இராணுவ தளபதி நேற்று குடாநாட்டுக்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை காலை யாழ். குடாநாட்டுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
நேற்றுக் காலை பலாலி இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற இவரை, யாழ். மாவட்டத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.சந்திர சிறி வரவேற்றார். இதன் பின்னர் பலாலி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டிலும் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் குடாநாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Sunday, November 26, 2006
இராணுவ தளபதி நேற்று குடாநாட்டுக்கு விஜயம்
Sunday, November 26, 2006





