Friday, June 22, 2007

தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்: அமைச்சர் அதாவுட செனிவிரட்ன.!!

[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007] கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியதற்கு பொறுப்பான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அதாவுட செனிவிரட்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பு தமிழர் வெளியேற்றம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறாடாவான ஜோசப் மைக்கேல் பெரேராவினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாக இந்த விவாதத்தின்போது ஜோசப் மைக்கேல் பேரேரா கூறியதாவது: கொழும்பிலிருந்து தமிழர்களின் ஒப்புதலுடனேயே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக நாடாளுமன்றில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஆனால் அரசாங்கத்தின் சார்பில் இச்சம்பவத்துக்காக பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மன்னிப்பு கோரியுள்ளார். அதேபோல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார். கோத்தபாய மற்றும் கேகலிய மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் அறிக்கைக்கு முரணாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கருத்துத் தெரிவித்துள்ளமையால் அவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆவணத்தில் பல நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆகையால் மனித உரிமைகள் விடயம் என்பது அனைத்துலக விடயம். மனித உரிமைகள் மீறப்பட்டால் அனைத்துலகமும் குரல் கொடுக்கும் என்றார். மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.