ஐக்கிய நாடுகள் சபை இருதரப்பையும் மீள பேச்சுக்கு செல்லுமாறு அழைப்பு.
நேற்று மன்னாரில் படகுத்துறையில் 14க்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள்சபை சிறீலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் போர் புரிவதை நிறுத்தி சமாதானப்பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
சிறீலங்காவில் இனமுரண்பாடுகளால் தொடர்ந்தும் மக்கள் துன்பங்களை அநுபவித்து வருவதாகவும் இன்றைய தாக்குதலில் இறந்தவர்களுக்கு தமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் துணை மனித உரிமைகள் செயலரும் மற்றும் அவசரகால மீட்பு ஒருங்கிணைப்பாளருமான மகிறிற்ரா வஸ்ரம் (Margareta Wahlstram) தெரிவித்துள்ளார்.
இரு தரப்பும் மிக அவசரமாக அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்து சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Wednesday, January 03, 2007
ஐக்கிய நாடுகள் சபை இருதரப்பையும் மீள பேச்சுக்கு...
Wednesday, January 03, 2007





