வாகரையில் எறிகணை- வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள்
வாகரையில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணைத் மற்றும் வான்குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கல்லாறு, கரடிக்குளம் மற்றும் வாழைச்சேனை சிறிலங்காப் படை முகாம்களில் இருந்து படையினர் இன்று சனிக்கிழமை தொடரான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
வான்படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளதுடன் கால்நடைகளும் கொல்லப்பட்டுள்ளன.
Saturday, December 30, 2006
வாகரையில் எறிகணை- வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள்
Saturday, December 30, 2006





