முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: 5 பொதுமக்கள் படுகாயம்
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையினரின் 2 கிபீர் விமானங்கள் நடத்திய வான்குண்டு வீச்சுத் தாக்குதலில் 5 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வான்குண்டு வீச்சுத் தாக்குதல் சிலாவத்தைப் பகுதியில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் நடத்தப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதித் திட்டப் பணிப்பாளரின் வீட்டில் குண்டு வீழ்ந்து வெடித்து அவருடைய வீடும் அருகில் உள்ள கத்தோலிக்க அருட் சகோதரிகளின் பெண்கள் விடுதியும் சேதமடைந்துள்ளன.
இந்த தாக்குதல் காரணமாக தியோக நகர் கிராம மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள்:
விஜயகுமார் மதிமாறன் (வயது 14)
விஜயகுமார் மதிவண்ணன் (வயது 20)
ராஜ்குமார் துஸ்யந்தன் (வயது 17)
குமார் (வயது 27)
பாலசிங்கம் மணிவண்ணன் (வயது 33)
இவர்களில் துஸ்யந்தன் மற்றும் குமார் மேலதி சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Saturday, December 30, 2006
முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: 5 பொதுமக்கள் படுகாயம்
Saturday, December 30, 2006





