Thursday, July 19, 2007

யுத்தமா? பேச்சா? எதற்கும் நாங்கள் தயார்: மகிந்த அறிவிப்பு.!!

[வியாழக்கிழமை, 19 யூலை 2007, 12:51 ஈழம்] [செ.விசுவநாதன்]


யுத்தம் அல்லது பேச்சு எதுவானாலும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்க நாளிதழலான டெய்லி நியூசின் இன்றைய (19.07.07) பதிப்புக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

யுத்தம் அல்லது பேச்சுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எது என்பது அவர்களின் கைகளில் உள்ளது. எந்தப் பாதை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளே தெரிவு செய்ய வேண்டும்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது. பேச்சு மேசையை விட்டு விலகியதும் கிடையாது. விடுதலைப் புலிகள்தான் பேச்சுக்களை நடுவில் முறித்துக் கொண்டனர். அதுதான் ஜெனீவாவில் நடந்தது. ஓஸ்லோவில் நடந்தது. விடுதலைப் புலிகளுக்கு அமைதியில் ஆர்வம் இல்லை.

அனைத்துக் கட்சி மாநாட்டு மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டது அல்ல. அனைத்து அரசியல் கட்சிகளினது கூட்டு முயற்சியாகும். தங்களது பொறுப்பை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி என்ற வரையறையை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டது. அத்தகைய துரோகத்தை நாம் செய்ய மாட்டோம்.

தொப்பிக்கல வீழ்ச்சி என்பது கிழக்கில் இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் மேலாதிக்கத்துக்கானது மட்டுமல்ல. விடுதலைப் புலிகளால் ஒடுக்கப்பட்டிருந்த மக்களின் வாழ்க்கையில் அது ஒரு புதிய சகாப்தம்.

அங்கு குடிசார் நிர்வாகத்தை உடனே அமைப்பதுதான் உடனடி முதன்மைப் பணியாகும் என்றார் மகிந்த ராஜபக்ச.

மூலம்: புதினம்

3 comments:

  1. பேச்சுக்குத் தயார் என்றால் எதைப்பற்றிப் பேசுவது.

    யுத்தநிறுத்த உடன்படிக்கை பற்றிப் பேச அரசாங்கத்திற்குத் தகுதியில்லை. அதைப் பற்றிப் பேச அவர்கள் விரும்பவும் மாட்டார்கள்.

    இனப் பிரச்சனைக்கான இறுதித் தீர்வைப் பற்றிப் பேசுவதானால் தீர்வுத்திட்டம் ஒன்று வேண்டும். தீர்வுத்திட்டத்தைத் உருவாக்குவதற்கு பல தடவை காலக்கெடு விதிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்டது. கிழக்கின் வெற்றியுடன் தீர்வுத்திட்டமும் கைவிடப்படும், அல்லது அது தமிழர்களுக்குப் பிச்சை போடுவதாக அமையும்.

    ReplyDelete
  2. இப்ப சொல்லுவார் அடி விழும்போது சமாதானம் சமாதானம் என சிறு குழந்தை போல அழும்போது யோசிப்பார் இன்றைய வெற்றிவிழா கொண்டாட்டம் எவ்வளவு முட்டாள்தனம் என

    ReplyDelete
  3. நல்லா அடிச்சும் எங்களுக்கு புத்தி வரயில்லை. மகிந்த சவால் விட்டால் நாங்கள் தூக்கத்தைக் கலைத்து விடுவோமா?.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.