Saturday, June 30, 2007

திருமலையில் 1000 கிலோவுக்கு அதிகமான சி-4 வகை வெடிமருந்துடன் பாரவூர்த்தி மீட்பு (படங்கள் உள்ளே)

[சனிக்கிழமை, 30 யூன் 2007]

திருகோணமலை திருக்கடலூரில் ஆயிரம் கிலோ அதிகமான வெடிமருந்துடன் பாரவூர்த்தி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர்.

டேலன் ரக பாரவூர்த்தியில் 1000 கிலோவுக்கு அதிகமான சி-4 வகை வெடிமருத்துகளை சிறீலங்கா கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணைத் தள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமகன் ஒருவரின் தகவலையடுத்து திருமலை திருக்கடலூர் 3ம் கட்டையில் மீன் ஏற்றுவதற்காக நின்ற பாரவூர்த்தியை சோதனையிட்ட சிறீலங்கா கடற்படையினர் பாரவூர்த்தியில் வெடிமருந்து இருந்துள்ளதாகத் தெரிவித்து பாரவூர்த்தியைக் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பராவூர்தி சாரதியும் உதவியாளரும் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்ககப்பட்டுள்ளனர். அத்துடன் பாரவூர்த்தி திருமலை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.




1 comment:

  1. சில நேரம் கொழும்பில் இருந்து தமிழரை அப்புறபடுத்த முடியவில்லை என்று தமிழர்களின் தலை நகரத்தில் இருந்து தமிழரை அப்புறப்படுத்த போகிறார்களோ தெரியா??

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.