கிபிர் தாக்குதலில் வெருகல் நீர்சுத்திகரிப்பு நிலையம் முற்றாக சேதம்
சிறீலங்கா இராணுவத்தின் வான்கலங்கள் இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட வான்வெளி குண்டு வீச்சால் ஐக்கிய நாடுகள் உதவிநிறுவனத்தால் நிர்மானிக்கப்பட்ட நீர் சுக்திகரிப்பு நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது.
வெருகல் முருகன் கோவிலைச் சூழ்ந்துள்ள கிராம புறங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நிர்மானிக்கப்பட்ட இச் சுத்திகரிப்பு நிலையமே முற்றாக சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் இது அப்பட்டமான யுத்தநிறுத்த மீறல் மட்டுமல்லாமல் மனித உரிமை மீறலும் கூட எனவும் இது ஒர் யுத்த குற்றமும் கூட என கூறியுள்ளார்.
Saturday, December 30, 2006
கிபிர் தாக்குதலில் வெருகல் நீர்சுத்திகரிப்பு நிலையம்..
Saturday, December 30, 2006





