Wednesday, November 29, 2006

இலங்கையில் தனிநாடு ஒன்று அமைய அமெரிக்கா...

இலங்கையில் தனிநாடு ஒன்று அமைய அமெரிக்கா ஆதரவளிக்கப் போவதில்லை - அமெரிக்கத் தூதுவர் இலங்கையில் தனிநாடு ஒன்று அமைக்கப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்க போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாகவே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைத் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார். விசேட தேவையுடையோருக்காக அமெரிக்க யு.எஸ் எய்ட் நிறுவனம் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட மோட்டிவேசன் சரிட்டபல் ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவியளிக்கும் கட்டங்களுக்கான விசேச நிர்மாண உதவி திட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தே போதே இன்று அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.