Wednesday, November 29, 2006

கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் பத்திரிகையாளருடன் ...

கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டிருந்த பொலிஸார் மீது விசாரணை கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த பொலிஸார் தொடர்பாக பொலிஸ் தலைமையக உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை இப்பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த மற்றும் அவருக்கு உதவிகள் செய்து வந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவொன்றினால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர், பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியொருவரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேவேளை, குறிப்பிட்ட இந்தப் பெண் பத்திரிகையாளரை தமிழ் பத்திரிகையிலிருந்து சிங்களமொழி பத்திரிகைக்கு மாறிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பாகவும் இந்த விசாரணைகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்துள்ளதுடன் புலிகளுக்கான உளவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.