Monday, January 01, 2007

வடமராட்சியில் இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல்

வடமராட்சியில் இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் யாழ். வடமராட்சி வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இன்பருட்டி நாவலடியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவத்தையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த சிறிலங்காப் படையினர் 15 இளைஞர்களை கைது செய்து உள்ளுர் படைமுகாமுக்கு கொண்டு சென்றுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.