Thursday, August 31, 2006
தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க விடுதலைப்புலிகள் தயார். சி.எழிலன்.
தமிழர் தாயகத்தில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர் ஆரம்பித்துள்ள சூழலில் போர்நிறுத்தத்தின் நிலை குறித்து கண்காணிப்புக் குழுவினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். தற்போதைய களநிலமைகள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் கருத்துத் தெரிவிக்கையில் யுத்த சூழல் தோன்றியமைக்கு சிறிலங்கா அரசாங்கமே காரணம் என சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல் மூதூர் கிழக்கில் பொதுமக்களை குறிவைத்து திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களின் விளைவாகவே தற்காப்பின் அடிப்படையிலான மட்டுப்படுத்தப்பட்ட பதில் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர் இவ்வாறான நிலையில் திருகோணமலை துறைமுகத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறிக் கொண்டு மூதூர் கிழக்கை நோக்கிய படையெடுப்பை சிறிலங்கா படையினர் ஆரம்பித்துள்ளமை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும் இருந்த போதிலும் மூதூர் கிழக்கை கைப்பற்றுவதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொள்ளும் சகல படையெடுப்புக்களையும் முறியடிப்பதற்கான உறுதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருக்கின்றனர்.
சிறிலங்கா படையினரின் யுத்த முன்னெடுப்புக்கள் காரணமாக மூதூர் கிழக்கு ஈச்சிலம்பற்று வெருகல் ஆகிய பகுதிகளில் இருந்து நாற்பத்தாறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் வழங்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள சூழலில் மக்களுக்கான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கி வருகின்றது. என சி. எழிலன் தெரிவித்துள்ளார்.
கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு குழு தெரிவித்திருக்கும் கருத்தை விடுதலைப்புலிகள் மறுப்பு.
கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். இது குறித்து வெளி நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன்; அதனை மறுத்துள்ளார்இந்தக் குற்றச்சாட்டு உண்மையிலேயே தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெறப்பட்டதாகத் தெரியவில்லை.
கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு உடனேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பாணி தெரிகிறது என்ற ஊடகங்களின் பரவலான கதையை வைத்துத்தான் கண்காணிப்புக் குழு இம்முடிவை எடுத்துள்ளது சிறிலங்கா இராணுவத்தினரின் அராஜகத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னிச்சையாகவே இப்படியான வேலைகளைச் செய்ய முடியும். இங்கே வெடிபொருள் அறிவு என்பது அணு ஆயுத இரகசியம் இல்லை.
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரிடம் பணம் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் வெடிபொருட்களை அவர்கள் தருவார்கள்.ஆதாரமில்லாமல் ஒரு இயக்கத்தின் மீது பிழை போடுவது நல்லதல்ல.எங்களுடைய பதில் நடவடிக்கைகள் அனைத்துமே சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரானதாகத்தான் இருக்கும். பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்காது. அந்தக் குற்றச்சாட்டை நாம் மறுக்கிறோம். என்று இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று காலை கிபீர் குண்டு வீச்சு.
கிளிநொச்சியில் இன்று காலை ஆத்துமீறிநுழைந்த சிறீலங்கா விமானபடையின் கிபீர் விமானங்கள் கண்முடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன.
இதனால் அப் பகுதியில் நின்ற கால் நடைகள் கொல்லப்பட்டுள்ளன.
மக்கள் பாதுகாப்பாக வீடுகளை விட்டு வெளியில் சென்றதால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.
Wednesday, August 30, 2006
கடத்தப்பட்ட குருபரன் வெள்ளை வான் ஆயுததாரிகளால் விடுதலை.
சூரியன் எவ்.எம் வானொலியின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் இன்று அதிகாலை 3 மணியளவில் வெள்ளை வான் ஆயுததாரிகளால் விடுவிக்கப் பட்டுள்ளார். நேற்று அதிகாலை கடத்தப்பட்ட இவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளை வான் ஆயுதாரிகளால் கடத்தப்பட்டு விசாரணையின் பின் கடுமையான எச்சரிக்கையுடன் இன்று களுபோவிலப் பகுதியில் பவிடுவிக்கப்பட்டுள்ளார்.
Tuesday, August 29, 2006
புலிகளின் பதில் தாக்குதலால் இராணுவ நகர்வை இடைநிறுத்தியது சிறிலங்கா இராணுவம், திருகோணமலை மூதூரில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று இரண்டாவது நாளாக தமது வலிந்த தாக்குதலை தொடர்ந்த போதும் விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து நகர்வு நடவடிக்கையை இடைநிறுத்தினர். கடற்படை படகுகள் பீரங்கித் தாக்குதலை இன்று செவ்வாய்க்கிழமை காலை நடத்த இராணுவத்தினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு தமது வலிந்த தாக்குதலை தொடங்கினர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இன்று காலையிலேயே இராணுவத்தினர் தமது நகர்வு முயற்சியை இடைநிறுத்தி விட்டனர். களநிலைமைகள் குறித்து விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியுள்ளதாவது:
திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறிலங்கா இராணுவ நடவடிக்கையைத் தொடருமேயானால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதிருக்கும்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 36 நேர மணி நேரச் சமரில் 18 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா முன்னரங்க காவல்நிலைகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த 7 போராளிகள், இரணை இலுப்பைக்குளம் மற்றும் நொச்சிக்குளம் இடையே காணாமல் போயுள்ளனர் என்றார் இளந்திரையன்.
திருகோணமலை சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 108 படையினர் படுகாயமடைந்தும் உள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் தெரிவித்திருந்தார்.
வவுனியாவில் 16 தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா பூவரசங் குளத்தில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகைளை தாக்கியவாறு உள்நுழைந்த 16 தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை தாம் சுட்டுக்கொன்றிருப்பதாக சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை சிறிய ரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை நடத்தியவாறு தமது முன்னரங்க நிலைகளுக்குள் பிரவேசித்த 16 பேரையும் தாம் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் சீறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை வவுனியாவிலிருந்து கிடைக்கும் சுயாதீன தகவல்களின் படி சுட்டுக்கொல்லப்பட்ட 16 இளைஞர்களும் சுமார் 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்; இவர்கள் விடுதலைப்புலிகள் என்று அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு அடையாளமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்ர்களது சடலங்கள் தற்சமயம் வவுனியா பொது மருத்துவ மனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மருத்துவ மனைக்கு விஜயம் மேற்கொண்ட வவுனியா மாவட்ட நீதிபதி இரா இளஞ்செழியன் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளர்.
Monday, August 28, 2006
Sunday, August 27, 2006
அரசாங்கத்தின் அமைதி முயற்சிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைக் கோரும் கடிதம் அது என்று முதலில் கூறப்பட்டதாகவும் ஆனால் அது உண்மையில்லை. அரசாங்கத்தில் இணைவதற்கு அழைப்பு விடுத்தே மகிந்த எழுதிய கடிதம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நோர்வேயிலிருந்து ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா திரும்பியதும் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மகிந்த ராஜபக்சவின் இந்த அழைப்பு குறித்து ஜே.வி.பி. கடும் அதிருப்தியடைந்துள்ளது. அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதைத் தடுப்போம் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜே.வி.பி. தனது முக்கிய நிபந்தனைகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் ஜே.வி.பி. இல்லமல் புதிய கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவும் தான் தயாராக இருப்பதாக ஜே.வி.பி.யினரை மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.





