Thursday, April 12, 2007
பல்கலைக்கழக மாணவன் சித்திரவதைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.!!
[வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2007]
யாழ். நகரப் பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன், கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத இடம் ஒன்றின் வீதியோரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கடத்தியோர், வெள்ளை வான் ஒன்றில் வந்ததாகவும், விடுவிக்கப்பட்ட மாணவன் நாகேந்திரம் ராஜலக்ஸ்மன் (வயது 25), யாழ். மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்ட இவர், இராணுவ முகாமில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருக்கின்றார்.
அரியாலையில் உள்ள நாவலர் வீதியைச் சேர்ந்த ராஜலக்ஸ்மன் மூன்றாம் வருட கலைப்பீட மாணவன் ஆவார்.
இவர் கடத்தப்பட்டது தொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக் குழுவிடமும், யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் உறவினர்கள் முறையிட்டிருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.