இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து டெல்லியில் வைகோ உண்ணாவிரதம்
இலங்கை அதிபர் ராஜ பக்சே 5 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல் லப்படுவதால், அவரது வருகைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
உத்ராஞ்சல் மாநிலம் டேராடூன் நகரில் ராஜபக்சே தொடங்கி வைத்த ஆசிய நாடுகளின் மேயர்கள் மாநாட் டில் தமிழக மேயர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித் தனர். ம.தி.மு.க. சார்பில் டெல்லியில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று கட்சியின் பொது செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.அதன்படி வைகோ தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் சாலையில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.
இலங்கை தமி ழர்கள் படுகொலையை கண்டித்து நடந்த இந்த உண்ணாவிரதத்தில் ம.தி.மு.க. எம்.பி.க்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கிருஷ்ணன், ரவிசந்திரன் மற்றும் ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.அ.தி.மு.க. சார்பில் பி.ஜி. நாராயணன், தினகரன், மலைச்சாமி ஆகியோர் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா மற்றும் அமர்சிங் ஆகியோரும் நேரில் வாழ்த்தினார்கள்.
முன்னதாக வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அப்போது இந் தியா, இலங்கை அரசுடன் எந்தவித ராணுவ ஒப்பந்தமும் செய்து கொள்ளக்கூடாது. இலங்கை விமானிகளுக்கு இந்தியாவில் ராணுவ பயிற்சி அளிக்க கூடாது. இந்திய ராணுவம் இலங்கை படையுடன் சேர்ந்து கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடாது என்று கூறினார்.யாழ்ப்பாணத்துக்கு உணவு பொருட்கள் வரும் பிரதான சாலையான ஏ-9 நெடுஞ்சாலையை மூடுவதால், அங்குள்ள மக்கள் பட்டினியால் வாடும் நிலை உள்ளது.
எனவே அதை திறக்கும்படி இலங்கை அதிபரை வற்புறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வைகோ கூறினார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அமைதி பேச்சு வார்த்தையையும் இலங்கை அரசு மீறுகிறது.இதை மத்திய அரசு இலங்கை அதிபரிடம் எடுத்துச் சொல்லி, இலங்கை ராணுவத்தில் மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்.இவ்வாறு வைகோ கூறினார்.
Monday, November 27, 2006
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து டெல்லியில் வைகோ ..
Monday, November 27, 2006





