[வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2007] வவுனியாவில் ஓமந்தைப் போக்குவரத்துப் பாதைக்கு அண்மையில் இடம்பெற்று வரும் கடும் மோதல்களினால் மக்களின் போக்குவரத்து நுழைவுப் பாதை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருக்கின்றது. "இப்பாதையை மீண்டும் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளிடம் இருந்து தமக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் அழிக்கப்பட வேண்டும்" என அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் கோரியிருக்கின்றது. இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர் தெரிவித்ததாவது: "நேற்று புதன்கிழமை வவுனியாவின் மேற்குப்பகுதியில் உள்ள பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற கடும் மோதலினால் ஓமந்தை போக்குவரத்துப் பாதை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டுள்ளது. நேற்றும் இப்பாதை திறக்கப்படவில்லை. ஓமந்தை மக்களின் போக்குவரத்துப் பாதையை திறப்பதற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை கோரி நாங்கள் இரு தரப்புக்களுடனும் பேசி வருகின்றோம்" என்றார் அவர். இதனிடையே மன்னார்ப் பகுதி மக்களின் நுழைவுப் பாதையான உயிலங்குளம் பாதை மூடப்பட்டிருந்த போதும் நேற்று அது திறக்கப்பட்டதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பக இணைப்பாளர் டேவைட் விக்னாரி தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதலை அடுத்தே தாம் ஓமந்தை நுழைவுப் பாதையை மூடியதாக" சிறிலங்கா அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.
Thursday, April 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.