Sunday, October 01, 2006

2800 மெற்றிக் தொண் உணவுப் பொருக்களை ஏற்றிய கப்பல் யாழ் செல்கிறது. யாழ் குடாவுக்கான 2800 மெற்றிக் தொண் உணவுப் பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து யாழ் செல்லவிருக்கின்றது. இதேவேளை நாளை 900 மெற்றிக் தொண் உணவுப் பொருட்களுடன் கப்பல் ஒன்று திருமலை துறைமுகத்திலிருந்து யாழ் செல்லவிருப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் தனியார் வர்த்தகர்கள் உணவுப் பொருட்களை கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.