Thursday, February 01, 2007

மிகப்பெரிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில் நானும் வெட்கப்படுகிறேன்: ரவூப் ஹக்கீம்

[வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2007]

உலகிலேயே ஆகக்கூடிய அமைச்சர்களையும் பிரதியமைச்சர்களையும் உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்ற சபையில் தானும் ஒரு அங்கத்தவராக இருப்பதையிட்டு வெட்கி தலைகுனிவதாக, விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை கூறியிருந்தார்.


மைத்திரிபால கூறியது சரியான கூற்று என்று தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் பழுவான இந்த பாரிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில் தானும் மைத்திரிபால போன்றே உணர்வதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், நாளை என்ன நடக்கலாம் என்பதை அனுமானித்து செயற்படுவது அரசியல்வாதியின் முக்கிய செயல்பாடு என்ற வகையில், தான் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவித்த ஹக்கீம், உலகின் மிகப்பெரிய அமைச்சரவையில் அங்கம் வகித்து, உலக சாதனைப் புத்தக பதிவேட்டில் இடம்பிடிப்பதில் பெருமைப் படுவதாக நகைச்சுவையுடன் கூறி, அவை அதிரச் சிரித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.