வாளைச்சேனையில் மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறைக்குட்பட் வினாயகபுரத்தில் மூன்று தமிழ் இளைஞர்கள் நேற்று வியாழக்கிமை இரவு 11.30 மணியளவில் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
கொல்லப்பட்டவர்கள் கந்தசாமி சிறி வயது 22, சந்திரலிங்கம் தேவநேசன் வயது 23, ஒரு பிள்ளையின் தந்தை அந்தோனிப்பிள்ளை நவரெட்ணம் வயது 30, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலங்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்து போது இவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Friday, September 29, 2006
Friday, September 29, 2006





