Thursday, May 31, 2007

புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவினுடையது.!

[வியாழக்கிழமை, 31 மே 2007] கடந்த மார்ச் மாதம் 14 ஆம் நாள் புங்குடுதீவில் உள்ள கடற் கரைப்குதியில் இராணுவச் சாக்கு ஒன்றிற்குள் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதிகள் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவான வண. ஜிம் பிறவுண் அடிகளினுடையது என மரபணு (DNA) சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை இன்று வியாழக்கிழமை மகரகம மருத்துவனையின் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் பகுதிகளும், ஜிம் பிறவுண் அடிகளாரினது பெற்றோரின் குருதி மாதிரிகளையும் தாம் பெற்றுள்ளதாகவும் விரைவில் மரபணு சோதனை நடத்தப்படும் எனவும் மருத்துவமனையின் சட்டபூவமான அதிகாரி ஒருவர் முன்னர் தெரிவித்திருந்தார். எனினும் தமது முடிவுகளை மருத்துவமனை வட்டாரங்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளிவரும் என யாழ்ப்பாணத்தின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அல்லைப்பிட்டி தேவாலயத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய அருட்தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் (வயது 34), அவரது உதவியாளரான வென்சீஸ்லஸ் வின்சன்ற் விமலன் (வயது 38) ஆகியோர் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் மண்டைதீவில் உள்ள இராணுவத்தின் சோதனைச் சாவடியில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் காணாமல் போயிருந்தனர். இவர்கள், காணமல் போனது தொடர்பான தகவல்களை படைத்தரப்பு வெளியிட வேண்டும் என கோரி யாழ். மக்களாலும், கிறிஸ்தவ மத குருக்களினாலும் பல எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும் இது தொடர்பாக பாப்பரசரின் சிறப்பு பிரதிநிதி யாழ். குடாநாட்டுக்கு பயணம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு.!

[வியாழக்கிழமை, 31 மே 2007]

சிறீலங்கா அரசு கேட்கும் ஆயுத தளபாடங்களை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இன்று சென்னையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாக இருக்கும் போது அண்டை நாடான இலங்கை பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய இந்திய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆயுதங்களை வழங்கப் போவதில்லை. தற்காப்பு ஆயுதங்களையே வழங்கவுள்ளோம் என எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த கடற்ரோந்தே சிறந்த வழிமுறை என நினைக்கிறேன். தமிழக மீனவர்கள் கடல்லெல்லையைத் தாண்டி அத்துமீறி உள்நுழைந்தாலும் அவர்களை சுடவேண்டாம் என இலங்கை அரசிடம் வலியுத்தியுள்ளோம். இதற்கு இலங்கை அரசும் இணங்கியுள்ளது எனவும் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்களை 12 மணித்தியாலத்துக்குள் வெளியேற்ற உத்தரவு.!!!

[வியாழக்கிழமை, 31 மே 2007] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், கொழும்பு நகரிலுள்ள தங்கு விடுதிகளில் (லொட்ஜ்) தங்கியிருக்கும் வடக்கு -கிழக்கு மற்றும் மலையகப் பகுதித் தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். நாளை வெள்ளிக்கிழமைக்குள் காலைக்குள் இவர்களை வெளியேற்றுமாறு கடுமையாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த உத்தரவுக்குப் பணியவில்லை என்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இன்று மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரையும் அவசர கூட்டம் ஒன்றுக்கு அழைத்த புறக்கோட்டைப் பகுதி காவல்துறையினரே இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்தனர். புறக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புறக்கோட்டைப் பகுதியிலுள்ள சுமார் 60 தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் கடுமையாகத் தனது உத்தரவைப் பிறப்பித்த காவல்துறை அதிகாரி, நாளை காலைக்குள் விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் வெளியேற்றப்படா விட்டால், விடுதிகளிலுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுவார்கள் எனக்கடுமையாக தொனியில் எச்சரித்ததாக விடுதி உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். அதாவது 12 மணி நேரத்துக்குள் இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். புறக்கோட்டைப் பகுதி உரிமையாளர்களே இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், கொழும்பிலுள்ள அனைத்து தங்கு விடுதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என காவல்துறையினர் தெரிவி்த்தாகவும் அறியவருகின்றது. புறக்கோட்டைப் பகுதியிலேயே அதிகமான விடுதிகள் இருக்கின்ற போதிலும், கொழும்பு நகரில் சுமார் 150 வரையிலான தங்குவிடுதிகள் இருப்பதாகவும், இவற்றில் பத்தாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது. வெளிநாடு செல்வதற்காகவும், மருத்துவ, கல்வி மற்றும் நேர்முகப் பரீட்சை போன்ற அலுவலக அல்லது சொந்த வேலையாக வருபவர்களுமே இவ்வாறு விடுதிகளில் தங்கியிருக்கின்றார்கள். வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக வருபவர்களில் பலர் விடுதிகளில் மாதக்கணக்கில் இவ்வாறான விடுதிகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைவிட, சிலர் இவ்வாறான விடுதிகளில் தங்கியிருந்தே கொழும்பில் தொழில் புரிகின்றார்கள். உடனடியாக இரவோடிரவாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து இவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தருப்பதாகத் தெரிகின்றது. பலர் என்ன செய்வதெனத் தெரியாது திண்டாடிக்கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது. முக்கிய வேலைகள் நிமித்தமும், மருத்துவத் தேவைகளுக்காகவும் வந்தவர்கள் என்ன செய்வதெனத் தெரியாது அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இது மேலிடத்து உத்தரவு எனவும், இதில் எந்தவிதமான மாற்றமும் இருக்கப்போவதில்லை எனவும் காவல்துறையினர் கடுமையாகத் தெரிவித்து விட்டார்களாம். இதேவேளையில், கொழும்பிலுள்ள கடைகளில் தொழில்புரியும் தமிழர்களையும் வெளியேற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களே பெருமளவுக்கு இவ்வாறு கடைகளில் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களையும் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி:புதினம்

போர்நிறுத்த உடன்பாட்டை அரசு ஓரிரு வாரங்களுக்குள் தூக்கி வீசும்: கேகலிய ரம்புக்வெல.!!

[வியாழக்கிழமை, 31 மே 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளதாவது:

நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு கடந்த ஆண்டு களத்தில் முறிவடைந்த பின்னர் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகள் படையினரை தாக்கி வருவதனால் அது நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை.

போர்நிறுத்த உடன்பாட்டை அரசு கைவிட எண்ணியுள்ளது. ஏனெனில் களத்தின் நிலவரம் போர்நிறுத்த உடன்பாட்டுடன் சமாந்தரமாக செல்ல முடியாது உள்ளது. எனவே அது தவறானது. அதனை திருத்துவதற்கு அல்லது கைவிடுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம்.

இதனை கவனத்தில் எடுக்குமாறு நாம் நோர்வேயைக் கேட்டுள்ளோம், அவர்கள் கவனம் எடுக்காது விட்டால், போர் நிறுத்தத்தை மாற்றி அமைக்கும் பொறுப்பை அரசு எடுக்கும் அல்லது அதற்கான நிலைமைகளை சந்திக்கும்.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை முறித்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏனெனில், அதில் இருந்து அரசு விலகிவிட்டால், அரசே போர் நிறுத்தத்தை முறித்து விட்டதாக பிரச்சாரங்களை மேற்கொள்வது அவர்களுக்கு சாதகமானது என்றார் கேகலிய ரம்புக்வெல.

எனினும், போர் நிறுத்த உடன்பாட்டை மாற்றி அமைப்பது தொடர்பாக தமது தூதரகத்துடன் உத்தியோகபூர்வமாக தொடர்புகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தத்தை மாற்றி அமைப்பதற்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து தமது மறுப்பை தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசின் இந்த வியூகம் மிகவும் ஆபத்தானது, அது மோசமான வன்முறைகளை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தை சேர்ந்த றொகான் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

நன்றி:புதினம்

'தமிழீழ மக்களின் அழிவுக்குச் சம்பந்தப்பட்ட மேற்குலகமே காரணம்!' -சபேசன்

[வியாழக்கிழமை, 31 மே 2007]

அண்மைக்காலமாகச் சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டு, நிதி உதவிகளையும் வழங்க ஆரம்பித்துள்ளன.

அவுஸ்திரேலிய அரசு, இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் சுயசேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்காக 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.

இதேபோல் பிரித்தானிய அரசும், இடம் பெயர்ந்து வாழுகின்ற மக்களுக்கு உதவும் பொருட்டு, ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸை வழங்க உள்ளது. வழமைபோல், இந்த நாடுகள் இலங்கைத்தீவில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள், மனித உரிமை மீறல்களுக்குக் கவலை தெரிவித்திருப்பதுடன், சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் அமெரிக்க அரசும் கலந்து கொண்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் இத்தகைய செயற்பாடுகள், புலம் பெயர்ந்த தமிழீழ மக்களிடையே ஒருவித நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருப்பதோடு, மேற்குலகின் நிலைப்பாட்டில் (மன) மாற்றம்(?) ஏற்பட்டிருக்கின்றது என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளன. இவ்வகையான எண்ணம் எம்மவரிடையே உருவாகுவது இயல்பான ஒன்றுதான்! ஆனால் மேற்குலகின் தற்போதைய செயற்பாடுகள் அவற்றின் (மன) மாற்றத்தின்(?) ஊடாக உருவாகவில்லை என்பதையும், மேற்குலகின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள், உரைகள், போன்றவற்றை அவதானிக்கின்ற தமிழ் மக்கள், ஏமாந்து போய் திசை திரும்பிவிடக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி, சில கருத்துக்களை தர்க்கிக்க முனைவதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.


தமிழ் மக்களின் அவசர மனிதாபிமான உதவிகளுக்காக இந்த மேற்குலக நாடுகள் வழங்கவுள்ள நிதியுதவியை வரவேற்கின்ற அதே வேளையில், சில முக்கியமான விடயங்களையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். கடந்த சமாதானக்காலத்தில் மேற்குலகின் பலவிதமான அனுசரணைகளுடன் தமிழீழப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் பலவற்றை குண்டுகள் போட்டு அழித்தது சிறிலங்கா அரசுதான் என்பதை இந்த மேற்குலக நாடுகள் மறந்து விடக்கூடாது! இங்கே தமிழர்களுக்கு உதவி செய்கின்றோம் என்று நிதி வழங்குகின்ற மேற்குலகம், மறுபக்கத்த்pல் சிறிலங்கா அரசிற்கு ஆயுதங்களையும் இராணுவ உதவிகளையும் வழங்கிக் கொண்டிருப்பது அடிப்படையில் முரண்பாடான விடயமாகும்.

மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால் சிறிலங்காவிற்கான நிதி உதவிகளை முடக்கப் போவதாக இந்த உலக நாடுகள் சொல்லி வருகின்ற கருத்தாகும். இப்படியான கருத்துருவாக்கங்களையும், நிதி முடக்கங்களையும் நாம் ஊன்றிக் கவனித்துப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். நேரடியாக நிதி முடக்கம் என்று அறிவித்து விட்டு, மறைமுகமாக வேறு வழிகளில் மேற்குலகம் சிறிலங்காவிற்கு நிதியுதவிகளைத் தொடர்ந்தும் வழங்கி வரப்போகின்றது என்பதில் ஐயமில்லை. இப்படியான செயற்பாடுகளை மேற்குலகம் வேறு தளங்களில் செய்தும் வந்திருக்கின்றது. இன்று சிறிலங்காவிற்கான நிதி உதவிகளில் அறுபது சத வீதமானவற்றை ஜப்பானே வழங்கி வருகின்றது.

கடந்த 2003 ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு கிடைத்த வெளிநாட்டு நிதியுதவிகளில் 63 சதவீதம் ஜப்பானால் வழங்கப்பட்டதாகும். இன்று பிரித்தானியாவும் ஜேர்மனியும் நிதிமுடக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், ஜப்பான் இந்த நிதி முடக்கத்திற்குத் தயாரில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 'சிறிலங்காவிற்கு ஜப்பான் வழங்கவுள்ள நிதித் திட்டத்தில் மாற்றம் எதுவும் இருக்காது' - என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜப்பானின் நிதியுதவித் திட்டங்களுக்கு அனுசரணையாக இங்கே மேற்குலகம்தான் செயற்படுகின்றது என்பதோடு மட்டுமல்லாது சிறிலங்காவிற்கு வேறு வழிகளில் நிதியுதவி செய்வதும் மேற்குலகம்தான்.!

நிதியுதவியை மட்டுமல்ல, இராணுவ மற்றும் ஆயுத உதவிகளையும் சிறிலங்காவிற்கு மேற்குலகம் வழங்கக் கூடாது! மேற்குலகம் என்று சிறிலங்காவிற்கான இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை நிறுத்துகின்றதோ அன்றுதான் இலங்கைத்தீவில் உண்மையான சமாதானம் உருவாகுவதற்கான வழி பிறக்கும்.!

பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற 'இலேசான திருப்பத்திற்கான' காரணிகளை நாம் சில வாரங்களுக்கு முன்னர் தர்க்கித்திருந்தோம். அதன்போது 'பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கின்ற தேர்தல் அங்குள்ள தமிழர்களின் கணிசமான வாக்குகள், பயங்கரவாதத்திற்கு எதிரான போர்(?) காரணமாக பிரித்தானியா அந்நியப்படுத்தப்படுதல், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், பிரித்தானியாவின் பிராந்திய மற்றும் பொருளாதார நலன்கள்' - ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி சில கருத்துக்களை முன்வைத்திருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் அப்பால், பிரித்தானியாவின் அடிப்படைக் கோட்பாட்டில் இன்னும் சரியான மாற்றம் வரவில்லை என்பதையும், ஆகையால் பிரித்தானியாவின் 'இலேசான திருப்பத்தைக்' கண்டு நாம் ஏமாந்து போய் விடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இப்போது அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் மாற்றம்(?) ஏற்பட்டிருப்பதாகவும் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரெட் (JEFFREY LUNSTEAD) தெரிவித்துள்ள கருத்துக்கள் அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டைக் காட்டுவதாகவும் செய்திகளும், ஆய்வுக்கட்டுரைகளும் தெரிவித்து வருகின்றன. இந்தக் கருத்துகள் யாவும் தப்பானவை என்பதோடு, தமிழீழ மக்களின் இன்றைய அழிவுகளுக்கான மூலகாரணம் அமெரிக்காவின் அடிப்படைக் கோட்பாடுதான் என்பதையும் சுட்டிக்காட்டித் தர்க்கிக்க விழைகின்றோம். நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தவாறு மேற்குலகின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகளை அவதானிக்கின்ற எமது மக்கள், ஏமாந்துபோய் திசை திரும்பி விடக்கூடாது என்ற எமது தர்க்கத்தின் வேறு கூறுகளை நாம் இப்போது தர விழைகின்றோம்.

சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் கருத்துக்கள் உண்மையில் ஒரு துணை ஆய்வுக் கட்டுரையில் வெளிவந்தவையாகும். THE UNITED STATES? - ROLE IN SRILANKA?S PEACE PROCESS ? 2002 -2006 என்ற இந்த ஆய்வு 41 பக்கங்களைக் கொண்டதாகும். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பாகச் சில கருத்துக்கள் இருப்பதுபோல் தோன்றினாலும் இந்த ஆய்வை ஆழமாகப் பார்க்கின்றபோது, அமெரிக்கா சிறிலங்கா அரசின் பேரினவாதக் கொள்கைகளுக்கு ஆதரவாக, தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக எவ்வாறு திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது என்பது புரியும். சுருக்கமாகச் சில விடயங்களை மட்டும் கவனிப்போம்.

ஜெவ்ரி லன்ஸ்ரெட் தனது ஆய்வில் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். கடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்வரை சிறிலங்காவிற்கு எந்தவிதமான இராணுவ நிதி உதவியையும் தாம் செய்யவில்லை என்று ஜெவ்ரி குறிப்பிடுகின்றார். (Foreign Military Financing Funding for SRILANKA in 2002 and 2003 was zero) ஆனால் 2004 ஆம் ஆண்டு அமெரிக்கா 2.5 மில்லியன் அமெரிக்கா டொலர்களை சிறிலங்காவிற்கு இராணுவ உதவிக்காக அளித்ததாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த உதவி வித்தியாசமான விகிதங்களில் கூடிக் குறைந்து அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முதல் சிறிலங்காவிற்கு அமெரிக்காவின் உயர் இராணுவ அதிகாரிகள் விஜயம் செய்தது அபூர்வமாக இருந்தது என்றும், ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தின் போது, உதாரணமாக 2004 ஆம் அண்டு பன்னிரண்டு தடவைகள் மிக உயர் இராணுவ அதிகாரிகள் சிறிலங்காவிற்கு விஜயம் செய்தார்கள் என்றும் ஜெவ்ரி குறிப்பிடுகின்றார். இதேபோல் சிறிலங்காவின் இராணுவ அதிகாரிகளுக்கு, சமாதானக் காலத்தின் போது அமெரிக்கா வழங்கிய பயிற்சிகளையும், இராணுவக் கல்வி வகுப்புகளையும் பற்றி அவர் குறிப்பிடுகின்றார்.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

போர்க்காலத்தில் சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளைச் செய்யாத அமெரிக்கா சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் மட்டும் ஏன் செய்தது?

ஏனென்றால், சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிய வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசும் இராணுவச் சமபல நிலையில் இருந்தார்கள். இந்தச் சமநிலையைக் குலைத்து தமிழ் மக்கள் தரப்பினைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டிருக்கின்றது. இது அமெரிக்கா தமிழீழ மக்களுக்கு இழைத்த அநீதியாகும்.

தெரிந்தே இவ்வாறு இராணுவ உதவிகளும் செய்யப்பட்டிருந்தால் வெளியே தெரியாமல் எத்தகைய இராணுவ உதவிகளை அமெரிக்கா சிறிலங்காவிற்கு வழங்கியிருக்கக்கூடும் என்று நாம் எண்ணிப் பார்க்கின்றோம். அத்தோடு இன்று இடம் பெயர்ந்து இன்னல்படுகின்ற மூன்று இலட்சம் தமிழ் மக்களையும், கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ள எமது உறவுகளையும் எண்ணிப் பார்க்கின்றோம்.

சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தந்துள்ள இன்னுமொரு தகவலையும் நாம் இப்போது கவனிப்போம்.

'அமெரிக்கா, சிறிலங்கா அரசிற்கு தருகின்ற இராணுவ உதவிகள் என்பதானது ஓர் இராணுவத் தீர்வை ஊக்குவிப்பதற்காகக் கொடுக்கப் படவில்லை என்பதை, சிறிலங்கா அரசிற்கு தெளிவாக புரிய வைக்க நாம் (US) முயன்றோம்.!'

(US tried to make clear to that Govt of Srilanka the US Support, including military support was not an encouragement to seek a military solution)

இதனைப் படித்துவிட்டு சிரிப்பதா, அழுவதா அல்லது கோபம் கொள்ளுவதா என்று எமக்கு தெரியவில்லை. சிறிலங்கா அரசு என்பது ஏற்கனவே இனவாதக் கொலைகார அரசு என்று உலகறிந்த விடயமாக இருக்கின்ற வேளையில், அதற்கு மேலும் ஆயுத உதவிகளை - அதுவும் சமாதானப் பேச்சு வார்த்தைக் காலத்தில் - வழங்குவது என்பது என்ன நியாயம்? இது சமாதானத்திற்கு உதவுமா அல்லது சண்டைக்கு உதவுமா?

இது எப்படி இருக்கின்றது என்றால், ஏற்கனவே சின்னக் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு கொலை செய்து வருகின்ற கொலைகாரன் ஒருவனுக்கு பெரிய பட்டாக்கத்தியைக் கொடுத்துவிட்டு இதை வைத்துக் கொண்டு நீ கொலை செய்யக்கூடாது என்று சொல்வது போலிருக்கின்றது.

இவ்வளவற்றையும் செய்துவிட்டு 'இப்போது சிறிலங்;கா மனித உரிமைகளை மீறுகின்றது' என்று இவர்கள் கூறுவது படுமுட்டாள்தனமானது அல்லது படு போக்கிரித்தனமானது!

இங்கே இன்னுமொரு விசித்திரமான முரண்பாட்டையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

'இலங்கைப் பிரச்சனையில், ஒரு பயங்கரவாத இயக்கம் தன்னுடைய இலட்சியத்தைப் பயங்கரவாதம் மூலமாக அடையக் கூடாது என்பதே அமெரிக்காவின் நோக்கமாகும்' என்று ஜெவ்ரி கூறுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையிலேயே பயங்கரவாத இயக்கமாக இன்று கருதப்படவில்லை. எங்கோ தொலைவில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்ற நீங்கள் ஒரு விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று கருதிக்கொண்டு உங்களுடைய கறுப்புக் கண்ணாடி ஊடாக அதனைப் பார்த்தால் அது யாருடைய பிழை?

தவிரவும், அமெரிக்காவின் சுதந்திரப் போராட்டத்தின் போது இதே அமெரிக்கா, பிரித்தானியாவிடம் சமாதானமாகப் பேசித் தீர்த்து, தங்களுடைய சுதந்திரத்தைப் பெற்றிருக்கலாமே? ஏன் அமெரிக்கா பிரித்தானியாவை எதிர்த்துப் போரிட்டது? ஏன் அமெரிக்கா வன்முறையை கையாண்டது? அன்றைய காலத்துப் பிரித்தானியாவின் பார்வையில் அமெரிக்காவின் ஜோர்ஜ் வொசிங்டன் பயங்கரவாதியல்லவா?- பின்னாளில் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டெலா போல! இன்னாளில் எமது வேலுப்பிள்ளை பிரபாகரன் போல!.

தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் ஜெவ்ரி லன்ஸ்ரெட், ஓர் ஏக்கப் பெருமூச்சையும் வெளியிடுகின்றார். 'தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்க அரசிற்கும் இடையில் 2003 ஆம் ஆண்டளவில் நேரடியான தொடர்பு உருவாகியிருக்குமேயானால் ஒரு நிரந்தரமான பலன் ஏற்பட்டு, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குகின்ற நிலைமை உருவாகியிருக்கும்! அத்தோடு அமெரிக்காவின் தெளிவான செய்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தெரிவித்திருக்க முடியும் - என்று இப்போது ஜெவ்ரி கூறுகின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இவர்கள் நேரடியாக சந்தித்துத்தான் தமது கொள்கைளைத் தெளிவாக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி அழித்துவிட்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கி விட வேண்டும் என்கின்ற அமெரிக்காவின் கருத்தைத் தெளிவுபடுத்துவதற்காக அமெரிக்கா மேலும் மேலும் சிரமப்படத் தேவையில்லை. அது அமெரிக்காவின் நடத்தைகளால் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது.

அமெரிக்காவின் தலைமையில் வாசிங்டனில் உதவி வழங்கும் நாடுகளின் சர்வதேச மகாநாடு ஒன்று 2003 ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது இந்த உதவி வழங்கும் மகாநாட்டில் கலந்து கொள்ளத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் மூலம் தமிழீழ மக்கள் ஓரம் கட்டப்பட்டார்கள். இதனைக் கண்டித்துத் தமிழீழ தேசியத் தலைமை வெளியிட்ட அறிக்கையில், 'சமாதானப் பாதையிலும் புனர்நிர்மாணக் குறிக்கோளிலும் எமக்குள்ள நம்பிக்கையை இது பாதிக்கும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எமக்குக் கவலையையும், ஏமாற்றத்தையும் தருகின்றது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து வந்த காலப்பகுதியில், நிலைமை மேலும் சிக்கலாகியபோது தேசியத்தலைவர் சில விடயங்களைத் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்குக் கூறியுள்ளார். 'சர்வதேசத் தலையீடு சிறிலங்கா அரசிற்கு அனுகூலமாகவும், விடுதலைப் புலிகளுக்குப் பாதகமாகவும் அமைந்து வருகின்றது. நாசகாரச் சூழ்ச்சிகள் நிலவுகின்ற அரசுகளின் சர்வதேசக் கூட்டமைப்பின் சதிவலைப் பின்னலில், சிக்குண்டு நசுங்குவதை எமது இயக்கம் விரும்பவில்லை. பலம் பொருந்திய இந்தச் சர்வதேச சக்திகளின் பொறியில் விழுந்து விடாமல் சுதந்திரமாகச் செயற்படவே நாம் விரும்புகின்றோம். அதன்படி டோக்கியோ மகாநாட்டில் பங்கு கொள்வதில்லை என்றும், பேச்சு வார்த்தைகளை இடைநிறுத்துவது என்றும் சிறிலங்கா அரசுக்கு அறிவிக்கும்படி' தேசியத் தலைவர் கூறியுள்ளார். தேசியத் தலைவரின் வேண்டுகோளின்படி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இதனை தெளிவுபடுத்திக் கடிதமும் எழுதினார்.

ஆகவே தமிழீழ தேசியத் தலைவருக்கு அமெரிக்கா சொல்ல வந்துள்ள செய்தியும், அதன் உள்ளர்த்தமும் தெளிவாகவே புரிந்துதானிருந்தது. ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் நாடகப் பெருமூச்சுக்கள் தமிழீழத் தேசியத் தலைமையிடம் பலிக்காது!

ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் இந்த ஆய்வு இன்னுமொரு உண்மையையும் வெளிக்கொண்டு வருகின்றது. 'அமெரிக்காவிற்குத் திருகோணமலை குறித்து ஆர்வமில்லை' என்ற கருத்தை விளக்குவதற்கு ஜெவ்ரி ஆழ்ந்த சிரத்தை எடுத்துள்ளார். இது உண்மையில் இந்தியாவிற்கான செய்தியேயாகும். ஆனால் அமெரிக்காவிற்கு திருகோணமலையில் இருக்கின்ற ஆர்வத்தையும், அமெரிக்காவின் கபட நாடகத்தையும் தற்போதைய நிலவரங்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன.

இன்று கிழக்கு மாகாணத்துத் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகின்றார்கள். தமிழர்களை இடம்பெயர வைக்க வேண்டும் என்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ள சிறிலங்கா அரசு தொடந்தும் தமிழர்கள் மீது, அவர்களது வாழ்விடங்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. திருகோணமலையில் தமக்கு ஆர்வமில்லை என்று சொல்லுகின்ற அமெரிக்கா, சிறிலங்கா அரசின் இந்தச் செயலுக்கு ஆதரவான முறையில் நடந்து கொள்வது இப்பகுதிகளைத் தமிழர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே என்பதை நாம் உணரவேண்டும்.

எது எப்படியிருப்பினும், இந்தியாவிற்கான சார்பு நிலையில்தான் தமிழர்கள் இருக்க கூடியவர்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்து வைத்துள்ளது. திருகோணமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, சிங்களவர்கள் கையில் இருந்தால் அது தனக்குச் சாதகமானது என்றும், தேவைப்பட்டால் அதனை இந்தியாவிற்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்றும் அமெரிக்கா எண்ணி வருகின்றது. இந்த அடிப்படையில்தான் தமிழர்கள் அங்கே அழிக்கப்பட்டுக் கலைக்கப்படுவதையும், சிங்கள பௌத்தக் கோயில்கள் கட்டப்படுவதையும் அமெரிக்கா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவற்றையும் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்க்pன்ற இந்தியாவோ பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு போய்விட்டது என்பதுபோல் மௌனமாக இருந்து வருகின்றது.

இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்கா விடயங்களை நன்கு புரிந்து திட்டமிட்டுத்தான் தங்களது செய்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் கூற்று நம்பக்கூடிய கூற்று அல்ல.

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும் சமாதானத்திற்கு எதிரான இராணுவ முன்னெடுப்புக்களையும் மேற்குலகம் நினைத்தால் எளிதில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். சிறிலங்கா அரசின் மீது செயல்வடிவில் அழுத்தங்களைக் கொடுத்தாலே சிறிலங்கா இறங்கி வரும் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்கக்கூடிய வகையில் இரண்டு தரப்பினரும் வலுச்சமநிலையில் இருந்த சூழலை மாற்ற முயன்று, இன்று இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாத நிலைக்கு கொண்டு வந்தது அமெரிக்காதான்! இதற்குப் பிறகும் சும்மா புலிகளைக் குற்றம் சொல்வதில் பலனில்லை.

அமெரிக்கா உட்பட்ட மேற்குலகின் சதிவலைகளை எல்லாம் மீறிப் புதிய பரிமாணமாக, வான் புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்று வருவதும், இதனால் சிங்கள அரசு நிலைகுலைந்து போயிருப்பதும், சம்பந்தப்பட்டவர்களுடைய பொருளாதார நலன்கள் ஆட்டம் காணத் தொடங்கியிருப்பதுவும்தான் இன்று இத்தகைய கருத்தோட்டங்களாக வெளிவருகின்றன. ஆகவே மேற்குலகின் இந்தக் கருத்தோட்டங்கள் குறித்துப் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதேவேளை, அமெரிக்காவையும் மற்றைய மேற்குலக நாடுகளையும் எவ்ளவு நுட்பமாகச் சிறிலங்கா அரசு ஏமாற்றி முட்டாள்களாக்கியுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தியா ஏதாவது அழுத்தம் கொடுக்க முனைந்தால் சிறிலங்கா பாகிஸ்தானை அணுகும். அமெரிக்கா ஏதாவது கூறமுனைந்தால் சிறிலங்கா சீனாவிற்கோ, அல்லது மத்திய கிழக்கு அரபுநாடுகளுக்கோ போகும். இவ்வாறாகச் சிறிலங்கா அரசு சமாதானத் தீர்வில் பின்னோக்கிப் போய்விட்டது.

ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் ஆய்வு மறைமுகமாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றது என்றுதான் எமக்கு தோன்றுகின்றது. அதாவது இவ்வளவு படுமோசமான மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், இலட்சக்கணக்கான மக்களின் இடம் பெயர்வு மற்றும் சமாதானப் பேச்சுக்க ளின் தோல்வி - இவையாவற்றிற்கும் சிpறிலங்கா அரசு பொறுப்பில்லை. தன்னுடைய அமெரிக்க அரசுதான் இவ்வளவு அழிவுகளுக்கும்; பொறுப்பு என்பதையே, ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் ஆய்வு மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது என்று நாம் நம்புகின்றோம்.

இன்று முக்கிய பிரச்சனையாக விளங்குவது அமெரிக்காவும், மற்றைய மேற்குலக நாடுகளும்தான். இந்த நாடுகள் நியாயமான, நேர்மையான, சரியான முடிவை எடுத்தால் பிரச்சனை சுலபமாக விரைவில் தீரும். இந்த நாடுகள் தங்களுடைய சிறு சிறு நலன்களுக்காக, இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப் பலியாக்குகின்ற இனவெறி அரசுக்குத் துணையாக நின்று கொண்டு, தங்களுடைய பிழைகளுக்கான காரணங்களையும், நியாயங்களையும் சொல்லிக் கொண்டிருப்பது பிரச்சனைக்குத் தீர்வு தராது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசை நம்பி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவில்லை. உலக நாடுகளை நம்பித்தான் விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார்கள். சர்வதேசம் நியாயமாக, நேர்மையாக நடக்காததால்தான் இன்று எமது தமிழ் மக்கள் அழிகின்றார்கள்.

சுமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழ மக்கள் பிரிந்து சென்று வாழ்வதே நீதியான, யதார்த்தமான செயலாகும். இதற்கு இனியாவது சர்வதேசம் உதவ முன்வரவேண்;டும். இல்லாவிட்டால் வான்புலிகளின் பரிமாணத்தையும் விடப் பெரிய பரிமாணங்களை சிறிலங்கா அரசு எதிர்கொள்ளவேண்டி வரும். அதற்கு முன்னராக, மேற்குலகம் தனது தவறுகளைத் திருத்தி சரியான நேர்மையான விதத்தில் இலங்கைப் பிரச்சனையைக் கையாள வேண்டும்.

எமது வாசகர்கள் இக்கருத்துக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

யாழ் குடாநாட்டில் பாரிய சோதனை நடவடிக்கை.

[வியாழக்கிழமை, 31 மே 2007] யாழ் குடாநாட்டில் பாரிய சோதனை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று புதன்கிழமை காலை தொடக்கம் மதியம் வரையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறீலங்காப் படையினரும் சிறீலங்கா காவல்துறையினரும் கூட்டாக இணைந்து இத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். யாழ் நகரம், கொட்டடி, நாவாந்துறை கடற்கரைப் பிரதேசம் ஆகியன முழுமையான தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ் நகரை இணைக்கும் அனைத்து பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுதப்பட்டு கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேநேரம் கொட்டடி மற்றும் நாவாந்துறையில் கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட படையினர் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடக்கூடியதாகும்.

சிறீலங்காவிற்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தக்கோரிக்கை – டாக்டர்.ராமதாஸ்.

வியாழக்கிழமை, 31 மே 2007

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ இந்தியாவை சிறீலங்கா அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை சிறீலங்காவற்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

தீடீரென இந்தியாவிற்கு விஐயம் செய்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராயபக்ச இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையடுத்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு வழங்கப்படும் உதவியானது சிறீலங்காவில் அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக உபயோகிக்கப்படும் எனவும் 6.5 கோடி இந்தியத் தமிழ் மக்கள் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைக் தீர்வு காண விரும்புவதாகவும். இந்திய அரசு ஆயுதஉதவி வழங்குவதை எதிர்ப்பதாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியிடம் இதுதொடர்பில் மத்தியில் அரசு ஆயுதஉதவி வழங்குவதை நிறுத்த உத்தரவாதம் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

pathivu

Wednesday, May 30, 2007

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு.!!

[புதன்கிழமை, 30 மே 2007] மன்னார் மாவட்டம் மடுப் பகுதியின் ஊடாக சிறிலங்கா இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. மடுப்பகுதியின் ஊடாக இன்று புதன்கிழமை காலை 6 மணியளவில் இராணுவத்தினர் முன்னேற முயற்சித்தனர். இம் முன்னநகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடும் எதிர்த்தாக்குதலினால் இராணுவத்தினர் அதிக இழப்புக்களுடன் கொல்லப்பட்ட, காயமடைந்த இராணுவத்தினருடன் தப்பியோடியுள்ளனர். இச்சம்பவத்தில் தமது தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். மடுப்பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையில் தமது தரப்பில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் இன்றும் வான்குண்டுத் தாக்குதல்: சிறுமி காயம்.!!

[புதன்கிழமை, 30 மே 2007]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்றும் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இன்று புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் வந்த மூன்று மிக் - 27 ரக வானூர்திகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் வரை குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த நிலக்சனா (வயது 07) என்ற சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மண்டபங்கள் சிலவற்றின் சுவர்களில் சிறுவெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

தாக்குதல் அச்சத்தினால் அப்பகுதி மக்கள் அவ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

நேற்று இப்பகுதியில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் வயோதிபப் பெண் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.

பெரும் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்நோக்கும் யாழ். படையினர்.!!

[புதன்கிழமை, 30 மே 2007] தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் அற்றதனால் யாழ். குடாநாட்டுக்கான படையினரின் போக்குவரத்துக்கள் முடங்கிப்போய் உள்ளன. இதனால் விடுமுறையில் செல்லும் படையினரும், காவல்துறையினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை ஏறத்தாழ 1,600 படையினர் பலாலி வான்படைத் தளத்தில் காத்திருந்ததாகவும், அவர்களில் பலர் பல நாட்களாக அங்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. சிறிலங்கா வான்படையினர் கடந்த வியாழக்கிழமை பலாலிக்கு இரு வானூர்தி சேவைகளையே நடத்தியிருந்தனர். ஆனால் மறுநாள் எந்த வானூர்தி சேவையும் நடைபெறவில்லை. வான்படையினரிடம் தற்போது உக்ரேய்ன் தயாரிப்பான ஒரு அன்ரனோவ்-32 ரக வானூர்தியே பாவனையில் உள்ளது. ஏனையவை பராமரிப்பு வேலைகளுக்காக தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் வான்படையினரின் அவ்ரோ-748 ரக வானூர்திகள் வீழ்ந்து நொருங்கிய பின்னர் வான்படையினர் அன்ரனோவ்-32 வானூர்திகளை கொள்வனவு செய்திருந்தனர். அவையே தற்போது படையினரின் போக்குவரத்திற்கு பயன்படுகின்றன. அரசிடம் போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் அற்ற நிலைமையே படையினர் தப்பி ஓடுவதற்கான பிரதான காரணம் என்று தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், யாழ். குடாநாட்டிற்கு செல்வதற்கும் அங்கிருந்து வெளியெறுவதற்கும் உள்ள போக்குவரத்து வசதிகள் மிகவும் மோசமானவை என்றும் தெரிவித்தார். இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் 1990 களில் சிறிலங்காப் படையினர் ஏ-9 போக்குவரத்து நெடுஞ்சாலையை இழந்துள்ளனர். வான்படையினர் இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையிலான வானூர்தி சேவையை மேற்கொண்டு வருகின்ற போதிலும், கடற்படையினர் காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான கடல் விநியோகங்களை நடத்தி வருகின்றனர். இதுவே யாழில் உள்ள படையினருக்கான உயிர்நாடி என வர்ணிக்கப்படுகின்றது. படையினர் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள போது அரசியல்வாதிகள் ஆடம்பர சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதாக படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: திருமணமான படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கான விடுமுறைகள் ஒரு மாதத்திற்குப் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் வார விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பெருமளவான படையினருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுமுறைகள் வழங்கப்படுவதில்லை. பெருமளவிலான படையினருக்கு 3 மாதங்களுக்கு ஒரு தடைவையே விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. எனினும் அவர்கள் யாழ். குடாவில் இருந்து தெற்கு செல்வதற்கும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். பலாலி செல்வதற்காக இரத்மலானை இடைத்தங்கல் தளத்தில் படையினர் பல நாட்கள் காத்து கிடக்கின்றனர். சில சமயங்களில் அவர்கள் கடல் வழி பயணத்தை மேற்கொள்வதற்காக இரத்மலானையில் இருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். மேலும் அங்கு அவர்கள் கப்பலில் ஏறுவதற்காக பலநாள் காத்து கிடக்கின்றனர். படையினரிடம் உள்ள ஜெற்லைனர் கடற்கலம் 3,200 பேரை ஏற்றிச் செல்லக்கூடியது. எனினும் படையினரின் கடல்வழிப் பயணமே விடுதலைப் புலிகளின் முதன்மையான இலக்கு. கடந்த ஆண்டு 700 படையினர் பயணித்த கப்பலை தாக்க அவர்கள் முயற்சித்திருந்தனர். 1997 இல் ஏ-9 நெடுஞ்சாலையை கைப்பற்ற அரசு எடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளது. வான்படையினர் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். கட்டளை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் முன்னுரிமை அடிப்படையில் பயணங்களை மேற்கொள்வதனால் படையினர் வானூர்தி பயணத்தில் மேலும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர். விடுமுறையில் செல்லும் படையினர் திரும்புவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் எடுக்கின்றது. இடைத்தங்கல் முகாம்களில் உள்ள படையினர் தமது செலவுகளுக்காக கடிகாரங்கள், தங்கச்சங்கிலிகள், கைச்சங்கிலிகள் போன்றவற்றை அடகு வைத்து வருவதாகவும், அதனை அடகுபிடிக்க ஒரு கூட்டம் இடைத்தங்கல் முகாம்களுக்கு அருகில் நடமாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி:புதினம்

கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்.!!

[புதன்கிழமை, 30 மே 2007]

சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன.

இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது:

இந்த கொள்ளை வழிகாட்டியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பணி தொடர்பாக இலங்கை மக்களின் நம்பிக்கையை கட்டி எழுப்பும் நடவடிக்கை. இந்த உடன்பாட்டின் அடிப்படையில் மனிதாபிமானப் பணிகளுக்கும், அபிவிருத்திக்குமாக உதவிகள் வழங்கப்படும். அது மோதல்களை ஊக்குவிப்பதற்கோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதற்கோ அல்ல. அவர்கள் அதனை தெளிவாக உறுதிசெய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணம் தொடர்பாக பேரனர்த்த, முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாவது:

கொள்கை வழிகாட்டி ஆவணம் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை பாதிக்காத வரை அரசு அதற்கு ஆதரவு வழங்கும். அது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானால் அரசுக்கு அதன் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை உண்டு. அதன் மீதான விசாரணைகளும் நடத்தப்படும். எனினும் விசாரணைகள் நிறைவுபெறும் வரை எந்த பெறுமதியான முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது என்றார்.

இது தொடர்பில் கனேடிய தூதுவரான அஞ்ஜெலா போக்டன் தெரிவித்துள்ளதாவது:

கொள்கை வழிகாட்டியானது ஒரு தெளிவான நடைமுறை, அது என்ன செய்யப்படுகின்றது, ஏன் செய்யப்படுகின்றது என்பதை கோடிட்டுக்காட்டும்.

மனிதாபிமான உதவிகள் மற்றும் அபிவிருத்தி உதவிகள் தொடர்பாக பெருமளவான தவறான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு எப்படி பணிகளை நடைமுறைப்படுத்துவது என்பதை நாம் ஆராய்ந்தால், முதலில் நாம் நிபுணத்துவமுள்ள பங்குதாரர்களை நியமிக்க வேண்டும். பின்னர் அதிகளவு முக்கியமானதை நாம் செய்ய வேண்டும் என்றார்.
நன்றி:புதினம்

இந்தோனேசியாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் சிறீலங்காவைச் சேர்ந்த இருவர் கைது.

[புதன்கிழமை, 30 மே 2007] இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட சிறீலங்காவைச் சேர்ந்த இருவரைக் கைது செய்திருப்பதாக, அந்த நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து இரண்டு போலியான கடவுச்சீட்டுக்கள், 520 மில்லியம் றுபியா (58,000 டொலர்), 1,003 டொலர், மற்றும் சில கடனட்டைகளைக் கைப்பற்றி இருப்பதாக, காவல்துறை ஆணையாளர் பச்ரியர் ஹசனுதீன் ரம்புனன்ஹே தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்க முன்னர் அவுஸ்திரேலிய கடற் பரப்பில் கைது செய்யப்பட்ட 83 பேரையும் இவர்களே அனுப்பி வைத்ததாகவும், அதற்காக 100 முதல் 150 மில்லியன் றுபியா ஒவ்வொருவரிடமும் இவர்கள் பெற்றிருப்பதாகவும் இந்த அதிகாரி மேலும் கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்ற 83 இலங்கையர்களையும் நவ்று என்ற தீவுக்கு திருப்பி அனுப்பியுள்ள அவுஸ்திரேலிய அரசு, அவர்களை அகதிகளாக ஏற்க முடியாதென அறிவித்திருந்தது. இவர்கள் அனைவரும் நவ்று தீவிலிருந்து இந்தோனேசியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், அவர்களை சிறீலங்காவிற்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக, இந்தோனேசிய அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருணா குழுவுடன் முரண்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் சுட்டுக்கொலை.!!

[புதன்கிழமை, 30 மே 2007]

அம்பாறை கல்முனை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் உந்துருளியில் சென்ற இரண்டு இனம் தெரியாதோரால் நேற்று காலை 7.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கல்முறை அம்மன்கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய இளையதம்பி சாந்தகுமார் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் இவர் முன்னர் நேரடியாக முரண்பட்டிருந்தவர் எனவும், கருணா ஒட்டுக் குழுவினரே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டிருந்தபோது சாந்தகுமாரை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 38 வயதுடைய ஆதம்பாபா ஜபார் படுகாயமடைந்து கல்முனை ஆதார மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறீலங்கா தமிழர்களுக்கு சொந்தமானது அல்ல: அவர்கள் தமிழ்நாட்டில் போரிடட்டும் - ஜா.ஹெ.உ

[புதன்கிழமை, 30 மே 2007] சிறீலங்கா தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல எனவும், அவர்கள் தமிழ்நாட்டிலேயே தனிநாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும், இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். ஜப்பானியர்களுக்கு ஜப்பான் போன்று, ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து போன்று, தமிழர்களுக்கு தமிழ்நாடு எனவும், அவர்களை சிறீலங்காவில் ஒரு இனமாகக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் தமது கட்சியின் தீர்வுத் திட்டத்தை கையளித்த பின்னர், ஜாதிக ஹெல உறுமய இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தமது தீர்வுத் திட்டத்தில் சிறீலங்காவிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் 270 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் எனவும், அவர்களில் 200 பேர் தொகுதிவாரியாகவும், 40 பர் தேசிய பட்டியல் மூலமும், 22 உறுப்பினர்கள் தொழிற்சங்களில் இருந்தும், 5 பேர் சிறிய கட்சிளின் உறுப்பினர்களாவும், 3 பேர் சிறுபான்மைக் கட்சிகள் சார்பாகவும், ஒருவர் வேடர் இனத்தில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தீர்வுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவை 20 முதல் 25 உறுப்பினர்களைக் கொண்டதாகக் குறைக்கப்பட வேண்டும் எனவும், ஆகக் கூடியது 30 துணை அமைச்சர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், இந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 29, 2007

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடான ஏ9 நெடுஞ்சாலை 48 மணித்தியாலத்தினுள் திறக்கப்படும் சாத்தியம்.!!

[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007] [virakesari.lk] ஓமந்தையூடான ஏ9 நெடுஞ்சாலை 48 மணித்தியாலத்தினுள் மீண்டும் பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விடயம் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் (ஐ.சி.ஆர்.சி) அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளுடன் நேற்று தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் ஓமந்தை சோதனைச்சாவடியை திறத்தல் அல்லது நாளொன்றுக்கு மூன்று மணிநேரம் என்ற ரீதியில் ஞாயிறு தவிர்ந்த ஆறு நாட்களுக்கு சோதனைச் சாவடியை திறத்தல் ஆகிய இரு யோசனைகளை ஐ.சி.ஆர்.சி. முன்வைத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக நேற்று நண்பகலளவில் ஆராய்ந்த பாதுகாப்பு அமைச்சு ஐ.சி.ஆர்.சி.யின் முதலாவது யோசனையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வாரத்தில் 3 நாட்கள் பாதையை திறக்கும் யோசனையை அரசாங்கம் ஏற்றுகொண்டுள்ளது. அந்த வகையில் நாளை அல்லது நாளை மறுநாள் ஓமந்தை சோதனைச்சாவடி போக்குவரத்துக்காக திறக்கப்படுமென தாம் நம்புவதாக தெரிவித்தார்.

வவுனியாவில் கிளேமோர் குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.!!

[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007]

வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் வீட்டின் கிணறு அருகில் குண்டு வெடித்ததில் மூவர் பலியாகினர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம் கிணற்றுக்கு உள்ளேயும், மற்றொன்று கிணற்றடியிலிருந்து 50 மீற்றர் தூரத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இக்குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

இரு பிள்ளைகளின் தந்தையான குமாரசாமி சுரேஸ்குமார் (வயது 32), சந்திரன் தனுசன் (வயது 26), சதீஸ்குமார் ஆகியோர் பலியானோர் எனத் தெரியவந்துள்ளது.

இறந்தவர்களில் ஒருவர் சிறுநீரக அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவர் என்றும் ஒட்டிசுட்டானை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் வழமை போல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் என்றும் அவர்கள் தயாரித்த குண்டு முன்கூட்டியே வெடித்தததாகவும் வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் வான்குண்டுத் தாக்குதல்: வயோதிப பெண் பலி- இருவர் காயம்.!!

[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழகு (வயது 56) கொல்லப்பட்டுள்ளார்.

வேணாவிலைச் சேர்ந்தவர்களான வி.இராசையா (வயது 60), நீ.ஜெயகதீஸ்வரி ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வான்குண்டுத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
நன்றி:புதினம்

வவுனியாவில் இளைஞர்கள் ஒட்டுக்குழுவால் சுட்டுக்கொலை.!!

[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007] வவுனியா தவசிக்குளத்தில் வைத்து படையினரால் ஊர்தியில் கொண்டுவரப்பட்டு நெற்று முன்தினமிரவு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை என பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 25 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட வெளியிடத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் படைப்புலனாய்வாளர்களும் தமிழ் ஒட்டுக்குழுக்களாலும் இப்பகுதிக்கு கடத்திவரப்பட்டு கண்கள், கைகள் கட்டப்பட்டு தலையின் பிறடிப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விளைஞர்கள் இருவரின் சடலங்களும் தற்பொழுது வவுனியா வைத்தியசாவையில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆலயக் குருக்களிடம் கப்பம் கேட்டு ஈ.பி,டி.பி கொலை மிரட்டல்.!!

[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007] இணுவில் கந்துசாமி கோயில் குருக்களிடம் பல லட்சம் ரூபாய் நிதியினை கப்பமாக கேட்டு யாழ். ஸ்ரான்லி வீதியில் உள்ள சிறீதர் தியட்டரில் முகாம் அமைத்து தங்கியுள்ள ஈ.பி.டி.பி. தேசவிரோத ஒட்டுக்குழுவினர் தொலைபேசி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் குருக்கள் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தவர்களும் தொடர்ந்து ஈ.பி.டி.பி ஒட்டுகுழுவினரால் நிதிகேட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால் அச்சமடைந்து இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது யாழ். குடாநாட்டில் படைப்புலனாய்வாளர்களும் ஒட்டுக்குழவினராலும் பிரசித்தம் பெற்ற இந்து ஆலயக்குருக்களிடம் லட்சக்கணக்கான நிதிகப்பமாக தமக்கு வழங்கவேண்டும் என்று மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் இவற்றை வெளியில் சொன்னால் கொல்லப்படுவீர்கள் என மிரட்டப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரத்தியேக பயிற்சிக்குச் சென்ற அதிரடிப்படையினரே கிளைமோரில் சிக்கினர்.!

[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007] கொழும்பு இரத்மலானையில் உள்ள பெலக்கடச் சந்திக்கும் மலிபன் சந்திக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 7 சிறப்பு அதிரடிப்படையினர் உட்பட 30 பேர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலில் சிக்கியவர்கள் சிறப்பு பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த அதிரடிப்படையினர் என்று கூறப்படுகின்றது. விசீடி கடை ஒன்றின் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டே தொலைதூர இயக்கி மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் அதிரடிப்படையினரின் ட்றக் வாகனம், 4 வான்கள், 2 கார், 3 முச்சக்கர வாகனங்கள், 2 உந்துருளிகள் ஆகியன சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை அதிரடிப்படையினரின் முகாமைச் சேர்ந்த டிறக் வாகனம் கற்ருகுருன்ட காவல்துறை பயிற்சி முகாமிற்கு கடந்த சனிக்கிழமை வந்ததாகவும், அது பின்னர் சிறப்பு பயிற்சி ஒன்றிற்காக சிறப்பு அதிரடிப்படையினரை ஏற்றிச்சென்ற வேளை கிளைமோரில் சிக்கியுள்ளது. இந்த வாகனத்தில் அதிரடிப்படையினரின் உப பரிசோதகர் உட்பட 9 வீரர்கள் பயணம் செய்துள்ளனர். குண்டு பொருத்தப்பட்ட கடையானது கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர் ஒருவருக்கு சொந்தமானது. இது வேறு ஒரு தரப்புக்கு வீடியோ கடை நடத்துவதற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. எனினும் குண்டு வெடித்த நேரம் கடை உரிமையாளரால் தனது கடைக்கு அருகில் உள்ள கடையில் சந்தேகத்திற்கு இடமான சிலரின் நடமாட்டங்கள் இருந்ததாக கல்கிசை காவல் நிலையத்தில் மருத்துவமனை பணியாளரால் புகார் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு இளைஞர்கள் தனது கடைக்கு அருகில் உள்ள கடை ஒன்றிற்குள் பிரவேசித்தாகவும். கடையை சுத்தம் செய்யத பின்னர் அவர்கள் வெளியேறி விட்டதாகவும் வீடியோ கடை உரிமையாளர் மருத்துவமனை பணியாளருக்கு தெரிவித்தாக கூறப்படுகின்றது. அருகில் இருந்த இரு கடைகளும் சில காலங்களாக பூட்டப்பட்டு கிடந்தமை குறிப்பிடத்தக்கது. காயமடைந்த அதிரடிப்படையினரில் ஒருவரினது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Monday, May 28, 2007

(4 ஆம் இணைப்பு) இரத்மலானை கிளைமோர் தாக்குதலில் பலியானோர் தொகை 7 ஆக உயர்வு.!

[திங்கட்கிழமை, 28 மே 2007, 18:03 ஈழம்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான இரத்மலானையில் சிறப்பு அதிரடிப்படையினின் ட்றக் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இன்று நடத்தபபட்ட கிளைமோர் தாக்குதலில் 2 பெண்கள் உட்பட பொதுமக்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 9 அதிரடிப்படையினர் உட்பட 21 பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரத்மலானையில் காலி வீதி பெலக்கட சந்திக்கு அருகில் வைத்தே இன்று திங்கட்கிழமை மாலை சுமார் 5.45 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினரின் ட்றக் வாகனம் வந்துகொண்டிருந்த போதே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

பெரும் அதிர்வுடன் கிளைமோர் வெடித்துச் சிதறிய போது அதிரடிப்படையினர் பயணம் செய்த வாகனம் பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த 9 படையினரில் நால்வர் படுகாயமடைந்த அதேவேளையில் 6 பெண்கள் உட்பட பொதுமக்களிலும் பலர் படுகாயமடைந்தார்கள்.

பெலக்கட சந்திக்கு அருகில் அமைந்துள்ள கடை ஒன்றில் இந்த கிளைமோர் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என விசாரணைகளை நடத்திவரும் காவல்துறையினர் தெரிவித்தனர். கிளைமோர் குண்டுத் தாக்கத்தினால் 2 உந்துருளிகளும், கார் ஒன்றும் பலத்த சேதமடைந்திருக்கின்றன. அருகே உள்ள கட்டடங்கள் சிலவும் சேதமடைந்திருக்கின்றன.

படுகாயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 பேரில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனைவிட பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவரும், கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவரில் பெண் ஒருவரும் மரணமடைந்துள்ளார்கள்.

இதனைவிட கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மற்றைய இருவரது நிலைமைகளும் கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொல்லப்பட்ட ஏழு பேரில் மூவர் மட்டுமே இன்று இரவு வரையில் அடையாளம் காணப்பட்டனர். தமது உறவினர்கள் யாராவது கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருக்கலாம் என்பதைக் கண்டறிவதற்காக இரவு வரையில் பெருந்தொகையான பொது மக்கள் மருத்துவமனைகளை முற்றுகையிட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதி போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், கொழும்பில் பதற்ற நிலைமையும் காணப்பட்டது.

தலைநகர் கொழும்பில் படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து ஒரு வார காலப்பகுதியில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

கடந்த வியாழக்கிழமை காலை புறக்கோட்டை, துறைமுகப்பகுதியில் படையினர் பயணம் செய்த பேரூந்து ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டது தெரிந்ததே. ஒருவார காலப்பகுதியில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

நன்றி:புதினம்

சிங்களத்துவ அரசியலின் சமூகவியல் அடிப்படைகளும் அரசியற் தீர்வுக்காண தேவைகளும் -பீஷ்மர்

[திங்கட்கிழமை, 28 மே 2007]

சென்ற வார நடுப்பகுதியில் `லங்காதீப' சிங்கள நாளிதழில் வந்த ஒரு கட்டுரை தென்னிலங்கை அரசியல் நோக்கிலும் போக்கிலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருடைய படங்களுடன் பிரசுரிக்கப்பட்ட அக் கட்டுரையில் சிங்கள அரசியல் தலைவர்களின் குழப்ப நிலை அதிகார மையங்கள் பற்றி மிக விரிவாக பேசப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்தையும் ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கு மருமகனாகவிருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதையும் அவரது சகோதரரின் ரி.என்.எல். வானொலி ஒலிபரப்புப் பற்றியும் தகவல்களைத் தந்துள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ பற்றிய தகவல்கள் மிக சுவாரஷ்யமானவை. இவரது தகப்பனார் டி.ஏ.ராஜபக்‌ஷ. அவர் முன்னர் ஸ்ரீமா அரசாங்கத்தில் உதவி அமைச்சராக இருந்தவர். அவரது சகோதரர் டி.எம்.ராஜபக்‌ஷ இவர் முன்னர் உப அமைச்சராகவிருந்து முக்கிய இடம் வகித்த ஜோர்ஜ் ராஜபக்‌ஷவின் தகப்பனார். ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு அம்பாந்தோட்டையில் நில புலங்களின் அடிப்படையில் மிகுந்த செல்வாக்கு உண்டு.

டி.ஏ.ராஜபக்‌ஷவின் மறைவின் பின்னரே மகிந்த ராஜபக்‌ஷ அரசியலுக்கு வருகிறார். பஷில் ராஜபக்‌ஷவும் சமல் ராஜபக்‌ஷவும் இவரது சகோதரர்கள். சமல் ராஜபக்‌ஷ தமயன், பஷில் ராஜபக்‌ஷ தம்பி. சந்திரிகா குமாரதுங்கவினுடைய முதலாவது அமைச்சுக் காலத்திலிருந்து இவர் அமைச்சராகவிருந்து வருகின்றார். முதலில் இவர் மீன்பிடித்துறை அமைச்சராகவிருந்தவர். இதன் காரணமாக கடலோர சிங்களக் கிராமங்களில் தனது செல்வாக்கைப் பதித்துக்கொண்டவர்.

குறித்த அந்தக் கட்டுரையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தனது தளமான அம்பாந்தோட்டையையே தனது அரசியல் மையமாகக் கொண்டுள்ளனர் என்றும் நாட்டின் ஜனாதிபதி என்கின்ற முறையிலும் அம்பாந்தோட்டையில் அபிவிருத்திக்கு தனித்த விசேட இடம் கொடுக்கின்றார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போன்று பல்வேறு தென்னிலங்கை அரசாங்கங்கள் எல்லாக் காலத்திலும் எப்படியோ தமது குடும்பச் சுற்றை அரசியல் மையமாகக் கொண்டுள்ளனர் என்பது அது நன்றாக விளங்குகிறது. அந்தப் பின்புலத்திலேயே இப்போதைய ஜனாதிபதி தனது சகோதரர்களை நம்பியிருக்கின்றார் என்று கருத்துத் தொனிக்கும் படியாக எழுதப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளருடனான உறவு தெளிவாக எடுத்துக்கூறப்படவில்லையெனினும் அவரும் இந்தப் பெருங் குடும்பத்தின் அங்கத்தவரே. அவர் இலங்கை இராணுவத்தில் இருந்தவர் என்பதும் பின்னரே அமெரிக்கா சென்றார் என்ற கதையும் பலருக்குத் தெரிந்ததே.

இவரைப் பற்றி பேசும்பொழுது இவர் லலித் அத்துலத் முதலியின் வடமராட்சி ஒப்பிரேஷனின் பொழுது முக்கிய இடம் வகித்த இராணுவ வீரர். மேற்குறிப்பிட்ட கட்டுரை தென்னிலங்கை அரசியல் அதிகார மையங்களின் சமூகவியல் உண்மைகள் பலவற்றை வெளிக்கொண்டு வருகின்றது. அவற்றுள் பிரதானமானது அதிகாரத்துள்ளவர் எப்பொழுதும் இரத்த உறவினருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளமையை அறிந்துகொள்ளலாம்.

அது மாத்திரமல்ல ஏதோவொரு வகையில் இவற்றில் பெரும்பாலானவை தமக்குள் தாமே குடும்பப் பிரக்ஞையையையும் கொண்டிருந்தன.

இந்தப் பொது விதிக்குள் பிரேமதாச வரார். சிங்கள அரசியலில் குலத்துவேசங்கள் முற்றாக அழிக்கப்படாமலேயே இருந்தன என்பதற்கு அவருடைய அரசியல் வாழ்க்கை வரலாறு ஒரு நல்ல உதாரணமாகும். மேற்குறிப்பிட்ட கட்டுரையில் குறிப்பிடப்படவில்லையெனினும் தென்னிலங்கை அரசியலிலே சாதி (குலம்) அடிப்படை மிக முக்கியமானதொரு இடத்தைப் பெறுகின்றது.

சமகாலத்தை எடுத்துக்கொண்டால் இலங்கைத் தமிழரின் அரசியலில் காணப்படாத சாதிப் பிரக்ஞை சிங்கள அரசியலில் இன்னும் முக்கியமாகவுண்டு. மங்கள சமரவீரவை ஜனாதிபதி கைகழுவி விட்டு விடாமைக்கான காரணம் அவருடைய சாதியே ஆகும். அவரது தகப்பனார் மகாநாம சமரவீர பொதுவுடைமைக் கட்சியினூடாக அரசியலை ஆரம்பித்திருந்தாலும் அந்தக் குலத் தளத்தையே முக்கியமாகக் கொண்டிருந்தார். காலி மாத்தறைப் பகுதியிலும் ரம்புக்கனைப் பகுதியிலும் இச் சாதியினருக்கும் அரசியல் பலம் உண்டு.

தென்னிலங்கையின் அரசியலில் குறிப்பாக கடலோரப் பகுதியின் அரசியலில் முக்கியம் வகிக்கின்றது சாதிக்குழப்பம் `சலாகம' என்போர் ஆவர். டொக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, சி.பி.டி.சில்வா ஆகியோர் இந்தப் பின்புலத்தையுடையவர்களே. கொல்வின் அதற்குள்ளிருந்து வெளியேவர விரும்பியபொழுது கொழும்பு தெற்குத் தமிழர் வாக்குகள் மிக முக்கியமாகின்றன. சலாகமவிலும் பார்க்க முக்கியமுடைய சாதிக் குழுமம் `கறாவ' எனப்படும் மீன்பிடிக் குலமாகும்.

தமிழிலுள்ள கரையார் என்ற சொல்லே சிங்களத்தில் கறாவ என்று நிற்கின்றது. விவசாயிகளான `கொய்கமவினரே மேலிடத்தைத் பெறுவர். கண்டியச் சிங்களவர்கள் உடரட்ட சிங்களவர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் வந்து விடுவர்.

சிங்கள அரசியலைப் புரிந்து கொள்வதற்கு இச் சமூகவியல் உண்மைகளை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால், அதிலும் பார்க்க முக்கியம் இந்த அடித்தள குல நிலைப்பாடுகள் தமிழர் பிரச்சினை விடயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதாகும்.

இவற்றை மனங்கொண்டு சிந்திக்கும் பொழுது ஒரு முக்கிய சமூகவியல் வரலாற்று உண்மை தெட்டத்தெளிவாகின்றது. அதாவது சிங்கள- பௌத்தவாதம் சாதியடிப்படையிலிருந்து இன்னும் விடுபடவில்லை யென்பதாகும். உண்மையில் தங்களிடையே நிலவும் குல முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள அவர்கள் சிங்களத்துவத்தை முதன் நிலைப்படுத்துகின்றனர் என்பதை பல அரசியல் அறிஞர்களும் சமூகவியலாளர்களும் தவறாது எடுத்துக் கூறுகின்றனர்.

இலங்கையில் தமிழ்ப் பிரக்ஞை வந்த வழி சாதிக்குழும அடிப்படைகளை ஊடறுத்துச் செல்வதாகவும் அவ் அடிப்படையை புறக்கணிப்பதனை அவதானிக்க வேண்டும். அதற்கான பிரதானமான காரணம் தென்னிலங்கையின் சிங்கள எழுச்சி சகல தமிழர்களினதும் மொழியுரிமைகளுக்கும் பெரும் சவாலாக அமைந்ததே. இதனால், இலங்கைத் தமிழர்கள் அரசியல் ரீதியாக முகங்கொடுப்பதற்கு இரண்டு முக்கிய நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியது அவசியமாயிற்று. ஒன்று சாதியடிப்படைக்கு அப்பாலே செல்லுதல், இரண்டு பிரதேச அடிப்படைக்கு அப்பாலே செல்லுதல் .

தமிழ்- சிங்கள மொழிகள் மூலம் கல்வி முதல் உத்தியோகத்துக்கான தெரிவுகள் செய்யப்பட்டமையால் தமிழை மையமாகக் கொண்டு தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய ஓர் அரசியல் வரலாற்றுத் தேவை இங்கு உருவாயிற்று.

தமிழகத்தில் நிலைமை வேறு. அங்கு கல்வி, உத்தியோகம் என்பன ஏதோவொரு வகையில் சாதியடிப்படையிலேயே இன்னும் இயங்குகின்றது.

இவ்விடயம் ஆழமானதொன்றாகும். ஆனால் இங்கு இப்பொழுது எமக்கு முக்கியமாவது மொழியுரிமை. சமூக ஒற்றுமையில் தளமாகவும் அரசியற் தேவையாகவும் அமைந்துள்ளமையாகும். இதனுள்ளும் ஒரு சிக்கலுள்ளது. இந்த மொழியுரிமையே முக்கியமானது என்பதன் காரணமாகவே சமஷ்டிக் கட்சியினர் தமிழ் பேசும் மக்கள் என்ற கரத்தினை முன்வைத்தார். ஆனால் முஸ்லிம்கள் அதனை ஏற்கவில்லை. இதனால் மொழியுரிமையும் இன உணர்வும் சிங்கள, தமிழர் உறவில் குறிப்பாக தமிழர் பிரக்ஞையில் முக்கியமாகின்றது. இலங்கைத் தமிழருடைய அடித்தள நிலைப்பாடு அவர்கள் ஒரே வேளையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவுமிருக்க விரும்புகின்றனர். இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு என்பது இந்த உண்மையை மனங்கொள்வதாக இருத்தல் வேண்டும்.

ஆனால் மேலே கூறிய சிங்கள அரசியல் பிரக்ஞையின் சமூகவியல் அதற்கு இடம் தருவதாக அமையவில்லை. தங்களின் சிங்கள தன்மையை வலியுறுத்த வேண்டும் என்பதற்காக இவர்கள் இலங்கை என்பது சிங்களமே என்று கொள்கின்றார்கள். இந்த பலவீனத்திலிருந்து சிங்கள அரசியல் விடுபடும் வரை இலங்கைக்கு விமோசனம் இருப்பதாக தெரியவில்லை.

(3 ஆம் இணைப்பு) இரத்மலானையில் அதிரடிப்படையினரின் வாகனம் மீது குண்டுத் தாக்குதல்: 24 பேர் காயம்.

[திங்கட்கிழமை, 28 மே 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள இரத்மலானையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் இரத்மலானை பெல்லக்கடைச் சந்தியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக இடம்பெற்றது. கட்டுக்குருந்தவில் இருந்து கொனகெனவுக்கு சிறப்பு அதிரடிப்படையினரை ஏற்றிச்சென்ற வாகனத்தை இலக்கு வைத்து நடதத்தப்பட்ட இத்தாக்குதலில் 4 சிறப்பு அதிரடிப்படையினரும் 20 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு கிளைமோர் குண்டுத் தாக்குதல் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

உண்மையைக் கூற மறுத்துவரும் அதிகாரிகள்.

[திங்கட்கிழமை, 28 மே 2007]

யாழ் குடா நாட்டில் கடமையாற்றும் பல உயர் அதிகாரிகள் உண்மையைப் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தாது ஏமாற்றிவருகின்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் மீது கட்டுப்பாட்டு விலையை கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும் எந்த வகையான நடவடிக்கையையும் இந்த அதிகாரிகள் தொடர்ந்து மேற் கொள்வதில்லை. வர்த்தகர்கள் குறிப்பிடும் விலையை இவர்கள் சட்டப்படி பொது மக்களுக்கு ஏற்று வெளிப்படுத்தும் நடவடிக்கையே இடம் பெற்று வருகின்றது.

விலைப்பட்டியல் வர்த்தக நிலையங்களில் வைக்கப்படுவதும் இல்லை. கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்கள் விற்க்கப்படுவதும் இல்லை. வெறுமனே பொருட்களின் கட்டுப்பாட்டு விலையென ஒரு விலையை வர்த்தகர்கள் அரச அதிகாரிகள் மூலம் குறிப்பிடடு பின்னர் அதிலும் பார்க்க கூடிய விலைக்கு விற்க்கும் நிலமையே காணப்படுகின்றது.

இதே போன்று கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக வலிகாமம் பகுதிக்கான தொலைத் தொடர்புகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இத்துடன் அண்மையில் சிற்றி லிங் இனைப்பு மூலம் இணைப்புகள் வலிகாமம் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போதிலும் தற்போது யாழ் குடா நாட்டு மக்களின் பணத்தை சுரண்ட விருப்பமில்லை யென்பதைப் போன்ற ஒரு கற்பனையை ஏற்படுத்தி இன்னும் இரு வாரத்தில் 12 ஆயிரம் ரூபா விலையில் தொலை பேசிகள் விலை குறைந்துள்ளமையால் அதன் பின்னர் இன்னும் இரு வார காலத்தில் குறிப்பி;ட இணைப்புகள் வழங்கப்படும் என ஊடகங்கள வாயிலாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

உண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சிற்றி லிங் வழங்குவதற்கான அனுமதியை இராணுவத் தலைமையகம் வழங்க மறுத்துள்ள போதிலும் தமக்கு மட்டும் குறிப்பிட்ட இணைப்புகளை வழங்கும் படி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது இதனை குறிப்பிட்ட அதிகாரிகள் பொது மக்களுக்கு தெரிவிக்காது ஏமாற்றி வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக படையினரும் பொலிஸாரும் குவிப்பு.

[திங்கட்கிழமை, 28 மே 2007]

யாழ். பல்கலைக்கழகம் இன்று வழமை போன்று இயங்கத் தொடங்கியுள்ளது கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவாகள் கடத்தப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைப்பயமுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து வகுப்புக்களைப் பகிஸ்கரித்து வந்தார்கள்

யாழ்ப்பாணத்தின் கல்விமான்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் வழங்கிய உறுதி மொழிகளைத தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்கள்

இதே நேரம் பல் கலைக்கழக சுற்றாடலில் இராணுவத்தினரும் காவல் துறையினரும் வழமைக்கு மாறாக அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தாhகள் குறிப்பாக பல்கலைக்கழக பிரதான வீதியின் முன்பாக பொலிஸாரும் படையினரும்; துப்பாக்கிகளை சுடு நிலையில் ஏந்திய வண்ணம் கடமையில் ஈடுபட்டு இருந்தார்கள்

அத்துடன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிட வாசல் பிறவுன்றோட் சந்தி வளாக பின்புறம் என நான்கு புறமும படையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டு இருந்ததுடன் இளம் வயதினரை சோதனைகளு;க்கும் உட்படுத்தினார்கள்

இந்தப் பகுதியில் வழமைக்கு மாறாக படையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டு இருந்தமையால் இந்தப் பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் மத்தியில் பெரும் பதட்டமான நிலமை காணப்பட்டது

மேற்குலக கரிசனையும் இந்திய கடும்போக்கும்.

[திங்கட்கிழமை, 28 மே 2007]

-சி.இதயச்சந்திரன்-

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இனவாத வேர்கள் பரவிப்படர்ந்து சகல பெரும்பான்மையின அரசியல் சக்திகள் மத்தியிலும் ஆழமாக ஊடுருவி இன்று ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்கிற எல்லைகளைக் கடந்து பேரெழுச்சி கொண்டுள்ளது.

தமிழின விடுதலை எழுச்சியின் குறியீடாக விளங்கும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதென்கிற பேரினவாத உந்துசக்தி சிங்கள இனத்தின் முழுமையான அரசியல் சக்திகளையும் இனவன்மக் கோட்பாட்டோடு இணைய வைத்துள்ளது. இவற்றையெல்லாம் சர்வதேசம் புரிந்துள்ளதென்பதை ஊகிக்கக் கூடிய சக்தியும் தமிழ் மக்களுக்கு உண்டு.

ஜனநாயக வழியில் அதற்கான தீர்வினை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும் தேர்தல் மூலமும் தமிழ்மக்கள் உலகிற்குத் தெரிவித்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலமாகிறது.

ஆயுதப்போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கும் மேற்குலகம் அன்று முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களைக் கருத்திற்கொள்ளவில்லை.

அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்திலும் ஆயுதப் போராட்டத்திற்கு முற்பட்ட காலத்து நாடாளுமன்ற வழிமுறையிலமைந்த ஜனநாயகப் போராட்டங்கள் பற்றி எவருமே குறிப்பிடவில்லை. அதுகுறித்துப்பேசி ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாமென்பதால் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது போல் தெரிகிறது.

தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது என யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் ஏற்றுக் கொண்டாலும் இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றுவோம் என்றும் அவர் அறுதியிட்டுக் கூறுகிறார். எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை இவருக்கும் தெரிகிறது.

போராடி இன உரிமையை மீளப் பெறக்கூடாது. அதேவேளை மாவட்ட சபைத் தீர்வும் பிரயோசனமற்றது. ஆகவே இதை எப்படித் தீர்க்கலாமென்பதே சர்வதேசத்தின் முன்பாகவுள்ள பாரிய சிக்கல் நிலை.

இலங்கை அரசு சீனாவின் கையில் மாட்டுப்படாமல் தவிர்ப்பதற்கு என்ன வகையான உத்திகளைப் பிரயோகிக்கலாமென்றே மேற்குலகின் முன்னுள்ள பிரதானமான பிரச்சினையாகவும் தீர்க்க முடியாத சிக்கலாகவும் உள்ளது.

போர்நிறுத்த காலம் நீடித்தால் விடுதலைப் புலிகள் அழிந்து போவார்களென்ற கணிப்பு முதன்மையான உத்தியாக மேற்குலகால் உருவகிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியைக் கொண்டுஇ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்து சின்னாபின்னமாக்கலாமென முயற்சித்தார்கள்.

அம் முயற்சியையும் மீறி புலிகளின் பலமும் பிரதேசக் கட்டுப்பாடும் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் உடைந்த உதிரிகளின் இயக்கம் பற்றிய இராணுவ அறிவை உபயோகித்து கிழக்கிலிருந்தே புலிகளை அகற்ற முயன்ற அரசின் இராணுவ முனைப்பினை விழித்திருந்து அவதானித்தது சர்வதேசம். இதற்கு முன்பாக மேற்குலகின் நன்மதிப்பைப்பெற்ற ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பகிஷ்கரிப்பால் தோல்வியைத் தழுவினார்.

இதனால் வெகுண்டெழுந்த மேற்குலகு தருணம் பார்த்து ஐரோப்பிய ஒன்றியம் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது. தொடர்ந்த தடைகளும் தனிநபர் கைதுகளும் விடுதலைப் புலிகளுக்கு புலம்பெயர் மக்களிடமிருந்து கிடைக்கும் பொருண்மிய உதவிகளை தடுக்குமென கற்பிதம் கொள்ளப்பட்டது.

பி.பி.சி. கிளப்பிய கடனட்டை விவகாரமும் இவ்வகையான பின் புலத்திலேயே இழிநிலை பரப்புரையாக மேற்கொள்ளப்பட்டதாக ஊகிக்கலாம். சகலவிதமான தடைகளையும் அழுத்தங்களையும் மீறிஇ விடுதலைப் புலிகளின் இராணுவ பலம்இ வான்புலியாக விஸ்வரூபம் கொண்டெழுந்தபோது புலி அழிப்புச் சூத்திரம் புஸ்வாணமாகிப் போனதை புரிந்து கொண்டது மேற்குலகம்.

பேச்சுவார்த்தை நீட்சியின் இடைநடுவில் ஏற்படுத்தப்பட்ட இராணுவ களத்தில் விடுதலைப் புலிகள் தற்காப்பு நகர்வுகளை மேற்கொண்டார்கள். அதேபோன்று சர்வதேசத்தால் விரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தகளத்திலும் விடுதலைப் புலிகள் தமது அரசியல் நிலைப்பாடுகளை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தினூடாக வெளிப்படுத்தினார்கள்.

இவ்விதமாக இரண்டு களங்களும் புலிகளால் உருவாக்கப்படவில்லையென்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும். 87 இலிருந்து புரிந்துணர்வு ஒப்பந்த காலம்வரை தமது இராணுவ களத்தினை தமக்கேற்றவாறு புலிகள் உருவாக்கினார்களென்பதே உண்மையாகும். மற்றவர்கள் உருவாக்கிய நாடக மேடையில் புலிகள் ஆடவில்லை. தம்மால் உருவாக்கப்பட்ட மேடையிலேயே அவர்கள் பல பிரதேசங்களை கைப்பற்றியுள்ளனர்.

வான் புலிகளின் தாக்குதல் சர்வதேசத்தின் இரட்டை வேடம் கலைக்கப்பட்டு ஒரு வழியில் நகர்வதற்கு முன்னெடுக்கப்பட்ட 'தடை நீக்கித்" தந்திரமாகவும் கொள்ளலாம்.

ஏனெனில் வான் புலிகளின் பிரதேசத்தை தற்காப்புத் தாக்குதல் வலிந்த தாக்குதல் என்கிற வரையறைக்குள் அடக்க முடியாது.

இடம்பெயரா அசைவினை பெயர்த்தெடுத்து நகர்வினை உட்புகுத்திய மூலவிசையாகவே வான் புலித் தாக்குதலை நோக்க வேண்டும். தேக்கமுற்று நகராமல் ஸ்தம்பித்து நின்ற பேராட்டத்திற்கு அடுத்த கட்ட அளவு ரீதியான பாய்ச்சலிற்கு உந்துவிசையாகவே வான் பிரவேசம் கருதப்படும்.

இனிப் புதிய அரசியல் இராணுவ தளங்களை இந்தியாவோ அல்லது மேற்குலகமோ தயார்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்க விடயமாக விடுதலைப் புலிகள் குறித்தான இந்திய கடும் போக்கில் மாற்றமேற்படும் சாத்தியப்பாடுகள் தற்போது அரிதாகவே தென்படுகின்றன.

அதிகரிக்கும் மேற்குலகக் கரிசனை இக் கடும் போக்கினை மென்மேலும் வலுவூட்டுகிறது. தமிழகத்தைத் தமது வெளியுறவுக் கொள்கையின் அனுசரணையாளராக மாற்றி விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பலத்தினை சிதைப்பதால் பெரியளவில் மாற்றமெதனையும் இந்தியாவால் உருவாக்க முடியாதென்பதையும் அது விரைவில் உணரும்.

தென்னாசியப் பிராந்தியத்தில் தமது தோல்வியுறும் வெளியுறவுக் கொள்கை குறித்து மீள்பரிசீலனை செய்யும் கால அவகாசம் குறுகியதாகவுள்ளதென்பதையும் இந்தியா விரைவாக உணர வேண்டும்.

ஏனெனில் இலங்கைக்கு பொருத்தமாகவிருக்கும் மூன்றுவிதமான தெரிவுகள்இ அதன் எதிர் நிலையாகவுள்ள விடுதலைப் புலிகளுக்கும் உண்டென்பதை யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் எவரும் இலகுவில் புரிந்துகொள்வர். அதேவேளை வட இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு தமிழ்த்தேசிய விடுதலை பற்றிய விழிப்புணர்வோ அல்லது கரிசனையோ இருக்குமெனக் கற்பிதம் கொள்வது மிகத் தவறான பார்வையாகும். அவர்கள் தமது பிராந்திய நலனை நிலை நிறுத்தவே தமிழ் விடுதலை இயக்கங்களை வரவேற்று தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இயங்க அனுமதித்து இலங்கை பலவீனமடைந்த நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள்.

தற்காலிகமாக வட கிழக்கை இணைத்தார்கள். பெயரளவில் மாகாண சபையாகவும் செயலளவில் கிராம சபையாகக் கூட இயங்க முடியாத நிலையில் அச்சபை இருந்தது. கோயில் காணி உரிமை கூட அதற்குக் கிடையாது.

ஏதோ இந்தியப் பரிந்துரைப்பான மாகாண சபையை இயங்க விட்டிருந்தால் பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு ஆழமாகச் சென்றிருக்காது என வாதிடுவோர்இ கடைசிக் காலத்தில் நிர்வாகப் பரவலாக்கம் குறித்து மாகாண சபை மண்டபத்தில் நிகழ்ந்த காரசாரமான விவாதங்கள்பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

மாகாண சபையில் பங்கெடுத்தவர்களே அரசுடன் இனப்பிரச்சினைக்கான காத்திரமான தீர்வினை எட்டுவது சாத்தியப்பாடற்ற விடயமென்பதை அனுபவத்தினூடாகப் பெற்று ஈழம்தான் இறுதி முடிவெனப் பிரகடனம் செய்தது சாசுவதமான உண்மை.

பௌத்த இன மேலாதிக்க வாதம் தமிழ் மக்களின் சுயாட்சிக்குரிய உரிமையை நிச்சயம் வழங்காதெனத் தெரிந்தும் தமது நலன்களை நிறைவேற்ற எமக்குச் சார்பானவர்கள் போல் நடித்து பின் தமது நோக்கம் நிறைவேறியவுடன் எம்மை அடக்க முயற்சித்ததே இந்தியாவின் தந்திர உத்தியாக விருந்தது.

தாம் அழிக்க முனைந்த புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் பெற்ற பின்விளைவுகளை ஆயுதப் போராட்ட முதன்மைச் சக்திக்கெதிரான கடும் போக்கு நிலையாக மாற்றி இலங்கையுடன் தற்போது கூட்டுச் சேர்ந்துள்ளது இந்தியா.

அதாவது இலங்கையை அடிபணிய வைக்க முன்பு விடுதலைப் புலிகளை அழிக்க தற்போது இந்தியாவிற்கு இலங்கை தேவைப்படுகிறது. இலங்கையினுள் வேறெவரும் புக முடியாதவாறு தடுப்பதற்கு அங்கு நிலை கொண்டுள்ள இருவேறு எதிர்ச் சக்திகளையும் தமது மூலோபாயதிற்கேற்றவாறு பயன்படுத்துவதே இந்தியாவின் தந்திரோபாயமாகும்.

இதுதான் இலங்கை தொடர்பான இந்தியாவின் முதன்மையான வெளியுறவுக் கொள்கை.

ஆயினும் தமிழ் மக்களின் சுயநிர்ணய பிறப்புரிமையை உள்வாங்கி அங்கீரித்தவாறு தமது தென்னாசிய பிராந்தியத்தின் வெளியுறவுக் கொள்கையினை மீள் உருவாக்கம் செய்வதே இந்தியாவிற்கு முன்னுள்ள ஒரே தெரிவாக அமையப்போகிறது.

இந்தியாவின் பங்குபற்றுதல் இல்லாமல் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்கிற பொதுமைப்படுத்தப்பட்ட கூற்றின் அடிப்படையைக் கொண்டு அதனால் உருவாகும் சுயபெருமிதத்தின் அளவுகோலால்இ பழைய வெளியுறவுக் கொள்கையை சாகாவரம்பெற்றது போன்று நினைத்தால்இ வரலாறு அதை மாற்றிவிடும்.

கன்னியாகுமரிஇ கச்சதீவு மாலைதீவு என இலங்கையைச் சூழ எவ்வகையான வியூகங்களை வகுத்தாலும் மையச் சக்தியை ஊடுருவி கையகப்படுத்தலென்பது இலகுவானதல்லதென்பதைஇ சர்தேச மயப்படுத்தப்பட்ட இனப்பிரச்சினை இந்தியாவிற்கு உணர்த்தியபடியே இருக்கும். பௌத்த சிங்கள இன மேலாதிக்க எழுச்சி சகல தளங்களிலும் விரிவடைந்து சிங்கள மக்களிடையே இரண்டறக் கலந்து புதுக்கோலம் பூண்டுள்ளது.

அவ்வெழுச்சிஇ பொருளாதாரத் தடை விதிக்கும் உலக வல்லரசுகளுக்கு எதிராகவும் போர்க்கோலம் கொள்கிறது. நோர்வே தேசியக் கொடி எரிப்பிலிருந்து ஆரம்பமாகி உலக மயமாக்கிகள் யாவரையும் (சீனாவைத் தவிர்த்து) உதாசீனம் செய்யும் போக்குவரை வளர்ந்த இன மேலாதிக்க எழுச்சியை ஏகாதிபத்தியங்களுக்கெதிரான முற்போக்கானபோக்கென்று கணிப்பிடுவது சில சக்திகளுக்கு இலகுவான சிந்தனையாக இருக்கும். திரும்ப திரும்பச் சுழன்று மிதக்கும் தவறான முடிவுகள் யதார்த்த நிலையிலிருந்து அந்நியமாகும் போக்கிற்கே வழிசமைக்கும்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (27.05.07)

புலிகள் குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.!!

[திங்கட்கிழமை, 28 மே 2007]

யாழ் குடாநாட்டை கைப்பற்றுவதற்கான புலிகள் பாரிய முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது..

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் முக்கிய படைதளபதிகள், புலனாய்வு பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்..

இச்சந்திப்பின் போது யாழ் குடா நாட்டை கைப்பற்றுவதற்கான போர் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் தெரிவித்துள்ள்து.

வீரகேசரி

புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளனர்: சரத் பொன்சேகா. !

[திங்கட்கிழமை, 28 மே 2007]

தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்த விகாரையில் மல்வத்த மகாநாயக்கர் திப்படுவவெ சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் கூறியதாவது:

150 விடுதலைப் புலி பயங்கரவாதிகள், இராணுவத்திடம் சரணடைந்து விட்டனர். இராணுவத்திடம் சரணடைந்த 6 சிறார்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலி பயங்கரவாதிகள் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளனர். ஆள் பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறையில் புலிகள் உள்ளனர். தமிழ் மக்களால் பயங்கரவாதிகள் வெறுத்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் வெற்றியடைந்துவருகின்றன. இருப்பினும் உண்மை நிலையை அறியாமல் இராணுவத்தை இன்னமும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்றார் அவர்.

"கொலை செய்வதை பௌத்தர்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் அமைதியை நிலைநாட்ட இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும்" என்று அஸ்கிரிய மகாநாயக்கர் உடுகம சிறி புத்தரக்கித தேரர் தெரிவித்தார்.

உச்சநிலையில் உள்ளக மோதல்: கருணாவுக்கு பிள்ளையான் இறுதி எச்சரிக்கை.

[திங்கட்கிழமை, 28 மே 2007]

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உள்ளக மோதல் உச்சநிலையை அடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தி விவரம்:

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் குழுவிலிருந்து கருணா விலக வேண்டும் அல்லது பலவந்தமாக வெளியேற்றப்படும் அவமதிப்பான நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று அக்குழுவைச் சேர்ந்த பிள்ளையான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருணா குழுவின் உள்ளக மோதலை முடிவுக்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி மற்றும் பிள்ளையானுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றால் அக்குழுவுக்குள் உள்ளக மோதல் வலுத்தது.

கிழக்கில் தொப்பிக்கலவை மீள எடுக்கவும் வடக்கில் ஆனையிறவை மீள எடுக்கவும் கருணாவும், பிள்ளையானும் தேவைப்படுவதால் சிறிலங்கா இராணுவத்தால் எதுவித நிலைப்பாடும் எடுக்க இயலவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் உயர்நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் இராணுவம் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தள தகவல்களை பிள்ளையான் குழு வழங்கியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே நேரத்தில் ஆனையிறவிலிருந்து புலிகளை வெளியேற்ற கருணாவை பயன்படுத்திக்கொள்ளவும் இராணுவம் விரும்புகிறது.

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ பேச்சாளர் அசாத் மௌலானா, பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோருடன் உடனிருந்த முக்கியமானவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர்.

திருகோணமலை பகுதியில் தூயவன், மார்க்கன், ஜெயம், சீலன் மற்றும் அஜித் ஆகியோரை உள்ளடக்கிய பிள்ளையான் குழுவில் 800 பேரும் மங்களன் மாஸ்ரர், பாரதி, திலீபன், சின்னத்தம்பி ஆகியோரை உள்ளடக்கி கருணாவிடம் 400 பேரும் உள்ளனர்.

அண்மையில் நடந்த சமரச முயற்சிகளை பயன்படுத்தி பிள்ளையானின் சகாக்கள் பலரை கருணா குறி வைத்ததாகவும் இதில் முன்னாள் பேச்சாளர் தூயவன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. அக்குழுவின் இராணுவப் பிரிவு பொறுப்பிலிருந்து பிள்ளையான் விடுவிக்கப்படுவதாகவும் கருணா தொடர்ந்து தலைவராக இருப்பார் என்றும் அந்தக் குழுவின் கொழும்பு அலுவலகம் தெரிவித்திருந்தது.

"அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் பெண்கள் உட்பட பிள்ளையானின் சகாக்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கருணா குழு ஒழுங்கற்று குழப்பமாக உள்ளது. பிள்ளையானின் சகாக்களை கருணா கொல்லத் தொடங்கியதையடுத்து கருணா கட்டுப்பாட்டு முகாம்களை கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது" என்று அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட அளவான 1.5 மில்லியனுக்கு அப்பால் 4 மில்லியன் பணத்தை ஒதுக்கிக் கொண்டதைத் தொடர்ந்து இந்த உள்ளக மோதல் உருவானது.

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளுக்கு மாதம் ரூ. 160 மில்லியன் வருமானம் வருவதாகவும், இதில் 80 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு இதர தொகை சேமிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அண்மையில் தனது சகாவான இனிய பாரதியை நிதிப் பொறுப்பாளராக கருணா நியமித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிள்ளையான் இது குறித்து கேள்வி எழுப்ப பிளவு ஏற்பட்டது. தன்னை பலப்படுத்திக்கொள்ள கடத்தல் மற்றும் சிறார்களை சேர்க்கும் நடவடிக்கையை கருணா மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நன்றி:புதினம்

அரசும் புலிகளும் இராணுவ வெற்றியிலேயே அதிக நம்பிக்கை அதனால் போர் புரிவதில் வெகு தீவிரம்! விரைவில் யுத்தம் வெடிக்கும் அபாயம்.!

[திங்கட்கிழமை, 28 மே 2007]

அரசாங்கப் படைகளும் விடுதலைப் புலிகளும் தமக்கே வெற்றி கிட்டும் என்று அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றன. அதனால், அவை போரை நடத்துவதிலேயே வெகு தீவிரமாகக் காணப்படு கின்றன
இத்தகைய பின்னணியில் எதிர்வரும் வாரங்களில் போர்வெடித்து, வன்முறைகள் அதிகரித்து இரத்த ஆறு ஓடும் சாத்தியம் நிறையவே உண்டு.
இவ்வாறு இலங்கை நிலைமை குறித்து இராஜதந்திரிகள் கணிப்பீடு செய்திருக்கிறார்கள்.

சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, இலங்கையின் நிலைமை குறித்த தனது ஆய்வில் இவ்வாறு இராஜதந்திர வட்டா ரங்களை மேற்கோள் காட்டித் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

அமைதி முயற்சிகள் முறிந்துள்ள நிலை யில் வான் வழி மற்றும் கடல் சமர்கள் பெரும் எடுப்பில் வெடிப்பதற்கான ஏது நிலைகள் அதிகரித்துள்ளன. அத்தகைய சமருக்கு அரசு, புலிகள் ஆகிய இருதரப்பினருமே மும்முரத்துடனும் தீவிரத்துடனும் தயாராகி வருகின்றனர் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வானிலும் கடலிலும் புலிகளால் எழுந் துள்ள சவாலைச் சமாளிப்பதற்காக அரசுப் படைகள் "மிக் 29' ரக சுப்பசொனிக் ஜெற் விமானங்கள், "எம். ஐ.24' ரக தாக்குதல் ஹெலிகள், கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு அதிக வீச் சும் செயற்றிறனும் கொண்ட சுடுகலன்கள் போன்றவற்றைச் சுவீகரிப்பதில் முனைப்புக் காட்டுகின்றன எனப் பாது காப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

""சமாதான முயற்சிகள் மீள ஆரம்பிக் கப்படுவதற்கான சாத்தியங்கள் பெரும் பாலும் அருகி அடியோடு இல்லாமல் போய் விட்டன. செத்துவிட்ட யுத்தநிறுத்தத்தை இனிமேலும் காப்பாற்றலாம் என்று நான் நம்பவில்லை.

வருங்காலத்தில் இன்னும் கொடூர யுத்தத்தை நாம் எதிர்பார்க் கலாம்'' என்று மாற்றுக் கொள்கைக் கான நிலையத்தின் ஊடகப் பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய கூறுகின்றார்.

இந்தியா இலங்கை இடையேயுள்ள குறுகிய பாக்கு நீரிணையில் புலிகளின் நகர்வுகளை அவதானிக்கும் நெடுந்தீவுக் கரையோர "ரடார்' நிலையத்தைப் பறிகொடுத்தமை அரசுப் படைகளுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு என்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.

""நெடுந்தீவு மீதான தாக்குதல் மூலம் புலிகள் தங்களின் கடல்வலு ஆதிக்கத்தை மீள ஒரு தடவை நிரூபித்திருக்கின்றார்கள். அதேசமயம் கொழும்பில் நடத்திய கிளைமோர் தாக்குதல் மூலம் தங்களின் கெரில்லாத் தாக்குதல் வலிமையும் பாதுகாப்பாகத் தங்களுக்கு உள்ளது என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றனர்.'' என்கின்றார் பாதுகாப்பு நிலைவரம் பற்றிய ஆய்வாளர் நாமல் பெரேரா.

""தீவுப்பகுதி மீது இவ்வாறு ஒழுங்குக் கிரமமாகத் தாக்குதல் தொடருமானால் யாழ்ப்பாணம் முழு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.'' என்கின்றார் ஓய்வு பெற்ற இராணுவ பிரிகேடியர் விபுல் போட்ஜு.

இராணுவம் தற்போது ஆரம்பித்துள்ள பெரும் படை நடவடிக்கைத்திட்டத்தை நிறுத்தாத வரையில், 2005 ஒக்டோபரில் குழம்பிய அமைதிப் பேச்சுகளை மீள ஆரம்பிக்க இடமேயில்லை என்று புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் கூறியிருக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.

இவையெல்லாம் பெரும் யுத்தம் வெடிப்பதற்கான கட்டியங்கூறலாகவே கொள்ளப்படவேண்டியவை.

இவ்வாறு அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கின்றது

மகிந்தவிற்கு உதவிய கடற்படை புலனாய்வு உறுப்பினர் நாட்டில் வாழ முடியாத நிலை.

[திங்கட்கிழமை, 28 மே 2007]

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவிற்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்துவந்த கடற்படை புலனாய்வு அதிகாரி கொமான்டர் மேஜர் றோஹண கமகே நாட்டில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பணிபுரிந்த இவர், விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்சச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகியவற்றின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருக்கு தனது நிலை பற்றி இந்த அதிகாரி கடிதம் அனுப்பியிருக்கின்றார்.

அரச ஊடகங்கள் தன்னை விடுதலைப் புலிகளின் உளவாளியாக சித்தரித்து தவறான தகவலை வெளியிட்டு வருவதாகவும், இதனால் படையில் இருந்தவாறு மேற்கொண்ட தனது பட்டப் படிப்பை தொடர முடியாமல் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற இவ்வாறான நடவடிக்கை காரணமாக தனது மனைவி, மற்றும் பிள்ளைகள் வீதியால் செல்ல முடியாது துரோகிகளாக் சித்தரிக்கப்பட்டு, வார்த்தைப் பிரயோகங்களால் துன்புறுத்தப்படுவதாகவும் படை அதிகாரி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் உளவாளியாக தன்னை சித்தரித்திருப்பதால், வெளிநாடு செல்வதற்கு வீசா பெற முடியவில்லை எனவும், தனக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், கடற்படை புலனாய்வு அதிகாரி கொமான்டர் மேஜர் றோஹண கமகே மேலும் கூறினார்.

தனது குடும்பம் மட்டுமன்றி, தனது நிலையை அரச ஊடகங்கள் தவிர்ந்த ஏனைய ஊடகங்களுக்கு கூறுவதற்கு மனைவிக்கு உதவி புரிந்த மேலும் இருவரும் சிறீலங்கா அரசாங்கத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக, றோஹண கமகே கூறினார்.

சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த இந்த கடற்படை புலனாய்வு அதிகாரி, திடீரென விடுதலைப் புலிகளின் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டு, அவரது நடவடிக்கைகள் அரசினால் முடக்கப்பட்டதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Sunday, May 27, 2007

கருணாநிதி அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சி ஜெயலலிதாவின் ஆட்சி சிறப்பானதென கருத்துக் கணிப்பு.!!

[ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007]

தி.மு.க. அரசின் செல்வாக்கு கடும் சரிவைக் கண்டுள்ளதாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதியை விட ஜெயலலிதா பல வகையிலும் சிறந்தவராக விளங்குவதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடும். பொதுவாக தி.மு.க.வுக்கு சாதகமாகவே இக்கல்லூரியின் கருத்துக் கணிப்பு அமையும். இந்த நிலையில் கடந்த ஒரு வருட தி.மு.க ஆட்சி குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க.வுக்குப் பாதகமான முடிவுகளை இக்கல்லூரி வெளியிட்டுள்ளது.

இக்கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு வெளியிட்டது. இதில் தி.மு.க அரசுக்கு மக்கள் செல்வாக்கு மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 3 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் விபரம் வருமாறு;

கடந்த ஒரு வருடமாக தி.மு.க. அரசு மீது மக்களுக்குக் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 39.9 சதவீதம் பேர் ஆட்சியின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் தி.மு.க மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 25.7 சதவீத நடுநிலை வாக்காளர்கள் தி.மு.க மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதேசமயம் தி.மு.க. வின் சொந்த செல்வாக்கு சரியவில்லை. அது 31.8 சதவீதமாக உள்ளது.

இப்போது யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு தி.மு.க. வுக்கு என 31.8 சதவீதம் பேரும் அ.தி.மு.க. வுக்கு என்று 27.6 சதவீதம் பேரும் தே.மு.தி.க.வுக்கு என்று 15.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

இக்கல்லூரி கடந்த முறை நடத்திய கருத்துக் கணிப்பை விட இந்த முறை தி.மு.க மற்றும் தே.மு.தி.க. வின் செல்வாக்கு சரிந்துள்ளமை தெரிய வந்துள்ளது. கடந்த முறை தி.மு.க.வுக்கு 34 சதவீதம் பேரும் தே.மு.தி.க. வுக்கு 17 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருப்பதாக 58.9 சதவீதம் பேரும் குறிப்பிட்டுச் சொல்லும் படி இல்லை என்று 26.4 சதவீதம் பேரும் மோசம் என 14.7 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. வின் செயற்பாடு சிறப்பாக உள்ளதாக 46.9 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மோசம் என்று 17.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கடந்த அ.தி.மு.க ஆட்சி மற்றும் இப்போதைய தி.மு.க ஆட்சியில் எது சிறந்தது என்ற கேள்விக்கு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

தாமதிக்காமல் முடிவு எடுப்பதில் சிறந்தவர் ஜெயலலிதா என 53.3 சதவீதம் பேரும், கருணாநிதி என 45.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர் கட்சிக்குள் குடும்ப ஆதிக்கத்தை அனுமதிக்காதவர் , உட்கட்சி ஜனநாயகத்தைக் காப்பவர் உள்ளிட்டவற்றில் சிறந்தவர் ஜெயலலிதா என்றும் கருத்துக் கணிப்பில் தெரிந்துள்ளது. இவற்றில் ஜெயலலிதாவை விட கருணாநிதிக்கு குறைந்த ஆதரவே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கேபிள் ரி.வி.யை அரசுடமையாக்கும் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு காணப்படுகிறது. 62.6 சதவீதம் பேர் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேவையில்லை என 14.3 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


சரத்குமார் கட்சி ஆரம்பிப்பார் என 35.6 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நாடார் சமுதாய அமைப்புகளுடன் சேர்ந்து ஆரம்பிப்பார் என 19.2 சதவீதம் பேரும் ரசிகர்களின் துணையுடன் ஆரம்பிப்பார் என 16.4 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர் . கட்சி தொடங்குவது சந்தேகம் என 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

வன்னி பெரும் மனித அவலங்களை எதிர்நோக்குகிறது.

[ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007]

வன்னிப்பகுதிக்கான போக்குவரத்துப் பாதையான ஓமந்தை மற்றும் உயிலங்குளம் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளதனால் உணவுப் பற்றக்குறை உட்பட பெரும் மனித அவலங்களை வன்னிப்பகுதி எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு தரப்புக்களிடம் இருந்தும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பெறப்படும் வரையில் சோதனைச் சாவடிகளில் தமது அதிகாரிகளை நியமிக்க முடியாது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தினால் வன்னிப் பகுதிக்கான உணவு, மருந்து விநியோகங்கள் தடைப்பட்டுள்ளன.

முகமாலை பாதை மூடப்பட்ட பின்னர் வன்னிக்கான பிரதான வழங்கல் பாதையாக ஓமந்தைப் பாதையே இருந்து வந்துள்ளது.

இது தொடர்பில் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னாரி தெரிவித்துள்ளதாவது:

"நாம் பாதையை திறப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளரான தங்கனுடன் கலந்துரையாடி வருகின்றோம். படையினர் தாக்குதலை நடத்தினால் அதில் இருந்து தம்மை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தங்கன் தெரிவித்துள்ளார்.

எனினும் பாதை மூடப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என படையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாக தற்போது அரசுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக எமது குழுவினர் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளையும் கடந்த இரவு சந்தித்துள்ளனர். எனினும் அதில் விவாதிக்கப்பட்டவை தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் இல்லை.

எமக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாம் எமது உறுப்பினர்களை அங்கு நிறுத்தப்போவதில்லை. எமது அதிகாரிகளின் உயிர்களை ஒரு ஆபத்தான நிலையில் வைக்க நாம் விரும்பவில்லை. இந்த பாதைகள் மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டால் அது பாரிய உணவு நெருக்கடிகளை வன்னியில் ஏற்படுத்தும்" என்றார் அவர்.

"உயிலங்குளம் பாதை கடந்த 18 ஆம் நாளும், ஓமந்தை பாதை கடந்த செவ்வாய்க்கிழமையும் மூடப்பட்டன. பாதை மூடப்பட்டதால் உணவு, மண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவந்த 35 பாரஊர்திகள் ஓமந்தை சோதனைச் சாவடிகளில் தரித்து நிற்பதாக" முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

"மேலதிகமாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவந்த 50 பாரஊர்திகள் வவுனியாவில் தரித்து நிற்பதாக" வவுனியா மேலதிக அரச அதிபர் பி.எஸ்.ஏ.சார்ள்ஸ் தெரிவித்தார்.

நன்றி:புதினம்

Saturday, May 26, 2007

யார் எதைக்கூறினாலும் அரச படைகள் வடகிழக்கில் வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள் - ஜனாதிபதி.!!

[சனிக்கிழமை, 26 மே 2007]

தற்போது சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் யுத்த முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்லது அது விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை சர்வதே உடங்கள் தவறாகப் புரிந்து தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த முன்னெடுப்புகளால் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை அரசாங்கம் புரிந்து வருவதாக பாரியளவில் பரப்புரைகளை மேற்கொண்டுவருதாகத் குறிப்பிட்டுள்ளார்.

யார் எதைக்கூறினாலும் அரச படைகள் வடக்கு - கிழக்கில் வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள் எனவும் சிறீலங்கா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கக்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையில் 27 படைமுகாங்கள்.!

[சனிக்கிழமை, 26 மே 2007]

ஆக்கிரமிக்கப்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையைச் சூழ சிறீலங்காப் படையினரால் 27 படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பின் பிரதான படைமுகாங்களில் இருந்த படையினரில் பெரும்பாலானோர் புதிதாக அமைக்கப்பட்ட படைமுகாங்களில் நகர்த்தப்பட்டுள்ளார்.

27 படைமுகாங்களில் பிரதான முகாங்கள் மற்றும் மினி முகாங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இந்த படைமுகாங்களை பாதுகாக்கும் காவரண்களை படையினர் அவசர அவசரமான அமைந்து வருகின்றனர்.

ஆக்கிரமித்த மக்கள் குடியிருப்புக்களையும் மக்களின் வீடுகளையும் மையப்படுத்தியே இப்படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறீலங்காப் படையினர் தற்பொழுது குடும்பிமலைக் கோட்டப்பகுதியை அண்மித்தே படையினரின் பலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் குடும்பிமலைக் கோட்டம் எனக் கூறப்படும் தொப்பிகல காட்டின் முன்னரங்க நிலைகளில் படையினரின் உடுருவல் அணிக்கும் விடுதலைப் புலிகளின் வேவு அணிக்கும் இடையில் சிறு சிறு மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

படையினரின் முழுப்பலமும் தென்புறம் குறிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பில் உட்பகுதிகள் முழுவதும் படையினரின் பலம் எதுவுமின்றி வெறுமையாகவே காணப்படுவதாகவும் மட்டக்களப்புச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா மீது ஜப்பான் அழுத்தங்களை போடவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்.!!

[சனிக்கிழமை, 26 மே 2007]

சிறிலங்காவிற்கு மிகவும் அதிகளவு நிதி உதவிகளை வழங்கிவரும் ஜப்பான் சிறிலங்கா மீது அதிக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

எனினும் ஜேர்மனி மற்றும் பிரித்தானிய ஆகிய அரசுகளின் தீர்மானங்களை பின்பற்றி சிறிலங்காவிற்கான நிதி உதவிகளை மட்டுப்படுத்தும் நோக்கம் ஜப்பானுக்கு இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் அதிகாரிகள் உடனான சந்திப்பின் பின்னர் இது தொடர்பாக மனித உரிமை கண்காணிப்பகத்தனை சேர்ந்த சோபி றிச்சார்ட்சன் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டு சிறிலங்காவில் மனித உரிமைகள் மோசமடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 100,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என நான் நினைக்கிறேன்.

சிறிலங்காவிற்கான உதவிகளை வழங்கும் கொடையாளிகளில் யப்பான் மிகவும் அதிகளவு நிதிகளை வழங்கும் நாடு. அனைத்துலகத்தினால் வழங்கப்படும் நிதிகளில் யப்பான் 63 வீதமான நிதியை 2003 ஆம் ஆண்டு வழங்கியிருந்தது. 4.5 பில்லியன் டொலர் உதவிகளை சிறிலங்காவிற்கு வழங்குவதற்கு என 2003 ஆம் ஆண்டு ஒரு மாநாட்டை ஜப்பான் ஒழுங்கு செய்திருந்தது.

சிறிலங்கா தொடர்பில் ஜப்பான் மிக முக்கிய பாத்திரத்தை வகித்து வருகின்றது. அது முன்னணி கொடையாளி, அது கொடையாளிகளின் ஆலேசனைக்குழுவை ஒருங்கிணைக்கின்றது. நாம் ஜப்பானை என்ன கேட்கின்றோம் எனில் இந்த நிலையை சாதகமாக கொண்டு அரசை மட்டுமல்லாது ஏனைய தரப்பினரையும் பொதுமக்களையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்ச்சியாக உறுதியாக கேட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

எனினும் சிறிலங்காவிற்கான நிதியை நிறுத்துவது தொடர்பாக தம்மால் ஆராய முடியாது என ஜப்பான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

சிறிலங்காவிற்கான நிதியை மீள்பரிசீலனை செய்யும் திட்டம் ஜப்பானுக்கு இல்லை. சிறிலங்காவிற்கான ஜப்பானின் பிரதிநிதியான யசூசி அகாசி எதிர்வரும் ஜூன் மாத முற்பகுதியில் சிறிலங்காவிற்கு புதிய திட்டத்துடன் செல்ல உள்ளார் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் தீர்மானத்தினால் மகிந்த அரசு நெருக்கடிகளை சந்தித்துள்ளதடன் தமது அரசு வெளிநாட்டு நிதி உதவிகளில் தங்கியிருக்கவில்லை எனவும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகரிக்க வேண்டும்: பிரித்தானியா நா.உ. வலியுறுத்தல்.!

[சனிக்கிழமை, 26 மே 2007] இலங்கை நிலைமைகள் குறித்து அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகரிக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெய்த் வாஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கான நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: இலங்கையில் நடைபெறும் போரில் மீது அக்கறை கொள்வோர் மீது பல குழுவினரும், ஊடகங்களும் குற்றங்களை சுமத்துவது அவநம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றது. இலங்கை விடயத்தில் அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். மோதல்களில் ஈடுபடும் தரப்புக்களை ஒரு அமைதி வழியிலான தீர்வைக் காண்பதற்கு கொண்டு வரும் முயற்சிகளுக்காக அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத செயல்கள் போன்றவற்றில் எந்தக் குழுவினர் ஈடுபட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டியது. நானோ அல்லது எமது எந்த அங்கத்தவர்களோ விடுதலைப் புலிகளை சந்தித்தது இல்லை. இலங்கையில் நடைபெறும் போரில் மீது அக்கறை கொள்வோர் மீது குற்றங்களை சுமத்துவது அவநம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றது. அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு அமைதி வழியிலான தீர்வுகளுக்கான அழைப்பை விடுத்துள்ளதுடன் மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத செயல்களையும் கண்டிக்கின்றது. அனைத்துக் கட்சிக் குழுவானது பிரித்தானியா அரசின் கருத்தை பிரதிபலிக்கவில்லை. எனினும் அது பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த பல மூத்த உறுப்பினர்களை கொண்டுள்ளது. அமைதியோ அல்லது அமைதிக்கான நம்பிக்கைகளோ அற்ற நிலையில் சிறிலங்காவில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே தான் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றது என்றார் அவர். இலங்கையில் ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்குரிய பேச்சுக்களுக்கு விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைகள் காரணம் எனவும் அனைத்துத் தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட்டு ஒரு தீர்வைக் காண்பதற்கு தடை நீக்கப்பட வேண்டும் எனவும் முன்னர் பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் வாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நன்றி:புதினம்

பிரபாகரன், கருணா பகை போன்றே கருணா, பிள்ளையான் பகையும் - திவயின

[சனிக்கிழமை, 26 மே 2007]

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு குறித்த போட்டிக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பிள்ளையானும் மற்றும் அவருடைய சகாவான சீலன் எனப்படுபவருமே ஆகும். பிள்ளையான் கருணா குழுவில் மிகவும் பலம்வாய்ந்த படையணியின் தலைவராக இருந்தவர். கருணாவின் நிழல்போல அவருடனேயே கூட இருந்து செயற்பட்டவர்.

கடந்த 2004 ஏப்ரல் 9 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விசேட படையணியினர் வெருகல் ஆற்றங்கரைப் பிரதேசங்களில் வைத்து கருணாவின் குழுவினர் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் பின்வாங்கிய கருணா தனது குழுவினரைக் கலைந்து செல்லும்படி கூறிவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய சந்தர்ப்பத்தில் கருணாவின் குழுவினருக்குத் தலைமைதாங்கி அவர்களை வழிநடத்தியவர் பிள்ளையான்தான்.

இத்தகைய பிள்ளையான் தற்போது கருணா குழுவிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக இயங்குவதற்கு காரணம் கருணா குழுவினரால் செய்யப்பட்ட கொள்ளையடித்தல், கப்பம் வாங்குதல் மற்றும் மோசடிகள், ஒழுக்கச் சீர்கேடுகள் என்றே கூறப்படுகிறது. கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகளை விரும்பாது அதிருப்தியடைந்த பிள்ளையான் இதுபற்றி பல தடவைகள் கருணாவிடம் தெரிவித்தபோதும் கருணா அதுபற்றி அக்கறை எடுக்கவில்லை. தொடர்ந்து இந்தப் பிரச்சினை சம்பந்தமாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச் சண்டை பாரதூரமாகிவிட்ட நிலையிலேயே பிள்ளையானும் அவருடைய சகா சீலனும் தமக்குச் சார்பான படையணியினருடன் தனியான குழுவாகப் பிரிந்து சென்றனர். கருணாவும் இவர்கள் இருவரையும் மறுபடியும் தனது குழுவில் சேர்த்துக்கொள்வதற்கான எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன், பிள்ளையானுக்குப் பணிந்துபோக கருணா சிறிதும் விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது.

இவ்வாறான பயங்கரவாத இயக்கங்களைப் பொறுத்தவரை ஒரு குழுவிலிருந்து அதன் உறுப்பினர்கள் பகைத்துக்கொண்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் குறித்த குழுவின் தலைவருக்கு தனது உயிர் பாதுகாப்பு பற்றிய அச்சம் ஏற்படுகிறது. குறித்த குழுவின் உயர் மட்டத் தலைவர் பிள்ளையான் போன்று பிரிந்து செல்லும் உயர்மட்ட உறுப்பினருக்கு "மரண தண்டனை" வழங்குவதுபோன்ற நிலைப்பாட்டை எடுப்பார். இதுவே பயங்கரவாத இயக்கங்களின் நடைமுறையாக இருந்துவருகிறது. இவ்வாறான ஒரு நிலைப்பாட்டுடனேயே கருணா செயற்படுவதாகத் தெரிய வருகிறது. பிரபாகரன் கருணாவைக் கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் இவ்வாறு கருணா பிரிந்து சென்றதால் இயக்கத்தின் பலம் பிளவுபட்டுப்போனதாலேயே. சட்டவிரோதமான ஆயுதப் படையணிகளின் போக்கு இவ்வாறுதான். தற்போது கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுக்கும் பகைக்கும் இது பொருந்தும்.

திவயின விமர்சனம்: 20.05.2007

Friday, May 25, 2007

இலங்கையில் அதிகரித்துள்ள வன்செயல்கள் துரதிர்ஷடவசமானவை - அமெரிக்கா

[வெள்ளிக்கிழமை, 25 மே 2007]

இலங்கையில் தற்போது அதிகரித்து வருகின்ற வன்செயல்கள் துரதிர்ஷடவசமானவை என்று வர்ணித்துள்ள அமெரிக்கா, இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகள் அமைப்பு அங்கு மோதல்களைக் கைவிட்டு, பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முன் வரவேண்டும் என்று கேட்டுள்ளது.

அமெரிக்க அரசுத்துறையினால் தினசரி நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய துறையின் சார்பில் பேசவல்ல துணைப் பேச்சாளர் டாம் கசே அவர்கள், நேற்றைய வன்செயல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, இலங்கையின் நடந்துள்ள இந்த வன்செயல்கள் துரதிஷ்டவசமானவை என்றும்ன் அங்கு மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், ரிச்சர்ட் பெளச்சர் அவர்கள் மே மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை அங்கு சென்றிருந்தார் என்றும் அங்கு அவர் அரசாங்க அதிகாரிகளுடனும் மற்றும் பரந்த அளவில் பொதுமக்கள் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் சமாதான முயற்சிகளை முன்னேற்றமடையச் செய்யக் கூடிய அதிகாரப் பகிர்வு பிரேரணைகளை கண்டறியுமாறு அவர் அவர்களிடம் கேட்டு கொண்டதாகவும் டாம் கசே கூறினார்.