Saturday, September 01, 2007

மன்னாரில் மூன்று இளைஞர்கள் கடத்தல்

[சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007] மன்னார் மூன்று இளைஞர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மன்னார் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சந்தைப் பகுதியில் இரண்டு முஸ்லிம்கள் மற்றும் தமிழர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் செல்லப்பட்டோரில் இருவர் முச்சக்கர வாகன சாரதிகள். மற்றொருவர் வர்த்தக நிறுவனம் ஒன்றின் ஊழியர். கடத்தப்பட்டோரின் உறவினர்கள் மன்னார் சிறிலங்கா காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.