[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2007]
தமிழீழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி அமெரிக்கத் தலைநகரில் நேற்று திங்கட்கிழமை (23.07.07) பேரெழுச்சியான அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
வாசிங்ரன் டி.சியில் உள்ள அமெரிக்கத் தலைநகர் கட்டட முன்றலில் நேற்று பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற்ற இந்த அமைதிப் பேரணியில் அமெரிக்கா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கில் புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.
"தமக்கு இருக்கும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில்,
தமக்கென ஒரு சுய ஆட்சியை நிறுவி
தம்மைத் தாமே ஆழ்வதைத் தவிர,
சுதந்திரத்தோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கு ஈழத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை" என்று இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.


புளோரிடா, ஓகையோ, கலிபோர்னியா, போஸ்ரன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து பெருந்தொகையான இரண்டாம் தலைமுறைத் தமிழர்களும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.தமிழர்களின் தன்னாட்சியையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தும் மேலாடைகளை அணித்து பேரணியில் பங்கேற்றோர் உரிமை முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில் அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தரணி கரேன் பார்க்கர், நியூயோர்க் சட்டத்தரணி விசுவநாதன் ருத்ரகுமாரன், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனவள ஆலோசனை அளிக்க தமிழீழத்துக்குச் சென்று திரும்பிய மருத்துவர் எலின் சண்டெர் உள்ளிட்டோர் உரையாற்றினர். அவர்களின் சிறப்புரைகளுக்கு இடையே ஈழப் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் அறிக்கைகளும் வாசிக்கப்பட்டன.
நியூ ஜேர்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ருஸ் ஹோல்ட்டின் மூத்த உதவியாளர் கிரிஸ் காஸ்ரன் இப்பேரணியில் பங்கேற்றார்.
"சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களின் தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கானது. அங்கே ஒரு அரசாங்கத்துக்குரிய குடிசார் அரசாங்கமும் இராணுவமும் இயங்கி வருகிறது. தமிழீழம் அவர்களின் சொந்த மண். அங்குள்ள அவர்களின் அரசாங்கம் நிழல் அரசாங்கம் அல்ல. பாரம்பரியமான வரலாற்று ரீதியான தமிழர் தாயகத்தை சிறிலங்காதான் ஆக்கிரமித்துள்ளது. தமிழர் நிலத்தில் எதுவித சட்ட உரிமையுமே சிறிலங்காவினருக்கு இல்லை" என்று கரேன் பார்க்கர் உரையாற்றினார்.
பேரணியின் முடிவில் பிரகடனம் வெளியிடப்பட்டது.



இந்தப் பேரணியில் திருமதி கந்தசாமி என்ற 80 வயது மூத்தாட்டி பங்கேற்றார். நியூஜேர்சியிலிருந்து 200 மைல் தூரம் பேரூந்தில் பயணம் செய்து இந்தப் பேரணியில் கலந்து கொண்டார்.தான் 2003 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் கான்பரா நாடாளுமன்றக் கட்டடம் முன்பான ஆர்ப்பாட்டத்திலும் 2005 ஆம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடம் முன்பான ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றதாகவும் இப்போதும் அமெரிக்க தலைநகர் கட்டட முன்றலில் எமது தாயக உரிமைக்காக குரல் கொடுக்க நிற்கிறேன் என்றும் பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் முதல் முறையாக ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்று தங்களது தாயகத்துகான அங்கீகாரத்தை வலியுறுத்தி உரத்து குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவான பேரணிகளில் இதுவே மிகப்பெரியது.
அண்மையில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஈழத்தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது அந்தந்ந நாட்டு அரசாங்கங்கள் சட்ட நடவடிக்கைகளையும், கைதுகளையும் மேற்கொண்ட சூழ்நிலையில் இவ்வளவு பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டது, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கின்றது என்று இதில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார்.
அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக், தன்னோடு பேசிய எந்தத் தமிழர்களும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்திருந்த பின்னணியில், அமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள் எமது அபிலாசை என்ன என்பதை, அவருக்கும், அமெரிக்க அரசங்கத்திற்கும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கும் இப்போது தெரிவித்திருக்கின்றோம் என்று இந்த பேரணி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
இங்கே வெளியிடப்பட்டு, பேரணியில் பங்கேற்ற அனைவராலும் கையெழுத்திடப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக்குழு உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்ட பிரகடனத்தில் -
தமிழீழத் தமிழர்கள் ஒரு தேசமாக,
ஒரு தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை, அமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள் இங்கே பிரகடனப்படுத்துகின்றோம்.
இலங்கைத் தீவில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் அந்தத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒரு தமிழ் சுயாட்சியை நிறுவுவதற்காகவும், தமிழ்த் தேசிய தன்னாட்சி உரிமைக்காகவும் நிகழும் எமது போராட்டம், அந்த இலட்சியங்களை அடையும் வரை முடிவுறாது என்பதை அமெரிக்கத் தமிழர்கள் இங்கே பிரகடனப்படுத்துகின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்கே வெளியிடப்பட்டு, பேரணியில் பங்கேற்ற அனைவராலும் கையெழுத்திடப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக்குழு உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்ட பிரகடனத்தில் -
தமிழீழத் தமிழர்கள் ஒரு தேசமாக,
ஒரு தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை, அமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள் இங்கே பிரகடனப்படுத்துகின்றோம்.
இலங்கைத் தீவில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் அந்தத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒரு தமிழ் சுயாட்சியை நிறுவுவதற்காகவும், தமிழ்த் தேசிய தன்னாட்சி உரிமைக்காகவும் நிகழும் எமது போராட்டம், அந்த இலட்சியங்களை அடையும் வரை முடிவுறாது என்பதை அமெரிக்கத் தமிழர்கள் இங்கே பிரகடனப்படுத்துகின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது






இந்த பேரணியில் பங்கேற்று இருந்தாலும் இப்பதிவின் மூலம் சில புதிய விசயங்களை நான் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஇந்த பேரணியில் கலந்து கொள்ள முக்கியமாக காரணமாக இருந்த உங்களின் முந்தைய பேரணி அறிவிப்பு பதிவுக்கும் நன்றி.
இந்த பேரணியில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் மூவர்
1. என்பது வயது நிரம்பிய திருமதி கந்தசாமி அவர்கள்
2.மருத்துவர் எலின் சண்டெர. (இவர் நான் வசிக்கும் மாகாணத்துகாரர்)
3.இரண்டாம் தலைமுறையை சேர்ந்த, ஓகையோவில் இருந்து வந்த சேந்தன் என்ற 19வயது நிரம்பிய காளை.