்கின்ற சட்ட ஏற்பாடுகளே பிரதான காரணம். இவ்வாறு ஜெனிவாவை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச ஜூரர்களின் ஆணைக்குழு (International Commission Of Jurists) தெரிவித்திருக்கின்றது. ஆகவே, இந்த சட்ட விதிகளை இலங்கை அரசு மீளாய்வு செய்ய வேண்டிய அவ சரமும், அவசியமும் எழுந்திருப்பதாகவும் அந்த அமைப்புத் தெரிவித்திருக்கின்றது. வலோற்காரமாக ஆட்கள் காணாமற்போகச் செய் யும் கொடூரத்திலிருந்து அனைவரையும் பாதுகாப்ப தற்கு உறுதியளிக்கும் 2006 டிசம்பர் 20ஆம் திகதி ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டயத்தில் (சர்வ தேச சாசனத்தில்) ஒப்பமிட்டு, அந்த சாசனப் படி முழு அளவில் செயற்படுவதற்கும், அந்தப் பட்டயத்தை முற்றாக நடைமுறைப்படுத்துவதற்கும் இணங்குமாறும் இவ்வாறு ஆட்கள் பலவந்தமாகக் காணாமற் போகச் செய்யும் சிக்கலுக்கு அதன் மூலம் முடிவு கண்டு நிலைமையைச் சீரடைய வைக்கு மாறும் சர்வதேச ஜூரர்களின் ஆணைக்குழு நேற்றுமுன்தினம் இலங்கைக்கு விடுத்த பகிரங்க வேண்டுகோளில் கோரியிருக்கின்றது. இலங்கையில் ஆட்கள் பலவந்த மாக காணாமற்போகச் செய்யும் பிரச்சினைக்கு அவசரக்காலச் சட்டவிதிகளும், பயங்கர வாதத் தடுப்புச் சட்டமுமே பிரதான காரணங்கள் என்பதை ஐ.நா. செயலணிக்குழு 1999 இலேயே தெளிவாக வெளிப்படுத்தி யிருப்பதை சுட்டிக்காட்டும் சர்வதேசஜூ ரர்கள்; ஆகவே, தற்போதைய பயங்கரவாதத் தடுப்பு ஒழுங்கு விதிகளை மறுசீரமைக் கும்படியும் இலங்கை அரசைக் கேட்டிருக் கின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் சில கால மாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந் ததை கவனத்தில் கொண்டுள்ள அந்த அமைப்பு, அதேசமயம் அந்தச் சட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள் 2006 டிசம் பரில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒழுங்கு விதிகளின் மூலம் மீளக்கொண்டு வரப் பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. பாதுகாப்புத் தொடர்பான இந்தச் சட்டவிதிகள் குறித்து இலங்கை அரசும், நாடாளுமன்றமும் உடனடியாக மீளாய்வு செய்யவேண்டியது அவசியமானது என் றும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. காணாமற்போதல் தொடர்பான சர்வ தேசப் பட்டயத்தை இலங்கை ஏற்று ஒப்ப மிட்டு நடைமுறைப்படுத்துவதன் அவசி யத்தை வலியுறுத்தியுள்ள அந்த அமைப்பு, இலங்கையில் காணமால்போதல் பிரச் சினை தொடர்பான சரித்திரத்தை நோக்கும் போது, இத்தகைய சர்வதேச பட்டயத் தில் இலங்கை ஒப்பமிடுவது சரித்திர முக் கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக இருக் கும். அப்படிச் செய்வதன் மூலம் இத்தகைய கொடூரக் குற்றங்களை அரசு சகித்துக்கொள் ளாது என்ற அரசியல் செய்தியை அரசு வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இலங்கையின் சிக்கல்கள் பற்றிய சரித் திரத்தை மேற்கோள்காட்டிய அந்த அமைப்பு, 1980களில் ஐ.நா. செயலணிக்குழு ஒன்றுக்கு 13 ஆயிரம் பேர் காணாமற்போனதைப் பற் றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என் பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இலங்கையில் தலைநகர் கொழும்பு உட்பட பல்வேறு இடங்களில் ஆட்கள் காணாமற் போகின்றமை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைத்து வருவதையும் அந்த அமைப்பு தெரிவித் துள்ளது.

Thursday, January 25, 2007

தொப்பிகல வரையிலான பகுதிகளை மீட்கும்வரை இராணுவ ...

தொப்பிகல வரையிலான பகுதிகளை மீட்கும்வரை இராணுவ நடவடிக்கை கிழக்குக் கட்டளைத் தளபதி தெரிவிப்பு [Thursday January 25 2007 ] [uthayan.com] கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல வரையிலான பகுதிகளைக் கைப்பற்றும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் என்று கிழக்கு மாகாண இராணுவ கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் 20 சதவீதமானவற்றைப் படை யினர் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலை மீளத்திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படை யிலேயே மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். வாகரைப் பகுதியில் புலிகளால் கைவிடப்பட்ட முகாம் ஒன்றிலிருந்து பெரு மளவு ஆயுதங்களை நாம் மீட்டுள்ளோம். அதில் 2 பெரிய ஆட்லறிப் பீரங்கிகளும் அடங்கும். கைவிடப்பட்ட இம்முகாமில் பெரும் எண்ணிக்கையான வாகனங்களைப் புலிகள் தீயிட்டுச் சென்றுள்ளனர். இவை அனைத்தும் எரிந்த நிலையிலேயே காணப் பட்டன என்றார்.

அரசியல் அமைப்பிற்கு முரணான ஒப்பந்தங்கள் ...

அரசியல் அமைப்பிற்கு முரணான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் - ஹெகலிய ரம்புக் வெல இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமுல்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் விரைவில் கிழித்தெறியப்படும் என சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெகலிய ரம்புக் வெல தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முரணான வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்

Wednesday, January 24, 2007

தேசிய அரசாங்கம் அமைக்க ஜனாதிபதியுடன் பேசுவதற்காக ...

தேசிய அரசாங்கம் அமைக்க ஜனாதிபதியுடன் பேசுவதற்காக குழுவை நியமித்தார் ரணில் - ஆளும் தரப்புக்கு தாவுவோரை தடுத்து நிறுத்த வியூகம் [Wednesday January 24 2007 ] கரு ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்திக் குழு அரசுடன் இணைவதை தடுப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணாத நிலையில், அரசுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். கட்சித் தலைவருக்கிருக்கும் அதிகாரத்தின்கீழ் தேசிய அரசு அமைக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தலைமையில் நால்வர் கொண்ட குழுவை ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இக்குழுவில் கட்சித் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, சரத் சந்திரராஜ கருணா ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர். கரு ஜயசூரிய தலைமையிலான அதிருப்திக் குழுவினர் அரசுடன் இணைவதைத் தடுப்பதற்கு கட்சியின் உள்ளக மட்டத்திலும் தனித்தனிப் பேச்சுகள் மூலமும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில், கடந்த வாரத்தில் ஜனாதிபதியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எம்.பி.க்களை அரசு பக்கம் எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தமது ஆட்சேபனையை வெளிக்காட்டியதோடு அப்படி நடக்குமானால், சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை அர்த்தமற்றுப் போய்விடுமெனவும் தெரிவித்திருந்தார். ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ தாம் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எவரையும் வலுக்கட்டாயமாக ஈர்த்தெடுக்க முயற்சிக்கவில்லையெனவும், தாமாக வந்து சேரப் போகிறவர்களை உதைத்துத் தள்ள முடியாதெனவும் பதிலளித்துள்ளார். அதேசமயம், இன்னமும் அமைச்சரவை மாற்றத்துக்கான இறுதி முடிவு எடுக்கப்படாமையால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசு பக்கம் தாவ முயற்சிப்பவர்களை தடுத்து நிறுத்திக்கொள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதனை ரணில் விக்கிரமசிங்க, தனது அரசியல் சாணக்கியத்தைக் கொண்டு சாதித்துக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்தநிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கட்சித் தலைமையகமான ஷ்ரீகொத்தாவில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்த பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இத்திட்டத்தை கட்சியில் ஒரு சிலர் எதிர்த்தபோதிலும் பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். இதனடிப்படையிலேயே காமினி ஜயவிக்கிரம பெரேரா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு கட்சித் தவிசாளர் ருக்மன் சேனநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஷ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது.

நிதி வழங்கும் உலக நாடுகளை ஏமாற்றுகிறது சிறிலங்கா: ...

நிதி வழங்கும் உலக நாடுகளை ஏமாற்றுகிறது சிறிலங்கா: இளந்திரையன் குற்றச்சாட்டு [புதன்கிழமை, 24 சனவரி 2007] பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப் புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்முரசிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஒரு பக்கம் கிழக்கில் போரை நடத்திக்கொண்டே மறுபக்கம் அமைதி பற்றி அரசாங்கம் பேசுகிறது. முன்பு ஜெனீவாவில் அமைதிப் பேச்சு நடந்தபோது, போர் நிறுத்த உடன்பாடு பற்றிப் பேசுவதற்கு நிதியுதவி வழங்கும் நாடுகளும் கண்காணிப்புக் குழுவினரும் வலியுறுத்திய வேளையில், சிறிலங்கா அரசாங்கமோ, நாங்கள் அது பற்றிப் பேசவரவில்லை என்று நிராகரித்து விட்டது. இப்படி இருக்கையில் இப்போது அமைதிப் பேச்சு என்று சொல்லும் அரசாங்கத்தை எப்படி நம்ப முடியும் என்றும் தமிழ்முரசிடம் கேள்வி எழுப்பினார் இளந்திரையன். அமைதி உடன்பாட்டைக் கையில் வைத்துக்கொண்டே, தாக்குதல்களை தொடர்ந்து நடத்துகிறது. அதேநேரத்தில் நிதியுதவி வழங்கும் உலக நாடுகளை ஏமாற்ற சிறிலங்கா அரசாங்கம் உதட்டளவில் இந்தக் கருத்துகளைக் சொல்லி வருகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதற்கும் மேலாக பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது எனக்கூறினார் இளந்திரையன். அண்மைய காலத்தில் இராணுவத் தாக்குதல்களை எதிர்த்து எதிர்த்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தாததாலும் எதிர்ப்புக்காட்டமல் அவர்கள் பின்வாங்கி வருவதாலும் முகாம்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் அவதானிகள் கூறுவது பற்றி 'தமிழ்முரசு' கேட்டபோது, சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் கிழக்கே மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றார் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன். அத்துடன் கிழக்கின் 95% நிலப்பகுதியை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக அரசாங்கம் கூறுவதில் உண்மையில்லை. அங்கு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்துதான் நாங்கள் விலகியிருக்கிறோம். விடுதலைப் புலிகளின் கட்டளைப் பணியகமும் போராளிகளும் இன்னமும் கிழக்கில் இருக்கிறார்கள். கிழக்கில் ஏராளமான நிலப்பகுதியும் மக்கள் வாழிடங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு வாவியின் மேற்குப்பகுதியில் வாகரையைவிட பல மடங்கு பரந்த நிலப்பகுதியையும் பல மடங்கு மக்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ளனர். ஏறக்குறைய 85% நிலம் விடுதலைப் புலிகள் வசம் உள்ளது. இதில் 95% எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றார் அவர். இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் அரச படையினர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர், இத்தகைய தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்துவதில்லை என்றார். எங்கள் நிலைப்பாட்டை அனைத்துலக அரங்கில் வந்து சொல்ல எப்போதும் தயாராகத்தான் இருக்கிறோம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுக்கள் எங்கள்மீது இருக்கும் தடையை நீக்கும் பட்சத்தில் நாங்கள்அவர்களைத் தாராளமாகச் சந்தித்துப் பேசலாம் எனவும் குறிப்பிட்டார்.

Tuesday, January 23, 2007

2 ஆம் இணைப்பு) யாழ். குண்டு வெடிப்புக்கள்: 3 பொதுமக்கள்

(2 ஆம் இணைப்பு) யாழ். குண்டு வெடிப்புக்கள்: 3 பொதுமக்கள் உட்பட 4 பேர் பலி- 20 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 23 சனவரி 2007] யாழ். சாவகச்சேரி மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சாவகச்சேரி புதிய சந்தைக்கு அருகே உந்துருளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டும், மானிப்பாய் காரைநகர் வீதியில் காலை 7.30 மணியளவில் மற்றொரு குண்டும் வெடித்தன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பதட்டநிலை தோன்றியுள்ளது. சாவகச்சேரி சம்பவத்தில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் சாவகச்சேரி, கற்குழி தபால் கந்தோர் முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த தவராஜா பூபதி (வயது 57) என்பவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 7 பேர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையாக காயமடைந்தவர்கள் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சாவகச்சேரி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. மானிப்பாய் காரைநகர் வீதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அந்தக் குண்டு வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா தருமராசா (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பு இடம்பெற்ற சமயத்தில் இராணுவ வாகனமோ அல்லது இராணுவ சுற்றுக்காவலோ இருந்திருக்கவில்லை. காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் சாவகச்சேரி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர் ஆவார். உயிரிழந்தவர் சாவகச்சேரி டச்சு வீதியைச்சேர்ந்த வையாபுரி ஜானகி (வயது 52) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மானிப்பாய் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவத் துணைக்குழுவினருமே காரணம் என பொதுமக்கள் கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ள வேளையில், இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வடமராச்சி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் !!!

வடமராச்சி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை முதல் 15000 க்கு மேற்பட்ட வடமராச்சிப்பகுதி மாணவர்கள் அண்மையில் கடத்தப்பட்ட ஹட்லிக்கல்லூரி, வேலாயுத மகாவித்தியாலய மாணவர்களை விடுவிக்கக் கோரி காலவரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டள்ளார்கள். ஹட்லிக்கல்லூரி மாணவன் பிரகலாதன், மற்றும் nஐகன் வேலாயுத மகாவித்தியாலய மாணவன் ஆகியோர் அண்மையில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டமை தெரிந்ததே. கடந்த ஒருவாரமாக மாணவர்கள் போராட்டங்கள் நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடமாராச்சி மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இம்மாணவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதவிடத்து அனைத்து அரசஅலுவலகங்களின் நடவடிக்கைகளும் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் மாணவர்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கும், கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கும் பாடசாலைகளை திந்திருக்குமாறு விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார்கள். இதேவேளை பெருமளவிலான இராணுவத்தினர் இப்பாடசாலைகளின் முன் நிலைகொண்டுள்ளதாக மேலும் அறியமுடிகிறது. பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும், மாணவர்கள் எவரும் இன்றி பாடசாலைகளில் காலை இருந்து மதியம் 2 மணிவரை வேலையில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அடுத்த கட்டமாக மட்டக்களப்பின் மேற்கு பக்கமாக தாக்குதல்...

அடுத்த கட்டமாக மட்டக்களப்பின் மேற்கு பக்கமாக தாக்குதல் நடவடிக்கை வாகரையில் முன்னெடுக்கப்பட்ட படையெடுப்பு,அடுத்த கட்டமாக தமிழீழ விடுடுதலைப்புலிகளின் ஆளுகைக்கு கீழுள்ள, மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு பீரதேசங்களை நோக்கி தொடுக்கப்படும் என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று ரொய்டர் செய்திச் சேவைக்கு செவ்வியளித்திருக்கும், சிறீலங்கா பாதுகாப்புத்துறை பேச்சாளர் அமைச்சர் கெஹெலலிய ரம்புக்வெல, வாகரைக்கு அடுத்ததாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழுள்ள தொப்பிக்கல் காட்டுப்புறத்தை நோக்ககி, வலிந்த படையெடுப்பை படையினர் தொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இளைஞர் கழுத்துவெட்டி படுகொலை

இளைஞர் கழுத்துவெட்டி படுகொலை வலிகாமம் ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியில் சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களால் சுன்னாகத்தை சேர்ந்த 30 அகவையுடைய டானியல் சாந்தரரூபன் என்ற இளைஞர் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடல் அங்கவீனமுற்ற நிலையில் இருந்த குறிப்பிட்ட இளைஞர், கடந்த செவ்வாய்கிழமை பகல்வேளையில் வீதியில் வைத்து சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டிருந்தார்.

Monday, January 22, 2007

வவுணதீவுப் படைத்தளத்தின் காவலரண்கள் மீது நேற்றிரவு..

வவுணதீவில் நேற்றிரவு அதிரடித்தாக்குதல் - படையினரின் சடலங்களும் மீட்பு [Monday January 22 .2007 ] மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் படைத்தளத்தின் காவலரண்கள் மீது நேற்றிரவு அதிரடித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது கொல்லப்பட்ட படையினரின் சடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு இரவு 11.10 மணியளவில் தமது கண்காணிப்பு நிலை ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.இத்தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகளால் வவுணதீவு படைத்தளம் மீது ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன்காரணமாக நான்கு படையினர் காயமடைந்த நிலையில் வவுணதீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்ற இராணுவத்தினர் இருவரின் உடலங்களும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின்போது படையினருக்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் அறியப்படவில்லை. இது குறித்த விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அரச அதிருப்தியாளர்கள் சந்திரிகாவுடனும் இணைவர்?

ஐ.தே.க. அதிருப்தியாளர்கள் ஜனாதிபதியுடனும் அரச அதிருப்தியாளர்கள் சந்திரிகாவுடனும் இணைவர்? ஐ.தே.க. அதிருப்தியாளர்கள் குழு இவ்வாரம் அரசாங்கத்துடன் இணையவுள்ளது. அதேவேளை,அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் அணிதிரளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்பொருட்டு சுமார் 20 பேரடங்கிய சு.க. உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியின் தலைமையின்கீழ் அணி சேரலாம் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.ஐ.தே.க. அதிருப்தியாளர்கள் குழு அரசாங்கத்துடன் இணைவதன் காரணமாக சு.க. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பதவிகள் பறிபோக உள்ள நிலையினாலேயே அவர்கள் அரசாங்கத்துடன் அதிருப்தி கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் தலைமையின்கீழ் இணையவுள்ளதாக தெரிய வருகின்றது. virakesari.lk

பருத்தித்துறையை நோக்கி படையினர் எறிகணை வீச்சு

பருத்தித்துறையை நோக்கி படையினர் எறிகணை வீச்சு: தாய் பலி- 2 பிள்ளைகள் படுகாயம் சிறிலங்காப் படையினரின் பலாலி படைத்தளத்தில் இருந்து வடமராட்சி வடக்குப் பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக நடத்திய எறிகணை வீச்சில் 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது இரு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடுமையான மோதலை தொடர்ந்து சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்களை நடத்தினர். எறிகணையின் சிதறல்கள் அல்வாய் பாடசாலை வளாகப்பகுதியை தாக்கியதால் 34 வயதுடைய கிறேசியன் பாணுமதி என்ற இரு பிள்ளைகளின் தாயார் கொல்லபட்டுள்ளதுடன் அவரது இரு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவரின் சடலம் மந்திகை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Sunday, January 21, 2007

பல நோக்கங்களைக் கொண்ட கிழக்கு படை நடவடிக்கை

பல நோக்கங்களைக் கொண்ட கிழக்கு படை நடவடிக்கை (அரசியல் கட்டுரை) எழுதியவர் விதுரன் Sunday, 21 January 2007 நாட்டில் முழு அளவிலான போர் தொடங்கி விட்டது. சமாதானமென்பது இனி சாத்தியமற்றதென்ற நிலையில் போர் தீவிரமடையப் போகின்றது. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக அப்புறப்படுத்தப்போவதாக அரசும் படைத்தரப்பும் சூளுரைத்து வருகையில் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. வடக்கு- கிழக்கு மாகாணத்தை வெவ்வேறாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு தீட்டிய அன்றே, கிழக்கில் தமிழர் பலத்தை வெகுவாகக் குறைத்து விட வேண்டுமென்றும் திட்டமிடப்பட்டது. கிழக்கை தனியாகப் பிரித்து அங்கு புதிய மாகாண சபையொன்று அமைக்கப்படும் போது அந்த மாகாண நிர்வாகத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாதென்பதில் அரசு மிகவும் கவனமாயிருந்தது. கிழக்கில் தமிழ் பேசுவோரின் பலத்தை இழக்கச் செய்வதன் மூலமே அங்கு சிங்கள ஆதிக்கத்தை வலுப்படுத்த முடியுமென்பதும் இனவாதிகளின் திட்டமாகும். இதற்காகவே வடக்கு- கிழக்கை தனித்தனியாகப் பிரித்தவுடன் கிழக்கில் தமிழரின் பலத்தை குறைக்கும் நடவடிக்கையில் அரசு மிகத் தீவிரம் காட்டுகிறது. கிழக்கில் புலிகளின் ஆதிக்கத்தை இல்லாது செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இஷ்டப்படி செயற்பட முடியுமென்பதும் அரசின் திட்டமாகும். அத்துடன், புலிகளை இராணுவ ரீதியில் கிழக்கில் பலமிழக்கச் செய்த பின் அங்கு அரசியல் காய்நகர்த்தல்களும் ஆரம்பமாகியுள்ளன. திருகோணமலையிலுள்ள பாரிய எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு 99 வருடக் குத்தகைக்கு வழங்கிய அரசு தற்போது திருமலை சம்பூரில் அனல் மின் நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் தொடங்கவுள்ளது. புத்தளம் நுரைச்சோலை பகுதியில் இவ்வாறானதொரு அனல் மின் நிலையத்தை அமைக்க கடந்த 15 வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டும் இன்று வரை கடும் எதிர்ப்பால் அந்தத் திட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் மூதூர் கிழக்கை கைப்பற்றிய அரசு, சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கின்றது. மூதூர் கிழக்கை படையினர் கைப்பற்றும் வரை இவ்வாறானதொரு திட்டம் பற்றியே சிந்திக்கப்படாத நிலையில் அந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்ட பின்னர் அவசர அவசரமாக அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை சுவீகரித்துச் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துரிதமடைந்துள்ளன. இதற்கு இந்தியாவும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் இலங்கையுடன் இந்த அனல் மின் நிலையம் தொடர்பாக ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்துவிரட்டியடிக்கப்பட்ட பின்னர் அவர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்காது அந்த இடங்களை ஆக்கிரமித்து எதுவித எதிர்ப்புமின்றி இவ்வாறான திட்டங்களை அமுல்படுத்தி அப்பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களையும் மேற்கொள்வதே அரசின் திட்டமாகும். கிழக்கை தனியாகப் பிரிப்பதன் மூலம் வட பகுதியின் செல்வாக்கிலிருந்து அதனை விடுவிக்கும் அதேநேரம், மத்திய அரசின் செல்வாக்கை அங்கு நேரடியாகச் செலுத்தி தமிழ் பேசும் மக்களின் பலத்தை குறைப்பதுடன் இந்தியா போன்ற நாடுகளையும், இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் சம்பந்தப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்தப் பகுதிகளில் புலிகளின் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விடலாமெனவும் திட்டமிடப்பட்டுள்ளது. மூதூர் கிழக்கை கைப்பற்றியதன் மூலம் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க முற்படும் அரசு, தற்போது திருமலையில் பாரிய நிலப்பரப்பில் முதலீட்டு ஊக்குவிப்பு திட்டமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. திருமலைத் துறைமுகத்தை மையமாக வைத்து பெருமளவு நிலத்தை சுவீகரித்து இந்த முதலீட்டு திட்டத்தை மேற்கொள்வதன் மூலம் திருமலை நகரில் தமிழ் மக்கள் வாழும் பெருமளவு நிலப்பரப்பை சுவீகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமலை நகரில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து விடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலீட்டுத் திட்டமென்ற பெயரில் திருமலை நகரில், தெற்கிலிருந்து சிங்களவரைக் கொண்டு வந்து குடியேற்றும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகின்றன. தற்போது கிழக்கில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளும், இவ்வாறு பல இரகசியத் திட்டங்களை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படை நடவடிக்கை மூலம் திருமலை நகருக்கு சமீபமாக மூதூர் கிழக்கிலிருந்த மக்கள் இன்று விரட்டியடிக்கப்பட்டு மட்டக்களப்பு புறநகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். ஒரு சில மாதங்களில் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு தற்போது நூறு கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் கொண்டு வரப்பட்டுள்ளனர். மூதூரில் கடும் சண்டை நடைபெற்ற போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். அங்கு மோதல்கள் முடிவடைந்த மறுநாளே அங்கு மக்கள் திரும்பி வந்து விட்டனர். ஆனால், மூதூர் கிழக்கிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, கதிரவெளி, வாகரைப் பகுதிகளில் வந்து தங்கியிருந்தனர். ஆனால், இன்று அங்கிருந்தும் விரட்டப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு தள்ளிவிடப்பட்டுள்ளனர். கிழக்கில் தற்போது இடம்பெறும் பாரிய நடவடிக்கைகள், அங்கிருந்து புலிகளை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டாலும், அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வடக்கு- கிழக்கை பிரிப்பதுடன் மட்டுமல்லாது கிழக்கிலிருந்து திருகோணமலையை தனியாகப் பிரித்து எதிர்காலத்தில் வேறு ஒரு மாகாணத்துடன் கூட சேர்த்துவிடும் நோக்கங்களிருப்பதாகவும் கூறப்படுகிறது. வடக்கிலிருந்து கிழக்கை பிரித்து விட வேண்டுமென்பதில் அரசுடன் சேர்ந்தியங்கும் முஸ்லிம் தலைவர்களும் குறியாகவிருந்தனர். வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தபோது அங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 வீதமாகும். கிழக்கு இன்று தனியாகப் பிரிக்கப்பட்டு விட்டதால் கிழக்கில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்று 33 வீதமாகும். குடியேற்றத் திட்டங்கள் மூலம் சிங்களவரின் எண்ணிக்கை 23 வீதமாகும். இதனால், வடக்கும் கிழக்கும் இணைந்திருந்ததை விட கிழக்கு தனியான போது தங்களுக்கு எல்லாவகையிலும் வாய்ப்புகள் பெருமளவில் கிடைக்குமென முஸ்லிம்கள் கருதுவதால் கிழக்கிலிருந்து திருகோணமலையை தனியாகப் பிரித்தாலும் அது பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை. அதேநேரம், புலிகளை கிழக்கில் மிகவும் பலவீனப்படுத்தி விடுவதன் மூலம் இவற்றுக்கெதிராக தமிழர்கள் குரலெழுப்புவதை தடுத்து விட முடியுமென்றும் அரசு கருதுகிறது. கிழக்கிலிருந்து புலிகளை வெளியேற்றுவதன் மூலமே வடக்கிலிருந்து கிழக்கை பிரித்ததற்கான பலன்களை தாங்கள் பெற முடியுமென அரசு கருதுகிறது. கிழக்கில் புலிகள் மிகவும் பலமாயிருக்கும் போது வடக்கு- கிழக்கை பிரித்து கிழக்கிற்கு தனியான மாகாண சபையை அமைத்து அதனை இயங்கச் செய்ய முடியாதென்பது அரசுக்கு நன்கு தெரியும். இதனால் தான் அங்கு தனக்குச் சார்பாக ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவர்களைத் தனது பிடிக்குள் அரசு வைத்திருக்கின்றது. கிழக்கிலிருந்து புலிகளை விரட்டியடித்த பின்னர் வடக்கிலிருந்தும் புலிகள் விரட்டியடிக்கப்படுவரென அரசு கூறுவதானது, கிழக்கில் தாங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளை மூடி மறைப்பதுடன் பொதுவாகவே புலிகளுக்கு எதிராக இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க மேற்கொண்டுள்ள திட்டங்களென அனைவரையும் நம்பவைக்கும் முயற்சியாகும். கிழக்கில் திருமலை மாவட்டத்தை படையினர் தங்கள் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த மாவட்டத்தை கிழக்கிலிருந்து பிரித்து தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்தவாறு அங்கு தங்கள் இஷ்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அரசின் திட்டமாகும். இதற்காகவே முதலில் திருகோணமலை மாவட்டத்தை புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக மீட்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியது. இதனால், தான் மூதூர் கிழக்கிலிருந்து கடந்த பல மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று வரை தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படாது வாகரையிலிருந்தும் விரட்டப்பட்டு மட்டக்களப்பிற்குள் தள்ளப்பட்டனர். இதனால், வாகரைக்கு வடக்கே தற்போது புலிகள் நிலை கொண்டுள்ள கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியை படையினர் கைப்பற்றினாலும் திருகோணமலையிலிருந்து, குறிப்பாக மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்படுவார்களா என்பது மிகப் பெரும் கேள்வியாகும். கிழக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கும் போது புலிகளின் அச்சுறுத்தல்கள் இருக்கக் கூடாதென்பதற்காக தற்போது அம்பாறையிலும் விஷேட அதிரடிப் படையினர் புலிகளுக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அம்பாறையில் புலிகள் நிலை கொண்டிருந்த கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கடந்தஇரு வாரங்களாக அதிரடிப் படையினர் படை நகர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அரசு பெரும் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறது. திருகோணமலையிலிருந்தும் அம்பாறையிலிருந்தும் புலிகளை வெளியேற்றி விட வேண்டுமென்பதில் அரசு தீவிர அக்கறை காட்டுகிறது. இதனால், தினமும் இப் பகுதிகளில் படையினர் பல்வேறு பகுதிளினுள்ளும் முன்னேறிச் சென்று நிலப் பிரதேசங்களை பிடித்து வருகின்றனர். இதன் மூலம் படையினர், தங்கள் ஆட்பலம் மற்றும் ஆயுத பலத்திற்கப்பால் அகலக் கால் வைத்து வருகின்றனர். குறிப்பிட்டளவு படையினர் முன்னர் ஒரு சில முகாம்களிலிருந்தவாறு பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்வதும் அதன் மூலம் சில பிரதேசங்களுக்குச் சென்று விட்டு மீண்டும் பழைய நிலைகளுக்குத் திரும்புவதுமாயிருந்தனர். ஆனால், தற்போதுஅரசியல் தேவைகளுக்காகவும் நில ஆக்கிரமிப்புக்காகவும் இவர்கள் பாரிய படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் நூறு கிலோ மீற்றர் தூரத்திற்கு பரந்து விரிந்து சென்றுள்ளதுடன் ஒவ்வொரு பகுதியிலும் முகாம்களை அமைத்து நிலைகொள்ள வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, பரந்து விரிந்து அகலக் கால் வைத்துள்ள படையினர் ஒவ்வொரு இடத்திலும் குறைந்த எண்ணிக்கையானவர்களைக் கொண்டே முகாம்களை அமைத்து நிலை கொண்டிருப்பதுடன் அடர்ந்த காடுகள், மக்கள் எவருமேயற்ற பிரதேசங்களில் விநியோகப் பாதைகளையும் பேண வேண்டியிருக்கும். இதனால், இனிமேல் இவர்கள் இலகுவாகத் தாக்கப்படக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. வாகரையை படையினர் கைப்பற்றியுள்ளனர் , அதற்கு வடக்கே கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியில் தற்போது புலிகள் நிலைகொண்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் அப்பகுதியில் நிலை கொள்ளும் வாய்ப்பு குறைவு. இதனால், அடுத்து வரும் நாட்களில் கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியையும் கைப்பற்றி திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான ஏ15 தரை வழிப் பாதையை இராணுவம் இணைத்துவிடக் கூடும். எனினும், மூதூர் கிழக்கில் சம்பூர் முதல் பனிச்சங்கேணி வரையான சுமார் 70 கிலோ மீற்றர் தூரப் பிரதேசத்தை கைப்பற்றுவதன் மூலம் இப்பகுதிகளில் மேலதிகமாக ஆயிரக் கணக்கான படையினரை நிறுத்தி 24 மணி நேரம் இப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இராணுவத்தில் மிகப் பெரும் பகுதி கிழக்கில் நிறுத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் ஆட்பலமும் அதிகளவில் தேவைப்படுகிறது. இந்தப் போர் நிறுத்த காலத்தில் அண்மைக் காலமாக படையினரே தொடர்ந்தும் பாரிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுவரை புலிகள் தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டுள்ளனர். இந்தப் படை நடவடிக்கைகள் போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதால் இனி புலிகளும் பாரிய பதில் தாக்குதல்களில் இறங்கக் கூடும். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் மிகவும் வலுவாக உள்ளனர். பல முகாம்களை அமைத்து அவர்கள் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறையில் இது போல் அவர்கள் முகாம்களை வைத்திருக்கவில்லை. அங்கு அவர்கள் நகரும் முகாம்களையே வைத்திருக்கின்றனர். அடர்ந்த காடுகளினுள் வலுவான முகாம்களுள்ளன. தேவைக்கேற்ப அவர்களது நகரும் முகாம்கள் இடம்மாறும். கஞ்சிகுடிச்சாறு பகுதியில் முன்னரும் அடிக்கடி அதிரடிப் படையினர் புலிகளின் பகுதிகளுக்குள் செல்லும் போது அங்கிருந்து நகரும் புலிகள், அரதிரடிப்படையினர் திரும்பிச் சென்றதும் மீண்டும் அங்கு வருவர். ஆனால் இம் முறை அதிரடிப் படையினர் பெருமளவில் அங்கு சென்று தாங்கள் சென்ற பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். விநியோகங்களை மேற்கொள்வதற்காக சிறு சிறு முகாம்களையும் அமைத்துள்ளனர். புலிகள் இருந்த சிறிய சிறிய கொட்டில்களை பிடித்த படையினர் புலிகளின் பாரிய தளங்களை தாங்கள் கைப்பற்றியிருப்பதாக ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போரில் அரசும் படைத்தரப்பும் பிரசாரப் போரை முடுக்கிவிட்டு சிங்கள மக்கள் மத்தியில் இந்த அரசு குறித்து ஒரு மாயையை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இவ்வாறு கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதிக்குள் சென்ற அதிரடிப்படையினருக்கான விநியோகங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட, பக்கிமுட்டி முகாம் மீது புலிகள் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட பத்து படையினர் கொல்லப்பட்டதுடன் பத்து பேர் படுகாயமடைந்தனர். இனிமேல் இதுதான் நடக்கப்போகிறது. அகலக்கால் வைத்துள்ள படையினருக்கான விநியோக முகாம்களும் வாகனத் தொடரணிகளும் தாக்குதலுக்குள்ளாகப் போகின்றன. புலிகளின் மிகவும் சக்திவாய்ந்த `கிளேமோர்கள்' அண்மைக்காலமாக படையினருக்கு பெரும் சிம்மசொப்பனமாயிருப்பதால் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் அதிகரிக்கப் போகின்றன. புதிய ஜனாதிபதி ,புதிய அரசு, புதிய படைத்தளபதி ,புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலர் ,புதிய கூட்டுப் படைக் கட்டளைத்தளபதி என எல்லோருமே புதியவர்களென்பதால் இவர்களுக்கு கடந்த கால போரியல் அனுபவங்கள் மிகக் குறைவென்பது தற்போதைய படைநடவடிக்கைகள் மூலம் தெரிகிறது. இதனால்தான் இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் நன்கு அவதானித்து வரும் புலிகள் தற்போது தற்காப்புச் சமருடன் மட்டும் நிற்கின்றனர். இன்னும் தங்கள் தாக்குதல் சமரை ஆரம்பிக்கவில்லை. வடக்கு - கிழக்கில் ஒரு புறம் மக்கள் மத்தியில் பெரும் உளவியல் போரும் நடத்தப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவை ,மிகப் பெரும் அச்சுறுத்தல்கள் மூலம் தடுக்கும் உளவியல் போரே அதுவாகும். கொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதலென மிகவும் அச்சமூட்டும் நடவடிக்கைகள் மூலம் மக்கள் மிகப்பெரும் பயப்பீதிக்குள் தள்ளப்பட்டுள்ள அதேநேரம் மறுபுறம் பாரிய படைநடவடிக்கைகள் மூலம் உயிரழிவுகள், சொத்தழிவுகள், மிகப்பெரும் இடப்பெயர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. கிழக்கில் இவ்வாறான பாரிய படை நடவடிக்கைகள் இடம் பெறும் போது தெற்கில் குறிப்பாக கொழும்பில் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கலாமென்ற அச்சத்தில் நாடு முழுவதும் தினமும் பாரிய சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் நடைபெறுகின்றன. கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடைபெற்ற தேடுதல்களில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், `தடுப்புக்காவல் உத்தரவு' (டி.ஒ.) போடப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மாதக்கணக்கில் `டி.ஒ.' போடப்பட்டு நூற்றுக்கணக்கானோரை சிறைகளில் அடைப்பதற்கு சில முக்கிய காரணங்களுண்டு. கைது செய்யப்பட்டவர்களில், கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலி உறுப்பினர்களும் இருக்கலாமெனக் கருதும் அரசு, அவர்களை புலிகளென இனங்காண முடியாவிட்டாலும் கைது செய்து நீண்ட நாட்கள் சிறையில் அடைப்பதன் மூலம் அந்த தாக்குதல் திட்டத்தை தடுத்து விடலாமெனக் கருதுகிறது. இவ்வாறு சகல வழிகளிலும் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவை குறித்தெல்லாம் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்கிறது. போர் நிறுத்த உடன் படிக்கை அமுலிலிருக்கையில் இவ்வாறான பாரிய படை நடவடிக்கைகள் ஏனெனக் கேட்கவோ கொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதலைத் தட்டிக் கேட்கவோ திராணியற்று சர்வதேச சமூகம் வாய் மூடி நிற்கிறது. இந்த நிலையில் புலிகளின் ெமளனம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகிறது. புலிகள் குறித்த பிரசாரங்கள் உண்மையோ எனத் தமிழர்கள் பலர் தங்களுக்கிடையே கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். மிகவும் பலவீனமடைந்து விட்டதால் புலிகளால் இனித் தற்காப்புச் சமரைக் கூடநடத்த முடியாதென்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுவதுடன் கிழக்கில் புலிகளை சரணடைந்து விடுமாறு அரசும் படைத்தரப்பும் அறிவித்து வருகின்றன. இது உளவியல் போரின் உச்சக்கட்டமாகும். ஆனாலும் வடக்கில் `ஏ-9' பாதையை திறப்பதற்காக 1996 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு படைநடவடிக்கையை ஆரம்பித்து அதற்கேற்பட்ட கதியே `ஏ-15' பாதையை (திருமலை - மட்டக்களப்பு) திறக்கும் முயற்சியில் ஈடுபடும் படையினருக்கும் ஏற்படலாமென்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. வடக்கில் அகலக் கால் வைத்த படையினரும் இன்று கிழக்கில் அகலக்கால் வைத்துவரும் படையினரும் எவ்வாறான விளைவுகளை சந்தித்தனர், சந்திக்கப்போகின்றனரென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நன்றி - தினக்குரல்