யாழ் பல்கலைகழக ஊழியர்கள் யாழ்ப்பாணத்திற்கு திரும்ப ஏற்பாடுகள் -துணைவேந்தர் பிற மாவட்டங்களுக்குச் சென்று யாழ்ப்பாணத்திற்கு திரும்ப முடியாதுள்ள யாழ் பல்கலைகழக கல்விசார் மற்றும் கல்விசார ஊழியர்கள் அனைவரும் வவுனியா வளாகத்துடன் தொடர்பு கொண்டு பிரயாண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பதில் துணைவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஊழியர்கள் 024-222264 , 024-2222265 ,024 2222838 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பிரயாண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார். இதேவேளை விடுப்பு முன் அனுமதி பெறாதவர்கள் சம்பளமற்ற விடுமுறையில் இருப்பதாகவே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





