[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007] பிரித்தானியாவிடம் இருந்து 1998 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட அதிவேக ஹவர்கிராப்ற் ரக தாக்குதல் தரையிறங்கு கலத்தை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா கடற்படை கேள்விப்பத்திரங்களை கோரியுள்ளது. 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த கலமானது பல வருடங்களாக பாவனையற்று இருந்ததாககவும் இதற்கான கேள்விப்பத்திரங்களின் முடிவு நாள் ஜூன் 17 என்றும் பத்திரிகை விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 நொட்ஸ் வேகமுடைய இந்த தரையிறங்கு கலம் 10 தொன் நிறைகளை காவுவதுடன் 600 கி.மீ தூரம் வரையும் பயணிக்கக்கூடியது. நடுத்தர நிறையை காவும் எம்-10 ரக ஹவர்கிராப்ற் வொஸ்பெர் தொர்நிகுறொப்ற் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டதாகும். இது 56 துருப்புக்களை அல்லது இரு லான்ட் றோவர் வாகனங்களுடன் 20 துருப்புக்களை அல்லது அதே அளவான வேறு பொருட்களை காவிச் செல்லக்கூடியது. மேலும் ஒரு 20 மி.மீ பீரங்கியை கொண்டிருப்பதுடன், ஏவுகணைகளையும் காவ வல்லது. இந்த கலம் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு வருடங்களின் பின்னர் அது கடற்படைக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு விளம்பரங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்ததே அல்லாது இன்று வரை இராணுவத்தின் பயன்பாடுகளுக்கு உபயோகப் படுத்தப்படவில்லை. இந்த ஹவர்கிராப்ற் கலமானது கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் கடற்படையில் உள்ளவர்களும், வெளியாரும் அதனை வெள்ளை யானை என அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Friday, June 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.