Monday, September 25, 2006

பேச்சுக்கு அரசு உறுதிமொழி கோருவது பற்றி இன்னமும் முறைப்படி எமக்குத் தகவல் இல்லை உத்தியோகபூர்வமாக கேட்டால் தலைமைப்பீடம் முடிவுசெய்யும் என்கிறார் இளந்திரையன் பேச்சுத் தொடர்பான உறுதிமொழி தலைவர் பிரபாகரனிடம் இருந்து வரவேண்டும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுவது பற்றி நோர்வே எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு கோரிக் கையை அவர்கள் உத்தியோகபூர்வமாக முன்வைத்தால் எமது தலை மைப்பீடம் அது பற்றி முடிவுசெய்யும். இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன். பேச்சு நடத்த முன்வருவது தொடர் பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரிடம் இருந்து உறுதிமொழி வரவேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்திருப்பது தொடர்பாக கருத்துக்கேட்டபோதே புலிகளின் இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக பி.பி.ஸி. தமிழோ சைக்கு அவர் வழங்கிய செவ்வியில் கூறியிருப்பதாவது: இணைத்தலைமை நாடுகளின் கோரிக்கைக்கு அமைய பேச்சுத் தொடர் பாக எங்களது நிலைப்பாட்டை இணக்கத்தை கடைசியாக அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வனைச் சந்தித்த நோர்வேயின் தூத ரிடம் தெளிவாக விளக்கியிருக்கின்றோம். அவரிடம் சகல விடயங்களையும் நாங்கள் பேசியிருக்கிறோம். கேள்வி: அரசைப் பொறுத்தவரை அவர்கள் உங்களுடைய தலைமையிடம் இருந்து ஒரு உத்தரவாதத்தை எதிர்பார்க்கி றார்கள். அந்த உத்தரவாதத்தை வழங்க நீங் கள் தயாராக இருக்கிறீர்களா? இளந்திரையன்: அவர்கள் பலவிதமான நிபந்தனைகளை மாறி மாறி சொல்லிக்கொண் டிருந்தார்கள். இதுகூட எவ்வளவு தூரம் அவர் களுடைய நிபந்தனையாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுபற்றி நோர்வேத் தரப்பும் எங்களிடம் நேரடியாகத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இவ்வாறான ஒரு நிபந்தனையை அவர்கள் முன் வைப் பார்களாக இருந்தால் அதுபற்றி நோர்வேத் தரப்புடன் நாங்கள் மீண்டும் பேசவேண்டி இருக்கும். கேள்வி: இது ஒரு நிபந்தனை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அரசுத் தரப்பைப் பொறுத்தவரை நம்பகத் தன்மையின் அடிப் படையிலேயே இப்படி ஒன்றைக் கேட்கி றோம் என்கிறார்கள்.... இளந்திரையன்: பெப்ரவரிமாதம் நடந்த ஜெனிவாப் பேச்சுகளில் அவர்கள் எங்களுக் குத் தந்த எந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்கள்? அந்த இடத்திலிருந்து அல்லவா நம்பகத்தன்மை தொடங்கவேண்டும்? கேள்வி: அரசு கேட்டபடி உங்கள் அமைப்பின் தலைமையிடமிருந்து அப்படி யொரு உறுதிமொழி வர வாய்ப்பிருக்கிறதா? இளந்திரையன்: உத்தியோகபூர்வமாக அப்படி ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டால் அதுபற்றி எங்களது தலைமை முடிவுசெய்யும்.