ஐ.நா.செயலாளரின் பிரதம தலைமை அதிகாரியாக விஜய் நம்பியார்
ஐ.நா.வின் புதிய செயலாளர் நாயகம் பான்கிமூன் தனது பிரதம தலைமை அதிகாரியாக இந்தியாவின் சிரேஷ்ட இராஜதந்திரி விஜய் நம்பியாரையும் ஹெய்ட்டி பத்திரிகையாளர் மைக்கெலி மொன்டாஸை பேச்சாளராகவும் நியமித்திருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்குறித்த நியமனங்களை உத்தியோகபூர்வமாக அறிவித்த போது பான் கி மூன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எனது குழுவை உருவாக்குவதற்கு உறுதியான அடித்தளமாக இந்த நியமனங்கள் உதவும் எனவும் அத்துடன் செயலக மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவும் தொடர்ச்சியான மாற்றத்தை ஏற்படுத்தவும் இவை உதவும் என்றும் கூறினார்.
நம்பியாரை நீண்டகாலமாக தமக்குத் தெரியுமெனவும் இருவரும் ஆழ்ந்த நம்பிக்கையும் பரஸ்பரம் மரியாதையும் கொண்டிருப்பதாகவும் பான்கிமூன் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நம்பியார், இதுவொரு பாரிய பொறுப்பு என்றும் தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் செயலாளர் நாயகம் தன்னைக் கௌரவித்திருப்பதை தன்னால் உணரமுடிவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்திய வெளிவிவகார சேவையில் பல சிரேஷ்ட பதவிகளை வகித்தவர் நம்பியார். அத்துடன், ஐ.நா.வில் பணியாற்றுவது தொடர்பாகவும் சிறந்த பரிச்சயத்தை கொண்டுள்ளவர். கொபி அனானின் விசேட ஆலோசகராகவும் பணியாற்றியவர் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.
Thursday, January 04, 2007
ஐ.நா.செயலாளரின் பிரதம தலைமை அதிகாரியாக ...
Thursday, January 04, 2007





