[புதன்கிழமை, 25 யூலை 2007]
ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் "கறுப்பு ஜூலை" நினைவுகளுடன் "சாவிலும் வாழ்வோம்" கவன ஈர்ப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் 1983 இல் சிங்களப் பேரினவாதம் பலிகொண்ட தமிழ் மக்களை நினைவில் கொண்டு சுவிஸ் தமிழ் நட்புறவுக் கழகத் தலைவர் பேர்னார்ட், சுவிஸ் தமிழ் நட்புறவுக் கழகச் செயலாளர் திருமதி. எவிலன் பேர்னார்ட் ஆகியோர் நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தனர்.
பின்னர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும் 1983 இல் சிங்களக் காடையர்களின் இனவெறிக்குப் பலியான அப்பாவிப் பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் 1983 இல் சிங்களக் காடையர்களாலும், சிங்கள இராணுவத்தாலும் தமிழர்கள் வதைக்கப்பட்டதைச் சித்தரிக்கும் வகையில் ஜெனீவா தமிழ்ச் சிறார்களினால் நாடகங்களாக நடித்துக் காட்டப்பட்டன. சாவிலும் வாழ்ந்து சரித்திரம் படைப்போம் என்பதை எடுத்துக்காட்டும் நடனங்களும் இடம்பெற்றனகடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் மகளிர் அமைப்பினரால் 1983 கறுப்பு ஜூலை நினைவு நாள் நடத்தப்பட்டிருந்தது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.