(2 ஆம் இணைப்பு) வடமராட்சி கடற்பரப்பில் மோதல்: வழங்கல் கப்பல் தீப்பற்றியது- 1 போராளி வீரச்சாவு
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பாரிய மோதலில் 'சிற்றி ஓஃப் லிவர்பூல்' என்ற சிறிலங்கா அரசின் வழங்கல் கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.
இக்கப்பலில் இருந்தும் சிறிலங்காப் படையினரால் பாரியளவில் கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.45 மணி தொடக்கம் மாலை 6.30 மணிவரை பாரிய அளவிலான தாக்குதல் பருத்தித்துறைக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையில் கரையிலிருந்து மூன்று கடல் மைல் தொலைவில் இடம்பெற்றது.
இப்பாரிய தாக்குதலில் சிறிலங்கா அரசின் முப்படைகளும் பங்கேற்று தாக்குதல் நடத்தியுள்ளன.
இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோராப் பீரங்கிப் படகுகள் - 15, வான்படையின் மிக்-29 விமானங்கள் - 2, கிபீர் விமானங்கள் - 2, எம்.ஐ - 24 தாக்குதல் ரக உலங்குவானூர்திகள், தரைப்படையின் ஆட்டிலெறிகள், பல்குழல் எறிகணைகள் மற்றும் டாங்கிகள் சகிதம் முப்படைகளும் உக்கிர தாக்குதல்களை தொடுத்தன.
முப்படைகளின் உக்கிர தாக்குதல்களுக்கு எதிராக கடற்புலிகள் வெற்றிகரமாக தீவிர எதிர்த்தாக்குதல்களை தொடுத்து சிறிலங்கா கடற்படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது சிறிலங்கா கடற்படையின் பாதுகாப்புக்குள் நகர்ந்து சென்ற சிறிலங்காவின் வழங்கல் கப்பலான 'சிற்றி ஒஃப் லிவர்பூல்' தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றது.
சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக டோராப் படகுகளை கடற்புலிகள் தொண்டமானாறு வரை அடித்து கலைத்துச் சென்று விரட்டி விட்டு பாதுகாப்பாக தளம் திரும்பினார்.
இன்று நடந்த வெற்றிகரமாக கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
Sunday, January 21, 2007
பருத்தித்துறை துறைமுகம் விடுதலைப்புலிகளால் முற்றுகை
Sunday, January 21, 2007





