Thursday, November 30, 2006

ஹன்சன் பவர் எதிர்வரும் திட்கட்கிழமை கிளிநொச்சி பயணம்.

நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஹன்சன் பவர் எதிர்வரும் திட்கட்கிழமை கிளிநொச்சி பயணம். நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஜோன் ஹான்சன்பவர் எதிர்வரும் திங்கட் கிழமை கிளிநொச்சி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரையின் பின்னர் இவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது. இலங்கை வந்த இவர் கொழும்பிலும் அரசின் முக்கியஸ்த்தர்களைச் சந்திக்க உள்ளார். ஏற்கனவே அரச சமாதானக் குழுத் தலைவர் நிமால் சிறீபாலடீ சில்வாவைச் இன்று சந்தித்துள்ளார். சுகாதார அமைச்சில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாhடலில் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பது, பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள யாழ்ப்பாண மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைந்து அனுப்புவது, ஏ9 வீதியைத் திறப்பது, வாகரைப்பிரதேச மக்களுக்கான உணவு வழங்கலை மேற்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் தொடர்ச்சியாகப் பரவிவரும் சிக்குன்குன்யா நோய்க்குரிய மருந்துகளை வடக்கு கிழக்குக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ,விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்குக்கூட அரசாங்கம் மருந்து வகைகளை அனுப்பி வருவதாகவும் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவருக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா விளக்கியுள்ளதாக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நோர்வே விசேட சமாதானப் பிரதிநிதியின் வருகை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது. அவர் இந்த விஜயத்தின் போது அரச மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளதாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ...

விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் அரச சமாதான செயலக செயலாளர் பாலித நம்பிக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என தாம் நம்புவதாக அரசாங்க சமாதான செயலகத்தின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலக வில்லைஎன காணிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளின் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சு மேசைக்கு வருவார்கள் என நாம் திடமாக நம்புகின்றோம்.பேச்சுக்கள் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முனையும் அரசாங்கத்தின் நிலையில் எந்த மாற்றமும் இல்லையென்றும் அவர் மேலும் கூறியுள்ளார். எரிக் சொல்ஹெய்ம் இதே வேளை,அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சமாதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பினால் இரு தரப்பினருடனும் தொடர்புகளை மேற்கொண்டு சமாதான நடவடிக்கைகளை நோர்வே தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக் பேச்சுவார்த்தைகளின் மத்தியஸ்தருமான எரிக் சோல்ஹெம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் தின உரையையடுத்து எரிக் சொல்ஹெய்ம் சார்பில் அவரது பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நாம் தொடர்ந்தும், இரு தரப்பிற்கும் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க, உதவத் தயாரகவே உள்ளோம். ஆனால் இந்த நிலையில் நோர்வே எந்த விதமான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளாது. இரு தரப்பினரும் சமாதான நடவடிக்கைகளை முன்னகர்த்த விரும்பினால் நாம் இரு தரப்பினருடனும் தொடர்புகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளோம். ஹன்ஸன் பௌயர் வருகை இதே வேளை நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்ஸன் பௌயர் இன்று காலை இலங்கை வருவார் என நோர்வே தூதரக பேச்சாளர் கேசரிக்குத் தெரிவித்தார். சுமார் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருக்கும் பௌயர் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் புலிகளின் பிரதிநிதிகளுடன் எதிர்கால சமாதான நடவடிககைகள் குறித்துப் பேசவுள்ளார் என தூதரகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் கருத்துகணிப்புக்கு இந்தியா அழுத்தம்...

மக்கள் கருத்துகணிப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ் இன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்தியா அரசு சிறிலங்காவில் தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்கள் தனியரசு அமைத்து பிரிந்த செல்வதற்குரிய மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார். அவர் பத்திரிகையாளர்களிடம் மேலும் கருத்து தெரிவிக்கையில் சிறீலங்கா தொடர்பில் இந்திய அரசு இலங்கை சார்பில் அதனது வெளியுறவுக் கொள்கையை முற்றுமுழுதாக மாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா இலங்கை தமிழர்களது நிலமைகளை புரிந்துகொள்ள வேண்டும். அவர் இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்கள் உணர்வுகளை மத்தியில் கொள்கை வகுப்பவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என சாடியுள்ளார்.

இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்: ...

இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்: சர்வதேச சட்ட நிபுணர் குழு வேண்டுகோள் இலங்கையில் மிகவும் மோசமாக நசுக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சட்ட நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் மனித உரிமையை முழுமையாக நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டும் எனக் கோரியுள்ள அக்குழு, இக்கோரிக்கையை ஐ.நா மனித உரிமை மன்றம் தட்டிக்கழிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகளும் மனிதாபிமான சட்டங்களும் மிக மோசமாக மீறப்படுவதை நிறுத்துவதிலும் மேலும் சிதைவுறாமல் தடுப்பதிலும் மனித உரிமை மன்றம் ஆக்கபூர்வமான பணியைச் செய்ய முடியும், செய்ய வேண்டும் என்று அது கூறியுள்ளது. பொதுமக்கள் கொல்லப்படுவது, கடத்தப்படுவது, சித்திரவதைப்படுத்தப்படுவது போன்ற கொடுமைகளுடன் மக்கள் இடம்பெயர கட்டாயப்படுத்தப்படுவது, சிறார்களை பலவந்தப்படுத்தி படையில் சேர்க்கப்படுவது குறித்து தொடர்ந்து அறிக்கைகளைத் தாம் பெற்று வருவதாக தெரிவித்த குழு, இவை யுத்தகால குற்றங்கள் எனவும் சாடியது. பொதுமக்களையும் இராணுவ இலக்குகளையும் பிரித்து பார்க்க வேண்டிய அடிப்படையைக் கூட மதிக்காமல் சிறிலங்காப் படைகள் தாக்குதல்களை நடத்துகின்றன. இதனால் இராணுவத் தாக்குதல்களின்போது அநாவசியமான உயிர்ச்சேதக்களும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் நிகழ்கின்றன. பாகுபாடற்ற, முறையான, கடுமையான விசாரணைகள் செய்யப்படவேண்டும். உதாரணமாக கடந்த 8 ஆம் நாள் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என அக்குழு கேட்டுள்ளது. முன்னைய வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய அரச தலைவர் விசாரணைக் குழுவை அறிவித்த பின்னர் மனித உரிமைகளை நசுக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன என்பதையும் அக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. விசாரணையோடு அனைத்துக் குழுக்களாலும் மனித உரிமைகள் சிதைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் மேலும் நிகழாமல் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அவசியம் என அது வலியுறுத்தியுள்ளது. இவ்வேளையில் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் உரையின்போது, ஐ.நா உறுப்பு நாட்டின் பிரதிநிதி ஒருவர், இலங்கையில் சீரழிந்து வரும் மனித உரிமைகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் செயல்பாடு குறித்தும், தண்டனை அளிக்கும் உரிமை குறித்தும் கேள்வி எழுப்பினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய பின்லாந்து நாட்டுப் பிரதிநிதி, இலங்கையில் மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பெரும் கவலை கொண்டுள்ளது என்றார்.அண்மையில் நிறுவப்பட்ட விசாரணைக் குழுவின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கூறினார் சுவிற்சர்லாந்துப் பிரதிநிதி. அரசாங்கத்தின் விசாரணைக் குழுவை வெறும் பொதுத் தொடர்பு பயிற்சி என்று கூறி, அதனை மனித உரிமைக் குழு நிராகரித்தது.இன்றைய நிலையில் இராணுவத்தினதோ, காவல்துறையினதோ மனநிலை எந்த வகையில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மனித உரிமை மீறல்கள் குறித்து எவ்விதமான ஆழமான விசாரணைகளையும் நடக்காமல் தடுப்பதே அரசாங்கத்தின் தற்போதைய கொள்கை எனத் தாம் அறிய வந்திருப்பதாக ஆசிய மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியது. இந்நிலையில் ஆட்கடத்தல், காணமல்போதல், கொலை செய்யப்படுதல் போன்றவை குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைத்திருப்பது, ஒரு பொதுத் தொடர்பு பயிற்சி மட்டுமே. தீவிர விசாரணை எதுவும் இல்லை என்றது. இலங்கையில் அனைத்து சட்டவிதிமுறைகளும் முடங்கிக் கிடக்கின்றன என்றும் குழு கூறியது. இவ்வேளையில் கனடா, பிரிட்டனுக்கான ஐ.நா பிரிதிநிகளும் இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்துக் கவலை தெரிவித்தனர். puthinam

கொழும்பு ஊடக செய்திக்கு விடுதலைப் புலிகள் மறுப்பு

கொழும்பு ஊடக செய்திக்கு விடுதலைப் புலிகள் மறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது உரையைத் தொடர்ந்து கொழும்புக்கு விடுதலைப் புலிகள் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளார்கள் என கண்காணிப்புக் குழுவை மேற்கோள் காட்டி வெளிவந்த கொழும்பு ஊடகமொன்றின் செய்திக்கு விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவனும், இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனும் மறுப்பு தெரிவித்துள்ளனர். எங்களது தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடன உரையில், கொழும்புக்குத் தெரிவிக்க வேண்டிய அனைத்துத் தகவலையும் தெளிவாக விளக்கியுள்ளார் என்று இளந்திரையன் கூறினார். சமாதான உடன்படிக்கையைக் கிழித்தெறியாமலேயே அதற்கு ஈமச்சடங்கை கொழும்பு நடத்தியுள்ளது என விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டுள்ளார். எமது நிலைகள் மீது வெளிப்படையாகவே தாக்குதல்களை நடத்துவதன் மூலம் சிறிலங்கா அரசு சமாதான உடன்படிக்கைப் புதைத்து விட்டது என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது உரையில் தெரிவித்திருந்தார். அவரது உரைக்கு மறுநாள், நவம்பர் 28 ஆம் நாள் ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சின் இடர் துடைப்பு பிரிவின் தலைவர் அனா ஜோகண்டொடிர் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமை அதிகாரி ஜோன் ஒஸ்கர் சொல்னஸ், கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் ஆகியோர் கிளிநோச்சிக்கு சென்றிருந்தனர். போர்நிறுத்த கண்காணிப்புக் குழு அதிகாரிகளுடன் சென்றிருந்த ஐஸ்லாந்தின் அதிகாரி, விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் கொழும்புக்கு தெரிவிக்க தகவல் எதுவும் உள்ளதா எனக் கேட்டார். தெரிவிக்கப்பட வேண்டிய அனைத்தும் எமது தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடன உரையில் தெளிவாகச் தெரிவிக்கப்பட்டுள்ளது என சு.ப.தமிழ்ச்செல்வன் அவரிடம் கூறினார்.

தீர்வுக்குத் தயார் எனக் கூறிக்கொண்டு தமிழர்களை

தீர்வுக்குத் தயார் எனக் கூறிக்கொண்டு தமிழர்களை தீர்த்துக்கட்டுகிறது அரசு - எஸ்.துரைரட்ணசிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தயாராகவிருப்பதாக சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டு சிங்கள அரசு இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருமலை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: பல்குழல் பீரங்கிகள், ஷெல்கள், மோட்டார்கள், விமானத்தாக்குதல்கள் மூலம் தமிழ்மக்களும் அவர்களது இருப்பிடங்களும் வகை தொகை இன்றி அழிக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கில் இன்று நடப்பது என்ன? ஆட்கடத்தல், காணாமற்போதல், படுகொலை செய்தல், மக்களை இடம்பெயரச் செய்தல் என்பன திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. மக்களது குடியிருப்புகள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு இந்த நாட்டில் எவருக்கும் அருகதை இல்லை. எமது கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. மூதூரில் 22 கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. வெருகல் ஈச்சிலம்பற்று பகுதிகளில் 23 கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 42 ஆயிரம் மக்கள் தங்களது வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து அகதிகளாகியுள்ளனர். 55 பாடசாலைகள் செயலிழந்துள்ளன. 20 ஆயிரம் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களைக்காட்டி 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுத அனுமதிக்கப்படவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். யாழ். குடாநாட்டு மக்களுக்கும் வாகரை, கதிரவெளி பகுதிகளில் வாழும் மக்களுக்கும் அரசு ஊடகங்கள் மூலமே உணவு வழங்குகின்றது. அன்று ஏ 9 வீதியைத் திறப்பதற்காக போர் நடைபெற்றது. இன்று ஏ 9 வீதியை மூடுவதற்காக போர் நடைபெறுகின்றது. இதனால் எத்தனை ஆயிரம் படைவீரர்கள் பலியாகினர். இன்று தென் பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிலும் மரண ஓலம்தான் கேட்கின்றது. அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக கே.என்.சிறிகாந்தா பதவியேற்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக கே.என்.சிறிகாந்தா பதவியேற்பு யாழ்மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக கே.என்.சிறிககாந்தா சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம்.லொக்குபண்டார முன்னிலையில் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார். கடந்த நவம்பர் மாதம் 10ம் திகதி கொல்லப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஐ; அவர்களின் வெற்றிடத்திற்கே இவர் பதவி ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்தா யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதிதுவப்படும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். சட்டத்தரணியான இவர் டெலோ அமைப்பின் முக்கியஸ்தராகவும் முன்னர் முதல்வராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது

பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கப் படையினர் தடை.

வாகரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கப் படையினர் தடை. வாகரைக்கு நேற்றைய தினம் எடுத்துச் செல்லப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க களஞ்சிய அறையிலும், அரசாங்க செயலக களஞ்சிய அறையிலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளால் பார ஊர்திகளில் எடுத்துச் செல்லப்பட்ட அத்தியவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய சிறீலங்காப் படையினர் கால அவகாசம் வழங்க மறுத்ததை அடுத்தும், குறிப்பிட்ட நேரத்தினுள் அனைத்து அதிகாரிகளும் மட்டக்களப்பு திரும்பவேண்டும் என படையினர் வலியுறுத்தியதை அடுத்தும் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்க முடியாமல் அனைத்து பொருட்களும் செஞ்சிலுவைச் சங்கம், அரசாங்க செயலக களஞ்சியறையில் இறக்கிவிட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினர் அவசர அவசரமாக திரும்பியுள்ளனர். தற்பொழுது வாகரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு விநியோகிக்க படையினர் தடைவிதித்து வருகின்றனர் என திருமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.இன்று அத்தியவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்ச் சென்ற அதிகாரிகள் படையினரால் மிரட்டப்பட்ட திருப்பி அனுப்பப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்கள்

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம் வனியா பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லாரி சிங்கள மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்த ஆயுதாரிகள் சிலர் அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களை அச்சுறுத்தியதையடுத்து பாதுகாப்பு காரணமாக இன்று அதிகாலை முதல் அங்கிருந்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக கல்லூரியில் நடத்தப்படவிருந்த உள்ளக பரீடசைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் கல்லூரியை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை மூடவும் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் துப்பாக்கிச் சூடு.

வல்வெட்டித்துறையில் துப்பாக்கிச் சூடு. இன்று அதிகாலை 6.00 மணியளவில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மரக்கறி வியாபாறி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சோந்த க.மூர்த்தி வயது 45 என்பவரே படுகாயமுற்றவராவார் இவர் காலையில் தனது வியாபாரத்தை மேற்கொள்வதற்காக சந்தைக்குச் சென்ற போது இவரை மறித்த இராணுவத்தினர் இவருடன் உரையாடிவிட்டு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டதாக தெரியவருகின்றது.

யாழ் குடாநாட்டில் பெண் உளவாளிகளின் நடமாட்டம்..

யாழ் குடாநாட்டில் பெண் உளவாளிகளின் நடமாட்டம் அதிகரிப்பு. யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் அசாதாரண சூழ் நிலையைத் தொடர்ந்து பெண் உளவாளிகளின் நடமாட்டங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பெண்கள் ஈ.பி.டி.பி ஒட்டுப்படையுடன் இனணந்து செயல்பட்டு வருகின்றார்கள் என்பது அண்மைக் காலத்தில் பொது மக்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மூன்று பெண் உளவாளிகள் பொங்கியெழும் மக்கள் படை மற்றும் எல்லாளன் படையினால் சுடப்பட்டு உரிமை கோரப்பட்டுள்ளார்கள். தென்மராட்சிப் பகுதியில் சமுர்த்தி அலுவலராக கடமையாற்றியவரும் கோப்பாயில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் மற்றும் அண்மையில் பல்கலைக்கழக அயலில் உதயகுமார் றஜீதா என்ற பெண்னும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். பெண்களை அழைத்து அவர்களின் வறுமையை நீக்குவதாகக் கூறி பண ஆசையைக் காட்டி தொழில் வழங்கவதாகக் கூறி இராணுவத்தினருக்கு ஒட்டுப்பார்க்கும் நடவடிக்கையில் இத்தகையவர்களை பயன்படுத்தும் செயல்பாட்டில் பெண்களை ஈடுபடுத்துவதாக சிறீதர் திரையரங்குக்குச் சென்று வந்த பொது மக்கள் தற்போது கூறத் தொடங்கியுள்ளார்கள்.

சமூக சேவைகள் அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் மோசடிகள்.

சமூக சேவைகள் அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் மோசடிகள். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக சேவைகள் சமூக நரத்துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பலவேறு குழறுபடிகளும் ஏற்பட்டுள்ளதாக பொது மக்களும் அரச அதிகாரிகள் சிலரும் தெரிவிக்கின்றார்கள். யாழ்ப்பாபணத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் சமூக சேவைகள் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா ஸ்ரீதர் தியேட்டருக்கு அழைத்து குடும்பத் தலைவர்களை இழந்த பெண்களுக்கு சுய தொழில் முயற்சிக்கு உதவி செய்வதாகவும் மற்றும் வீட்டுத் திட்டத்திற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து குறிப்பிட்ட தமது கட்சியின் அங்கத்தவர்களுக்கும் மற்றும் தமது அணியில் ஆயுதக்குழுவாக இயங்கிக் கொண்ட இருப்பவர்களின் குடும்பங்களுக்கும் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. வீடுகள் கட்டுவதற்கு காணிகள் இல்லாதவர்களுக்கு கூட பணத்தை ஒதுக்கிவிட்டு குறிப்பிட்ட ஒரு சில பிரதேச செயலாளர்கள் மூலம் அந்த நிதியை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளமையும் இதன் காரணமாக கிராம அலுவலர்கள் குறிப்பிட்ட நபர்கள தமது பகுதியில் இல்லையென தெரிவித்த போதிலும் அத்தகைய அறிக்கைகள் எழுதிய கிராம அலுவலர்கள் அலுவலகங்களுக்கு துப்பாக்கிகளுடன் செல்லும் ஈ.பி.டி.பி ஆயுததாரிகள் இவர்களை மிரட்டி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவ வாகனம் விபத்து 5 இராணுவம் பலி 17 பேர் காயம்

புகையிரதம் - இராணுவ வாகனம் விபத்து 5 இராணுவம் பலி 17 பேர் காயம் கொழும்பில் இருந்து வடகிழக்காக 12 கிலோமீற்றரில் அமைந்துள்ள கம்பகா மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் புகையிரத கடவையில் இராணுவ வாகனமும் புகையிரதமும் மோதிக்கொண்டதில் 5 இராணுவம் கொல்லப்பட்டும் 17 பேர் காயங்களுக்கும் உள்ளானதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் மத்திய பேரூந்து நிலையம் இடமாற்றம்

யாழ் மத்திய பேரூந்து நிலையம் இடமாற்றம் - இராணுவத தலையகம் அறிவிப்பு. நாளை முதல் யாழ்பாணத்தின் புதிய பேரூந்து நிலையமாக முச்சவெளியை அண்டிய பண்ணை பகுதியில் செயல்படும் என யாழ்மாவட்ட இராணுவ தலைமையகம் இன்று 29ம் திகதி அறிவித்துள்ளது. எனினும் இவ் ஏற்காட்டுக்கான காரணங்களை இராணுவத்தினர் வெளியிடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்படி தனியார் பேரூந்து தரிப்பு நிலையங்கள் மற்றும் வடபிராந்திய போக்குவரத்து சபை பேரூந்துகளது தரிப்பிடங்கள் பண்ணை பகுதிகளிலேயே அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை ஏற்கனவே யாழ் நகரின் ஸ்டேன்லி வீதி மற்றும் பருத்திதுறை வீதி ஆகிய போக்குவரத்து வீதிகளில் வாகனங்கள் செல்வது தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்கா..

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்கா அரசால் தரைமட்டம். கனரக ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் உதவியுடன், இந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் கடந்த நவம்பர் 25 ஆம் நாள் நுழைந்த இராணுவத்தினர், மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஈன இரக்கமற்ற தாக்குதலை உறுதிப்படுத்திய திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், நாகரிகமடைந்துள்ள தற்போதைய உலகில், எந்த நாட்டின் இராணுவமும் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபடாது என்றும் தெரிவித்தார். மாவீரர் நாள் கடைப்பிடிப்பிற்கு இரு நாட்களே இருந்த நிலையில், திட்டமிட்டு மாவீரர் துயிலுமில்லங்களை புல்டோசர் பாவித்து உடைத்து அழித்துள்ளதாக அவர் கூறினார்.சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல்களாலும், சம்பூர் நில ஆக்கிரமிப்பினாலும் அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து வாகரை நோக்கிச் சென்றுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் மிகப்பெரிய மாவீரர் துயிலுமில்லத்தை இவ்வாறு நாகரீகமின்றி சிதைத்திருப்பது கேவலமானது என்றும் அவர் தெரிவித்தார். 1986 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினருடான யுத்தத்தின் போது களப்பலியான மேஜர் கணேசின் வித்துடல் தொடக்கம், அண்மையில் களப்பலியான லெப். கேணல் குஞ்சன் வரை, ஏராளமான மாவீரர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட புனித பூமியை, திட்டமிட்டு இராணுவத்தினர் அழித்துள்ளனர். 1995 இல் இதுபோன்று, கோப்பாய், கொடிகாமம் மற்றும் வடமராட்சியில் எல்லங்குளம் போன்ற பகுதிகளில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லங்களையும் சிறிலங்கா இராணுவுத்தினர் அழித்தனர். இருப்பினும், 2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர், இவை மீளவும் புனரமைக்கப்பட்டன.

தமிழ் இளைஞர்களை கொல்லும் முகமூடிக் கொலைகாரர்கள்

தமிழ் இளைஞர்களை கொல்லும் முகமூடிக் கொலைகாரர்கள் [30 - November - 2006] -தனுஷ்கோடியில் அகதிப் பெண் தெரிவிப்பு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் முகமூடி அணிந்தவர்கள் நுழைந்து அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவிப்பதாக தனுஷ்கோடி வந்த இலங்கை ஆசிரியை ஷ்ரீபிரியா கண்ணீர் மல்க தெரிவித்தார். இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "இலங்கை வவுனியா நகர் இலுப்பைக்குளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக முகமூடி அணிந்து இரு சக்கர வாகனங்களில் வரும் சிலர், வீதியில் நடந்து செல்லும் அப்பாவி இளைஞர்களை வெட்டி படுகொலை செய்துவிட்டு ஓடி விடுகின்றனர். தற்போது நடந்து வரும் சண்டை எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நான் வவுனியா பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தேன். அங்கு ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் போட்டுத்தான் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை உள்ளது. உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் இலங்கையில் வசதி படைத்தவர்கள் மட்டும் வாழ முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது" என்றார் அவர்.

பொது இடங்களில் புகைத்தல், மது பாவனைக்கு நாடு...

பொது இடங்களில் புகைத்தல், மது பாவனைக்கு நாடு பூராகவும் நாளை முதல் கடுமையான தடை [30 - November - 2006] பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் நாளை முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இத்தடை உத்தரவை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் தடை செய்யப்படும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் ஐயாயிரம் ரூபா தண்டமும் அறவிட புகையிலை மற்றும் மதுபானம் சம்பந்தப்பட்ட தேசிய அதிகார சபை நடவடிக்கை எடுக்கவுள்ளது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த அதிகார சபை தனது சட்ட யாப்பு பரிந்துரைகளுக்கு அமைய புகையிலை உற்பத்தி, மதுபான பாவனை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக புகைத்தல் பொருட்கள் மற்றும் மதுபான வகைகள் தொடர்பாக ஊடக பிரசாரங்கள் முழுமையான தடைக்கு உட்படுகிறது. எவரேனும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின் இரண்டு வருட சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாவும் அபராதமாக அறவிடப்படும். புகையிலை மற்றும் மதுசாரம் ஆகிய தயாரிப்புகளை பாவனைக்கு எடுப்பதினால் இலங்கையர்களின் உடல்நலம் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் மரணிக்கும் வீதமும் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது ஆய்வு புள்ளி விபரங்கள் ஊடாக தெரிய வந்துள்ளது. இவற்றால் நோய்க்குள்ளாவோரின் சுகாதார செலவீனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும் வீண் விரயங்களைக் கட்டுப்படுத்தவும் குறிப்பிட்ட இந்தத் தடை உத்தரவு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டு சட்ட மூலமாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதாக அதிகார சபையின் சார்பாக தகவல் தந்த அதிகாரி தெரிவித்தார். பாராளுமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வீதிகள், பஸ் மற்றும் புகையிரதங்கள், அவற்றின் நிலையங்கள், சந்தைகள், அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், விமான நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் சன நடமாட்டம் நிறைந்த பொது இடங்கள் பட்டியலுக்குள் அடக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பொது இடங்களில் கடைகளில் வைக்கப்பட்டுள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தொடர்பான விளம்பரங்களும் உடனடியாக அகற்ற கோரப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 15 முகவர் ...

மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 15 முகவர் நிலையங்களுக்கு எதிராக வழக்கு [30 - November - 2006] வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 15 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவை என பணியகத்தின் உத்தியோகத்தொருவர் தெரிவித்துள்ளார். மோசடியான சான்றிதழ்களை பயன்படுத்தி பாடசாலை செல்லும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சித்தது, பல லட்ச ரூபாக்களை பெற்றுக் கொண்டு வேலை வாய்ப்புகளை வழங்காமை, நிர்ணயிக்கப்பட்ட வசதிகளின்றி பயிற்சி நிலையங்களை நடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, அனுமதிப்பத்திரமின்றி முகவர் நிலையங்களை நடத்தி வருபவர்கள் தொடர்பான தகவல்களை பெற்று பொலிஸாருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் பணியகம் மேற்கொண்டு வருகிறது. கொரியாவுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி பல இலட்ச ரூபாக்களை பெற்றுக் கொண்டு அதற்கு அத்தாட்சியாக அச்சிடப்பட்ட கார்ட் ஒன்றை பல முகவர் நிலையங்கள் வழங்கியது தொடர்பாகவே பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்பட்ட அட்டைகளில் தொழில் அமைச்சினதும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினதும் முத்திரைகளும் காணப்பட்டுள்ளன.

வாகரைக்கு சென்ற 50 லொறிகள் நேற்றும் மாங்கேணியில்...

வாகரைக்கு சென்ற 50 லொறிகள் நேற்றும் மாங்கேணியில் திருப்பி அனுப்பப்பட்டன [30 - November - 2006] மட்டக்களப்பு வாகரைப்பகுதிக்கு நேற்று புதன்கிழமை மிகக் குறைந்தளவு உணவுப் பொருட்களே அனுப்பப்பட்ட நிலையில், உணவுப் பொருட்களுடன் சென்ற சுமார் 50 லொறிகளை மாங்கேணியில் படையினர் வழிமறித்து திருப்பி அனுப்பியுள்ளனர். வாகரைக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக எதுவித உணவுப் பொருட்களும் அனுப்பப்படவில்லை. வாகரைக்கான பாதையும் முற்றாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் படையினர் மற்றும் புலிகளின் உறுதிமொழியை அடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 120 லொறிகளில் வாகரைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது அவற்றை படையினர் மாங்கேணி இராணுவ முகாமில் தடுத்து நிறுத்திவிட்டனர். வாகரையிலிருந்து புலிகள் கடும் ஷெல் தாக்குதலை நடத்துவதாகவும் வீதியின் பல இடங்களில் கண்ணி வெடிகளும் பாலங்கள், மதகுகளுக்கு கீழே வெடிகுண்டுகளும் வைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறி வாகனத் தொடரணியை திருப்பியனுப்பி விட்டனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை வாகரைக்குச் சென்ற போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் (ஐ.சி.ஆர்.சி.) அங்கு புலிகளைச் சந்தித்தனர். இதன் போது புலிகள் உண்மை நிலையை விளக்கியதுடன் வாகனத் தொடரணி வாகரைக்கு வரமுன்னர் கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் தங்கள் பகுதியிலும் படைமுகாம்களுக்கு அருகிலும் நின்று நிலைமையை அவதானிப்பதன் மூலம், இந்த வாகனத் தொடரணி வாகரைக்கு வருவதைத் தடுப்பது யாரென்பதை அறியமுடியுமெனத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்றுக் காலை 8 மணியளவில் கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் வாகரையிலும் கஜுவத்தை இராணுவ முகாமுக்கு அருகிலும் நின்று நிலைமையை அவதானிக்க மட்டுநகரிலிருந்து வாகனத் தொடரணிகள் வாகரையை நோக்கி வந்தன. முதலில் 15 லொறிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடாரங்களும் வேறு 15 லொறிகளில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வாகரைக்குச் சென்றன. இதையடுத்து உலக உணவுத் திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐம்பது லொறிகளில் முழுமையாக உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு நண்பகல் 12 மணியளவில் அவை மாங்கேணி படைமுகாம் பகுதிக்கு வந்த போது படையினர் அவற்றைத் தடுத்து நிறுத்தினர். வாகரைக்குச் செல்ல அவற்றை அனுமதிக்க முடியாதெனப் படையினர் கூறவே அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து, அவ்விடத்திற்கு கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் யுனிசெவ், யுன்.என்.எச்.சி.ஆர். மற்றும் சர்வதேச தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மட்டக்களப்பு அரச அதிபர், மேலதிக அரச அதிபர், வாகரை பிரதேச செயலர் உட்படப் பலரும் வந்து சேர்ந்தனர். 50 வாகனங்களையும் வாகரை செல்ல அனுமதிக்குமாறும் மேலும் 50 வாகனங்களில் உணவுப் பொருட்கள் வரவுள்ளதாகவும் படையினரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், முன்னரங்க பகுதிகளில் பெருமளவு புலிகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதால் வாகனத் தொடரணி செல்வது ஆபத்தானதெனக் கூறிய படைத்தரப்பினர் 50 உணவு லொறிகளையும் வாகரைக்குச் செல்ல அனுமதிக்க முற்றாக மறுத்துவிட்டனர். எனினும், அவ்வாறானதொரு நிலைமை இல்லையெனவும் வாகனத் தொடரணி வாகரை செல்வதற்கு புலிகள் எவ்விதத்திலும் தடையாக இல்லையெனவும் வாகனத் தொடரணி செல்வதற்கு அனுமதிக்குமாறும் கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் அரச உயர் அதிகாரிகளும் படையினருடன் எவ்வளவோ வாதாடியும் படையினர் அதற்கு இணங்கவில்லை. நீண்ட நேரம் இவர்களுடன் இழுபறிப்பட்ட கண்காணிப்புக் குழுவினரும் ஐ.சி.ஆர்.சி.யினரும் இது குறித்து கொழும்பிலுள்ள தங்கள் தலைமைப் பீடங்களுக்கும் உடன் அறிவித்து அரச தரப்புடனும் இராணுவ தலைமைப் பீடத்துடனும் தொடர்பு கொண்டனர். ஆனாலும், அனுமதி கிடைக்காத நிலையில் 50 உணவு லொறிகளும் நேற்று மாலை மட்டுநகர் திரும்பின. வாகரையிலுள்ள சுமார் 50,000 மக்களுக்கு 15 லொறி உணவுப் பொருட்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

குடாநாட்டில் மாதாந்தம் 50 பேர் வரை படுகொலை

குடாநாட்டில் மாதாந்தம் 50 பேர் வரை படுகொலை [30 - November - 2006] யாழ்.குடாநாட்டில் மாதந்தோறும் ஐம்பது பேருக்குக் குறையாமல் படுகொலை செய்யப்பட்டு வருவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் கூறுகையில், எமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தப் படுகொலைகள் குறித்த புள்ளிவிபரத்தை தெரிவிக்கின்றோம். இதேநேரம் பல சந்தர்ப்பங்களில் இந்தப் படுகொலைகள் தொடர்பாக எமக்கோ அல்லது வேறு எந்த மனித உரிமைகள் அமைப்புக்கோ சம்பந்தப்பட்டவர்கள் முறையிடுவதில்லை. அவை எமது புள்ளி விபரங்களிலும் உள்ளடக்கப்படுவதில்லை. இவ்வாறு மனித உரிமைகள் குழுக்களிடம் அந்தப் படுகொலைகள் குறித்து முறையிடப்படாது போவதால் அவை குறித்துப் பதிவுகள் இல்லாது போய்விடுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் குடாநாட்டுக்கான ஏ -9 பாதை மூடப்பட்ட பின்னர் இந்தப் படுகொலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளன. இதேபோன்று கடத்தல்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னரே படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன. குடாநாட்டில் தற்போது மக்கள் சிக்கிப் போயுள்ளனர். அவர்களால் குடாநாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அச்சுறுத்தல் உள்ள பலரது நிலைமை மிக மோசமாகவுள்ளது. கடந்த பல மாதங்களாக படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் நடைபெற்றபோதும் அண்மைக்காலங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலிருப்பதாகக் கூறி முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் எமது ஆணைக்குழுவிடம் தஞ்சமடைந்துள்ளனர். எம்மால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க முடியாதிருப்பதால் அவர்களை நாம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதைவிட எம்மால் வேறெதனையும் செய்ய முடியாது. தற்போது நிலைமை மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இணைந்த வட, கிழக்கே இந்தியாவின் விருப்பம்

இணைந்த வட, கிழக்கே இந்தியாவின் விருப்பம் - மன்மோகன்சிங் ஜனாதிபதி மகிந்தவிடம் தெரிவிப்பு; அரசியல் தீர்வுக்கு முயற்சிக்குமாறு வலியுறுத்தல் [30 - November - 2006] இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்பட்ட அலகாக இருப்பதையே இந்தியா விரும்புவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் தெரிவித்திருக்கிறார். அத்துடன், மனித உரிமை துஷ்பிரயோகங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியிருக்கிறார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு நேற்று புதன்கிழமை மதியபோசன விருந்துபசாரமளித்த பின் மன்மோகன் சிங் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் திறந்த மனதுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திகள் தெரிவித்தன. இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவைத் தெரிவித்த மன்மோகன் சிங், விடுதலைப் புலிகளை புதுடில்லி நன்கு விளங்கிக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி ராஜபக்‌ஷவிடம் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி `ஐ.ஏ.என்.எஸ்.' தெரிவித்தது. கடந்த செப்டெம்பரில் ஹவானாவில் மன்மோகன் சிங்கைச் சந்தித்து ராஜபக்‌ஷ பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதேவேளை, விடுதலைப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்தல் விடுத்து இருநாள் கடந்திருக்கும் நிலையில், இரு நாட்டு அரச தலைவர்களின் சந்திப்பும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நேற்றைய சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக ராஜபக்‌ஷ விளக்கமாக மன்மோகன் சிங்கிற்கு எடுத்துக் கூறியதுடன், 2005 நவம்பரில் தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் சமாதானத்தை முன்னெடுப்பதற்கு `மூச்சு விடுவதற்குக் கூட' புலிகள் கால அவகாசத்தை தமக்கு வழங்கவில்லையென குற்றம் சாட்டியுள்ளார். தென்னிலங்கையில் கருத்தொருமைப்பாடு காண்பதற்காக தான் அனைத்துக் கட்சிக்குழுவை அமைத்ததாகவும் தமிழ் சிறுபான்மையினருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். தனியாக யோசனையை தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் அது தோல்வி கண்டு விடக்கூடும் என்றும் ஏனெனில் சுதந்திரக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் போதாது என்ற வாதத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார். அனைத்துக் கட்சிக் குழுவின் யோசனைகள் அடுத்தமாதம் நடுப்பகுதியில் தயாராக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் மன்மோகன்சிங் பொதுமக்களின் துன்பத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். பொதுமக்கள் பாதிக்கப்படும் விடயம் தமிழ்நாட்டில் உணர்வலைகளை ஏற்படுத்தி வருவதாகவும் மன்மோகன் சிங் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற வலியுறுத்தலும் மன்மோகன் சிங்கால் விடுக்கப்பட்டிருக்கிறது. வட,கிழக்கு மாகாணம் ஒரே அலகாக இருப்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரு மாகாணங்களும் ஒரே அலகாக இருப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் அதுவும் அதற்குரிய உகந்த சூழ்நிலையின் போதே அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் இந்தியாவின் நிலைப்பாடாகும். இது இவ்வாறிருக்க நோர்வே மீதான தனது மகிழ்ச்சியின்மையையும் மகிந்த ராஜபக்‌ஷ வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நிர்வாகத்திலுள்ள ஒரு சாரார் புலிகளுக்கு சார்பாக ஒஸ்லோ செயற்படுவதாக கூறுகின்றனர். நேற்றைய சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரு நாட்டு வெளிவிவகாரச் செயலாளர்கள், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Wednesday, November 29, 2006

பிரபாகரனின் உரையினை உதாசினப்படுத்தி எதிர்விளைவுகளை ...

பிரபாகரன் யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளார் சிக்கலான நிலையை எதிர்கொள்ளப்போகின்றோம் அமைச்சர் அநுரா எச்சரிக்கை; பேச்சுமேசைக்கு வரவழைக்க வேண்டும் என்கிறார். [Wednesday November 29 2006 ] [virakesari.lk] தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் வாய்மூலமாக யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள் ளார். இதனூடாக சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பது மட்டும் உண்மை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க சபையில் நேற்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை.செய்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலேயே பிரபாகரன் வாய்மூலம் யுத்த பிரகடனத்தை விடுத்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் பிரபாகரன் மீண்டும் பேச்சுக்கு வருவாரா? என்பது சந்தேகமே.பிரபாகரனின் உலகளாவிய பேச்சுக்கு இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆக குறைந்தது ஒரு சொல்லைக்கூட ஒலி, ஒளிபரப்பு செய்யவில்லை. ஆனால், பிரபாகரனின் உரை வெளிநாட்டு ஊடகமொன்றில் ஒளிபரப்பு செய்தபோது நான் பார்த்து கொண்டிருந்தேன். பிரபாகரன் தனதுரையில் வாய்மூலமாக யுத்தத்தை பிரகடனப்படுத்தியதுடன் மிகவும் நிதானத்துடன் நம்பிக்கையுடன் உரையாற்றிக்கொண்டிருந்தார்.இனப்பிரச்சினைக்கு "அதிகாரபகிர்வு முறையூடாக அல்லது சொல்லை வைத்துக்கொண்டு முரண்டுபிடிக்காமல் ஏதாவது ஒரு முறையில் தீர்வு கண்டேயாக வேண்டும். இல்லையென்றால் சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். எதிர்கொள்ள போகின்றோம்.பேச்சுக்கு வரவழைக்க வேண்டும் பிரபாகரன் தனது உரைக்கு பின்னர் மீண்டும் பேச்சுக்கு வருவாரா? என்பது சந்தேகமே. எவ்வாறெனினும் இந்தியா அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு எப்படியாவது வரவழைக்க வேண்டும்.பேச்சுமூலம் தீர்வு காண்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு சமாதானத்தை ஏற்படுத்துவதனூடாக மட்டுமே நாட்டை முன்னேற்றமடையச் செய்ய முடியும். கடந்த காலத்தை மறந்து விட்டு எந்த நாட்டையாவது அழைத்துக் கொண்டு புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து பேச்சின் மூலமாக தீர்வு காண வேண்டும். ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை பிரபாகரனின் மாவீரர் தின உரைக்கு முக்கியத்துவம் கொடுக்காத இலங்கை ஊடகங்கள் பிரபாகரன் சுனாமியால் பலியாகிவிட்டார், அவருக்கு உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டன. ஆனால், அவர் திடகாத்திரத்துடன் ஆரோக்கியமுடனே இருந்து கொண்டிருக்கின்றார். தயவு செய்து பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்.இலங்கையில் எந்தவொரு அரசியல் தலைவர் கூட பிரபாகரனை சந்தித்ததில்லை. ஆனால், பல தலைவர்களை இழந்துவிட்டோம். ஐ.தே.க. தலைவர்களை கூட கொலை செய்தனர் என்பதனால் அவர் தொடர்பான ""புரட்டுகளை நிறுத்துங்கள். புஷ் தோல்வி வெளிநாட்டுக்கொள்கை காரணமாக ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தோல்வியை தழுவிக்கொண்டு வருகின்றார். ஈராக்கிய மக்கள் படுகின்ற துன்பங்களை புஷ் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதனால் ஈராக்கிய மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படல் வேண்டும். இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணாவிட்டால் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. முதலீடுகள் கிடைக்காது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். யுத்த நிலைமையை மாற்ற வேண்டும். யுத்த நிலைமை தோன்றினால் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காது. சுற்றுலா துறை வீழ்ச்சியடையும். நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதனால் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். அத்துடன் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகள் முதலீடுகள் பரவலாக்கப்படல் வேண்டும் என்பதுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. கடந்த கால செயற்பாடுகளை மறந்துவிட்டு ஏதோ ஒரு நாட்டினை அழைத்து புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எந்த அமைச்சராக இருந்தாலும் அமைச்சினூடாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். சுனாமியினால் உல்லாச பிரயாணத்துறை பாதிப்படைந்தது. அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளும் உல்லாச பிரயாணத்துறையின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது. அமைச்சின் திட்டங்களை முன்னெடுக்க நிதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நிதியமைச்சின் செயலாளரை கெஞ்ச வேண்டியுள்ளது. 2006 ஆம் ஆண்டிற்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை.பெற்றுக்கொள்ளப்படுகின்ற நிதி கூட கிடைப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போது சில வெளிநாட்டு ஊடகங்கள் உல்லாச பிரயாணத்துறையின் கேந்திர நிலையம் தாக்கப்பட்டதாக செய்திகளை வெளியிடுகின்றன. அச்செய்தியை பார்க்கின்ற மில்லியன் கணக்கான மக்கள் இலங்கை குறித்தும் இலங்கையின் உல்லாச பிரயாணத்துறை குறித்தும் தப்பான கண்கொண்டு பார்த்து வருவார்கள்..அத்துடன் கொழும்பில் பயங்கரவாத செயற்பõடுகள் முன்னெடுக்கின்றபோது உல்லாசதுறை பெரிதும் பாதிப்படைகின்றது. உல்லாச பிரயாண துறையை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்து வருகின்றார். அத்துடன் மஹிந்த சிந்தனையிலும் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். உல்லாச பிரயாணத்துறைக்கு கடந்த வருடங்களைப் பார்க்கினும் குறைந்தளவான தொகையையே செலவு செய்துள்ளோம் என்பதை கூறுவதுடன் உல்லாச பயணத்துøறக்கு கூடுதலான நிதி தேவைப்படுகின்றது. இலங்கைக்கு வருகின்ற உல்லாச பிரயாணிகள் விபசாரிகளா? இல்லையா? என்பது குறித்து எம்மால் எப்படி இனங்காண முடியும். விபசாரத்தை அரசாங்கம் ஊக்குவிக்கவில்லை என்பதுடன் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம். விடுதலைப் புலிகளுடன் முன்னெடுக்கப்படுகின்ற சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதனூடாக மட்டுமே உல்லாச பிரயாணத்துறையை வளர்ச்சியடைய செய்ய முடியும்..

ஐ.நா சபையின் சபையின் பல்கலைக் கழகங்கள் சபையின் ...

ஐ.நா சபையின் சபையின் பல்கலைக் கழகங்கள் சபையின் பிரதிநிதியாக ஜயந்த தனபால நியமனம். அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிங்களத்தின் தலைசிறந்த ராஜதந்திரிகளில் ஒருவருமான ஜயந்த தனபால ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக் கழகங்கள் சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கான இறுதி வாக்கெடுப்பின் போது நமீபியாவின் ஜேர்மனிக்கான தூதுவராக செயற்பட்ட கட்ஜாவியை வெற்றிகொண்டு இந்தப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இலங்கை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றும் ஜயந்த தனபால ஈராக்கில் அணு ஆயுதங்கள் குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட குழுவிற்கும் தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையில் பல பதவிகளை வகித்து வரும் ஜயந்த தனபால ஒரு இராஜதந்திரியாக நான்கு தசாப்த கால அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் பத்திரிகையாளருடன் ...

கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டிருந்த பொலிஸார் மீது விசாரணை கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த பொலிஸார் தொடர்பாக பொலிஸ் தலைமையக உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை இப்பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த மற்றும் அவருக்கு உதவிகள் செய்து வந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவொன்றினால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர், பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியொருவரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேவேளை, குறிப்பிட்ட இந்தப் பெண் பத்திரிகையாளரை தமிழ் பத்திரிகையிலிருந்து சிங்களமொழி பத்திரிகைக்கு மாறிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பாகவும் இந்த விசாரணைகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்துள்ளதுடன் புலிகளுக்கான உளவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது ....

விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தொடர்பில் அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்க நீதிமன்றம் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், செப்ரெம்பர் பதினொன்று தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்துள்ளார். புஷ் அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்ரனைத் தளமாகக்கொண்டு இயங்கி வரும் Humanitarian Law Project என்ற சட்ட நிறுவனம் இந்த வழக்கினை வாதாடியது. இந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் கோல் இந்த வழக்கின் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி புஷ், தனது அதிகாரத்தின் வாயிலாக இந்தத் தடையை பிரயோகித்திருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பின் மூலம் பட்டியலிடப்பட்ட ஏனைய குழுக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்று எனத் தெரிவித்த டேவிட் கோல், ஆனால் இந்த பட்டியல் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மேலும் தெரிவித்தார். வழங்கப்பட்ட தீர்ப்புக் குறித்து விடுதலைப்புலிகள் மற்றும் குர்டிஸ்தான விடுதலை அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக அமெரிக்க நீதிநிர்வாக அமைச்சின் பேச்சாளர் சாள்ஸ் மில்லர் கருத்து தெரிவிக்கும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாகவும், அமெரிக்க அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். இதேவேளை, இந்தத் தீர்ப்புக் குறித்து எந்தவித கருத்தினையும் தெரிவிப்பதற்கு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.

புலனாய்வுத் தகவல்களை பின்னரே தூதுவர்களையும்...

புலனாய்வுத் தகவல்களை பின்னரே தூதுவர்களையும் நாட்டுக்குள் அனுமதிப்போம் - சிறிலங்கா அரசாங்கம். ஆயுத பிணக்குகளில் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் அலன் றொக் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டமையினால் இனிமேல் இத்தகையவர்கள் சிறிலங்கா வரும் முன்னர் அவர்கள் குறித்து புலனாய்வுத்தகவல்களை பெறவுள்ளோம். இதன் பின்னரே நாட்டுக்குள் அவர்களை அனுமதிப்பது குறித்து தீர்மானிப்போம் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, இவ்வாறு இங்கு வரும் தூதுவர்களை ஜனாதிபதி நேரடியாக இனிமேல் சந்திக்கமாட்டார். ஆயுதப்பிணக்குகளில் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய ஐ.நா. சபையினால் நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கான திருமதி ராதிகா குமாரசாமியின் விசேட தூதுவராகவே அலன் றொக் சிறிலங்கா வந்தார். இவ்வாறு தூதுவர்களின் தூதுவர்களாக வருபவர்களுடன் இனிவரும் காலங்களில் ஜனாதிபதி நேரடிச் சந்திப்புகளை மேற்கொள்ளமாட்டார். இவ்வாறான ஆராய்வுகளின் தலைமை அதிகாரிகளை மட்டுமே ஜனாதிபதி சந்திப்பார். இவ்வாறான தூதுவர்களின் பின்புலம் தொடர்பாக முழுமையான புலனாய்வு அறிக்கைகளை சிறி லங்கா அரசாங்கம் விசாரித்து அறிந்த பின்னரே நாட்டுக்குள் இவர்களை அனுமதிப்பது குறித்து இனிமேல் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் தென்னிலங்கைக்கு தமிழ் இராச்சியத்திலிருந்து......

விரைவில் தென்னிலங்கைக்கு தமிழ் இராச்சியத்திலிருந்து விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் * பாராளுமன்றத்தில் சிவநேசன் எம்.பி. திட்டமிட்ட இன அழிப்பை தமிழருக்கெதிராக மேற்கொண்டு வருவதாக அரசை குற்றம் சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவநேசன் மிக விரைவில் உதயமாகவுள்ள தமிழ் இராச்சியத்திலிருந்து தென்னிலங்கைக்கு விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுமெனவும் சூளுரைத்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் இங்கு தெரிவித்ததாவது; வட, கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை முன்னொரு காலத்தில் பிரபல்யம்பெற்று விளங்கியது. ஆனால், அந்நிலைமை இன்று மாறிவிட்டது. வடக்கு, கிழக்கில் உள்ள வளங்களை தென்னிலங்கை அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது. பட்டினிச் சாவினை குடாநாட்டு மக்களும், வாகரை மக்களும் எதிர்நோக்கியுள்ளனர். தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொண்டு வருகிறது. இன அழிப்பையும், நில அபகரிப்பினையும் மேற்கொள்ளும் அரசிடம் தமிழ் மக்கள் அபிவிருத்தியை எதிர்பார்க்கவில்லை. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடத்தில் கடற்படை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடல் அட்டைகளை பிடிப்பதற்கு தடை விதித்துள்ள படையினர் தாம் அக்கடல் அட்டைகளை பிடித்து வருகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இதனால், அம்மக்கள் உண்ண உணவின்றியும், கையில் பணமின்றியும் வாழவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 35 இலட்சம் பனைமரங்கள் உள்ளன. இப்பனை மரங்களை இராணுவம் அழித்து தமது காவல் அரண்களை அமைக்க பயன்படுத்துகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் தொழிலின்றி நடு வீதிக்கு இன்று வந்துள்ளனர். பனை அபிவிருத்தியின் செயற்பாடுகள் முடக்கப்பெற்றுள்ளன. இதனால் இச்சபையின் பயன்களை எவரும் அனுபவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அரசுக்கு தமிழர் தாயக அபிவிருத்தியில் அக்கறையில்லை. மாறாக அழிப்பு நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கென தனியரசை நிறுவப்போவதாக அறிவித்துள்ளார். மிகவிரைவில் தமிழ் ஈழ இராச்சியத்திலிருந்து விவசாயப் பொருட்களை அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அமெரிக்காவை நோக்கி சதாம் விரல் நீட்டியதைப்போன்றே...

அமெரிக்காவை நோக்கி சதாம் விரல் நீட்டியதைப்போன்றே ஈழத்தை உருவாக்குவோமென எமக்கு சவால் * உயிருடன் இருக்கும்வரை முடியாது; மேர்வின் சில்வா சூளுரை அமெரிக்காவை நோக்கி சதாம் விரல் நீட்டியதை போன்று ஈழத்தை உருவாக்குவோமென எமக்கு சவால் விடுக்கின்றனர். நாம் உயிருடன் இருக்கும்வரை எவராலும் ஈழத்தை உருவாக்க முடியாதென பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; உலகம் உள்ளவரை இந்த நாட்டை பயங்கரவாதத்திற்கு அடிமையாகவிடமாட்டோம். பைத்தியக்காரர்கள் போல் தமிழ்க்கூட்டமைப்பினர் பேசுகின்றனர். ஈழத்தை தருவோம் பார்த்துக் கொண்டிருங்கள். யாராவது ஒருவர் நன்றாக மது அருந்திவிட்டு நான் தான் இந்த நாட்டின் தலைவர் என்று கூறுவது போன்று தமிழ்க் கூட்டமைப்பினர் பேசுகின்றனர். புலிகளுக்கு பயந்து ஈழம் பற்றி சபையில் ஒரு போதும் பேசவேண்டாம். குண்டடிக்கிறீர்கள், கிளேமோர் தாக்குதல் செய்கிறீர்கள், படுகொலை புரிகிறீர்கள். பின்னர் உணவில்லை பட்டினி கிடக்கிறோமென சாப்பாடு கேட்கிறீர்கள். நாம் உங்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பிவைத்தோம். யாழ்ப்பாணத்தில் பனை அழிகிறதென கூறுகிறீர்கள். நீங்கள் ஆயுதத்தை கைவிட்டால் பனை ஏன் அழிகிறது. பனையைக் காப்பாற்ற வேண்டுமானால் ஆயுதங்களை கீழே போடுங்கள். ச.தொ.ச. வைப் பற்றி பேசுவதற்கு ஐ.தே.க.வுக்கு அதிகாரமில்லை. எம்முடன் உடன்படிக்கை செய்துள்ளமையினால் ஒரு விடயத்தை மட்டும் ஐ.தே.க.வினால் செய்ய முடியும். அதாவது நாங்கள் மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே ஐ.தே.க.வினால் முடியும். பாராளுமன்றம் என்பது நகைச்சுவையாக பேசும் இடமல்ல. காமினி லொக்குகே ரவி கருணாநாயக்க ஆகியோர் வாழ்க்கைச் செலவு உயர்வு பற்றி பேசுகிறார்கள்.அப்படியானால் 1977 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சியிடமிருந்து ஆட்சியை ஐ.தே.க. கைப்பற்றிய போது இருந்த விலைகளா 1994 ஆம் ஆண்டு ஆட்சியை கையளிக்கும் போதும் இருந்தது.

இலங்கையில் தனிநாடு ஒன்று அமைய அமெரிக்கா...

இலங்கையில் தனிநாடு ஒன்று அமைய அமெரிக்கா ஆதரவளிக்கப் போவதில்லை - அமெரிக்கத் தூதுவர் இலங்கையில் தனிநாடு ஒன்று அமைக்கப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்க போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாகவே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைத் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார். விசேட தேவையுடையோருக்காக அமெரிக்க யு.எஸ் எய்ட் நிறுவனம் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட மோட்டிவேசன் சரிட்டபல் ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவியளிக்கும் கட்டங்களுக்கான விசேச நிர்மாண உதவி திட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தே போதே இன்று அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் தீர்வே...

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் தீர்வே - ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு பேச்சு வார்த்தை மூலமான அரசியல் தீர்வே என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கருத்தை ஐக்கிய தேசிய கட்சி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் சகல இன மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படும் வகையில், அரசியல் தீர்வு அமைய வேண்டும். பெரும்பான்மையான தமிழ் மக்களின், ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றையே எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும், வன்முறைகள் பரவி வருவதுடன், வட கிழக்கில் வாழும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில், வட கிழக்கு மக்கள் தமது வாக்கை பயன்படுத்துவதை தடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தடுக்கப்பட்டது. அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தால், 2002 2003 ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சமாதான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இணைத்தலைமை நாடுகள் கூறியுள்ளது போல் மனிதாபிமான விடயங்களை அரசியல்படுத்தாமல், அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்திற்காக சகல கடல் மற்றும் தரை வழிப்பாதைகளை திறக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

Tuesday, November 28, 2006

இரு இளைஞர்கள் கழுத்துவெட்டி கொலை

யாழ் வலிகாமம் பகுதியில் இரு இளைஞர்கள் கழுத்துவெட்டி கொலை யாழ்பாணம் வலிகாமம் வடக்கு, இணுவில் ஆகிய பகுதிகளில் இரு இளைஞர்கள் கடத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெட்டிக்கொலை கொலைசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் கொட்டடி, கோண்டாவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகள் தெரிவிக்கின்றன. இதேவேளை மல்லாக மாவட்ட நீதிபதி சிவாஐpனி இளங்கோவன் சம்பவ இடத்துக்கு விஐயம் செய்து கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அடையாளம் காண்பதற்கு யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பகுதிகளில் 72 000 பேர்...

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பகுதிகளில் 72 000 பேர் இடப்பெயர்வு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டவரும் கடும் எறிகணை வீச்சுகாரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அறியமுடிகிறது. மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலக அறிக்கைப்படி 41 463 பேர் திருகோணமலை மாவட்டத்திலும், 30 630 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்துக்க இடம்பெயர்ந்தள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை 14 கிராமசேகவர் பிரிவில் உள்ள 22 தற்காலிக வதிவிடமுகாங்களில் தங்க வைத்திருப்பதாக மாவட்ட பிரதேசசெயலர் எஸ்.புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னர் இவ்வாறு இடம்பெயர்ந்து விக்னேஸ்வரா கல்லூரியில் தற்காலிகமாக தங்கியிருந்து மக்களில் சிறீலங்கா அரசின் எறிகணைத்தாக்குதல் காரணமாக 45 பேர்கொல்லப்பட்டும் 125 பேர் காணமடைந்தமை யாவரும் அறிந்ததே

பிரபாகரன் தனியரசை அமைக்க முயற்சித்தாலும் அராசங்கம்...

பிரபாகரன் தனியரசை அமைக்க முயற்சித்தாலும் அராசங்கம் சமாதான பேச்சுக்களை நடத்துவதை அரசாங்கம் கைவிடாது - பிரதமர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனியரசு அமைக்க முயற்சிகள் மேற்கொண்டாலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை அரசாங்கம் கைவிடாது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் வன்முறைகளை கைவிட வேண்டும் என பிரதமர் வியட்நாமில் நேற்று 28. 11 தெரிவித்துள்ளார். மாவீரர் தின உரையின் பின்னரே இந்த கருத்து பிரதமரால் வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுடன் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரத்தை பரவலாக்க அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளை நிறுத்த போவதில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார். இரட்டை அதிகாரம் மற்றும் இரண்டு அதிகார சபைகளை உருவாக்க முடியும் இந்த இரண்டுக்கும் இடையில் நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள முடியும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமாதான முயற்சிகள் இன்னமும் இருக்கிறதா என அரச ..

சமாதான முயற்சிகள் இன்னமும் இருக்கிறதா என அரச தரப்பு நோர்வேயிடம் கேள்வி எழுப்புகின்றனர் புலிகள் சமாதான முன்னெடுப்புகளின் இருந்து விலகிகொள்வது என்று தெரிவித்த பின்னர் இலங்கை அரசு சமாதான பணியாளரான நோர்வேயிடம் சமாதான முன்னெடுப்புகள் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக . இராணுவ விவகாரங்களை பற்றி பேசவல்ல அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இன்று செவ்வாய் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. சமாதான முயற்சி தொடர்கின்றது என்பது பற்றி எங்களுக்கு விளக்கம் வேண்டும் . மேலும் போர் நிறுத்த உடன்படிக்கை 2002 ம் ஆண்டு கைசாத்திடுவதற்கு முக்கியமான காரணமாக இருந்து நோர்வே எமக்கு விளக்கம் தெரிவிக்கவேண்டும். இதன் முலம் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பாளர்களின் நிலை என்பது விளக்கம் தெரிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்" அமைச்சர் ஹெகலிய

சமூகவிரோதச் செயலில் ஈடுபட்ட குடும்பபெண் சுட்டுக்கொலை

யாழ்பாணத்தில் சமூகவிரோதச் செயலில் ஈடுபட்ட குடும்பபெண் சுட்டுக்கொலை இன்று பிற்பகல் 11.45 மணியளவில் உதயகுமார் றெஐினா என்ற ஐந்து பிள்ளைகளின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் இராணுவம் மற்றும் ஒட்டுக்குழுக்களுடன் உறவுகள் வைத்துள்ளதாகவும் இவரை பல தடவை எச்சரித்தபோதும் அவர் தொடர்ந்தும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால் இவரை கொலை செய்ததாக எல்லாளன் படை துண்டுப்பிரசுரத்தில் உரிமை கூறியுள்ளனர்.

கயூவத்தை முகாமில் இருந்து முன்னேற்ற முயற்சி முறியடிப்பு

மட்டக்களப்பு கயூவத்தை முகாமில் இருந்து முன்னேற்ற முயற்சி முறியடிப்பு மட்டக்களப்பு கயூவத்தை இராணுவ முகாமில் இருந்து இன்று செவ்வாக்கிழமை அதிகாலையில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வாகரையை நோக்கி இராணுவத்தினால் முன்னேற எடுக்கப்பட்ட முயற்சி விடுதலை புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் பதில் தாக்குதலின் போது இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாகவும் தொவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த இராணுவத்தினர் பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலின் போது விடுதலை புலிகளின் தரப்பில் சாளவன் வீரச்சாவடைந்துள்ளார்.

மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் ...

மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டன இன்று செவ்வாக்கிழமை காலை 9.00 மணியளவில் 120 லொறிகளில் மட்டக்களப்பு வாகரைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவு மற்றும் மருந்து பொருள்கள் மாங்கேணி இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு கச்சேரியில் இருந்து 85 லொறிகள் மற்றும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களில் 35 லொறிகளும் சென்றுள்ளது. இவைகள் அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை காட்டி மறுத்துள்ளார்கள். ஐ.சி.ஆர்.சி மற்றும் யு.என் நிறுவனங்களின் உதவியுடன் உதவி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் சென்ற போதும் எவ்வித முடிவுமின்றி வாகனங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசு கருணா படையினரால் சிறுவர்கள் ...

சிறிலங்கா அரசு கருணா படையினரால் சிறுவர்கள் கடத்தப்படுவதை தடுக்கவேண்டும் -மனத உரிமைகள் குழு சிறிலங்கா பாதுகாப்பு படையினர் உடனடியாக சிறுவர் மற்றும் இளைஞர்கள் கருணா குழுவினரால் கடத்தத்தபடுவதை தடுக்க வேண்டும். எனவும் அத்துடன் கடத்தபடுபவர்களை மீட்டு அவர்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக சேர்த்துவிடவேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைப்பு இன்று செவ்வாய்கிழமை விடுத்த அறிகையில் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் அமைபான கியுமன் ரைட் வாட்ச்(Human right watch) அடுத்த மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறிலங்கா அரசப்படையினர் மற்றும் பொலிஸார் சிக்கலடைந்துள்ள நிலையில் அதே நேரம் நேரடியாக சிறுவர்கள் கருணா படையினரால் கடத்தபடுவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.. எனவும் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி மற்றும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியுயோக்கினை தளமாக கொண்டமைந்த இந்த மனித உரிமைகள் அமைப்பு -"தம்மிடம் சிறுவர்கள் கருணா படையினரால் கடத்தபடுவதற்கு நேரடியாக சிறிலங்கா பாதுகாப்பு படையினர் உடந்தையாக இருந்துள்ளனர். என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும் "தெரிவித்துள்ள இந்த அமைப்பின் சிறுவர் நலன் உரிமைகள் வழக்கறிஞர் ஜொ பெக்கர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐ.நா சிறார் உரிமைகள் நலன் பிரதிநிதி அலன்றொக் இதே கருத்தினை தனத் 10 நாள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

மட்டக்களப்பு - வவுணதீவு பாதை மூடப்பட்டது மக்கள் ...

மட்டக்களப்பு - வவுணதீவு பாதை மூடப்பட்டது மக்கள் நகருக்குள் வரமுடியாத அவலநிலை மட்டக்களப்பு - வவுணதீவு பாதை நேற்று திங்கட்கிழமை காலை திடீரென மூடப்பட்டதால் மட்டுநகருக்குள் வந்த மக்கள் போகமுடியாதவாறும் வவுணதீவுக்கு அப்பால் இருக்கும் மக்கள் நகருக்குள் வரமுடியாத நிலையும் தோன்றியுள்ளது. மாவீரர் தினம் நேற்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் இவ்வேளையிலேயே வவுணதீவு பாதை படையினரால் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. வவுணதீவு பிரதேச செயலகம், பிரதேசசபை போன்ற அரச காரியாலயங்களும் இயங்கவில்லை. இவ்வீதியின் பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு செல்லும் மண்முனை, அம்பிளாந்துறை, பட்டிருப்பு ஆகிய பாதைகள் பலத்த சோதனையின் பின்னர் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுவதுடன் பாதை சேவையும் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களானோருக்கு ..

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களானோருக்கு சபையில் ஜெயானந்தமூர்த்தி எம்.பி. அஞ்சலி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சபையில் அஞ்சலி செலுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டக் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அஞ்சலி செலுத்திய ஜெயானந்தமூர்த்தி எம்.பி. பேசுகையில் கூறியதாவது: "தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று புனிதமான நாள். தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புலம்பெயர் இடங்களிலும் மாவீரர் நாளைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். எமது தேசியத் தலைவர் பிரபாகரன் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரையை நிகழ்த்தவுள்ளார். இந்த உரையை உலகம் முழுவதும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விடுதலைப்போராட்டத்தில் தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்காக இந்த சபையில் நான் அஞ்சலி செலுத்துகிறேன். போக்குவரத்து அமைச்சு தனது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள புத்தகத்தில் `தமிழ்க்கொலை' இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் பௌஸி கவனம் செலுத்த வேண்டும். அவர் தமிழ் பேசும் அமைச்சராகவிருக்கும் நிலையில் இவ்வாறான பிழைகள் இடம்பெறுவது மிகவும் கவலைக்குரியது. வாகரையில் டிப்போ தொடர்பில் அமைச்சர் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பழுதடைந்த பஸ்களே இங்கே சேவைகளில் ஈடுபடுகின்றன. அதேபோன்றே கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளும் இடம்பெறுகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பயணம் முடிந்த பின்னர் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலையேற்படுகின்றது. எனவே, கிழக்கு மாகாண போக்குவரத்துத்துறைகள் தொடர்பில் அமைச்சர் கூடிய கவனமெடுக்க வேண்டும்".

வட - கிழக்கை பிரித்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம்

வட - கிழக்கை பிரித்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம் இணைக்கப்பட்ட வட கிழக்கை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்களுக்கு "ஜன பிரணாபிமானி" என்ற பெயரில் விருது வழங்கும் வைபவமொன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இன்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. வடகிழக்கை பிரிப்பதற்காக தாக்கல் செய்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி எச்.எல். சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர, சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி மற்றும் சட்டத்தரணி மனோலி ஜினதாச உட்பட வழக்கை தாக்கல் செய்த ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேயசேகர, வசந்த ஜினதாச எம்.பி. மற்றும் ஏ.எஸ்.எம். புஹாரி, ஜீ.எம். பீரிஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

Monday, November 27, 2006

தமிழீழத் தனியரசுதான் தீர்வு- சர்வதேசம் ஆதரிக்க வேண்டும்

தமிழீழத் தனியரசுதான் தீர்வு- சர்வதேசம் ஆதரிக்க வேண்டும்- தமிழ்நாட்டு ஆதரவு தொடர வேண்டும்: தமிழீழ தேசியத் தலைவர் சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம் என்றும தமிழிழீ தேசியத் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சி நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (27.11.06) தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரை: எமது விடுதலை வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்புமுனையில் நாம் தற்போது நிற்கின்றோம். எமது போராட்டப்பாதை மிகவும் நீண்டது, கடினமானது, பல கஸ்டமான கட்டங்களைக் கொண்டது. இதுவரை எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்திருக்காத சவால்களை, எதிர்பாராத திருப்பங்களை நாங்கள் எதிர்கொண்டிருக்கின்றோம். வரலாற்றில் முன்னொருபோதுமே நடந்திருக்காதவாறு நாங்கள் போரையும் அமைதிப் பேச்சுக்களையும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகின்றோம். அமைதிப் பேச்சுக்கள் மூலமாக இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் காணுவதற்காக எம்மை நாமே அர்ப்பணித்ததிலிருந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நீண்ட காலத்திற்குள், எரிந்துகொண்டிருக்கும் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட்டதா? தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான கொடூரத்தினைத் திணித்துவரும் சிங்களத் தலைமைகளின் மனநிலையில் குறிப்பிடக்கூடிய மாற்றம் ஏதேனும் ஏற்பட்டதா? தமிழர்களது நீதியான கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட்டனவா? அடக்குமுறை இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு அவர்கள் நாளாந்தம் அனுபவித்துவரும் துன்ப, துயரங்களிலிருந்து எமது மக்கள் விடிவினைக் காண முடிந்ததா? எம்மக்களது நாளாந்த பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டனவா? இவற்றில் எதுவுமே நடைபெறவில்லை. மாறாக, நீதியினைப் பெறுவோம் என்று நம்பிக்கைக் கனவுகண்ட தமிழர்களுக்கு சாவும் அழிவுமே பரிசுப்பொருட்களாக வழங்கப்பட்டன. அமைதி போதித்த நாடுகள் தங்களது மௌனத்திற்குள் தம் மனச்சாட்சியினைப் புதைத்திருக்கும் வேளையில் தமிழர் தாயகத்தின் மீது பாரிய அவலம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. பிரதான பாதைகளை மூடி தமிழ் மக்களை அவர்களது சொந்த நிலத்திலேயே சிறையிட்டு வைத்திருக்கின்றது சிங்கள அரசு. அம்மக்களது நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி, இதன் மூலம் அவர்களது சமூக வாழ்வினைக் கட்டுப்படுத்தி அவர்களது சுதந்திரத்தினை இல்லாமற்செய்து அவர்களை அதற்குள் கொடுமைப்படுத்தி வருகின்றது. சிங்கள அரசாங்கம் தமிழர் தாயகத்தினைத் துண்டாடி, இராணுவ முகாம்களை அமைத்து, முட்கம்பிகள் மூலம் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, அதனையொரு மாபெரும் மனித வதைமுகாமாக மாற்றியிருக்கின்றது. சிங்கள அரசாங்கம் இராணுவ மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு முனைகளிலும் எம்மக்கள்மீது போரினைத் திணித்திருக்கின்றது. முன்னொருபோதுமே நிகழ்ந்திராத வகையில் எங்களது மக்கள் அவர்களது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்: எண்ணுக்கணக்கற்ற கைதுகள், சிறைவைப்புக்கள், அடித்துத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குதல், பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் கொடுமைகள், படுகொலைகள், காணாமற் போதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் மற்றும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் என்பன தங்குதடையின்றி நடந்துகொண்டிருக்கின்றன. மறுமுனையில் எமது மக்கள் பொருளாதாரத் தடை, உணவு, மருத்துவம், போக்குவரத்து மற்றும் மீன்பிடி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களுக்குமான தடை ஆகியவற்றுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். யுத்தநிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள், மற்றும் பொறுமையுடன் அமைதி காத்த ஐந்து ஆண்டுகள் ஆகியவற்றிற்குப் பின்னரும் சமாதானத்தின் பலன்கள் எமது மக்களுக்குக் கிட்டவில்லை. தாங்கமுடியாத சுமைகளை எம் மக்கள் அவர்களது நாளாந்த வாழ்வில் எதிர்கொள்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு, பிணிகளுடனும், பசியுடனும் அகதி முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களது மக்களுக்கு உணவையும் மருந்தையும் மறுத்து, அவர்களைப் பட்டினிச் சாவு நிலைக்குகள் கொண்டுசெல்லும் சிங்கள அரசாங்கம் எமது மக்களுக்கு இரக்கத்தினைக் காட்டி அவர்களது அரசியல் உரிமைகள் வழங்கும் என்று யாரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனமேயன்றி, வேறொன்றுமல்ல. அறிவியலில் ஏற்பட்டுவரும் அதீத வளர்ச்சியும், அதனால் ஏற்பட்ட உலகப் பார்வையும் புதிய யுகத்திற்குள் மனித இனத்தினைக் கொண்டுசெல்கின்றது. அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப சிந்தனையும், கருத்துக்களும், சித்தாந்தங்களும் மாற்றங்களுக்கு உள்ளாகி, சமூகப் புறநிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆயினும், சிங்கள தேசத்திலோ அதன் சிந்தனைகள், சித்தாந்தங்களிலும் சரி, அல்லது அதன் சமூக உலகிலும் சரி எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. சிங்கள தேசம் புதிய காற்றைச் சுவாசித்து, புதிதாகச் சிந்திப்பதற்கு மறுத்துக்கொண்டிருக்கின்றது. சிங்கள தேசம் அதன் பண்டைய இதிகாசமான மகாவம்சக் கருத்துக்களின் தவறான பிரயோகங்களால் தொடர்ந்தும் வழிதவறிச்சென்று, அதனால் உருவாக்கப்பட்ட பேரினவாத கருத்துக்களுக்குள் மூழ்கிக்கிடக்கின்றது. இந்தப் பொறிக்குள் இருந்த தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல், சிங்கள பௌத்த பேரினவாதப் போதனைகளை அதன் பிரதான தேசிய சித்தாந்தமாகப் பின்பற்றி வருகின்றது. இந்தப் போதனைகள் அதன் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், இன்னும் ஏன் அதன் ஊடகங்களிலும் கூடப் பரவியிருக்கின்றது. சிங்கள பௌத்த பேரினவாதப் போதனைகளின் இந்த ஆதிக்கம் அதன் மாணவர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என்போரை அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக சிந்திக்கவிடாமல் செய்திருக்கின்றது. துரதிஸ்டவசமாக தமிழர்களின் தேசியப் பிரச்சினையினை நாகரீகமான முறையில் தீர்ப்பதற்கு சிங்களத் தலைவர்கள் உண்மையான முயற்சிகள் எடுப்பதை இது தடுத்துவருகின்றது. எமது விடுதலை அமைப்பும் சரி, எமது மக்களும் சரி ஒருபோதுமே போரை விரும்பியதில்லை. எமது மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் அமைதிவழி அணுகுமுறையினையே எப்போதும் விரும்பினோம். அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நாம் எப்போதும் தயங்கியதில்லை. இதனால்தான் திம்புவில் ஆரம்பித்து ஜெனீவா வரை பல்வேறு தடவைகள், பல்வேறு நேரங்களில், பல்வேறு நாடுகளில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறோம். நோர்வேயின் அனுசரணையோடும், சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்தோடும் பல்வேறு நாட்டுத் தலைநகரங்களில் நடைபெற்றுவரும் தற்போதைய அமைதி முயற்சிகள் முற்றிலும் வித்தியாசமானவை. ஒக்ரோபர் 31, 2000 இல் அப்போதைய நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் வன்னிக்கு விஜயம் செய்து, எங்களைச் சந்தித்ததுடன் இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகியது. முற்றிலும் வித்தியாசமான காலகட்டத்தில், வித்தியாசமான வரலாற்றுச் சூழலில், வித்தியாசமான வடிவத்தில் வித்தியாசமான பாதையில் இந்த அமைதிப் பயணம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சமாதானத்தை நோக்கிய முயற்சிகள், சிங்கள அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புப்போர் என இரண்டு முனைகளில் இது நகர்ந்துகொண்டிருக்கின்றது. நாங்கள் அமைதி காத்த ஆறு ஆண்டுகளில், எங்களது முயற்சிகளில் நாங்கள் நேர்மையாகச் செயற்பட்டோம். உண்மையில், அமைதி முயற்சிகளை நாங்களே ஆரம்பித்தோம். ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தினைப் பிரகடனப்படுத்தி அமைதி முயற்சிகளுக்கான வலுவான அடித்தளத்தினை நாங்கள் அமைத்தோம். அமைதிப் பேச்சுக்களுக்கு நாம் எவ்வித நிபந்தனைகளையோ காலக்கெடுக்களையோ விதிக்கவில்லை. இந்த முயற்சிகளை பலவீனமான நிலையிலிருந்துகொண்டு நாங்கள் மேற்கொள்ளவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பினையும், இயக்கச்சி-ஆனையிறவு இராணுவக் கூட்டுப்படைத் தளத்தினையும் நாங்கள் மீளக் கைப்பற்றினோம். சிங்கள இராணுவத்தின் அக்கினிக் சுவாலை படைநடவடிக்கையினை நாங்கள் தோற்கடித்தோம். எங்களது போராட்ட வரலாற்றில் பாரிய இராணுவ சாதனைகளை நாங்கள் ஈட்டினோம். இந்தப் பலமான நிலையில் இருந்துகொண்டுதான் நாங்கள் இந்தச் சமாதான முயற்சிகளை மேற்கொண்டோம். தென்னிலங்கையின் நிலைமையோ முற்றிலும் மாறானதாக இருந்தது. அடுத்தடுத்துத் தோல்விகளை எதிர்கொண்ட தென்னிலங்கை போரை எதிர்கொள்வதற்கான மனோதிடத்தினை இழந்துகொண்டிருந்தது. இராணுவத்தின் முதுகெலும்பு முறிந்திருந்தது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமானதாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் சிங்கள தேசம் பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டது. அமைதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு வந்த இந்த ஐந்து ஆண்டுகளில், விக்கிரமசிங்க, பண்டாரநாயக்கா, ராஜபக்ச என மூன்று அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஒவ்வொரு தடவையும் அரசாங்கம் கூண்டில் அடைக்கப்பட்ட அமைதிப் புறாவினை ஒரு கூண்டுக்குள் இருந்து மற்றொன்றுக்கு மாற்றியதேயொழிய சுதந்திரமாகப் பறந்துசெல்ல அதனை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. கூண்டில் அடைக்கப்பட்டு பலமுறை குத்தப்பட்ட அமைதிப் புறா தற்போது தன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றது. விக்கிரமசிங்கவுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டபின்னர் அவரது அரசாங்கத்துடன் ஆறு மாதங்களாக நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். முன்னைய சிங்கள அரசுகள் அனைத்தையும் போலவே, விக்கிரமசிங்க அரசாங்கமும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்களையும், பேச்சுக்களில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளையும் நடைமுறைப்படுத்தாமல் நேரத்தினை இழுத்தடித்து வந்தது. மக்களது வாழ்விடங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறுவதற்கு அதன் இராணுவம் மறுத்தது, அப்பெரிய நிலப்பரப்புக்களை இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து, எமது மக்களிடம் அவர்களது நிலத்தினைத் திருப்பிக் கொடுப்பதற்கு நிரந்தரமாக மறுத்தது. போர் நெருக்கடியினைக் குறைத்து, இயல்பு நிலையினைக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட உபகுழுவும் செயலிழந்து போனது. மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட உபகுழுவும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளால் பலமிழந்துபோனது. எமது மக்களது மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மறுத்த விக்கிரசிங்க அரசாங்கம் எமது அமைப்பினை உலகின் அரங்கில் ஓரங்கட்டுவதற்கு இரகசியமான முறையில் செயற்பட்டது. தமிழர் தாயத்தில் முறையான நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்னரே தென்னிலங்கையில் செலவுசெய்வதற்கான நிதியினைப் பெற்றக்கொள்வதற்கென நன்கொடையாளர் மாநாடுகளை அது நடாத்தியது. வோசிங்டனில் நடாத்தப்பட்ட நன்கொடையாளர் மாநாட்டில் நாம் பங்குபற்றுவதற்கான வழிவகைகளைச் செய்யத் தவறிய விக்கிரமசிங்க அரசாங்கம் எமது அமைப்பை ஓரங்கட்டி, அவமானப்படுத்தியது. இதன்காரணமாக ரோக்கியோ மாநாட்டினைத் தவிர்ப்பதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். விக்கிரமசிங்க அரசாங்கம் இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. சர்வதேச பாதுகாப்பு வலைக்குள் எமது விடுதலை அமைப்பினைச் சிக்கவைத்து, எங்களை அழிப்பதற்கு அது சதி செய்தது. இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை நாம் முன்வைத்தபோது, தென்னிலங்கை அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. குமாரதுங்கா அரசாங்கம் கடிவாளத்தினை எடுத்துக்கொண்டது. எங்களது வரைபின் அடிப்படையில் பேச்சுக்களை நடாத்துவதற்கு மறுத்த அதேவேளையில், அவரது அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி எம்மீது நிழல் யுத்தத்தினைத் தீவிரப்படுத்தியது. இந்தத் துணை இராணுவக் குழுக்களால் தமிழர் தாயகம் வன்முறைக் குருதிக் களமாக மாறியது. கல்விமான்கள், அரசியல்த் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்களுக்கு அமைவாக, சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது போராளிகள் மேற்கொண்டு வந்த அரசியற் பணிகளை நிறுத்தவேண்டிய நிலைக்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். இதன்காரணமாக எமது மக்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கொடூரப் பிடியில் தனித்து விடப்பட்டார்கள். இறுதியில் சுனாமி புனர்வாழ்விற்கென அது கையொப்பமிட்ட பொதுக்கட்டமைப்பினைக்கூட சந்திரிக்கா அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது. சிங்கள பேரினவாத போதனைகளுக்குள் இருந்து வெளிவரமுடியாத உச்ச நீதிமன்றம் ஒற்றையாட்சி அரசியலமைப்பினைக் காரணங்காட்டி, முற்றிலும் மனிதாபிமானம் நோக்கங்கொண்ட இந்த உடன்படிக்கையினை நிராகரித்தது. இந்த நேரத்தில்தான் சிங்கள தேசம் தங்களது புதிய ஜனாதிபதியாக ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்தது. கடந்த காலச் சிங்களத் தலைவர்களைப் போலவே இவரும் இராணுவ வழித் தீர்விலேயே நம்பிக்கை கொண்டுள்ளார். தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு கடந்த மாவீரர் தின அறிக்கையில் நாம் விடுத்திருந்த இறுதி வேண்டுகோளை அவர் நிராகரித்தார். மாறாக, எமது இயக்கத்தினை அழிக்கும் நோக்கோடு ஒரு வளத்தில் போரை முடுக்கி விட்டிருக்கும் அவர், மறுவளத்தில் அமைதிவழித் தீர்வினைக் காண்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார். போரும் சமாதானமும் என்ற இந்த அணுகுமுறை அடிப்படையில் தவறானது. எந்த அமைப்புடன் பேசித் தீர்வு காணவேண்டுமோ அந்த விடுதலை அமைப்பினை ஓரங்கட்டி அழித்துவிட்டு தீர்வினைக் காண்பது என்பது சாத்தியமற்றது. இது சிங்களத் தலைவர்களின் முட்டாள்தனமேயாகும். தனது படைபலத்தினைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கலாம் என ராஜபக்ச அரசு எண்ணுகின்றது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து, அரைகுறைத் தீர்வை தமிழர்மீது திணிப்பதற்கு அது விரும்புகின்றது. ராஜபக்ச அரசின் இந்தத் தந்திரோபாயத்தினால்தான், யுத்தநிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துபோய்க் கிடக்கின்றது. எமது நிலைகள் மீது தாக்குதல்களை நடாத்துவோம் என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு, நடாத்திவரும் ராஜபக்ச அரசு இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்குரிய ஈமக்கிரிகைகளை செம்மையாகச் செய்திருக்கின்றது. ராஜபக்ச அரசின் தாக்குதல்கள் தரை, கடல், வான்தாக்குதல்கள் வரை விரிவடைந்துள்ளன. ராஜபக்ச அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களுக்கு அவை விரும்பியவாறு யாரையும் கொல்வதற்குரிய சுதந்திரத்தினை வழங்கியிருக்கின்றது. தூரநோக்குடன் மாவிலாறில் இருந்தும் சம்ப+ரில் இருந்தும் நாம் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கல்களை சிங்கள இராணுவம் தவறாக மதிப்பிட்டது. தமிழர் நிலப்பரப்புக்களை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு பெருமளவு ஆயுத பலத்தினைப் பயன்படுத்தி பாரிய வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்தது. இதனால் தமிழர் நிலம் இரத்தப+மியாக மாறியது. இந்நிலையில்தான் சிங்கள அரசிற்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்குத் தீர்மானித்தோம். கிளாலி மற்றும் முகமாலையூடாக முன்னேற முயன்ற சிங்களப் படைகள்மீது எமது படைகள் மின்னல் வேகத்தாக்குதல்களை நடாத்தின. கடுமையான இழப்புக்களைச் சந்தித்த எதிரி, தனது படை நடவடிக்கையினைத் தற்காலிகமாகக் கைவிடவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. இருப்பினும், தனது இராணுவத் திட்டங்களை சிங்கள அரசு கைவிடவில்லை. தனது இராணுவ வழியினையே அது தொடர்ந்தும் பின்பற்றுகின்றது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழ்மக்களை இன அழிப்புச் செய்துவருகின்ற அதேவேளையில், இந்த இன அழிப்பிலிருந்து தமிழர்களைப் பாதுகாப்பதற்காக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற எமது இயக்கத்தினைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்து வருகின்றது. எமது இயக்கத்தின்; மீது அவப்பெயரினை ஏற்படுத்துவதற்கான மோசமான பிரச்சாரத்தினை அது கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. எமது மக்களது ஏகோபித்த எதிர்ப்பினையும், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஆட்சேபனையினையும் உதாசீனப்படுத்திவிட்டு, ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர அழுத்தங்களுக்குச் இசைந்து எமது அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன. எங்களை விரும்பத்தகாததோராகவும், வேண்டத்தகாதோராகவும் அவர்கள் ஒதுக்கி ஓரங்கட்டினர். நீதி, நியாயங்களைப் பற்றிச் சிந்திக்காது அவசரப்பட்டு எடுத்த இந்த முடிவு பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள அரசுடன் எமக்கிருந்த சம பங்காளி மற்றும் படைவலுச் சமநிலையினை இது கடுமையாகப் பாதித்தது. சிங்கள அரசு கடும்போக்கினைக் கடைப்பிடிக்க இது ஊக்கப்படுத்தியது. இது இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினைப் பலவீனப்படுத்தியதுடன், சிங்கள அரசின் போர்த் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியது. சமாதான முயற்சிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் சில நாடுகள், சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனஅழிப்புத் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியது மட்டுமன்றி, சிங்கள அரசின் போர்த் திட்டங்களுக்கு ஆதரவாக இராணுவ மற்றும் நிதியுதவிகளையும் செய்துவருகின்றது. இந்த புறநிலைகள்தான் ராஜபக்ச அரசாங்கம் தமிழர் நிலங்கள் மீது முழுத் திமிருடன் தனது கொடூரமான படை நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கத்தினைக் கொடுக்கின்றன. தனது இராணுவப் போக்கில் நம்பிக்கை கொண்டிருப்பதன் காரணமாக ராஜபக்ச அரசு சமாதானப் பேச்சுக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சமாதான முயற்சிகளில் அதற்குள்ள அக்கறையின்மை காரணமாக இரண்டு ஜெனீவாப் பேச்சுக்களும் ஆக்கப+ர்வமானதாக அமையவில்லை. முதலாம் கட்டப் பேச்சுக்களில் இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் கூட்டுச்சேர்ந்து செயற்படுவதை ஆதாரங்களோடும் புள்ளிவிபரங்களோடும் சம்பவக் கோர்வைகளோடும் பேச்சுமேசையில் சமர்ப்பித்தோம். இச்சான்றுகளை மறுக்கமுடியாத சிறிலங்கா அரசு ஒட்டுக் குழுக்களை தமிழர் தாயகத்தில் இருந்து அகற்றி யுத்த நிறுத்த சரத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டது. எவ்வாறெனினும் முதலாவது ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்னர் ஒரேயொரு மாற்றம் மட்டுமே ஏற்பட்டது. அரச மற்றும் ஒட்டுப்படைப் பயங்கரவாதம் தமிழர் தாயகத்தில் மேலும் தீவிரமாக்கப்பட்டது. இரண்டாவது ஜெனீவாப் பேச்சுக்களும் தோல்வியிலேயே முடிவடைந்தன. எமது மக்கள் எதிர்நோக்கிய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு இப்பேச்சுக்களில் முன்னுரிமை கொடுத்த நாம் யு-9 பாதை திறக்கப்பட வேண்டும் எனவும், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மேலாக தனது இராணுவ நலன்களை முன்னிலைப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம் இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்தது. இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இரங்க மறுத்த சிங்கள அரசாங்கம் தானே திட்டமிட்டு, ஏற்படுத்திய மனிதாபிமானப் பிரச்சினையினைக்கு ஒருபோதுமே தனது நிலையில் இருந்து மாறப்போவது கிடையாது. ஒரே நேரத்தில் போரும் செய்வோம் அமைதிப் பேச்சுக்களையும் நடத்துவோம் எனக் குதர்க்கம் பேசுவோர் பேச்சுக்குழுவில் இருக்கும்போது எப்படி அமைதிப் பேச்சுக்கள் முன்னகரும்? எப்படி நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்? எப்படிச் சமாதானம் வரும்? தன்னை ஒரு அமைதிப் புறாவாகக் காட்டிக்கொள்வதற்காக சனாதிபதி ராஜபக்ச போலியான ஒரு அனைத்துக் கட்சி மாநாட்டினை அரங்கேற்றினார். எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க முடியாமல், கவனம் திசை திரும்பும் வரை நேரத்தினை இழுத்தடிக்க விரும்பினால் விசாரணைக் குழுக்களையோ, பாராளுமன்றத் தெரிவுக் குழுக்களையோ அமைத்தல் அல்லது அனைத்துக் கட்சி மாநாடுகள் அல்லது வட்ட மேசை மாநாடு என்பவற்றைக் கூட்டுதல் என்பனவே சிங்களத் தலைவர்கள் காலங்காலமாக மேற்கொண்டுவரும் பெயர்போன அரசியற் பாரம்பரியமாகும். இதனைத் தான் தற்போது ராஜபக்சவும் செய்துகொண்டிருக்கின்றார். தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைக் காணுமாறு நாங்கள் விடுத்த அழைப்பினை நிராகரித்து, அனைத்துக் கட்சி மாநாடு என்ற போர்வைக்குள் அவர் பதுங்கிக்கொண்டுள்ளார். இருட்டறையொன்றுக்குள் கறுப்புப் ப+னையினைத் தேடியலைவதைப் போல, கடந்த பத்து மாதங்களாக இந்த அனைத்துக் கட்சிக்குழு தமிழர் பிரச்சினையினைத் தேடிக்கொண்டிருக்கின்றது. அனைத்துக் கட்சி மாநாடு தோற்றுப் போனதும், சனாதிபதி ராஜபக்ச இரண்டு பெரிய கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற தனது அடுத்த துருப்புச் சீட்டினைக் கையிலெடுத்திருக்கின்றார். தென்னிலங்கை மீது ஆட்சி செய்யும் பலத்தினைக் கொண்டிருக்கின்ற இந்த இருபெரும் கட்சிகளும் பேரினவாதக் கட்சிகளே. தமிழர்கள் மீது இனஅழிப்பினை மேற்கொள்வதில் ஒன்றையொன்று போட்டிபோட்டு முந்திக்கொள்ளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினூடாக உருவாகியிருக்கும் கட்சிகளே இவை. அமைதிவழித் தீர்வினைக் காணுமாறு சர்வதேச சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால், சரிந்துசெல்லும் பொருளாதார நிலைமையினால், அரசியல் பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பினால் ஏற்படும் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்வதற்காக ராஜபக்ச அரசால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக சந்தர்ப்பவாத நகர்வே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேர்மையான நோக்கம் எதுவுமே கிடையாது. இந்த இரண்டு கட்சிகளும் தமிழர் பிரச்சினைக்கு நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கப்போவதில்லை. மேற்கூறிய விடயங்களுடன் நின்றுவிடாது, உலகினை ஏமாற்றுவதற்காக ராஜபக்ச அரசு அனைத்துக் கட்சி மாநாட்டினைச் சாகவிடாது நடாத்துவதில் தொடர்ந்தும் அக்கறையினைக் காட்டும். எனது அன்பான மக்களே, நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானத்திற்கான இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் நாம் எம்மால் இயன்றதைச் செய்தோம். பொறுமையினைக் கடைப்பிடித்தோம். அமைதிவழித் தீர்வினைக் கொண்டுவருவதற்காக எண்ணிலடங்கா சந்தர்ப்பங்களை வழங்கினோம். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது ஒரு தடவையும், மகிந்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை ஒத்திவைத்து, சமாதான முயற்சிகளுக்கு மேலும் சந்தர்ப்பங்களை வழங்கினோம். தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டிநிற்கின்றோம். தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம். இடம்பெயர்ந்து உலகம் ப+ராகவும் பரந்து வாழும் புலம்பெயர்வாழும் தமிழ் உறவுகள் எமது போராட்டத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களுக்கு எங்களது அன்பையும் நன்றிகளையும் நாம் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும், ஆதரவினையும் தொடந்தும் வழங்கும்படி கேட்டுநிற்கின்றோம். "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து டெல்லியில் வைகோ ..

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து டெல்லியில் வைகோ உண்ணாவிரதம் இலங்கை அதிபர் ராஜ பக்சே 5 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல் லப்படுவதால், அவரது வருகைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. உத்ராஞ்சல் மாநிலம் டேராடூன் நகரில் ராஜபக்சே தொடங்கி வைத்த ஆசிய நாடுகளின் மேயர்கள் மாநாட் டில் தமிழக மேயர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித் தனர். ம.தி.மு.க. சார்பில் டெல்லியில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று கட்சியின் பொது செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.அதன்படி வைகோ தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் சாலையில் இன்று உண்ணாவிரதம் நடந்தது. இலங்கை தமி ழர்கள் படுகொலையை கண்டித்து நடந்த இந்த உண்ணாவிரதத்தில் ம.தி.மு.க. எம்.பி.க்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கிருஷ்ணன், ரவிசந்திரன் மற்றும் ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.அ.தி.மு.க. சார்பில் பி.ஜி. நாராயணன், தினகரன், மலைச்சாமி ஆகியோர் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா மற்றும் அமர்சிங் ஆகியோரும் நேரில் வாழ்த்தினார்கள். முன்னதாக வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அப்போது இந் தியா, இலங்கை அரசுடன் எந்தவித ராணுவ ஒப்பந்தமும் செய்து கொள்ளக்கூடாது. இலங்கை விமானிகளுக்கு இந்தியாவில் ராணுவ பயிற்சி அளிக்க கூடாது. இந்திய ராணுவம் இலங்கை படையுடன் சேர்ந்து கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடாது என்று கூறினார்.யாழ்ப்பாணத்துக்கு உணவு பொருட்கள் வரும் பிரதான சாலையான ஏ-9 நெடுஞ்சாலையை மூடுவதால், அங்குள்ள மக்கள் பட்டினியால் வாடும் நிலை உள்ளது. எனவே அதை திறக்கும்படி இலங்கை அதிபரை வற்புறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வைகோ கூறினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அமைதி பேச்சு வார்த்தையையும் இலங்கை அரசு மீறுகிறது.இதை மத்திய அரசு இலங்கை அதிபரிடம் எடுத்துச் சொல்லி, இலங்கை ராணுவத்தில் மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்.இவ்வாறு வைகோ கூறினார்.

சீமெந்து நிறுவன தொழிலாளர்கள் இருவர் சுட்டுக்கொலை.

மிற்சுயி (MITSUI) சீமெந்து நிறுவன தொழிலாளர்கள் இருவர் சுட்டுக்கொலை. நேற்றிரவு 730 மணியளவில் திருமலை பாலையூற்று பகுதியில் இரு தொழிலாளர்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லபட்டுள்ளார்கள். மிற்சுயி (MITSUI) சீமெந்து தொழிற்சாலையில் வேலை முடிந்து திரும்பிய போது ஆயுதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்கள் 26 அகவையுடைய அலோசியஸ் நிரோஜன், 27 அகவையுடைய விஜிகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழீழ தனியரசை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும்

தமிழீழ தனியரசை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் - தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்துலக சமூகம் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழ தனியரசையும் அங்கீகரிக்க வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இன்று கிளிநொச்சியில் வைத்து ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியிருக்கும் யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், இனியும் காலம் தாழ்த்தாது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலக நாடுகள் அங்கீரிக்க வேண்டுமென கோரியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே போராடி வருவதாக குறிப்பிட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம், தொடர்ந்தும் உலக சமூகம் அமைதி காக்கும் பட்சத்தில், தமிழினத்தை அழித்தொழிப்பதில் சிறீலங்கா அரசாங்கம் மேலும் தீவிரப் போக்கைக் கையாளும் என்றும் எச்சரித்துள்ளார்.

புதிய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினராக சிறீகாந்தா

புதிய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினராக சிறீகாந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ அமைப்பான ரெலோ இயக்கத்தின் முதல்வரும், சட்டவாளருமான சிறீகாந்தா அவர்கள் மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 30ஆம் நாள் வியாழக்கிழமையன்று, நாடாளுமன்ற உறுப்பினராக சிறீகாந்தா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீகாந்தா அவர்கள், சட்டவாளராக கடமையாற்றிய போது இருந்ததை விட, தற்போது பொறுப்பும், பணியும் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யார்ட் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர், மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் படுகொலை குறித்த விசாரணைகளில், ஈடுபடுவது, சாத்தியமில்லாது போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்குகளின் பிரதான எதிராளிகளாக இனம் காணப்படுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படாது என்ற உறுதிமொழியை, சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் வழங்க வேண்டுமென்ற நிபந்தனையை, குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னர் பிரித்தானிய அரசாங்கம் முன்வைத்து வருகின்றது. எனினும் இந்த நிபந்தனையை சிறீலங்கா அரசாங்கம் ஏற்க மறுத்திருப்பதால், மாமனிதரின் படுகொலை விசாரணைகளில் ஸ்கொட்லண்ட் யார்ட் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுவது சாத்திமில்லாது போகும் என தெரிய வருகின்றது.

Sunday, November 26, 2006

இஸ்ரேல்- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐ.நா. வாக்கெடுப்பில்

இஸ்ரேல்- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐ.நா. வாக்கெடுப்பில் சிறிலங்கா பங்கேற்கவில்லை பலஸ்தீனத்தின் காசாப் பகுதியில் இஸ்ரேலிய இரானுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா குழுவினர் பங்கேற்கவில்லை. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான வாக்கெடுப்பானது கடந்த நவம்பர் 17 ஆம் நாள் நடைபெற்றது. காசாப் பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 156 பேர் வாக்களித்தனர். அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா எதிராக வாக்களித்தன. 6 நாடுகள் பங்கேற்கவில்லை. அணிசேரா நாடுகள் முழுமையாக ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்தன. அதேபோல் தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் ஆதரித்தன. சிறிலங்கா குழுவினர் பங்கேற்காமையை கொழும்பில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் சிறிலங்கா குழுவினர் பங்கேற்காமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. "பலஸ்தீன பிரச்சனையை சிறிலங்கா புரிந்து வைத்துள்ளது. அதனது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை" என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நிலைப்பாட்டை ஜே.வி..பி. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்கா ஆதரவு நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்வதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சாடியுள்ளார். அண்மைக்காலமாக இரு ஐ.நா. தீர்மானங்கள் மீது அமெரிக்கச் சார்பு நிலையையே அரசாங்கம் மேற்கொண்டது. கியூபாவின் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் கண்டனத் தீர்மானம் மற்றும் வெனிசூலாவுக்கு எதிரான கௌதமலாவின் தீர்மானம் ஆகியவற்றில் அமெரிக்கச் சார்பு நிலையை அரசாங்கம் கடைபிடித்துள்ளது என்றார் விஜித ஹேரத். இணைத் தலைமை நாடுகள் நடைபெறும் நிலையில் சிறிலங்காவுக்கு பாரிய அழுத்தங்களும் கண்டனங்களும் தெரிவித்துவிடக்கூடாது என்பதற்காகவும் இஸ்ரேலின் இராணுவ உதவிக்காகவும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் மீது சிறிலங்கா பங்கேற்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றம்சாட்டியுள்ளனர். puthinam

வாகரை நோக்கிய படைநகர்வு முறியடிப்பு - போராளி வீரச்சாவு.

வாகரை நோக்கிய படைநகர்வு முறியடிப்பு - போராளி வீரச்சாவு. மட்டக்களப்புபு வாகரை நோக்கிய சிறீலங்காப் படையினரின் ஊடுருவல் முயற்றி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் மாங்கேணி படைமுகாமிலிருந்து எறிகணை வீச்சுக்களுடன் படைநகர்வை மேற்கொண்டனர். படையினரின் படைநகர்வை அடுத்து விடுதலைப் புலிகளால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பாடையினர் பாரிய இழப்புகளுடன் படைநகர்வைக் கைவிட்டுவிட்டு தப்பியோடினர். இன்றை முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் ஒரு போராளி வீரச்சாவடைந்துள்ளார்.

தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்

தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இளைஞர்கள் கூடி தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகளை வடமராட்சி வல்வெட்டித் துறையில் கேக்குகள் வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வெடிகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரமும் இடம் பெற்றுள்ளது. படைத்தரப்பினரின் கெடுபிடிகள் அதிகமாக காணப்பட்ட போதிலும் மக்கள் தேசியத் தலைவரின் மேல் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை தமது உயிருக்கு படைத்தரப்பினரின் ஆபத்துக்கள் இருக்கின்ற போதிலும் மிகவும் துணிச்சலாக இந்த நிகழ்வை நடத்தி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று பிரபாகரனின் 52 ஆவது பிறந்ததினம் நாளைய உரையில்...

இன்று பிரபாகரனின் 52 ஆவது பிறந்ததினம் நாளைய உரையில் அனைவரது கவனமும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று தனது 52 ஆவது வயதில் காலடி பதிக்கிறார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த இவர், இன்று உலகின் கவனத்தை மிகவும் கவர்ந்த விடுதலை அமைப்பொன்றின் தலைவராகத் திகழ்கிறார். கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் போராட்ட களத்தில் குதித்த இவரை இலங்கையில் போரென்றாலும் சரி சமாதானமென்றாலும் சரி அதில் மிகவும் முக்கியமாயிருப்பவர் என்று பெரும் எண்ணிக்கையானோர் கூறுகின்றனர். மிகவும் கட்டுக்கோப்பானதும் ஒழுக்கமுடையதுமான பெயர் பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று உலகில் விடுதலை அமைப்புகளில் தரைப்படையுடன் கடற்படை மற்றும் விமானப்படையைக்காண்டுள்ளது. இலட்சியத்துடன் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக மிக நீண்ட ஆயுதப் போராட்டத்தை நடத்துவதன் மூலம் இன்று சர்வதேசத்தில் மிகப்பெரும் விடுதலை அமைப்பின் தலைவராகவும் பிரபாகரன் கணிக்கப்படுகிறார். எல்லாவற்றுக்கும் நடு நாயகனாகத் திகழ்பவர் பிரபாகரனே என இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தளபதியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறுகின்றார். `போரென்றாலும் சமாதானமென்றாலும் எல்லாவற்றுக்கும் மிக முக்கியமானவர் பிரபாகரனே என்றும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் குல்தீப் நாயர்; இதேபோன்ற கருத்தையே, தமிழகத்தில் பிரபாகரனை நேசிக்கும் தலைவர்கள் பலரும் கூறுகின்றனர். ஒருசில தனி மனிதர்களாக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து கெரில்லாப் படையணியாக மாற்றி, இன்று மரபு வழிப் படையணியொன்றை உருவாக்கி இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் பெரும் பகுதியை தங்கள் வசம் வைத்துள்ளதையும் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது எண்ணிக்கையை எவராலும் கணக்கிட முடியாவிட்டாலும், இதுவரை 18,000 இற்கும் மேற்பட்ட போராளிகள் மாவீரர்களாகிவிட்ட நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்றைய தினம் பிரபாகரனின் 52 ஆவது பிறந்ததினத்தை அனைவரும் கொண்டாடுகையில், மாவீரர் தினத்தையொட்டிய அவரது நாளைய பேச்சு இம்முறை மிகவும் முக்கியத்துவமாகக் கருதப்படுவதுடன் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு:

ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு: இளந்திரையன் ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு இளந்திரையன் தெரிவித்துள்ள கருத்து: நீண்டகாலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினிச் சாவை நோக்கி உள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் இதுவிடயத்தில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் நாம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினோம். ஒரே ஒரு வாகனத் தொடரணிக்காக நாங்கள் ஏ-9 பாதையை திறக்க முடியாது. எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் திறக்கமாட்டோம். ஐ.நாவே கேட்டுக்கொண்டாலும் திறக்க முடியாது. யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தொடர்ச்சியாக உணவுப் பொருட்கள் விநியோகம் சென்றடைய வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் இளந்திரையன். "ஏ-9 பாதையை திறந்து உணவுப் பொருட்கள் வாகனத் தொடரணியை அனுப்புவது குறித்து சிறிலங்கா சமாதான செயலகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் தெரிவித்தார்

மாவீரர்களின் கனவு விரைவில் நனவாகும் - கேணல் தீபன்

மாவீரர்களின் கனவு விரைவில் நனவாகும் - கேணல் தீபன் தமிழர் தாயகம் விரைவில் ஆக்கிரமிப்புக்களில் இருந்து மீட்டெடுக்கப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர் முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்தார். நேற்று (24.11.2006) கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு அகிம்;சை வழி உரிய வழியல்ல ஆயுத வழிமூலம்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை உணர்ந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுதத்தால் நசிக்கப்பட்ட தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தை ஆயுதத்தாலேயே வெல்லப்படவேண்டுமென்ற நம்பிக்கையோடு விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆயுதப் போராட்டத்தை வென்றெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒருரிரு இளைஞர்களை இணைத்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததார்.இன்று எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு வளர்ந்து இருக்கிறது. இவ்வளர்ச்சிக்கு காரணம் மாவீரர்கள் பலபோர்களிலேயே எமது உயர்களை துச்சமென மதித்து வீரசாதனை புரிந்து வித்தாகி இருக்கிறார்கள்.மாவீரர்களின் உயிர் தியாகத்தால் இன்றைய பலமான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு பலவடிவங்களில் மாவீரர்கள் தங்களை அர்பணித்துள்ளார்கள்.விடுதலையமைப்பின் இரகசியங்களை காப்பாற்றி நஞ்சருந்தி வித்தாகியவர்கள் பலர் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக குண்டை வெடிக்கவைத்து விழ்ந்தவர்கள் பல இவ்வாறான மாவீரர்களின் தியாகத்தால் எமது விடுதலையமைப்பு வளர்ந்து இருக்கிறது. எமது விடுதலையமைப்பின் அடுத்த கட்டப்பாய்ச்சலுக்கு பலமாக இருக்கப்போகின்றவர்கள் மாவீரர்கள். எமது விடுதலைப் போராட்டம் அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறது. இறுதிவெற்றியை நாம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அவ்வெற்றிக்காக மாவீரர்களின் இலட்சியக் கனவுகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உள்ளது.தற்போது ஜந்துவருட கால இடைவெளிக்கு பின்னர் போர் ஒன்று இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் எங்கள் மீது போரை தினித்துக்கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாலாற்றில் வலிந்து தாக்குதலை ஆரம்பித்து அக்களமுனை சகல இடங்களுக்கும் பரவியுள்ளது. ஏதிரியின் வான்படை எமது மக்களை பெருமளவில் படுகொலை செய்துவருகிறது. எங்களுடைய விடுதலையை பெறவேண்டுமானால் நாம் அர்ப்பணிப்புக்ளை உயிர் தியாகங்களையும் செய்தாகவேண்டும் அவலங்களை சுமக்கவேண்டும் நெருக்கடிகளை நாம் சந்தித்தாக வேண்டும் இதுதான் யாதார்த்தம். எந்த சவால்களுக்கும் முகம்கொடுக்ககூடிய வகையில் எங்களை நாம் தயார்படுத்த வேண்டும் மாவீரர்களின் கனவுகளுடன் எங்களுடைய இலட்சியங்களை விரைவில் அடைவோம் எனவும் தெரிவித்தார். முற்பகல் 10.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மைச் சுடரினை தமிழீழ நிதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை கேணல் தீபன் ஏற்றிவைத்தார்.அக்கராயன் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று விடுதலைப் போரில் ஆகுதியாகிய மாவீரர்களின் நினைவாலயத்தினை கேணல் தீபன் திரைநீக்கம் செய்தார். ஆரங்க நிகழ்வுகள் அக்கராயன் பிரதேசப் பொறுப்பாளர் மாறன் தலைமையில் இடம்பெற்றது. மாவீரர்களின் பொது உருவப்படத்துக்கு பயிற்சி ஆசிரியர் வீரப்பன் சுடரெத்தி மலர்மாலை அணிவித்தார். மதிப்பளிப்பு உரைகளை அக்கராயன் மகாவித்தியாலய முதல்வர் ஜ.குகானந்தராஜா, விடுதலைப் புலிகளின் பத்திரிகை ஆசிரியர் ரவி ஆகியோர் நிகழ்த்தினர்.

இராணுவ தளபதி நேற்று குடாநாட்டுக்கு விஜயம்

இராணுவ தளபதி நேற்று குடாநாட்டுக்கு விஜயம் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை காலை யாழ். குடாநாட்டுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். நேற்றுக் காலை பலாலி இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற இவரை, யாழ். மாவட்டத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.சந்திர சிறி வரவேற்றார். இதன் பின்னர் பலாலி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டிலும் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் குடாநாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்னி, மட்டக்களப்பில் மாவீரர் தின இறுதிநாள்...

வன்னி, மட்டக்களப்பில் மாவீரர் தின இறுதிநாள் நிகழ்வுகளுக்கு விசேட ஏற்பாடுகள் வன்னியிலும் மட்டக்களப்பிலும் மாவீரர் தின இறுதிநாள் நிகழ்வை மிகச் சிறப்பாக அனுஷ்டிக்க விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இது தொடர்பான சிறப்பு நிகழ்வுகள் நாளை மாலை நடைபெறவுள்ளன. மாவீரர் தின பிரதான நிகழ்வுகள் மாவீரர் துயிலும் இல்லங்களிலேயே நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விடுதலைப் புலிகளின் மாவட்ட அரசியல் துறையினரும் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரும் மேற்கொண்டுள்ளனர். வன்னிப்பிரதேசம் சிவப்பு, மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மாவீரர் மயானங்கள் சிரமதான அடிப்படையில் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில் நாளை இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி எங்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் மாவீரர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில் நாளை மாலை இறுதிநிகழ்வுகள் நடைபெறும்.

இதுவரை மாவீரர்களாக 18,742 போராளிகள்

இதுவரை மாவீரர்களாக 18,742 போராளிகள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 18,742 போராளிகள் மாவீரர்களாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 27.11.1982 ஆம் ஆண்டு முதல் இம் மாதம் 20 ஆம் திகதி வரை (20.11.2006) வரை 18,742 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக மாவீரர் பணிமனை தெரிவித்துள்ளது. இதில் 14,677 ஆண் மாவீரர்களும் 4,065 பெண் மாவீரர்களும் அடங்குவர். இந்த வருடம் (2006) மட்டும் 818 போராளிகள் (ஆண் - 568, பெண்-250) வீரச்சாவடைந்துள்ளனர். இதுவரை, 79 தரைக் கரும்புலிகளும் (ஆண் -61, பெண்-18) 220 கடற்கரும்புலிகளும் (ஆண் 156, பெண் - 64) என மொத்தமாக 299 கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். எல்லைப்படையைச் சேர்ந்த 279 பேரும் (ஆண் - 274, பெண்- 5) வீரச்சாவடைந்துள்ளனர். நாட்டுப் பற்றாளர்கள் 454 பேரும் (ஆண் - 429, பெண் - 25) மரணமடைந்துள்ளதாக மாவீரர் பணிமனை தெரிவித்துள்ளது.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு இன்றேல் அடுத்த மாவீரர்...

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு இன்றேல் அடுத்த மாவீரர் தின உரை யாழ்ப்பாணத்தில் .- செ.கஜேந்திரன். எமது மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் விரைவில் நாம் தமிழீழத்தை அமைப்போம். எமது கொடி ஐ.நாவில் பறக்கும். படையினர் உடனடியாக வடக்கு கிழக்கை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாம் வெளியேற்றுவோம். இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வடக்கு கிழக்கில் இரண்டு பாரிய துறைமுகங்கள் உள்ளன. அந்தத் துறை முகங்கள் எமது மக்கள் வாழ்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை. திருமலை மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்கள் கடற்படையினர் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட கடற்பரப்பை தம் வசப்படுத்தவும் மீன்பிடித் தொழிலைத்தடைசெய்யவும் கடற்படையினர் இந்தத்துறைமுகங்களைப் பயன்படுத்துகின்றனர். மீன்பிடித் தொழிலைப்பாதிப்படையச் செய்து மக்களை பட்டினியில் போடுகின்றது அரசு. இந்த நிலையைத் தொடர விடாது இதை உணர்ந்து அரசு நல்ல சுமுக நிலையை உருவாக்க வேண்டும். உங்கள் இராணுவப்பலத்தை மாத்திரம் நம்பி எமது மக்களை இந்தத் துறைமுகங்களின் ஊடாக நசுக்க முற்பட்டால் அது அரசிற்குப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். வடக்கு கிழக்கில் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறான மனித உரிமை மீறல்களை அரசு சர்வதேச சமூகத்திற்கு காட்டாது அவற்றை மறைத்து சர்வதேசத்திடமிருந்து பணத்தைப்பெற்று தமிழர்களையே கொலை செய்கிறது. எமது மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்குவது மகிந்த ராஜக்ஸவின் காலத்தில்தான். தமிழர்கள் பலம் தமிழர்கள் கையில்தான் இருக்கவேண்டும். அந்தப் பலம் எம்மிடம் நிறையவே உள்ளது. அதை நாம் ஒரு போதும் இழக்கமாட்டோம். நீங்கள் எந்தத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தாலும் எமது இராணுவப் பலம் எம்மோடு இருக்கக்கூடியதான தீர்வாக அமையவேண்டும். அப்படி இல்லாது விட்டால் தனிநாடு உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. அரச படையினர் எமது மண்ணில் மேற்கொண்டு வரும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. உரிமைக்காகப் போராடும் ஓர் இனத்திடம் இந்த அட்டூழியம் நிலைக்காது. எமது மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க அரசு முன் வரவேண்டும். அப்படி இல்லாது போனால் மிகவிரைவில் வடக்கு கிழக்கில் தமிழீழத்தை உருவாக்குவோம். இப்போது வடக்கு கிழக்கில் இடம் பெறுகின்ற நிலைமை தொடர்ந்தால் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி எமது தேசியத்தலைவர் யாழ்ப்பாணத்திலிருந்து மாவீரர் தின உரையை நிகழ்த்துவார். வடக்கு கிழக்கு எங்கும் எனது புலிக்கொடி பறக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.