Wednesday, January 03, 2007

இலங்கைப் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதி...

இலங்கைத் தமிழர்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடடோம் - மன்மோகன் சிங் இலங்கைப் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சில நாட்கள் முன்பு கடிதம் எழுதியனுப்பியிருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது இலங்கைப் பிரச்சினை குறித்து உங்கள் கவலையை நான் புரிந்து கொண்டேன். இலங்கையில் பொது மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையினாலும், இலங்கை தமிழ் மக்களின் துயர நிலை தொடர்பாகவும் இந்திய அரசு ஆழ்ந்த துயரத்தில் உள்ளது என்பதை உங்களிடம் மீண்டும் தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இலங்கை தமிழ்ச் சமுதாயத்தினர் சந்திக்கும் கஷ்ட நிலைமைகளை மேலும் அதிகரிக்க செய்யும் எந்த நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம். இலங்கையில் உள்ள பிரச்சினைகளை அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க முடியும் என்பது தான் தொடர்ந்து எங்கள் நிலை. அப்பாவியாகவும்இ பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ள பொதுமக்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வன்முறைகளை கைவிட வேண்டும் என்று அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அந்த கடிதத்தில் மன்மோகன் சிங்க் கூறியுள்ளார்